சாகும் ஆசை….

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

“எங்கு வேண்டுமானாலும் போ

நான் சாகும்போது பக்கத்தில் இரு”

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற

எனக்கும் ஆசைதான்….

நான் சாக நேரும்போது

அவள் மடியில் சாகவேண்டுமென்பதும்

நான் சொல்லாத ஆசைதான்.

சாகும் நாளில் அங்கிருக்க வேண்டுமென்றால்

இரண்டு நாள் முன்னதாக

இங்கிருந்து கிளம்ப வேண்டும்

சாவு தெரிந்து விட்டால் வாழ்வேது?

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்புகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்