குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்

Spread the love

உலகம் முழுவதும் நீக்கப்பட்டாலும், போலியோ பாகிஸ்தானில் மறையவில்லை
நான்கு மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் ஒரு வருடம் எந்த போலியோ தாக்குதலும் இல்லாமல், ஒரு முழு வருடம் கடந்தது என்பதை அறிந்து உலகம் மகிழ்வடைந்தது. இந்த சாதனை, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நைஜீரியா என்ற மூன்று நாடுகளே போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க ஏதுவானது.

போலியோவிற்கு எதிரான போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உலக சுகாதார நிறுவனம் பதற்றத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் போலியோவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. இதற்கு செலவிடப்பட வேண்டிய தொகை பற்றாததினால், இந்த நாடுகளுக்கு அருகே இருக்கும் 24 மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடுகளில் போலியோவை ஒழித்த முயற்சி வீணாகப்போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவுதான். நைஜீரியாவில் சென்ற வருடத்தை விட இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் எண்ணிக்கை 38ஐ தாண்டிவிட்டது. சென்ற வருடத்தில் இதே மாதங்களில் பாதிப்பு 10ஆகத்தான் இருந்தது. ஆப்கானிஸ்தானின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஏழாக ஆகியிருக்கிறது. பாகிஸ்தானின் எண்ணிக்கை 43இலிருந்து 18ஆக குறைந்துள்ளது.
சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ், நரம்பு மண்டலத்தை பாதித்து குழந்தையை கொல்லவோ அல்லது உடல் மரத்து போகவோ வைக்கலாம். குழந்தைகளை கால் விளங்காதவர்களாக வெளிப்படும் முன்னரே அது யாரும் அறியாமல் பரவிவிடலாம். சுமார் 200இல் ஒரு பாதிப்பு முழு வாத பாதிப்பிலோ மரணத்திலோ முடிகிறது.

கைபர் பக்தூன்க்வா (என்ற பாகிஸ்தான் வடமேற்கெல்லை மாநிலத்தில்) 13 மாத பாரிஹா தற்சமய பலி. ஆறுவயது சகோதரி ஸானா இந்த குழந்தையை தரையில் வைக்கும்போது, பிஸாஸ்டிக் கட்டுப்போடப்பட்ட கால்களைப் பார்த்து அழுகிறாள்.

பிறந்து ஆறுமாதங்களில் பாரிஹாவை போலியோ தாக்கியது. அவளை எல்லா இடத்துக்கும் தூக்கிகொண்டுபோக வேண்டியிருக்கிறது. ஒரு நாளில் இரண்டு முறை அவளது கால்களை தேய்த்துவிட்டு மருந்துகொடுக்கிறார் தாய். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன. சுகாதார சேவகர் அடிக்கடி வந்து பார்த்துகொள்கிறார். பிளாஸ்டிக் கட்டு ஒரு ஜெர்மன் மருத்துவமனையால் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.

பரிஹா முழுவதுமாக குணமடைவாள் என்று ஒரு உறுதியும் இல்லை. பெரும்பாலான போலியோ தாக்குதல்கள் கைபர் பக்தூன்க்வா மாநிலத்திலேயே நடக்கின்றன. இங்கேதான் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பாகிஸ்தான் தாலிபான் பிரிவுக்கும் தொடர்ந்து போர் நடக்கிறது. இது அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களிடம் செல்ல விடாமல் சுகாதார சேவகர்களை தடுக்கிறது.

உலகெங்கும் புதுபுது போலியோ தாக்குதல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்துமே பாகிஸ்தானுக்கும் நைஜீரியாவுக்கும் விரலை காட்டுகின்றன. தாக்குதல் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், உலக சுகாதார நிறுவன அறிவிப்பாளர் ஒலிவர் ரோஸன்பாவர் இந்த வியாதி மிக விரைவாகவே சூடுபிடித்து பரவக்கூடியது என்பதை குறிக்கிறார்.

“போலியோ நீக்கப்பட்ட நாட்டில் மீண்டும் போலியோ தாக்கினால், எங்கே மிகக்குறைவான தடுப்பு சக்தி உள்ள பிரதேசமோ அங்குதான் உடனே பற்றிகொள்கிறது. அதன் பிறகு காட்டுத்தீ போல எல்லா இடங்களிலும் பரவிவிடுகிறது” என்று கூறுகிறார்.

இந்த மூன்று இடங்களிலும் உடனே நீக்கப்படும் முன்னால், பணமும் சேவகர்களின் எண்ணிக்கையும் தீர்ந்துவிட்டால், மீண்டும் தொற்றுநோய் உலகை ஆக்கிரமிக்கும் என்று கூறுகிறார்.

“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு புள்ளியில் நிற்கிறது” என்று கூறுகிறார்.
2013 முடிவு வரைக்கும் எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன. முழு மனதோடு, பணம் செலவிட்டு இவற்றை நடைமுறைப் படுத்தினால், உலகம் போலியோ நீக்கப்பட்ட உலகமாக ஆகிவிடும் என்று கூறுகிறார்.
அல்லது, மீண்டும் போலியோ உலகை ஆக்கிரமிக்கும். இன்னும் பத்தாண்டுகளில் மீண்டும் வருடத்துக்கு 200000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டதை பார்க்கலாம் என்கிறார்.

ரோஸன்பாவர் உலக போலியோ நீக்கத்துக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு 18 மாதங்களுக்கு 2 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. தற்போதைக்கு 940 மில்லியன் டாலர் குறைவாக இருக்கிறது. இதனால் 24 நாடுகளில் வேலைகளை குறைக்க வேண்டியுள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு பாகிஸ்தானிய, ஆப்கானிஸ்தானிய குழந்தையும் ஐந்து வருடத்துக்குள்ளாக போலியோ தடுப்பு மருந்து பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு மருந்து கொடுக்க வரும் சுகாதார சேவகர்களின் வேலை அறியாமையாலும், மத தீவிரவாதத்தாலும், இயற்கை பேரழிவுகளாலும் போர்களாலும் தடைபட்டுகொண்டே போகிறது.

அதன் பிறகு உலக பிரயாணங்கள். “திரும்பத்திரும்ப போலியோ அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் போலியோ தோன்றுவதை பார்த்துகொண்டே வருகிறோம்” என்று ரோஸன்பாவர் கூறுகிறார். 2009இலிருந்து 2011 வரைக்கும் அறியப்பட்ட 3506 போலியோ தாக்குதல்கள் ஏற்கெனவே போலியோ நீக்கப்பட்டதாக அறியப்பட்ட நாடுகளிலேயே நடந்திருக்கின்றன. 2005இல் முதன்முறையாக போலியோ கண்டறியப்பட்ட இந்தோனேஷியாவில் ஆராய்ச்சி செய்தால், அந்த போலியோ நைஜீரியாவிலிருந்து இறக்குமதி என்று அறியப்படுகிறது. சென்ற வருடம் மேற்கு சீனாவில் திடீரென்று பரவிய போலியோ தாக்குதல் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்று அறியப்பட்டது.

இந்த போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் திட்டங்களை தடுக்கும் இன்னொரு பிரச்னை முஸ்லீம் வன்முறையாளர்கள். இந்த போலியோ மருந்து உலக முஸ்லீம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த கொடுக்கும் கருத்தடை மருந்து என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் கிராமப்புற ஜாதி தலைவர்களும், மதகுருக்களும் போலியோ தடுப்புமருந்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால், முன்பு தடுக்கப்பட்ட இடங்களிலும் சுகாதார சேவகர்கள் சென்று மருந்து கொடுக்க ஏதுவானது.

உலக சுகாதார நிறுவன ஊழியரான ஷா முகம்மது, பெஷாவர் குழந்தைகள் மருத்துவமனையில் போலியோ தடுப்பு மருந்து பிரிவில் இருக்கிறார். போலியோ தடுப்பு மருந்தை வேண்டாம் என்று சொல்லும் பெற்றோர்கள், மதத்தையோ அல்லது தாலிபானையோ காரணமாக சொல்லவில்லை என்றும், அவர்கள் தங்களது அரசாங்கத்தின் மீதுள்ள ஆழமான அவநம்பிக்கையாலும், மேற்குலகு அங்குள்ள தாலிபான்களோடு போராடுவதையுமே காரணமாக சொல்கிறார்கள் என்று சொல்கிறார்.

”எங்களிடம் அடுப்பெரிக்க சமையல்வாயுவோ அல்லது உணவோ இல்லை. நீங்கள் இங்கே மருந்தோடு வருகிறீர்கள். நாங்கள் எதற்கு கவலைபப்டவேண்டும்?” என்று கேட்கிறார்கள் என்கிறார். இல்லையென்றால், “ஒரு பக்கம் அமெரிக்கர்கள் எங்களை தானியங்கி விமானங்கள் மூலம் அடிக்கிறார்கள்,மறுபக்கம் மருந்தை கொடுக்கிறார்கள். எங்களுக்கு இது வேண்டாம்” என்று கூறுகிறார்கள்.

சனிக்கிழமை வடக்கு வாஸிரிஸ்தான் பகுதி தாலிபான் போலியோ தடுப்பு மருந்துகளை கொடுக்க தடைவிதித்தது. அமெரிக்க தானியங்கி விமானங்கள் தாக்குதல்களை நிறுத்தும் வரைக்கும் போலியோ தடுப்பு மருந்துகளை கொடுக்க தடை என்றுஅறிவித்தது. இதனால், ஐந்து வயதுகுட்பட்ட பத்தாயிரக்கணக்கான குழந்தைகள் தடுப்பு மருந்து இல்லாமல் போவார்கள்.

இதற்கு காரணம், சிஐஏ நிறுவனம் ஒஸாமா பின்லாடனது வீட்டை கண்டுபிடிக்க அவரது வீட்டிலிருந்து டிஎன் ஏ எடுக்க தடுப்பு மருந்து போடும் வேஷத்தில் ஆளை அனுப்பியதுதான்.

“அடுத்த தடுப்பு மருந்து பிரச்சாரத்தின்போது ஏராளமான எதிர்ப்புகுரல்கள் இருந்தன” என்று டாக்டர் பர்வேஸ் யூசூப் தெரிவிக்கிறார். பின்லாடன் கொல்லப்பட்ட அப்பட்டோபாத் பகுதி மட்டுமே தடுக்கப்பட்டது என்று கூறுகிறார்.

அமெரிக்க தன்னார்வ நிறுவனங்கள் சிஐஏ தலைவர் ஜெனரல் டேவிட் பட்ரேயஸ் அவர்களிடம் மனிதாபிமான வேலையை உளவுத்திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கோரின.

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பாதிக்கப்பட்ட போலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பயிற்சி அளிப்பதும், கால்களுக்கு பிரேஸசும் வாங்குவது அரிதானது என்று இரண்டு நாடுகளிலுள்ள மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்தியா பிரதேசத்தில் வாழும் 15 வயது முஸாவுக்கு மூன்று வயதில் போலியோ பாதித்தது. அவருக்கு மருத்துவமில்லாமல் பல வருடங்கள் கழித்தார். இந்த இடத்தில் போரின் காரணமாக மருத்துவ வசதியோ தடுப்பு மருந்தோ இல்லை.

இப்போது ஐந்து சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் தடுப்பு மருந்து போட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். இவருக்கு இன்னமும் ஊன்றுதடி தேவையாக இருக்கிறது.

பாரிஹாவின் கிராமத்தில் போலியோ கேள்விப்படாததாக இருந்தது. பாரிஹாவுக்கு தொற்றியது அறிந்தபின்னால், சுகாதார சேவகர்கள் கிராமம் முழுவதும் தடுப்பு மருந்து போட்டிருக்கிறார்கள். பாரிஹாவின் தாத்தா யூசூப் கான் இந்த தடுப்பு மருந்து பிரச்சாரத்துக்கு துணையாக இருந்திருக்கிறார்.

“அதன் பின்னால், எங்களது எல்லா குழந்தைகளும் தடுப்பு மருந்து போட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

http://dawn.com/2012/06/18/despite-global-eradication-polio-stays-in-pakistan/

Series Navigationஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வைஅன்பிற்குப் பாத்திரம்