குரூரம்

Spread the love

எப்படிச் சொல்வது
இழிவான காரியத்திற்குச்
சாட்சியாக
நான் இருந்துவிட்டேனென்று
கோழைத்தனத்தால்
கைகட்டி நின்றுவிட்டேனென்று
அச்சத்தால்
உடல் வெலவெலத்து
வேர்த்துவிட்டதென்று
அடிமை போல்
காலணிகளை துடைத்தேனென்று
மனசாட்சிக்கு விரோதமாய்
நடந்து கொண்டேனென்று
பணம் என் கண்களை
மறைத்துவிட்டதென்று
அபலையின் கதறலை
கேட்டதாக காட்டிக்கொள்ளாமல்
நடித்துவிட்டேனென்று
எச்ச சோற்றை
அருவருப்பில்லாமல்
தின்ன ஆசைப்பட்டேனென்று
நடந்த விபரீதத்தில்
எனக்கும் பங்கிருக்கிறதென்று.

Series Navigationமிகுதிகாணாமல் போன தோப்பு