author

பாவண்ணனின்  நயனக்கொள்ளை

This entry is part 3 of 14 in the series 28 மே 2023

எஸ்ஸார்சி  பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின் சிறுகதை குறித்து பதிப்பகத்தார் தரும் சில செய்திகள்.’கைவிடப்பட்ட எளிய மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இணைக்கப்பட்டவர்களே. அந்த இணைப்பின் கண்ணிகளைத்தேடித்தேடி காட்சிப்படுத்துவதில் பாவண்ணனின் சிறுகதைகள் முன்னிலைபெறுகின்றன.’ ‘கடுமையான துயரங்கள் மிகுந்த சூழல்களிலும்கூட ஒரு துளி […]

வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

This entry is part 3 of 9 in the series 7 மே 2023

எஸ்ஸார்சி வளவதுரையன் என்றும்  மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள்  சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர். கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள்.பதிப்பகத்தார் வளவதுரையன் பற்றித்தரும் குறிப்பு நிறைவாக வந்திருக்கிறது. கடலூர் கவிஞர் அன்பன் சிவா.  கவிஞர் அவருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பித்து இருக்கிறார். என்னுரையில்  வளவதுரையன் கம்பனின்  ‘ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப்பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் […]

நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்

This entry is part 20 of 20 in the series 29 ஜனவரி 2023

எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது.  கதை சொல்லும் நேர்த்தியில்  பாரதிக்குமாரின்  சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன.  பாரதிக்குமார் தமிழகத்தின்  பல்வேறு  இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து  எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர்.  பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர் சென்னை11 வெளியிட்டுள்ளது. இந்நூலை  தனது சகோதரர்  குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும்  பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில் அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர்,  வாசகர்க்கு அறிவிக்கிறார்.  பின்புலமாகி […]

நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

This entry is part 6 of 7 in the series 25 டிசம்பர் 2022

எஸ்ஸார்சி  நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு மற்றும் கவிதை நேசிப்புக்கூடுகை என்பவை அவை. 121 நவீன விருட்சம் எப்படி வந்துள்ளது என்பதனை  இவண்ஆராய்வோம். அழகியசிங்கரின் ’கழுதை’ கவிதை என்னை மிகவும் பாதித்தது. அப்பா மகளைச்செல்லமாகக்கழுதை என்று விளிக்கிறார்.  படவா படுவி  என்று […]