கோடைமழைக்காலம்

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

தன் ஆளுகைக்குள் மழைக்காலத்தை

ஒருபோதும் அனுமதிக்காத

வைபரைப் போல் உறுதியாக இருந்த

இந்த கோடைக்காலத்தை

சற்றே ஊடுருவிய

இந்தக் குட்டி மழைக்காலம்

ஊடிய காதலி அனுப்பிய

குறுஞ்செய்தி போன்றது

பிணங்கிய மனைவி

கூடுதல் ருசியுடன் சமைத்தனுப்பிய

மதிய உணவு போன்றது

சண்டையிட்ட மகவு

தன் சிறு கரங்களைக் கூப்பி

உங்களுக்காகவும் பிரார்த்தித்துக்கொள்வது போன்றது.

 

(வைபர்- wiper)

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationதுரும்புரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை