சிறு கவிதைகள்

01

சாந்தியா
அது?

சாந்திதான்
அது.

சாந்தி என்பது
எது?

o

02

படிப்பதா?
படைப்பதா?

O
03

எழுத இருக்கிறது
இன்னும் ஒரு பாதி.

போய்விடுமோ
ப்ரூப் ரீடிங்கிலேயே
மீதி வாழ்வு?

o
04

வெகு எளிதாக
போய்வருகிறான்
வெளிநாடுகளுக்கு
சக எழுத்தாளன்.

கடை பாக்கிக்காக
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறான்
கவி சாம்ராட்.

o

Series Navigationஒன்றாய் இலவாய்ஆதி