சரித்திர புத்தர்

Spread the love

மஞ்சுளா 

காலம் காலமாய் போதி மரங்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றன 
பல நேரங்களில் புத்தர்கள் அங்கு வந்து போவதுண்டு 
குழந்தைகள் ஒழிந்து விளையாடும் நேரங்களில் தங்களையும் குழந்தைகளாகிவிட்டு மீண்டும் புத்தர்களாகி போவதுமுண்டு 
மனித கண்களுக்கு மட்டும் தெரிவதேயில்லை 
நம்மை தொலைத்து நம்மையே தேடும் நமக்காக எப்படியோ அன்று சரித்திரமாகிப் போனார் ஒரு புத்தர் மட்டும் 
அன்றிலிருந்து ஒரு புத்தன் தொலைந்து விட்டான் என்று போதி மரங்களை நெருங்குவதே இல்லை எந்த புத்தனும் !                                –  மஞ்சுளா                          மதுரை 

Series Navigationநாடகம் நடக்குது2019 ஆண்டு ஜுலை 2 இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரணமும் காலிஃபோர்னியாவில் நேர்ந்த ஜூலை 7 ஆம் நாள் நிலநடுக்கமும்