சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?

Spread the love

சிந்தானாவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சமீப காலமாக
அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களது சுந்தரத்தில் தலையிடுவதும் ஒரு சுதந்திரம் அடைந்த நாட்டில் நடை பெருவது மிகுந்த வேதனையைத்தருகின்றது. அதற்காக அரசங்கம் எந்தவித , சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. நீதிபதி கட்சுதான் இது குறித்து அறிக்கை தயாரித்து எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளதாக அறிய வந்தோம்.

ரூஷ்டிக்கும், தஸ்லீமாவுக்கும் ஏற்ப்பட்ட அவமானங்களும், தலைக்குனிவும், ஒரு கும்பலால் ஏற்ப்பட்டது. அவர்களது புத்தகங்களும் வெளியிட தடை செய்வதும், விற்க முடியமால் மிரட்டல் விடுவதும், இந்தியா போன்ற நாட்டில்தான் நடைபெறும். அதுவும் , கல்கத்தா போன்ற மாநிலத்தில் நடைபெறுவது, மிகுந்த ஆச்சர்யத்தை தருகினறது. இந்தியாவின் கலை நகரமாகவும், பேச்சு- எழுத்து சுதந்திரத்திற்கு வித்திட்ட மண்.

இந்த நாடு சுதந்திர நாடு. இங்கு மைனாரிட்டிக்கு உள்ள சுதந்திரம் கூட மெஜாரிடிகளுக்கு கிடையாதா ? ஒரு வன்முறை கும்பல் பார்லிமென்டில் குண்டு போடலாம். அவர்களை மன்னித்து விடவேண்டும். ரயில் தண்டவாளங்களில் குண்டு வைத்து தகர்த்து, உயிர்பலி வாங்கலாம். அவர்களையும் மன்னித்து விடலாம். ஆனால் சுதந்திர சிந்தனைகள் மட்டும் யாரும் அது குறித்து எழுதக்கூடாது. எழுதினால் கொன்று விடுவோம் என்ற கொலைமிரட்டல்.

இந்து மதமோ, இஸ்லாமோ யாரையும் கொலை செய்துதான் மதத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. விக்ரபுத்தியும், விகார மனப்பான்மையுதான், ஒரு கும்மல் கலாச்சாரத்தை வளர்த்து விடுகின்றது. அதற்கு இன்றைய அரசியலும், ஒரு சில அரசியல்வாதிளும் துணை போவது கண்டிக்கத் தக்கது.

தஸ்லிமா வங்க தேசத்திலும் வாழமுடியாது. இந்தியாவிலும் தஞ்சம் புகமுடியாது. ஒரு சிந்தானவாதிக்கு ஏற்ப்பட்ட நிலை இது. ஆனால், பல வளர்ந்த நாடுகள் இவர்களை போன்றோரை வரவேற்கின்றது. இது இந்திய மண்ணிற்கு அவமானம் இல்லையா ?

கடந்த 36 வது கல்கத்தா உலக புத்தகக் கண்காட்சியில் , தஸ்லீமாவின் நிர்பாசான் ( NIRBASAN ) ( EXILE ) புத்தக வெளியீட்டை, ஒரு வன்முறை கும்பல் தடுத்துள்ளது. அவரது ( DWIKHANDITA ) கல்கத்தா அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் தடையை, நீக்கம் செய்துள்ளது. ஆக, இனி பொது மக்கள் எல்லா கருத்து சுதந்திரத்திற்கும் உயர்நீதி மன்றத்தைதான் நாட வேண்டுமா? நமது அரசால் எந்த முடிவும் எடுக்க முடியாதா ? இதற்காகவா நாம், நமது எம்.பிக்களை யெல்லாம் அனுப்பி வைக்கின்றோம்.

வங்க எழுத்தாளர் நபரான், இந்த நிகழ்வை கண்டித்து பேசியுள்ளார்.ஒரு அரசியல் லாபத்திற்க்காக, செய்யப்பட்ட இலக்கிய துரோகம் என்று பேசியுள்ளார்.

இது ஒரு சமூகத்தின் குரலையே நெரித்து கொலச் செய்வது போலாகும்
இந்த வெறிச் செயல்.

சமீபத்திய உச்சநீதி மன்ற தீர்ப்பு ஒன்றில்,” ஒரே ஒரு கிராமத்திலே” சினிமாவிற்கு அரசு கொடுத்த தடையை, உச்ச நீதி மன்றம், தடை நீக்கம் செய்து, அதன் தீர்ப்பில், ” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும், கருத்து சுதந்திரத்திற்கு காப்பாற்றுவதும் அதன் கடமையாகும்” என்று கூறியுள்ளது.
ஆனால், இங்கு , ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு சாதியை நம்மித்தான் அரசு நடத்துகின்றது. இதில், சிந்தானவாதிகள் எவ்வாறு வளரமுடியும்.

இதேபோல், காஷ்மீரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்கூட,
ஒரு இந்துத்வ கும்பலால் நிறுத்தப்பட்டது. இதற்கு, அங்கே உள்ள அரசியல் செல்வாக்கும், ஓட்டு வங்கியும் துணைபோகின்றன. இந்த கொடுமையை,
மக்கள்தான் தட்டிக் கேட்கவேண்டும் என்று , ரூஸ்டி சொல்கின்றார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய ருஸ்டி, இந்தியாவிற்கு,
இன்னமும் முற்போக்கு எண்ணம் கொண்ட தலைவர்கள் வரவேண்டும் என்றார். மேலும் அவர், 90 % மூஸ்ஸீம்கள் , தீவிரவாதத்தை விரும்ப மாட்டார்கள் என்றும், அதே போல், இந்துக்களும் தான்’ என்றார். ஆனால், மதவெறியாளர்களை, மக்கள் அடையாளம் காண வேண்டும். மக்கள்தான்,
அவர்களை தட்டிக்கேட்க வேண்டும். அதற்கான சமயம் வந்துவிட்டது. இன்னமும் மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தால், இந்தியாவிற்கு கிடைக்கவேண்டிய ,சிந்தனாவாதிகள் தொலைந்து போவார்கள்” என்றார்.

உமர் அப்துல்லா, அகிலேஷ், இம்ரான்கான் போன்ற தலைவர்கள் மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்காமல், இரு கும்பல் கலாச்சாரத்தின் கைப்பாவையாக மாறியது வருந்தத்தக்கது” எனறார்.

குருநானக்கின், நூலில்தான் இந்தமதசாரமும், முஸ்ஸ்லீம்களின் வேதமும், கபீர், நாம்தேவு, சேக் ப்ரீத் போன்ற மக்கள் அருளாளர்களின் உண்மைகள் போதிந்துள்ளன. இது, ஒன்றுதான், இந்தியாவின் பல்வேறு
மதங்களின் முகங்களைக் காட்டும் நூலாக தெரிகின்றது’ என்றார்.

ஈழத்தில் நடந்த அப்பாவி மக்களுக்கான பயங்கர வாத்த்தையும், மனிதாபிமான மற்ற செயலைக் கண்டித்து , உலகமே திரண்டு எழுந்துள்ளது.
ஜ. நா. சபையில் பேசப்படுகின்ற தலைப்பாக கொண்டுவரப்பட்டு, அந்த படுகொலைக்கு துனை போன நாட்டை தண்டித்துள்ளது.

இது போன்ற எழுச்சியைத்தான், சிந்தானவாதிகள் எதிர்ப்பார்கின்றனர்.
இது நடந்தால், இந்தியாவில் மீண்டும், உயர்ந்த சிந்தனைகள் உலாவரலாம்.

வருமா ? மக்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

Series Navigationகாரைக்குடியில் கம்பன் விழாஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16