கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

Spread the love

எஸ்ஸார்சி


எழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் சட்டை செய்வது கிடையாது

.’’ஹேண் ரைட்டிங்கை எல்லாம் படிக்கறதுக்கு ஆளுங்க எங்க இருக்காங்க. D T P பண்ணி வச்சி இருக்கிங்களா? என்பதேபதிப்பாளரின் கேள்வி.கையெழுத்தில் எழுதி எங்கே நமக்குக் கடிதம் வருகிறது.கடிதம் எழுதுதல் என்றால் என்ன என்றுதான் நமது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் கேட்கிறார்கள்

.ஈ மெயில் வந்தது பின்னர் எஸ் எம் எஸ், முக நூல் சுட்டுரை வாட்ஸப் ச்சேடிங் நேர்க்காட்சி- நேர்ப்பேச்சு, என அது தொடர்ந்து கொண்டே போகிறது.

ஆண்டுஒன்றுக்கு பேனாவால் எழுதப்பட்டு தபால்காரரால் ’சார் போஸ்ட்’ என கொடுத்துவிட்டுப்போன சுமார் ஐநூறுகடிதங்கள் எங்களுடைய கூட்டுக்குடும்பத்துக்கு வந்த காலம் ஒன்று இருந்தது.அதனை க்கட்டு கட்டாககட்டி அது வந்த ஆண்டு எழுதி எங்கள்தந்தையார் வரிசையாக பரணையில் சேமித்து வைத்திருப்பார் இது விஷயம் இன்று யாருக்கேனும் சொன்னால் விளங்குமா?கணிபொறியில் தட்டி அச்செடுத்தக் கடிதம் என்றால்தான் இன்றைய பிள்ளைகள் அதுபற்றி என்ன என்று கேட்கிறார்கள்.

என்னிடம் தட்டச்சுக்கருவி இருந்தது. நீண்ட காலம் அதனை நான் உபயோகித்து வந்தேன்.கணிப்பொறி வந்தபிறகு அது செத்து மூலைக்குப்போனது.யாரும் அதனை சீண்டுவார் இல்லை.கடைசியில் தெருவில் பழைய இரும்பு சாமான் வாங்குபவன் அதனை அவனுடைய நொள்ளைத்தராசில் எடை வைத்து மூன்று கிலோ எடை இருப்பதாகவும் அதற்குப் பதினைந்து ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான்.

ஆங்கிலம் தெரிந்தால்தான் தமிழில்தான் எழுதமுடியும் என்கிற கணிப்பொறியின் ஆளுமைக்காலத்தில் நாம்வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

ஆங்கிலம் படித்ததால் காலமும் காசும் வீண் என பாரதி சொல்லுவார்.பாரதி ஷெல்லி தாசனாக தன்னைச்சொல்லிக்கொண்டதும் மாகவி ரவீந்திரரை உள்வாங்கிக்கொண்டதும் மொழிபெயர்த்ததும் நாம் அறிந்த விஷயங்கள்

’செலவு தந்தைக்கோர் ஆயிரஞ்சென்றது

தீதெனெக்குப்பல்லாயிரஞ்சேர்ந்தன

நலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை

நாற்பதாயிரங்கோயிலில் சொல்லுவேன்!

இப்படி ஆங்கிலக்கல்வி பற்றி விமர்சிக்கும் பாரதியையுக்கூட நாம் மேற்கோள் காட்டலாம்.பாரதி மற்றும் மறைமலைஅடிகள் கி.வா.ஜ காலத்தே இணையவழி செல்லும் மொழித்தளவசதி அறியப்படவில்லை. எது எப்படியாயினும் தமிழ் மொழிக்கு phonetic transcription வழி நன்மை மட்டுமே கிட்டியிருக்கிறது என்பது நிதர்சனம்.மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றுதானே நமக்கு வள்ளுவம் வழிகாட்டுகிறது.

தனித்தமிழ் இயக்கம் நடத்தினாலும் இன்று ஆங்கிலம் தெரிந்தால்தான் அதனைப்பிறருக்கு அறிவிக்க சாத்தியப்படும்.தனித்தமிழ் என்றும் வெல்லும் என்பதையே கூட ஆங்கிலம் தெரிந்தால்தான் கணிப்பொறியில் தட்டி அதனை உலகுக்குச்சொல்லமுடியும் அறிவியல் தொழில் நுடபம் அப்படி நம்மை எங்கோகொண்டுபோய்ச் சேர்த்து இருக்கிறது.தமிழ் ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துக்களை த்தட்டி தமிழ் எழுத்துக்களைத்திரையில் கொண்டு வந்துவிடுகிறோம்.

தமிழ்மொழி ஒலிக்கு இயைந்த எழுத்துக்களைக்கொண்ட அற்புதமொழி என்பது ஒரு வலு சேர்க்கும் விஷயம்.ஆங்கில மொழி ஒலிக்கு இயைந்த எழூக்களைக்கொண்ட மொழி அன்று.இதயே English language is unsystematically un phonetic .என்று குறிப்பிடுவார்கள்.. நைஃப் என்று ஆங்கிலத்தில் எழுதினால் அங்கே ’கே’ என்ற ஆங்கில எழுத்துக்கு என்னவேலை.கடைசியில் கொசுறாய் போடும் ஈ என்னும் எழுத்துக்குத்தான் என்னவேலை. Loose, lose iஇரண்டு வார்த்தைகளும் ஒன்று போல் உச்சரிக்கப்படுதல் எப்படி/ sun,son இரண்டு சொல்லும் எப்படி உச்சரிக்கப்பட்டு எப்படி எழுதப்படுகின்றன.இந்தவகையில் ஆயிரம் கேள்விகள் பிறக்கலாம்.

தமிழில் இணைய இதழ்கள் அனேகம்.அவை கண் இமைக்கும் நேரத்தில் உலகத்தின் மூலை முடுக்கை இணைத்துவிடுகின்றன blog குகள் தமிழில் எண்ணற்றவை. ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு எழுத்துச்சூறாவளியை அந்தரத்தில் உலாவவிட்டுக்கொண்டு அன்றாட வாழ்க்கை நகர்த்துகிறார்கள்..டிஜிடல் தொழில் நுடபம் வந்த பிறகு காகிதங்களின் ஆளுகை ஓரம்போனது. Paper less transaction என்பதுவே அனுபவமாகி வ்ருகிறது.

உலகமொழி என ஒன்று இல்லாமல் போனால் இன்று மனித வாழ்க்கை பூஜ்யமாகிவிடும். பொருளாதாரம் மருத்துவம் தொழில் நுட்பம் வானியல் என்பவை கட்டாயம் ஒருமொழிப்பேசினால்தான் உலகம் அமைதியாகச்சுழல வசதியாக அமையும்.

மூன்று செயற்கைக்கோள்கள் பூமிப்பந்தை சுற்றி மூன்று இடங்களில் நின்றுகொண்டு ஓயாமல் பூமியைச்சுற்றி வரவேண்டும். அந்த செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று ஒரே மொழியில் பேசிக்கொள்ளும்.அவை அப்படி இயைய்ந்தால் மட்டுமே கலிஃபோர்னியா பேத்தியோடு பத்தமடை தாத்தா கொஞ்சுவது சாத்தியப்படும்.அந்த அறிவியல் சொல்லும் ஒரே வாக்கியம்’யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது மட்டுமே..’ … .

.

Series Navigation9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து