சிறார்களுக்கான கதை. சுத்தம்:

Spread the love

மணி கிருஷ்ணமூர்த்தி

குழந்தைகளே, தொப்பி விற்பவன் தூங்கும்போது குரங்குகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்ட பிறகு அவன் ஒரு தந்திரம் செய்து அவற்றையெல்லாம் திருப்பி வாங்கின கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வாருங்கள் “அதுக்கும் மேலே” ஒரு கதை பார்க்கலாம்.
வத்தலகுண்டு வத்தலகுண்டுன்னு ஒரு ஊராம், அந்த ஊர்ல ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்குதாம். பஸ் ஸ்டாண்ட்ன்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு? பஸ்ஸெல்லாம் இங்கிருந்துதான் எல்லா ஊருக்கும் போகும், வரும். இப்போ “தூய்மையான பாரதம்”ன்னு சொல்றாங்களே அதப்பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா, தெரிஞ்சுக்கனும். ஒரு நாள் நல்லெண்ணம் படைச்ச நாலு பேர், நாலுன்னா நாலு இல்ல, ஒரு பத்து பதினெஞ்சு பேரு ஒன்னா சேர்ந்துகிட்டு குப்பையெல்லாம் வாரி போடலாம்னு பஸ் ஸ்டாண்ட் போனாங்க. ஒரு நாளெல்லாம் வாரி வாரி போட்டாங்க. அப்பொ அங்கிருந்த ஒரு கிறுக்கன், அதாங்க தாடி எல்லாம் பெருசா வச்சுகிட்டு, அழுக்குதுணி போட்டுகிட்டு இருப்பாங்களே, அந்த ஆளு இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தானாம். வந்தவங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு ஹேப்பியா கெளம்பினாங்களாம், எப்பா இனிமே யாரும் இங்க குப்பைய போட மாட்டாங்கன்னு சொல்லுக்கிட்டெ….
அடுத்த நாள் பொழுது விடுஞ்சுது, ஜனங்க எல்லாம் வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் வருவாங்க இல்லையா, வந்தாங்க, வந்து என்ன, வழக்கம்போல குப்பைய கண்ட கண்ட இடத்தில போட்டாங்க. அப்போ அந்த கிறுக்கனுக்கு கோவம் வந்துச்சாம் பாருங்க, உடனே அப்பத்திலேர்ந்து குப்பையெல்லாம் எடுத்து எடுத்து அங்கயிருந்த தொட்டியில போட ஆரம்பிச்சானாம். ஜனங்க தெனமும் அத பார்த்து பார்த்து அவங்களாகவே போயி குப்பை தொட்டியில போட ஆரம்பிச்சாங்களாம்..அப்பப்போ பிஸ்கெட்டு, டீ, டிஃபன் எல்லாம் கிறுக்கனுக்கு வாங்கி குடுப்பாங்களாம்.
இப்பொ சொல்லுங்க குழந்தைகளா, ஒரு நாள் மட்டும் தொட்டியில போட்டவன் கிறுக்கனா, இல்ல தெனமும் போடறவனா.

( மணி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு. )

Series Navigationபெண்ணே