கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

திருந்த செய்

பிழைகளெல்லாம்
பழைய பித்தளை பாத்திர
துளைகள்
திருத்தங்கள் ளெனும்
ஈயம் பார்த்து
அடைத்தல் சிஷ்டம்
முலாம் பூசி
மறைத்தல் கஷ்டம்

 

அம்மா

மழை கொட்டி
மலை சொட்டும்
அருவியாய்
நிலம் தொட்டு
கடலெட்டும்
நதிகளாய்
கடன் பட்டும்
தயை காட்டும்
அம்மா

 

 

Series Navigationதமிழ் படுத்துதல்செய்யும் தொழிலே தெய்வம்