குறிப்பறிதல்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

பண்பலை பாடும் பிற்பகல் வேளையில்

காடு கழனியைச் சுற்றிப்பார்க்க

பேரப்பிள்ளைகளோடு புறப்படுவிட்டார் அப்பா.

தொழுவத்து மாடுகளைக் குளிப்பாட்ட

குளக்கரைப் பக்கம்

ஓட்டிக்கொண்டு போகிறாள் அம்மா.

பக்கத்து தோட்ட வீட்டுக்கு

பழமை பேசப் போகிறாள் அத்தை.

அடுக்களையை ஒழித்துக்கொண்டிருக்கிறாள் அவள்

முதுகில் இந்தக்காட்சிகளை அவதானித்தபடி…

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்