கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா

Spread the love

செய்திக் குறிப்பு
நூல் வெளியீட்டு விழா
கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். அவர் மேலும் பேசும்போது “பாரதி வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களும் அவமானங்களும் அதிகம் என்றாலும் அதை தன் பாட்டுக்களில் ஒருபோதும் வெளிப்படுத்தவே இல்லை. எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றுதான் பேசினார். இதுதான் positive thinking என்றார்.
வாழ்த்திப் பேசிய டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் “பாரதி பற்றிய செய்திகளை எளிமையாகவும், இனிமையாகவும், புரியும்படியாகவும் எழுதியமைக்காக எழுத்தாளர் கே எஸ் .ரமணாவை பாராட்டியதுடன், நூலில் கருத்துப் பிழை, வரலாற்றுப் பிழை, எழுத்துபிழை இம்மூன்றும் இல்லை என சுட்டிக் காட்டினார்.
விழாவில் புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை மு.தருமராசன், விஜயா பப்ளிகேஷன்ஸ் பதிப்பாளர் பி.விஷ்வநாதரெட்டி, பத்திரிக்கையாளர் பொன்சி, தமிழ் படைப்பாளர்சங்க மாநிலத் தலைவர் கவிஞர் சுடர் முருகையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக சென்னை நியூ செண்டுரி புத்தக நிறுவன செயலாளர் திரு.சண்முக சரவணன் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள, பொதிகை மின்னல் ஆசிரியர் வரவேற்க, அரக்கோணம் சி.மோகன் இணைப்புரை வழங்க, என்.ராசரத்தினம் நன்றி நவிழ கூட்டம் இனிதே முடிந்தது.

Series Navigationவிஷமேறிய மரத்தின் சிற்பம்என் ஆசை மச்சானுக்கு,