சிற்சில

Spread the love

சில நிபந்தனைகளுடன்

சிலரை

ஏற்றுக்கொள்ள முடிகிறது.

 

சில புரிதல்களுடன்

சிலருடன்

ஒத்துப்போக முடிகிறது

 

சில வேறுபாடுகளுடன்

சிலருடன்

வாழ்ந்து விட முடிகிறது

 

சில சகிப்புகளுடன்

சிலருடன்

பயணிக்க முடிகிறது.

 

சில துருத்தி நிற்கும்

உண்மைகளுடன்

சிலரைக் கடந்து செல்ல முடிகிறது.

 

சில ம்றைத்து வைக்கப்பட்ட

பொய்களுடன்

சிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது.

 

சில உறுத்தல்களுடன்

இது போன்ற

சில கவிதைகளை

வாசிக்கவும் முடிகிறது.

 

 

Series Navigationப.மதியழகன் கவிதைகள்இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்: