சந்ததிக்குச் சொல்வோம்

Spread the love

செரித்தது சேர்த்தது
வந்தது வாழ்ந்தது
இருப்பது தொலைந்தது

இன்னும்
தொப்புள் கொடிச்
சேதியும்
அடையாள அட்டை
அறியும்

உடம்புச் சேதிகள்
ஊசிமுனை இரத்தம்
அறியும்

சல்லடைகள்
இத்தனைக்கும்
சிக்காத சங்கதிகளான

நாம்
மறைத்த உண்மையையும்
தொடுத்த அநீதியையும்
இரகசிய ரொக்கத்தையும்
நம் சந்ததிக்குச்
சொல்லிவிட்டு
மரணிப்போம்

நிராயுதபாணியாய்
மடிகிறோம்
நிரபராதியாய்
மடிகிறோமா?

அமீதாம்மாள்

Series Navigationகோபப்பட வைத்த கோடுஇரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா