குப்பையும் சாக்கடையும் துணை!

செந்தில்

2005ல் சுனாமி, 2010ல் தமிழின அழிப்பு, மீனவர் பிரச்சனை, ஊழல் வழக்குகள், 2015ல் மழையோ மழை…ஆனால் தண்ணீரை காணவில்லை..ஊரெல்லாம் குப்பையும் சாக்கடையும்…இப்படி பெரும் இழப்புகளினால், சிக்கல்களினால் ஆட்சி மாறத்தான் செய்கிறது.

மக்களுக்கு இன்னும் ஜன நாயகத்தில் ஏதோ நம்பிக்கை…ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கபடும் தமிழக கட்சிகளும், மத்திய கட்சிகளும் இதையெல்லாம் தடுக்க வழி செய்யவில்லை. மக்களின் வாழ்க்கை தரம், கல்வி கட்டணம், வேலை வாய்ப்பு, இயற்க்கை மற்றும் வேளாண்மை வளர்ச்சி, நீர்வளம், விவசாயிகளின் உயர்வு குறித்தெல்லாம் எந்த வித பெரிய திட்டங்களும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் சில செயல் திட்டங்களை செயல் படுத்தி உள்ளன என்பது உன்மைதான். ஆனால், மொத்த தமிழகம் குறித்த பெரிய வளர்ச்சி பாதை எதுவும் செயல்படுவதாக தெரியவில்லை. நல்ல திட்டங்கள் எல்லாம் ஆட்சி மாறும்பொழுது தடை பட்டு போகின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே திண்ணை பத்திரிக்கையில் இந்திய, தமிழக நிலை குறித்தும், தமிழக மக்கள் மற்றும் நில, கடல் வளங்களை சூழ்ந்து உள்ள தொடரும் சிக்கல்கள் குறித்தும், அதிமுகவுடன் அப்பொழுது கூட்டணி அமைத்திருந்த கட்சிகளின் கடமை குறித்தும் ஒரு வேண்டுகோளாக கட்டுரை எழுதினேன். ஐந்து ஆண்டுகள் கடந்தாகி விட்டது. ஆனால், தொடரும் அதே சிக்கல்கள், கூக்குரல்கள், பற்றாகுறைகள்… சிதைந்து கிடக்கும் வேளாண்மை… கண்ணை பிடுங்கும் கல்வி கட்டணம், கடன் சுமை..கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு…
காமராஜர் அவர்களுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி வெறும் காட்சி பொருளாகிவிட்டது. திமுகவும், அதிமுகவும் கொள்கைகள் மறத்து போய், மறந்து போய், உளுத்து போன உளறல் கட்சிகளாகி போயின.. மத்திய கட்சிகள் விரும்புவதோ..ஒன்று ஊழலில் கூட்டணி, வியாபார பங்குசந்தை, குதிரை வியாபார அரசியல்..இல்லையெனில் அகண்ட அகில சக்தி படைத்த உலக தீவிர வாத எதிர்ப்பு அரசியல்…

குடிக்க தண்ணீர் இல்லை…எல்லாவற்றையும்தான் சாராய வியாபாரிகள் உறிஞ்சிவிட்டார்களே…ஆனால், சுத்தமான சாரயம் கிடைக்கிறது..வேளாண்மை நிலங்கள் பல மாவட்டங்களில் பாழ் நிலையில்… இன்னும் மின்சார பற்றாகுறை….மீனவர்கள் மீளாதுயரில்…வேலும் மயிலும் துணைக்கு பதிலாக….தமிழக மக்கள் நிலையில் தற்பொழுது தொக்கி நிற்பது..குப்பையும் சாக்கடையும்..என்ன சொல்ல…..

வருகின்ற 2016 தேர்தலில்..மக்கள் நல கூட்டணி ஏதாவது மாற்றங்களை கொண்டு வந்தால் மக்கள் வாழ்த்துவார்கள். ஆனால், அது தெளிவான, தனது வாக்குரிமையை சரியான விதத்தில் உபயோகிக்கும் தன்மானமுள்ள வாக்காளர்கள் கைகளில்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணியும், தேமுதிகவும், மற்ற எல்லா சிறுபாண்மை கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரை முதல்வராகவோ, அல்லது பலரை அமைச்சு மந்திரிகளாகவோ முன் நிறுத்தி மக்கள் முன் சென்றால்..கட்டாயம் மாற்றங்கள் நிகழலாம். இல்லையெனில்…குப்பையும் சாக்கடையும் தொடரும்….வேலும் மயிலும் ஒளிந்து கொள்ளும்….

senthil.kumar.manaparai@gmail.com

Series Navigationவாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்புரட்சித்தாய்