தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்

அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான போராட்ட அரசியலைத் தொடங்கியுள்ளது. அந்தப் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டதும், தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் பொது மக்கள் ஜன நாயகத்தில் பங்கு பெறுவதை…

(68) – நினைவுகளின் சுவட்டில்

சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது அவர்கள் இல்லை. வீடு வெறிச்சோடிக்கிடந்தது. ஆனால் சுகமோ துக்கமோ இம்மாதிரியான மனச்சலனங்கள்…

திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1

(A discourse on strategy and organization) - Part 1 (கட்டுரை தொடங்குமுன் ஒரு முன்னுரை:  இந்த இருபது வருடங்களில் இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள் சென்னை உட்பட கண்ட மக்கள்தொகை மற்றும்…

இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?

அஸங்க சாயக்கார தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி…

இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:

நானொரு மிகச் சாமானிய இந்தியன். நமது பிரதமந்திரி போன்று உலகப்பிரசித்தி பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயின்று அவர்களால், அளிக்கப்பட்ட பட்டம் பெற்றதில்லை. மேலும் நமது நாட்டின் ரிசர்வ்…

கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?

திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச்…

இடைசெவல்

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே…

அறிவியல் தொழில்நுட்பம்

விக்கிப்பீடியா – 2

சித்ரா சிவகுமார், ஹாங்காங் “என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?” “எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக்…

இலக்கியக்கட்டுரைகள்

மனிதநேயர் தி. ஜானகிராமன்

முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் தி.ஜா என்ற தி.ஜானகிராமன் ஆவார். பாலுணர்வால் எல்லை மீறி நடந்து…

எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு

'தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தைஎன்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதைஎன்று சொல்வது பேடித்தனம்' என்று சொன்ன புதுமைப்பித்தன் - இந்தத் திருட்டை'இலக்கிய மாரீசம்' என்ற…

வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்

ப.இரமேஷ் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி இன்று வரை வெளிவந்துள்ள காப்பியங்களில் பாடுபொருள்களும் அவற்றின் வடிவங்களும் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்றாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழில் காவியங்கள் தோன்றுவது என்பது மிகவும் அருகிப்போன…

எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா

எப்போதும் ஏதேனும் சாதித்தவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமா? ஒரு சாதாரண மனிதனை பற்றி எழுதலாமே என்று தோன்றியதன் விளைவுதான் இக்கட்டுரை.   கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சிறிய ஊரில்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13

[caption id="attachment_318" align="alignright" width="300" caption="ramayana"][/caption] நிறைவாக இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட "திண்ணை" இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். 'நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; நம் பக்கம்…

கடிதங்கள் அறிவிப்புகள்

பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு…

அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு

திண்ணையின் நீண்டகால வாசகர்களில் ஒருவன். வாராவாரம் திண்ணையை வாசித்து வருபவன். அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு அழகாக இருக்கிறது. இலக்கியப்பயணத்தில் திண்ணையின் பணி தொடர வாழ்த்துக்கள். அன்புடன் சு.குணேஸ்வரன்

ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 'இலக்கியப்பூக்கள்-2' நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும்.…

சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு

வணக்கம். திண்ணை இணையத்தில் தொடராக வந்த "ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி" மற்றும் சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு tamilwritersathyanandhan.wordpress.comவலைப்பூத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. நன்றி. அன்புடன் சத்யானந்தன்.

கதைகள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நியாய யுத்தம் என்று ஒன்று இருக்கிறதா ?  ஆயுதங்களும் குண்டுகளும் சாமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலவச் செய்யுமா ?  மரணத்…

தரிசனம்

  மலைக்கு இந்த வருஷம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று மணி சொன்னதும் சேஷு ஒப்புக் கொண்டு விட்டார்.   கடந்த நாலைந்து வருஷமாகவே மணி சேஷுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஒழியவில்லை. இந்தத் தடவை …

தண்டனை !

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன்…

கருப்புக்கொடி

-சாமக்கோடாங்கி ரவி   காலை 10.30 மணி. நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கறிஞர்கள் இறக்கை ஒடிந்த காக்கையைப் போல ஒவ்வொரு நீதிமன்றமாக கைகளில் கட்டுடன் தாவிக்கொண்டிருந்தனர். சில காக்கைகளின் இறக்கைகள் அங்கே…

ஆனியன் தோசை

மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய இடமாகும்.” Global warming caused by increased industrial pollution; privatization…

மெய்ப்பொருள் காண்ப தறிவு

ஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா? நண்பனா? அல்லது இரண்டும் இல்லையா? சர்க்கரை சிநேகிதனானால் …

அம்மாவின் மனசு

அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம்.       அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே.…

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38

    சென்ற வாரம்  तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அதாவது Instrumental Case  பற்றி விரிவாகப் படித்தோமல்லவா? இந்த வாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோமா? பயிற்சிகளைச் செய்வதற்கு முன் तृतीया विभक्तिः(tṛtīyā…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ”ஆலயங்களுக்கும் மற்ற புனிதத் தளங்களுக்கும் நான் தொழச் செல்கையில் அங்கேயும் திருவாளர் பிதற்றுவாயன் கரத்தில் ஒளிவீசும் செங்கோல் ஏந்திச் சிரத்தில்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         "எங்கு நீ இனிதாக வசிப்பாய் ?" என்று நான் வினவினேன். "அரண்மனை வசிப்பே சிறந்தது"…

பிஞ்சுத் தூரிகை!

  அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.   வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம்   இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த…

விசையின் பரவல்

ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் சாட்சியாகி நிற்கிறது உன் சொற்கள் . நீர்மம் குமிழாக உருவெடுக்க விசையின்…

அம்மாவின் நடிகைத் தோழி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம்   'பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த்…

ஓரு பார்வையில்

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . பறக்க தோன்றவில்லை, களங்கமற்ற வானத்தை கண்டதும் ! . ஏனோ தெரியவில்லை!!…

குடிமகன்

தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா  நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும் நதியை போலவே அது ,என்றொருநாள்  அது நிச்சயம்…

சௌந்தர்யப்பகை

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. லாவா உக்கிரத்துடன் வார்த்தைக் கண்ணிகளை அங்கங்கே புதைத்து மாட்டும் கால்களுக்காக காத்து…

மௌனம்

மனதோடு மௌனம் பழக்கி பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரண கூச்சல் .... சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பி தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் அழைப்பிதழ்... சுயம் அடிபடும் வேளைகளில் ரௌதரம் பழகவில்லை…

ரகசிய சுனாமி

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான…

தவிர்ப்புகள்

வருபவர் தூரத்துச் சொந்தம் என அறிந்தும் தடம் மாறிப்போன நண்பன் எனத் தெரிந்தும் முகம் தெரிந்தும் பெயர் தெரியாதவன் என புரிந்தும் பேசச் செய்திகளின்றி விருப்பமுமற்று தவிர்த்தோ அல்லது வெற்றுப் புன்னகையுடனோ முடிகின்றன நிறைய…

உலரும் பருக்கைகள்…

கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள்.…

சிற்சில

சில நிபந்தனைகளுடன் சிலரை ஏற்றுக்கொள்ள முடிகிறது.   சில புரிதல்களுடன் சிலருடன் ஒத்துப்போக முடிகிறது   சில வேறுபாடுகளுடன் சிலருடன் வாழ்ந்து விட முடிகிறது   சில சகிப்புகளுடன் சிலருடன் பயணிக்க முடிகிறது.  …

ப.மதியழகன் கவிதைகள்

தொலைந்து போனவர்கள்   சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு கனவுகள் இலவசம் ஞானம் தேடுபவர்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் வேட்டுச் சத்தத்தோடு வழியனுப்ப…

பொய்க்கால் காதலி!

தாளத்துக்கேற்ற நடனம் வசிய பார்வை விஷம புன்னகை மழலை பேச்சு... அடிமை பட்டுக்கிடக்கும் ஒரு ரசிகனாய் நீ ரசிக்க பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க பிடித்துத் தருகிறேன் காதலாய்... கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க சிறகில் ஒன்று உடைந்து…

ஏன் மட்டம்

பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் - அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம், ஓட ஓட விரட்டி ஓநாயை; கொல்லும் கொம்பன் காளை,…

சபிக்கப்பட்ட உலகு -2

-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே இலகுவாயிற்று நினைவு குமட்டுகிறது எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க இயலாமை… மரணம்……

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

  அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த பெயரோ நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி அடர் பச்சை ஊசியிலை மரங்களின்…

உறைந்திடும் துளி ரத்தம்..

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* --இளங்கோ

எதிரொலி

  என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த …

ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி

போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது தோரணையே அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம் என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை…