சருகாய் இரு

Spread the love

உதிர்ந்துப்போன பிறகும் !!
தன்னுடன்
வைத்திருக்கும்
சத்தமெனும்
சலசலப்பை
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!!
தன் கண
பரிணாமத்தை
இலேசாக மாற்றி
இருக்கும்
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!
கிடக்கவும் ,பறக்கவும்
காற்றுடன் சேர்ந்து
சுழலவும்
கற்றுக்கொண்டிருக்கும்
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!
உக்கிரமாய்
பற்றிக்கொள்ளும்
தீயையும்,ஈரத்தையும்
இயல்பை பெற்றுவிடும்
சருகுகள்,

பச்சையாய் இருந்தபோது
இல்லாத
அத்தனை
செளகரியங்களும்
சருகானதும்

உதிர்ந்த பிறகு
தனித்தோ
தாடி ,
வளர்த்தோ
திரிவதில்லை
சருகுகள்,

முழுதும் மாறிப்போகிறது
சருகிடம்,
மனிதன் உதிர்வதில்லை?
உதிர்ந்த ஒன்றாய்
உதிர்கிறான்
உறவுகளை
உதருகிறான்.

Series Navigationஎன் சுற்றுப்பயணங்கள்கவிதை