கோபப்பட வைத்த கோடு

Spread the love

கிருஷ்.ராமதாஸ்

photo

ரப்பர் கொண்டு அழிக்க – இது
பென்சிலால் வரைந்த கோடு அல்ல
வாடிய பயிரை கண்ட போதெல்லாம்
வாடினேன் என்று வள்ளலாரை
வருத்தப்பட வைத்த கோடு.
தனியொரு மனிதனுக்கு
உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திடுவோம் என்று
என் மீசைக்கார கவிஞனை
கோபப்பட வைத்த கோடு.
ரத்தமும் சதையும் கலந்த
மானுடத்தின் இடுப்பை
ஒடிக்க வந்த கோடு.
இதய நாளத்தின் ஆனி வேரை அசைத்து
என் இந்திய குடிமகனை
கண்ணீரால் நனைத்த கோடு.
இறையாண்மை பேசும்
இதயமில்லா தலைவர்களே
ஈரத்துணி வேண்டாம்
வயிற்றில் கட்ட
வறுமைக் கோட்டை உயர்த்துங்கள்
அப்படியாவது இந்திய ஏழையின்
வருமானம் கூடுமா என்று பார்க்கலாம்.

– கிருஷ்.ராமதாஸ், துபாய் [ பெரம்பலூர் ].

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல் ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்சந்ததிக்குச் சொல்வோம்