சின்னஞ்சிறு கதைகள்

1

சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது”

அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்”

“எதை?”

“சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை”

“நீ அறிந்ததைவிடவும் அதிகமாகவே”

2

அவனது முடியை ஷாம்பூவால் அலசினான்.

கழிவுநீர் போக்கியிலிருந்து நழுவி வெளியேறியது மெதுவாக

அவன் இன்னும் கொஞ்ச நேரம் கண்களை மூடிகொண்டிருப்பான் என்ற நம்பிக்கையோடு

3

”ஆக, புதுசா ஏதும் விஷேசம் உண்டா?”

“நான் சமீபத்தில ஒரு இயந்திர மனிதனை உருவாக்கினேன்“

“எதுக்கு?”

“சும்மா பேசிகிட்டு இருக்கத்தான்”

“எப்படி இருக்கு?”

“ம்ம்.. நல்லாத்தான் இருக்கு. நீ நல்லாவே பேசுற”

Asmallfiction என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து

Series Navigationமஹாவைத்தியநாத சிவன்