கொசுக்கள் மழையில் நனைவதில்லை.

புழுங்கிய நெல்லைத்
துழவியபடியும் ,
கிணற்றுச் சகடையின்
சுழற்சிக்கு ஈடாகவும் ,
வேலிப்படலைக்
கட்டியவாறும்,
கிட்டிச் சட்டத்தோடு
ஆடுகளைத் தரதரவென
இழுத்தபடியும் ,
பாளை கிழித்துக் கொண்டும் ,
வைக்கோல் உதறியபடியும்
யாவரையும்
வைத்தபடி இருந்த
ருக்கு பெரியம்மாவின்
வாசாப்புகள்
அலைந்துகொண்டே இருக்கின்றன
அவள் காலத்துக்குப்
பின்னரும்
யார் காதிலும் நுழையாமல்…

வைக்கோல் உதறியபடியும் 
யாவரையும் 
வைத்தபடி இருந்த 
ருக்கு பெரியம்மாவின் 
வாசாப்புகள் 
அலைந்துகொண்டே இருக்கின்றன 
அவள் காலத்துக்குப்
 பின்னரும் 
யார் காதிலும் நுழையாமல்…
                                               -உமாமோகன்
Series Navigationதமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடுகவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்