சிரித்த முகம்

ஒரு வரலாற்றை
முடித்துவிட்டு
முற்றுப்புள்ளி
அழுகிறது

‘எழுநூறு கோடியின்
எழுச்சிமிகு தலைவன்’
ஏற்றுக்கொண்டிருக்கிறது
உலகம்

ஒரு சூரியனை
ஒளித்துவிட்டது
கிரகணம்

தொலைநோக்குத்
தலைவனை
தொண்டனை
தொலைத்து விட்டோம்

நீ உறக்கம் தொலைத்த
இரவுகளையும் சேர்த்தால்
இருநூறு உன் ஆயுள்

முகவரி தந்த உன்
முகம் பார்க்கும்
இறுதி நாள்
கடந்து கொண்டிருக்கிறது

சிங்கைத் தீவை
இன்று கண்ணீர்
சூழ்ந்திருக்கிறது

மண்ணோடு
மக்களையும்
செதுக்கிய தலைவ!

இனி எங்கள்
சிங்கைக் கொடியே
உன் சிரித்த முகம்

அமீதாம்மாள்

Series Navigationஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி]கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது