கொடுக்கப்பட பலி

Spread the love

சிறகுகளில் கூடுகட்டி
காத்திருந்த சிலந்தி
உணர்வுகளை உணவாக்கிய
பொழுதொன்றில்,
யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி
ஒதுங்க விளைந்த மனது,

நிராகரிப்பின் வலியொன்றில்
மலரெடுத்து சூடி வாழ்வியலின்
ஆரோகனிப்பை _அந்த
நாற்றத்துள் மறைத்துக்கொண்டு
இயங்கத்தொடங்கிற்று.

நிபந்தனைகளையும்
நிர்ப்பந்தங்களையும்
சபிப்புகளையும்
சம்பிரதாயங்களையும்
சடங்காகவே கொண்டு,
கவனிக்கப்படுதல் மீதொரு
கவனம்வைத்து
தன்னிலை மறந்து
அவதானிக்க தொடங்கியது……………….

பின் ,
தோற்றுப்போன பொழுதொன்றில்
ஆழிசூழ் ஆழத்தில்
முத்துக்களுக்கு பக்கத்தில்
பேச்சடங்கி கிடந்தது
கலைஞனின் குரல்.

ஆக்கம்:நேற்கொழு தாசன்

வல்வை
Series Navigationசொல்லும் சொல்லு செல்வதெங்கே…?வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்