சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10

சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
This entry is part 22 of 26 in the series 8 டிசம்பர் 2013

[சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -10

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

 

 

Scene -18

Scene -19

படம் : 18 & படம் : 19 [இணைக்கப் பட்டுள்ளன]

++++++++++++++++++

காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதா

[படம் :1] Scene -6 Valmiki with Rama & Twins

இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.

நேரம்:  மாலை வேளை

பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது.

(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)

லவா, குசா: [தரையில்  கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள்  உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு  வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.

இராமன்: [கனிவுடன்] அருமைப்  பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத்  தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது  உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும்  அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!

லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை  ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற  எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ?  போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது!  எடுங்கள் உங்கள் வில்லை!

இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம்  அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம்  கேளுங்கள்.  அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.

லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ?  எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?

[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை  குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]

வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!

[படம் :2]Scene -6 Valmiki with Seetha & Twins

லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே  போடுகிறார்கள்)

இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.)  வணக்கம் மகரிஷி!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள்  அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள்  கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள்  அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால்,  தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும், நான்  தவிர்த்திருப்பேன்!

லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத்  தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ?  எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான்  யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள்  பிதாவா ?

இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத்  தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை  நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.

குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன்  எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக்  காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள்  தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள்  தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்!  [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத்  தயக்கமா ?  வெட்கமா ?  உங்கள் புதல்வர் நாங்கள் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது  வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]

வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர்  உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து]  பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!

இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என்  புதல்வர்களா ?

வால்மீகி:  ஆமாம்,  அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திர மோடு]  சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும்  தந்தைக்குக் குறைய வில்லையே!

unnamed

[படம் : 3]Scene -5 Rama meets the Twins

வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன்,  விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே!  அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என்  ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள்.  லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக்  கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ  அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும்  இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!

[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன்  முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று  வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]

மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல்,  சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின்  எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன்  எங்கள் சந்திப்பு!

இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில்  பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச்  சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார்  ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும்  எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க  எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டு விடக்  கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள்  அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ  சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன்,  அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன்  பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை  போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை  இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின்  இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி  இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா  விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!

லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன்  அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன்  அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.

வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து  விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.

லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை  அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து  இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக்  கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ?  எங்கள் தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?

 

Series Navigationசோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.

54 Comments

  1. Avatar ஷாலி

    பேராசிரியப் பெருந்தகை ஜெயபாரதன் அவர்களிடம் கவிதைகள் ஊற்றாக ஓடிவருவது அனைவரும் அறிந்ததே! ஆயினும் சீதாயானம் நாடகத்தில் வரும் வசனங்கள் எளிமையாக, கூர்மையாக, வைர வசனங்களாக ஜொலிக்கின்றன.வாழ்த்துக்கள்!
    தங்கள் நாடகத்தில் ஸ்ரீ அனுமனை, தென்முனை கண்டத்தை சேர்ந்தவர் என்றும் தென்னகர் என்றும் அறிமுகப்படுத்துகிறீர்கள். நம் நண்பர் திரு.க்ருஷ்ண குமார் அவர்களும் அனுமனை தென்னவர் என்று கூறுகிறார். தென்னகர்,தென்னவர் இரண்டும் குறிப்பது தமிழரையா? தென்னகத்து தமிழன் குரங்கு கூட்டமா? வேறு பொருள் ஏதேனும் உண்டா? அய்யாவின் விளக்கம் அறிய ஆவல்!

    • Avatar IIM Ganapathi Raman

      கிருட்டிணக்குமார் அய்யா அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஜயபாரதன் அய்யாவிடம் வைத்தால் எப்படி?

      அய்யா கிருட்டிணக்குமார் அவர்கள் சொல்லவேண்டும்: தமிழரெல்லாரும் குரங்குகளா?

      • Avatar paandiyan

        க்ருஷ்ணகுமார் அவர்கள் அப்படி சொல்லவில்லை. இப்போது உங்கள் மூஞ்சியை எங்க கொண்டு போவீர்கள் பக்கத்தில் இருக்கும் குற்ரலாத்திற்கா?

        • Avatar IIM Ganapathi Raman

          குற்றாலத்துக்குத்தான் போகவேண்டுமென நினைத்தேன். ஆனால் சீசனில்லை என்றார்கள். எனவே திருக்குறுங்குடி போய்விட்டுவந்தேன். அங்கு போய்வந்த விடன் எனது பித்தம் தெளிந்துவிட்டது. அஃதென்ன பித்தம். அஃதெப்படி தெளிந்தது எனப்து பற்றி எழதவிருக்கிறேன். திண்ணையில் ஒருவேளை வரலாம்.

    • நண்பர் ஷாலி அவர்களே,

      விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம் வாங்கிய மகிழ்ச்சி உண்டாகுது எனக்கு.

      பத்தாண்டுகளுக்கு முன்பு நான் திண்ணையில் எழுதிய “சீதாயணம்” என்னும் ஒரு சிறு கவிதையே இந்த சீதாயண நாடகத்தின் உட்கருவாய் தரித்து உருவெடுத்து விரிந்தது.

      பாராட்டுக்கு நன்றி. உங்கள் பாராட்டுகள் திரு பாண்டியனார் வயிற்றில் தீ வைத்துக் கொந்தளிக்கச் செய்துள்ளது. பாவம் அவருக்கு ஆறுதல் கூறுங்கள்.

      சி. ஜெயபாரதன்.

      http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=303071010&format=html

      Thursday July 10, 2003

      சீதாயணம்!

      சி. ஜெயபாரதன், கனடா

      இராவணன்

      ஜானகி தேவி
      கானக வாசி!
      நாட்டில் பூத்த ரோஜா மலர்!
      மாற்றான் தோட்டத்து மாங்கனி!
      ஆயினும் அவளது
      மேனி எழிலில்
      ஞானம் இழந்து
      மாறு வேடத்தில்
      கள்ளத்தனமாய்க் கடத்தி
      இலங்கா புரியில்,
      அரண்மனையில்
      அலங்காரச் சிறையில்,
      அடைத்து வைத்து,
      அடிக்கடி
      அழகு பார்த்து,
      பூஜை செய்த
      போக்கிரி ராஜா!

      +++++++++++++++++++++

      இராமன்

      வான வில்லை
      வளைத்துப் போட்டு
      வெற்றி வீரனாய்
      மாலை இட்ட மங்கை!
      மானசீக மனைவி!
      ஜானகி தேவி!
      கூனிக் கிழவி
      ஞானச் சூழ்ச்சியால்
      ஈரேழு ஆண்டுகள்
      நாரதர் உருவில்
      வனவாசம் புகுந்து,
      மானைப் பிடிக்கப்போய்
      மனைவியைப் பறி கொடுத்தவன்!
      இறுதியில்
      படை திரட்டிப் போரிட்டு
      பலர் உயிரிழந்து
      அனுமானைத் தூதுவிட்டு
      ஈழத்தில் தீயிட்டு
      தேவியை மீட்டு
      அயோத்திய புரிக்கு
      பட்டத் தரசனாய் மீண்டவன்!
      பாரத நாரீமணியை
      தீக்குளிக்க
      வைத்த பின்னும்
      ஐயம் தீராமல்,
      அறிவு கெட்ட
      வண்ணான் சொற்கேட்டு,
      தர்ம பத்தினி
      கர்ப்பிணி,
      கதறக் கதற மீண்டும்,
      கானகம் துரத்திய
      ஞானப் பதி!
      தன்
      மானம் காத்து
      மனைவி மானத்தைக் கப்பலேற்றிய
      செங்கோல் ராஜா!

      ************

      Copyright:Thinnai.com 

      • Avatar புனைப்பெயரில்

        திண்ணையின் தனிக்காட்டு ராஜா
        தறிகெட்டு எழுதுவார்
        நெறிகெடுதல் எனும் நிலையும் தாண்டி.

        • தமிழறிவு மிக்க, பெற்றோர் வைத்த தமிழ்ப் பெயர் சொல்ல வெட்கப்படும் புனைபெயராரே,

          முதலில் நீர் யாரென்று உமது போலி முகத்திரையைக் கிழித்து திண்ணையில் எழுத வாருங்கள் !

          “அறிவு கெட்ட வண்ணான்” என்றால் வண்ணாத் தொழிலை இகழ்வது அல்ல.

          “அறிவு கெட்ட புனைபெயரார்” என்றால் உமது தொழிலை இகழ்வது அல்ல.

          இப்படிச் சொன்னால் உமக்குப் புரியும்.

          சி. ஜெயபாரதன்

          • Avatar paandiyan

            //“அறிவு கெட்ட புனைபெயரார்” என்றால் உமது தொழிலை இகழ்வது அல்ல.

            //

            அறிவு கெட்ட சி. ஜெயபாரதன் என்று நான் சந்தேகம் கேட்டால் கோவப்படக்கூடாது . சரியா

          • Avatar paandiyan

            ஜெயபாரதன் தமிழ் பெயரா? செயபாரதன் என்றுதான் இருக்கவேண்டும்.

          • Avatar புனைப்பெயரில்

            அந்தக் காலத்தில் ராமானுஜன் என்பவர் கணக்கு விஞ்ஞானியாக லண்டன் வரை சென்றார் – ஐயங்கார் என்பதால் அல்ல… அறிவாளி என்பதால். அப்புறம் திருச்சியில் இருந்து ஒருவர் லண்டனுக்கு டாக்டர் படிக்க சென்றார் – ஐயர் என்பதால் அல்ல , அறிவாளி என்பதால். ஆனால் இன்று, பிளாப் முடித்து லண்டனில் வேலை பார்க்கும் பல இந்தியர்களும் சரி, அமெரிக்க கனடாவில் வேலை பார்க்கும் பலரும் சரி அறிவால் அல்ல… பிறந்த ஜாதியால் இட ஒதுக்கீட்டால் , டப்பா அடித்து இல்லை துட்டுக் கொடுத்து டாக்டராக, கணணி வல்லூனராக, விஞ்ஞானிகளாக ( என்று சொல்லிக் கொண்டு ) தரமற்ற நிலையில் இருக்கிறார்கள். பிரயின் டிரையின் -அது தாங்க மூளையே இல்லாதவர்கள்- அதிகமாப் போச்சு… அதனால் தான் இந்த மாதிரி ஆட்கள் தகுதியற்று எழுதி பேசி கொண்டு. கோட்டாக்களின் கோட்டையில் ஆந்தைகளின் கொட்டம் அதிகமாக இருக்கத் தான் செய்யும். கலி காலம் இது….

        • புனைபெயராரே,

          இது பாட்டி ஜாடையாய்ச் சொல்வது போல் இருக்கிறது !

          இதற்கு ஆதாரங்கள் தேவை. நீர் யாரென்றும் உமது உண்மைப் பேர் தேவை. ஒளிந்துநின்று இராமன் வாலி மீது அம்பு ஏவியது போலின்றி உண்மைப் பெயரில் கல்லை விட்டெறிய உமக்கு ஊக்கம் உள்ளதா வீரரே?
          சி. ஜெயபாரதன்.

          சி. ஜெயபாரதன்.

      • Avatar புனைப்பெயரில்

        அறிவு கெட்ட
        வண்ணான் சொற்கேட்டு,—–> இதை விட இகழ்வாய் ஒரு தொழில் புரிவோரை சொல்ல முடியுமா…? என்ன புத்தியோ…

        • Avatar paandiyan

          அட விடுங்க ஸார். அவர் “விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம் வாங்கிய” (!?!?!?!) பெரும் பாக்கியவான். அவர் சொன்னால் சரியாக இருக்கும். இல்லை சரி என்றும், பேராசிரிய பெருந்தகை என்று ஒரு பின்னோட்டம் போட்டு விட வேண்டும்.

    • மதிப்புக்குரிய ஷாலி அவர்களே,

      பாராட்டுக்கு மிக்க நன்றி. தென்னவரான அனுமன் உதவிப் படையினரை வால்மீகியோ, அவரது பிந்தய ஓலைச் சுவடுப் பதிப்பாளரோ,பேசும் குரங்குகளாகப் படைத்துள்ளார். பேசும் குரங்குகள் உலக வரலாற்றில் எங்கும் காணப் பட வில்லை. உயிரின மலர்ச்சி விஞ்ஞானி சார்லஸ் டார்வின் பன்மொழி பேசும் சிம்பான்சிக் குரங்குகளைப் பற்றி எங்கும் கூறியதாக நான் படித்ததில்லை.

      இராமனும், சீதாவும் வாழ்ந்த அதே காலத்தில் வானில் தாவும், வால் முளைத்த, வாய் பேசும் நாகரீக வானரங்கள் வசித்திருக்க முடியாது என்பது என் அழுத்தமான கருத்து. அனுமன் படையினர் அத்தனை பேரும் முழுக்க முழுக்க முழுமனிதர் என்பதும் என் ஆணித்தரமான கருத்து.

      சி. ஜெயபாரதன்.

  2. Avatar க்ருஷ்ணகுமார்

    \ நம் நண்பர் திரு.க்ருஷ்ண குமார் அவர்களும் அனுமனை தென்னவர் என்று கூறுகிறார். \

    அப்படி நான் எங்கே கூறியுள்ளேன்? ஸ்ரீமான் ஜெயபாரதன் அவருடைய எழுத்துக்களை வாசித்து நீங்கள் குழம்பி விடவில்லையே!!!!!!

    ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் அருவருக்கத் தக்க வகையில் ஒரு இலக்கியத்தை எப்படி அணுகக் கூடாது என்பதற்கு உதாரணமாக வடக்கு தெற்கு என பிதற்றியதை இகழ்ந்துள்ளேன்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் வால்மீகியை மூல ராமாயணம் வழியாகவோ அல்லது மொழிபெயர்ப்புக்கள் வழியாகவோ ஒரு அக்ஷரம் கூட வாசிக்கக் கூட முயலாது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனத் தன் மனதில் தோன்றியதையெல்லாம் தன் அலக்கியப் படைப்பில் கொப்பளித்து – போதாததற்கு அவருடைய அலக்கியம் சொல்வது தான் *மெய்* என சொல்கிறார். இது வரை அவருக்கு இந்த *மெய்* ஞானம் எப்படிக் கிட்டியது என அதற்கான source ம் பகிரவில்லை.

    என் தொகுப்பும் தயாராகி வருகிறது. விக்ஞானி அவர்களது கருத்துக்களை சிரமேற்கொண்டு தான் நான் என் தொகுப்பை வடித்து வருகிறேன். அவரென்னவோ காஷ்ட மௌனத்தில் இருக்கிறாரே

  3. Avatar paandiyan

    சுவாமி க்ருஷ்ணகுமார் அவர்களே . இந்த கேடு கெட்ட கட்டுரை பிரபலம் ஆக அவர்கல போடும் பின்னூட்டம் இது. இதை புரிந்து கொள்ளுங்கல் டீவீ இல் TRP ரேடிங்க் இல் இருக்கவேண்டிய ஜென்மங்கள் இவர்கள்.

  4. ///சுவாமி க்ருஷ்ணகுமார் அவர்களே. இந்த கேடு கெட்ட கட்டுரை பிரபலம் ஆக அவர்கல போடும் பின்னூட்டம் இது. இதை புரிந்து கொள்ளுங்கல் டீவீ இல் TRP ரேடிங்க் இல் இருக்கவேண்டிய ஜென்மங்கள் இவர்கள்.///

    பின்னோட்டங்களில் கவன மின்றி வேண்டு மென்றே தொடர்ந்து, தமிழ் வரிகளைப் பிழையோடு எழுதி வரும் திரு. பாண்டியன் தமிழரா ? தமிழ் படித்தவாரா ? தமிழ் நாட்டவரா ?

    தமிழை இகழ்ச்சி செய்யும் இவர் திண்ணையில் தனது கீழான தமிழறிவைக் காட்டித் தன்னையே தாழ்த்திக் கொள்ள இவர் வெட்கப் பட வேண்டும்.

    சி. ஜெயபாரதன்

  5. Avatar paandiyan

    /பேராசிரியப் பெருந்தகை//
    //விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம் வாங்கிய மகிழ்ச்சி உண்டாகுது எனக்கு.

    ///

    அடட நீங்கள் எல்லாம் அக்மார்க் தமிழன்தான் . சந்தேகம் என்பதே இல்லை.

  6. Avatar paandiyan

    //உங்கள் பாராட்டுகள் திரு பாண்டியனார் வயிற்றில் தீ வைத்துக் கொந்தளிக்கச் செய்துள்ளது//

    பாராட்டும் அளவுக்கு ஷாலியோ , பாராட்டை ஏற்கும் அளவுக்கு நீங்களோ – இங்கு பெரிய அப்பாடக்கர என்ன? எனக்கு தீ புடிக்க? எனக்கு நான பாராட்டி பெருமைப்பட (டம்மி பின்னூட்டம் மாதிரி போட்டு) நான் ஒன்றும் பைத்தியம் இல்லை.

  7. Avatar ஷாலி

    //தமிழை இகழ்ச்சி செய்யும் இவர் திண்ணையில் தனது கீழான தமிழறிவைக் காட்டித் தன்னையே தாழ்த்திக் கொள்ள இவர் வெட்கப் பட வேண்டும்.//
    பேராசிரியர் அய்யா! இவர்கள் முற்றும் துறந்த முனிவ சுவாமிகள்.எல்லாத்தையும் உதித்தியாச்சு.இனி என்ன-இல்லாத வெட்கத்தை விலை போட்டு வாங்கவா முடியும்? கருப்பு அவாளும்,வெள்ளை அவாளும் தமிழை பிழையாக்குவதற்கு தேவ பாஷையில் காரணம் உள்ளது.காரணம் இன்றி காரியம் இல்லை. இதோ வேதம் சொல்கிறது.
    சுக்லயஜுர் வேதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது .

    “தஸ்மாது ப்ராம்மணேனநம்லேச்சித வைநம அபபாஷித வை…”
    இந்த சின்ன ஸ்லோகத்தில் பெரிய கருத்து அடங்கி உள்ளது.
    அதாவது நல்லவர்களான தேவர்களுக்கும் கெட்டவர்களான அசுரர்களுக்கும் போர் நடந்தது.இதில் தேவ பாஷை சமஸ்கிருதம் பேசிய தேவர்கள் வெற்றி பெற்றனர்.மிலேச்ச பாஷை அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள்.
    எனவே தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை அதாவது தெய்வத்தன்மையற்ற பாஷை என்கிறது வேதம்.இப்படிப்பட்ட தெய்வத்தன்மை பெற்ற சமஸ்கிருதத்தை மனுவும் போற்றி புகழ்கிறார்.

    “…தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…”

    அதாவது .” விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும் தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். “ அதனால் இந்தப்பகுதியை தவிர மற்ற பகுதிகள் தெய்வீகத் தன்மையற்றவை.”
    இவைகளை நன்கு விளங்கிய காரணத்தால் தான் ஸ்ரீ மான் மஹாஸயர் ஸ்வாமி க்ருஷ்ண குமார் அவர்கள் உத்தர பாரதத்தில் இருந்து கொண்டு உத்தர- வ்யாஷம் என்னும் தேவ பாஷையில் பொலிகிறார்.பொலிக…பொழிக! தேவ பாஷையை சட்டையாக தைத்துப் போட்டுத் திரியும் கனபாடி கூட்டத்தாரிடம் கன்னித்தமிழ் மானபங்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

    //தமிழை இகழ்ச்சி செய்யும் இவர் திண்ணையில் தனது கீழான தமிழறிவைக் காட்டித் தன்னையே தாழ்த்திக் கொள்ள இவர் வெட்கப் பட வேண்டும்.//
    பேராசிரியர் அய்யா! இவர்கள் முற்றும் துறந்த முனிவ சுவாமிகள்.எல்லாத்தையும் உதித்தியாச்சு.இனி என்ன-இல்லாத வெட்கத்தை விலை போட்டு வாங்கவா முடியும்? கருப்பு அவாளும்,வெள்ளை அவாளும் தமிழை பிழையாக்குவதற்கு தேவ பாஷையில் காரணம் உள்ளது.காரணம் இன்றி காரியம் இல்லை. இதோ வேதம் சொல்கிறது.
    சுக்லயஜுர் வேதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது .

    “தஸ்மாது ப்ராம்மணேனநம்லேச்சித வைநம அபபாஷித வை…”
    இந்த சின்ன ஸ்லோகத்தில் பெரிய கருத்து அடங்கி உள்ளது.
    அதாவது நல்லவர்களான தேவர்களுக்கும் கெட்டவர்களான அசுரர்களுக்கும் போர் நடந்தது.இதில் தேவ பாஷை சமஸ்கிருதம் பேசிய தேவர்கள் வெற்றி பெற்றனர்.மிலேச்ச பாஷை அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள்.
    எனவே தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை அதாவது தெய்வத்தன்மையற்ற பாஷை என்கிறது வேதம்.இப்படிப்பட்ட தெய்வத்தன்மை பெற்ற சமஸ்கிருதத்தை மனுவும் போற்றி புகழ்கிறார்.

    “…தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…”

    அதாவது .” விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும் தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். “ அதனால் இந்தப்பகுதியை தவிர மற்ற பகுதிகள் தெய்வீகத் தன்மையற்றவை.”
    இவைகளை நன்கு விளங்கிய காரணத்தால் தான் ஸ்ரீ மான் மஹாஸயர் ஸ்வாமி க்ருஷ்ண குமார் அவர்கள் உத்தர பாரதத்தில் இருந்து கொண்டு உத்தர- வ்யாஷம் என்னும் தேவ பாஷையில் பொலிகிறார்.பொலிக…பொழிக! தேவ பாஷையை சட்டையாக தைத்துப் போட்டுத் திரியும் கனபாடி கூட்டத்தாரிடம் கன்னித்தமிழ் மானபங்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

  8. Avatar paandiyan

    //விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம் வாங்கிய மகிழ்ச்சி உண்டாகுது எனக்கு.//

    இதுதான் உன்மயான வரலார்று பார்வை. இப்படிதான் இருக்கவேண்டும். இதுதான் தமிழன். அக்மார்க் தமிழன் . அது என்ன – விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம். கொஞ்சம் கதை விடுங்களேன்.

    திண்ணை ஆசிரியர் – இப்படி ஒரு வரலார்று பிழை, வரலாறு தெரியாதவர்களிடம் இந்த ஸைட் படாத பாடு படுகின்றது. கொஞ்சம் கவனிக்க கூடாத .

    • திரு பாண்டியனாரே,

      நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

      /////இதுதான் உன்மயான வரலார்று பார்வை. இப்படிதான் இருக்கவேண்டும். இதுதான் தமிழன். அக்மார்க் தமிழன் . அது என்ன – விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம். கொஞ்சம் கதை விடுங்களேன்.
      திண்ணை ஆசிரியர் – இப்படி ஒரு வரலார்று பிழை, வரலாறு தெரியாதவர்களிடம் இந்த ஸைட் படாத பாடு படுகின்றது. கொஞ்சம் கவனிக்க கூடாத .////

      இப்படி மீண்டும்,மீண்டும் வேண்டு மென்றே பிழையோடு திண்ணையில் பின்னோட்டம் எழுதுவது உமது மூடத் தனத்தைக் காட்டுகிறது !!!

      எப்போது நீவீர் செம்மையான தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளப் போகிறீர் ? ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட நல்ல தமிழில் எழுதும் காலமிது.

      சி. ஜெயபாரதன்.

      • Avatar paandiyan

        //திரு பாண்டியனாரே,

        நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
        ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட நல்ல தமிழில் எழுதும் காலமிது. //

        மாணவன் கூட — யாரு கூட — மாட்டு கூடவா?

      • Avatar paandiyan

        விசுவாமித்திரர் வாயால் ரிஷியை சொல்லுப்பா வெட்டி பேட்சு பேசி ..

  9. Avatar paandiyan

    நல்லா கூவிரீங்களே ஷாலி . தனி தமிழ் எப்போ ஷாலி , சாலி யாக மாறும்?

  10. Avatar க்ருஷ்ணகுமார்

    அன்பர் ஷாலி

    எனது பாஷா சைலியைப் பற்றிய தூஷணைகளை புதிதானதல்ல. அது எனது கருத்துப் பரிமாற்றத்தின் ஆதாரமும் ஆவதல்ல. அதாவது ஒரு ஈயம் பித்தளையைப் பார்த்து இளிப்பது என்பது போன்ற தூஷணைகள் மட்டும் இங்கு காணக்கிட்டுகிறது.

    இங்கு மதிப்பிற்குறிய ஸ்ரீ பாலா என்ற அன்பர் மட்டிலும் மிகக்குறிப்பாக கலப்பில்லாத் தமிழில் எழுதுவது வழக்கம். ஸ்ரீ ஜெயபாரதன், தவிர்த்து லவலேசமாவது எந்த எழுத்தாளரும் பெரும்பாலும் கலப்பில்லா (முற்றிலும் அல்ல) மொழியைக் கையாள்வதே கிடையாது.

    உத்தரம் போடுபவர்களில் தமிழ்ப் பொன்னிப்புனலை ஆங்க்ல சாரயத்தில் கலந்தடிக்கும் கலக்கல் சரக்கு எவருடைய விமர்சனத்துக்கும் வராது. என் பாஷா சைலியில் உர்தூ, பஞ்சாபி போன்ற அன்ய பாஷைகளும் உள்ளன.

    இங்கு தாங்கள் தமிழ் மொழி பற்றிப் பேசுவது the proverbial pot calling kettle black syndrome.

    And this applies Mutatis Mutandis to Sri Jeyabharathan abusing Sri Pandiyan too? Sri Jeyabharathan should first critically analyse as to whether he did not at all use Sanskrit words or such words which are not of tamizh origin.

    Ofcourse thats but a tool for you to divert attention? Is it not?

    இந்த அலக்கியப் படைப்பு உத்தர ராமசரிதத்தை மையமாக வைத்தது. இது வரை உத்தரராம சரிதம் பேசும் எந்த நூற்களும் உங்களால் எடுத்தாளப்படவில்லை என்பது நீங்கள் இந்த அலக்கியத்தை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக விமர்சனம் செய்வதற்குப் பதிலாக …….

    இந்த அலக்கியத்தை படைத்த கர்த்தாவான ஜெயபாரதன் போன்று ஹிந்துமதக்காழ்ப்பு என்பதை மட்டிலும் அலகீடாகக் கொண்டு உங்கள் விமர்சனங்கள் தொடர்கின்றன.

    • Avatar IIM Ganapathi Raman

      //உத்தரம் போடுபவர்களில் தமிழ்ப் பொன்னிப்புனலை ஆங்க்ல சாரயத்தில் கலந்தடிக்கும் கலக்கல் சரக்கு எவருடைய விமர்சனத்துக்கும் வராது. என் பாஷா சைலியில் உர்தூ, பஞ்சாபி போன்ற அன்ய பாஷைகளும் உள்ளன.
      இங்கு தாங்கள் தமிழ் மொழி பற்றிப் பேசுவது the proverbial pot calling kettle black syndrome.//

      தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் கிருஸ்ணகுமார்.

      நீங்கள் எழுதும் தமிழில் எழுத்துப்பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டும் திருத்தப்படவில்லை. தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுதும்போது, அதை எவரும் புரியவில்லை என்று விமர்சிப்பதில்லை. அதே வேளையில் நீங்கள் எழுதும் மணிப்பிரவாளத்துச் சொற்கள் புரியா.

      இதுதான் சுட்டிக்காட்டப்படுகிறது.

      மணிப்பிரவாளத்தைப்பற்றிப்பேசும்போது அது முத்தும் பவளமும் சேர்ந்த அணிவகுப்பென்றார்கள் முன்னோர்கள். இன்றும் அப்படித்தான். அதற்கென்று ஒரு தனி அழகுண்டு என்பதுதான் பொருள். அவ்வழகை என்னால் இரசிக்க முடியும். நான் படிக்கும் பல பண்டை வியாக்யாணங்கள் அந்நடையில்தான் இருக்கின்றன.

      ஆனால் –

      நீங்கள் எழுதும் மணிப்பிரவாளத்தில் சங்கடம் தான் இருக்கிறதே தவிர இன்பமில்லை. மேலும், மணிப்பிரவாளம் எங்கு தேவையோ அங்குதான் முன்னோர்கள் எழுதினார்கள். அதாவது இறைபற்றி எழுதும்போது. பழகும் இயல்புத்தமிழில் எவரும் மணிப்பிரவாளத்தைப் பயனபடுத்துவதில்லை. இரண்டாவது அவ்வியாக்கியாணங்கள் பொதுமக்களுக்காக எழுதப்படவில்லை.

      திண்ணையில் மணிப்பிரவாளம் அவசியமே இல்லை. தமிழ்.ஹிந்து காமின் எழுதிக்கொள்ளுங்கள். அது இந்துப்பண்டிதர்கள் நிறைந்த சபை.

      ஆங்கிலக்கலப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு திமிர்; அல்லது பிறருக்குச் சங்கடம் என்பதே கிடையாது. ஆங்கிலம் எல்லோருக்கும் பரிச்சயமான மொழியென்பதால். அப்படி எவரேனும் என் ஆங்கிலம் புரியவில்லை என்று எப்போவாவது சொன்னார்களா? உங்கள் மணிப்பிரவாளத்தைப்பற்றி பலர் விமர்சித்திருக்கிறார்கள். பிறருக்குத் துயரமாக நாமிருக்கக்கூடாதல்லவா?

      • Avatar ஷாலி

        அன்புள்ள ஐஐஎம்.கணபதி ராமன் அவர்களே!நீங்கள் என்னதான் கிளிப் பிள்ளைக்கு சொல்வதுபோல் சொன்னாலும் அவர் மண்டையில் ஏறாது.அவர் மூளையிலிருந்து கால்கள் வரை துவேசம் நிரம்பி பொங்கி வழிவதால்,எதையும் காதில் வாங்க மாட்டார்.”கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியை தூக்கி மனையிலே வைய்யி,…” ன்னு மந்திர பாஷையைத்தான் பந்தியில் வைத்து படையல் செய்வார்.பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல் பல பாஷை சைலியில் கலந்து அடிப்பார். பட்டுக்கோட்டையாரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

        “………..ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

    • Avatar IIM Ganapathi Raman

      //ஹிந்துமதக்காழ்ப்பு என்பதை மட்டிலும்

      கிருஸ்ணகுமார்!

      உங்களையும் இங்கெழுதும் பிற இந்துத்வாவினரைத் தவிர வேறெந்த இந்துவும் ‘சீதாயணத்தை’ இந்துமதக்காழ்ப்புணர்வு என்று சொல்லவில்லை என்பது என் நினைவு.

      உங்கள் பார்வை இந்துத்வா பார்வை. அதன்படி, இந்துதவா கொளகைகளை ஆதரிக்காத இந்துக்கள், சுவிசேச ஊழியர்கள் முகமூடிகள். இந்துமதத்தை விமர்சன்ம் செய்யும் மற்ற இந்துக்கள் இந்துமதத்துரோஹிகள், இதையே மீண்டும்மீண்டும் திண்ணைப்பின்னூட்டங்களில் காட்டி வருகிறீர்கள்.

      இந்துமதக்கொள்கை வேறு. அதன்படி: இந்துமதம் விமர்சனங்களை முழுமனதுடன் ஏற்கிறது. அவை காழ்ப்புணர்ச்சியில் எழுந்தாலுமே எழுப்புவரகளைக்கண்டுகொள்ளாது. அப்படியே கண்டுகொண்டாலும் அவர்களின் மீது கடுமையாகப்பாயாது. பாய்ந்திருக்குமானால், இந்துமத விமர்சகர்கள் – புத்தர், ஜெயின், மற்றும் பலர் – கொடூர்மாகக் கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்களெல்லோரும் உயிர்வாழ்ந்து புதிய மதங்களை உருவாக்கினார்கள்.

      சகிப்புத்தன்மை என்பதே ஒரு இந்துவுக்கு ஊட்டப்பட்ட உரம். எனவேதான் நாங்கள் கருநாநிதி ஈவேரா, அண்ணாத்துரை போன்றவர்களின் மீது பாயவதில்லை.

      நீங்கள் இந்துக்களுக்குப் பொதுவாக இங்கு எழுதமுடியாது. இந்துதவாவினருக்கு மட்டும் பொதுவாக எழுதுங்கள். இந்துத்வா பார்வையில் ‘ஹிந்துமதக்காழ்ப்புணர்வு’ என்று சொல்லுங்கள். சரி.

      இந்துக்கள் ஜயபாரதனின், சீதாயாணத்தை இரசிப்பார்கள் இலக்கியமாக.

      சகிப்புத்தன்மை இல்லை, ஆனால் இந்து என்றால், அஃதொரு ஒரு நியோ ஹிந்துயிசம். You, Paandian, Punaippeyaril are Neo – Hindus. For instance, a Neo-Hindu supports Babri Masji demolition. Hindus don’t and won’t.

  11. Avatar க்ருஷ்ணகுமார்

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    நீங்கள் உங்கள் அலக்கியப்படைப்பை உருவாக்க ஆதாரமாக எடுத்துக்கொண்டதாக சில நூற்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

    இங்கு உங்கள் அலக்கியத்தை நீங்களாக எடுத்தாண்ட ஆதாரங்களின் மூலமாக அணுக விழையும் என்னுடைய எதிர்மறையான ….. உங்களது மிகக் குறிப்பான contents சார்ந்த விமர்சன விழைவு ஒருபுறம் இருக்கட்டும்..

    உங்களது அலக்கியத்தைப் புகழ்வதாக நீங்கள் எண்ணும் சுவிசேஷப் படையினருடைய விமர்சனங்கள்…. மிகப்பெரும்பாலும் ஒரு சுக்குக்கும் …..கூட தாங்கள் படைத்துள்ள உத்தர ராம சரிதம் மற்றும் நீங்கள் சொன்ன ஆதாரங்களைச் சார்ந்து அல்ல…. அவை உங்களை ஒத்து அவரவருடைய ஹிந்துமதக்காழ்ப்புக் கழிவுகள். அவ்வளவே. நீங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை அறவே பேசாது ஹிந்து மதக்காழ்ப்பு என்ற விஷயத்தினால் மட்டிலும் அணுகப்படுவதால் இந்த அலக்கியம் சாரமற்ற கட்டிடம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    ஆனால் அதை விடப் பரிதாபமானது உங்களது அணுகுமுறை. உங்கள் படைப்பில் நீங்கள் விளக்க முனையும் எந்த விஷயத்தைப் பற்றியும் நீங்கள் இது வரை ஒரு வரியாவது அல்லது அரை வரியாவது நீங்கள் ….. நீங்களாகவே காண்பித்துள்ள ஆதாராங்கள் சார்ந்து ஏதும் சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்……….இதுவரை அறவே இல்லை.

    உங்களது முதல் வ்யாசம் எப்படி உங்கள் கற்பனையான ஹிந்து மதக்காழ்ப்பு ஆப்ரஹாமிய சார்பு இவற்றால் மட்டும் கட்டமைக்கப்பட்டதோ அதே கதை இங்கும் தொடர்கிறது. இங்கு ஹிந்துமதக்காழ்ப்பு வெளிப்படை ஆப்ரஹாமிய சார்பு ஹிந்துமதக்காழ்ப்பில் அடக்கம்.

    உங்களது ஒவ்வொரு உத்தரமும் சுட்டிக்காட்டுவது ஒரு குழப்பமான சித்திரம்.

    இந்த அலக்கியம் உங்களால் தான் படைக்கப்பட்டதா?

    உங்களால் படைக்கப்பட்டது எனில்……நீங்களே உங்கள் படைப்பை படைக்க ஆதாரமாக எடுத்துக்கொண்டவை எனச் சுட்டிய நூற் பட்டியலில் இருந்து ஏன் நீங்கள் ஒரு கேழ்வியையும் அணுக இயலவில்லை என்பதே முதல் கேழ்வியை கேழ்க்க வைக்கிறது..

    அது இரண்டு முடிபுகளுக்கு இட்டுச் செல்கிறது.

    ஒன்று, நீங்கள் ஆதாரம் என்று குறிப்பிடும் நூல்களை….. நீங்கள் வெறும் தலைப்பை மட்டிலும் வாசித்து நூலில் சொல்லப்பட்ட விஷயத்தை ஏதுமே வாசிக்காது உங்கள் அலக்கியத்தை கட்டமைத்துள்ளீர்கள். இது தரம் தாழ்ந்த செயல்பாடு. To call a spade a spade, it is pure Intellectual Bankruptcy.

    இரண்டு ஒருக்கால் நீங்கள் சுட்டிக்காட்டிய ஆதார நூற்களை நீங்கள் ஒருக்கால் வாசித்திருந்தாலும்………நீங்கள் பகிர்ந்த கருத்துக்களுடன் ஒப்பிடுகையில்……..உங்கள் ஆதாரங்கள் காட்டும் விஷயங்கள் பரவலாக பல விஷயங்களில் வேறுபட்டும்…..நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தது……….உங்களது மட்டற்ற நெறியற்ற ஹிந்துமதக்காழ்ப்பு என்ற அலகீட்டின் படி என்று மட்டிலும் கொள்ள முடிகிறது……..இதுவும் தரம் தாழ்ந்த செயல்பாடு.

    உங்களது சொந்தக் கருத்தை சொந்தக் கருத்தாக மட்டிலும் முன்வையுங்கள். அது என்ன தான் ஹிந்துமதக்காழ்ப்பு என்ற விஷயத்தை உள்ளடக்கியிருந்தாலும் உங்கள் சொந்தக் கருத்தாக மட்டிலும் அமையும்.

    ஒரு விஷயத்தை *மெய்* என சாதிக்க முனைந்தால் ஆதாரங்களை அடுக்க விழையுங்கள். அதுவே நேர்மையான செயல்பாடு.

    என்னுடைய தொகுப்பு உங்களுடைய கருத்துப்பகிர்வுகளை மிகக் குறிப்பாக அணுக விழைகிறது. மிகக் குறிப்பான ஆதாரங்களைச் சார்ந்து.

    இங்கு பொதுவில் பதியப்படும் த்வேஷத்தை அடிப்படையாகக் கொண்ட விஷயம் சாராத கருத்துப்பகிரல்களை நான் புறந்தள்ளி முன்னகர்கின்றேன்.

    விஷயம் சார்ந்த உங்களது உத்தரங்கள்….. அவை ஆதாரங்கள் சார்ந்து இருந்தால் எனக்குத் தெளிவை கொடுக்கும்…….ஆதாரங்களற்று நீங்கள் தொடர்ந்தால் உங்களது consistently extremely prejudiced attitude ஐ சுட்டும்….. உங்களது உத்தரங்கள் பின்னதைச் சார்ந்து தொடர்கின்றன. ஆனால் இந்த அலக்கிய கர்த்தா என்ற படிக்கு உங்கள் உத்தரங்களை மிகக் குறிப்பாக நான் சிரமேற்கொள்கிறேன்.

    நான் முன்னமே சொன்ன படி உங்கள் மீது நான் வைத்துள்ள மதிப்பு என்பது ஒளிவு மறைவற்ற வெளிப்படையான விமர்சன வெளியைச் சார்ந்தது என்ற படிக்கு இந்தக் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

    • திரு. கிருஷ்ணகுமார்,

      ஏசுநாதர் பிறந்ததற்கு வரலாற்றுச் சான்றாக அந்தக் காலத்து பைபிள், குர்ரான் போன்ற வேத நூல்கள் உள்ளது போல், இராமன் பிறந்ததற்கு அவர் காலத்து இந்து மத வரலாற்று நூல்கள் உள்ளனவா ?

      சி. ஜெயபாரதன்

      • Avatar paandiyan

        அதுவே ஒரு mafia கும்பல் கைவரிசை என்று ஆதாரம் தூக்கி போட்டவன் நான். படித்தவன் புரிந்து கொள்வான்

  12. Avatar க்ருஷ்ணகுமார்

    \ அய்யா கிருட்டிணக்குமார் அவர்கள் சொல்லவேண்டும்: தமிழரெல்லாரும் குரங்குகளா? \

    அன்பார்ந்த ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் சமூஹத்திற்கு,

    என்னுடைய தொகுப்பு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தன் படைப்பில் பகிர்ந்த சாரமற்றக் கருத்துக்களை ஆதாரங்கள் சார்ந்து அணுக விழையும் முயற்சி.

    அந்த குறிப்பிட்ட முயற்சியின் எல்லைக்கு அப்பாற்பட்டது உங்கள் கேழ்வி. என் தொகுப்பில் அதற்கான உத்தரம் இருக்காது. ஆனால் மிக நேரடியாக இல்லாவிடினும்….. தமிழர்களின் செயற்பாட்டை அணுகுவது என்ற விஷயம் சார்ந்து…….

    தமிழனான நான் உட்பட நீங்கள் உட்பட த்வீபாந்தரத்தில் இருந்து தமிழைக் காக்க விழையும் ஜெயபாரதன் உட்பட வைத்யர் ஜான்சன் உட்பட ….. தமிழர்களின் பொது மனோநிலையை விளக்கும் தொடர் ஒன்று

    வாசித்து தெளிவடைவீர்.

  13. Avatar க்ருஷ்ணகுமார்

    தமிழனான நான் உட்பட நீங்கள் உட்பட த்வீபாந்தரத்தில் இருந்து தமிழைக் காக்க விழையும் ஜெயபாரதன் உட்பட வைத்யர் ஜான்சன் உட்பட ….. தமிழர்களின் பொது மனோநிலையை விளக்கும் தொடர் ஒன்று….. ஒத்திசைவு தளத்தில் அன்பர் ராமசாமி அவர்களால் எழுதப்பட்டு வருகிறது……. வாசகம் முற்றுப்பெறவில்லை. க்ஷமிக்கவும்.

    வாசித்து தெளிவடைவீர்.

  14. Avatar க்ருஷ்ணகுமார்

    \ தமிழறிவு மிக்க, பெற்றோர் வைத்த தமிழ்ப் பெயர் சொல்ல வெட்கப்படும் புனைபெயராரே,

    முதலில் நீர் யாரென்று உமது போலி முகத்திரையைக் கிழித்து திண்ணையில் எழுத வாருங்கள் ! \

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

    இந்த கேழ்விகளை தாங்கள் தங்கள் ஸ்துதி பாடிகளிடம் கேட்டதுண்டோ?

    முதலில் சகலகலாவல்லி என்று தாங்கள் விருதளித்து பின்னர் நீங்கள் *படுதே கே பீசே க்யா ஹை* என்று முகத்திறையை கிழித்து விஸ்வாமித்ரராக மாற்றிய நபரிடமும்…. நீங்கள் இது போன்ற கேழ்வியைக் கேழ்க்க முனைந்திருந்தால்…….நீங்கள் கருத்துச் சமநிலை கொண்டவர் என எண்ண முடியும்.

    மாறாக உங்களை சகட்டுமேனிக்கு ஸ்துதி செய்பவர்களுக்கு ஒரு அலகீடு உங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்களுக்கு மற்றொரு அலகீடு என்பது ………. நீங்கள் உங்கள் அலக்கியம் சார்ந்து விவாதம் செய்யாது………saas bahu serial ………. போன்று மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்……… என மாமியார் மருமகள் பாணியில் ஹடம் செய்கிறீர்களே!!!!!!!! :-)

    ஜெயபாரதன் எப்போது சமநிலையுடன் கருத்துப்பகிர பழகுவார்? என்று உங்கள் பாணியில் கேழ்வி கேட்டால் கோபம் கொள்ளக் கூடாது

    இந்த ஹாஸ்ய ரசமெல்லாம் க்ளைமாக்ஸை உங்கள் அலக்கியம் நெருங்குகிறது என்பதன் முன் குறிப்பா?

    ……..உங்கள் அலக்கியத்தில் க்ளைமாக்ஸிற்குப் பிறகு சோகத்தையெல்லாம் கடேசியில் மூட்டை கட்டி………ஒரே கலக்கலாக ……..ஹாஸ்ய ரஸம் பொங்க உங்கள் வெள்ளந்திப் புரிதல்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டுள்ளீர்கள்…….

  15. Avatar க்ருஷ்ணகுமார்

    அன்பின் ஸ்ரீமான் பாண்டியன்,

    மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் அலக்கியப்படைப்பின் TRP rating என்பது…..டிவி சீரியல் வெட்டிப்பொழுது போக்குக் குப்பைகளின் அடியொற்றியது என்றால் மிகையாகாது…..

    இந்த அலக்கியத்தின் கருப்பொருள் சாராது….. உத்தர ராம சரிதம் பேசும் (சம்ஸ்க்ருத மற்றும் தமிழ்) நூற்களின் ஆதாரம் சாராது……. காமா சோமா என்று போனதையும் வந்ததையும் இவரும் இவரின் ஸ்துதிபாடிகளும் விசாரிக்க விழைவதே……(அதுவும் அன்பர் அவர்களது ஸ்துதிபாடிகளான முகமூடி சுவிசேஷப்படை)…… இந்த அலக்கியம் ஒரு நீர்க்குமிழி என்பதை தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது.

    ஆனால் பரிதாபமான விஷயம், இந்த அலக்கியத்தைப் படைத்த ஸ்ரீமான் ஜெயபாரதன் கூட தான் ஆதாரங்கள் என ஜபர்தஸ்தியாக படைப்பின் கீழ் பட்டியலிட்ட நூற்களிலிருந்து…… இது வரை ஒரு சுக்குக்காகக் கூட ஒரு அரை வரி அல்லது ஒரு வரி கையாண்டு தன் போலிக்கருத்துக்களை அணுக முடியவில்லை என்பது……

    பெரும் ஆராய்ச்சியெல்லாம் இல்லாது வால்மீகி ராமாயணத்தை படிப்பவர்கள் அடிப்படைப் புரிதல் என்றபடிக்கு அணுகினாலே இவரது அலக்கியம் ஒரு நீர்க்குமிழி என்பது சித்தமாகும். இவரது கருத்துக்கள் வெறும் ஹிந்துமதக்காழ்ப்பு மிகப் பகிர்ப்பட்டுள்ளன என்பது சித்தமாகும்.

    • Avatar paandiyan

      நன்றி க்ருஷ்ணகுமார் .
      தேடி சோறு தினம் தின்று
      பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
      வாடி துன்பம் மிக உழன்று
      பிறர் வாட பல செய்கை செய்து
      நரை கூடி கிழப்பருவம் எய்தி
      கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
      சில வேடிக்கை மனிதரை போலவே

      — என்று ஒரு சில ஜென்மங்கள்.

      நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? – என்று மிக அறிவு சார்ந்த உங்களைபோல சிலபேர்கள். சத்தியம் வெல்லும். கவலை வேண்டாம்.

  16. Avatar ஷாலி

    பேராசிரியர் அவர்களே! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
    “அன்று வந்ததும் இதே நிலா.இன்று வந்ததும் அதே நிலா…” என்று கவிஞர் பாடியதுபோல் அன்று வந்த வானரமும் இன்றுள்ள வானரக் குரங்கும் எல்லாம் ஒரே சாதிதான். பேசுற குரங்கு பேசாத குரங்கு என்று ஒன்றும் இல்லை.டார்வின் தத்துவப்படி குரங்கு பரிணாம வளர்ச்சியில் மனிதனாக மாறியது என்றால்,இன்று உலகில் மனிதர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.குரங்கு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் நூற்றுக்கணக்கான குரங்கு இனம் உலகம் முழுவதும் உள்ளன.

    இன்றைய உராங் உட்டாங்,சிம்பன்ஸி குரங்குகளின் முன்னோர்,இமயமலை சிவாலி மலைக்குன்றில் 12-14 மில்லியன் வருடங்களுக்குமுன் வாழ்ந்த Sivapithecus-Ramapithecus எனும் ஆண், பெண் குரங்குகள் என்று fossil தகவல் கூறுகிறது.
    http://en.wikipedia.org/wiki/Sivapithecus.

    வாயு பகவானுக்கும்,அஞ்சனை தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் அனுமன்.காற்றுக்கு பிறந்ததால் இயற்கையிலேயே பறக்கும் சக்தி.பிறந்த குழந்தையாக இருந்தபோது காலையில் சூரியனைப் பார்க்கிறார்.செக்கச் செலேன்று பழம் போன்று தோன்றியதால் அதை கடித்துத் தின்ன பறந்து சென்று சூரியனில் வாயை வைத்ததும் அதன் வெப்பத்தால் வாய்,கன்னம் வெந்து உப்பி விட்டது.என்ற கதையும் உள்ளது.ஆக,அனுமன் மனிதராகப் பிறக்கிறார்.இடையில் வந்தவர்கள் அவருக்கு வாலை ஒட்டி வானரக் கூட்டத்தில் சேர்த்து விட்டார்கள். ஆட்டை கழுதையாக்குவதில் நம் ஆட்கள் கில்லாடிகள். த்வீபாந்திரத்திலிருந்து தமிழை கரையேற்றும் உத்தர பாரத உத்தமர் வ்யாஷம் என்ன பறையுதுன்னு பார்ப்போம்.

  17. Avatar ஷாலி

    பேராசிரியர்.திரு.ஜெயபாரதன் அவர்கள் பேசுகிறார்கள்,

    “பாரதியார் நமக்கெல்லாம் இரண்டு கட்டளைகள் இட்டுப் போயிருக்கார்! முதற் கட்டளை: ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘. இரண்டாம் கட்டளை: ‘தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ‘ இவற்றின் உட்பொருள் என்ன ? புதிய இந்தக் கணனி யுகத்தில் அகிலவலையில் உலக நாடுகள் யாவும் இணைக்கப் பட்டுள்ளதால் இப்பணிகளைச் செய்வது நமக்கு எளிது. உலகத்தில் உள்ள உயர்ந்த கலைக் களஞ்சியங்களையும், விஞ்ஞானப் படைப்புகளையும் தமிழில் ஆக்குவதற்கு யாவரும் முற்படுமாறு நம்மை வேண்டுகிறார். அதே போல் தமிழில் படைக்கப் பட்டுள்ள அரிய காவியச் செல்வங்களை அன்னிய மொழிகளில் எழுதி, தமிழ் இலக்கியங்களை உலகோர் அறியும்படி முயலவேண்டும் என்று ஆணை யிடுகிறார்.”

    தேசியக்கவி பாரதியின் ஆணையை சிரமேற்க்கொண்டு தனது முதிய வயதிலும் தளராது பல அற்புதமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் மக்களுக்கு அளித்து மகிழ்வதுடன்,பிற மொழி இலக்கியங்களை தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அளித்து தமிழ் மக்கள் சேவையில் தன்னை அமிழ்த்திக்கொண்ட தமிழ் அறிவியல் அறிஞரை, தரம் தாழ்த்தி எழுதி வரும் தற்குறி கூட்டத்திற்கு திண்ணை தளம் களம் அமைக்கலாமா? திரு.பாண்டியன் போன்றவர்களின் பின்னூட்டத்தில் ஊட்டமில்லை.வெறும் வசையும்,தனி நபர் தாக்குதல் மட்டுமே உள்ளது.தள நிர்வாகிகள் திண்ணையின் தரத்தை தாழ்த்த எவர் முயற்சிசெய்யினும் அதை தடுக்க வேண்டும்.

  18. Avatar ஷாலி

    //அறிவு கெட்ட
    வண்ணான் சொற்கேட்டு,—–> இதை விட இகழ்வாய் ஒரு தொழில் புரிவோரை சொல்ல முடியுமா…? என்ன புத்தியோ…//

    “கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
    துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு
    வாயி லாளரை மயக்குது யிலுறுத்துக்
    கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்”

    கையில் கன்னக்கோல் இல்லாமல், கொடிற்றுக் கோல் இல்லாமல்,
    தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தின் துணையால்
    வாயில் காப்பாளர்களை உறங்கச் செய்து,
    சிலம்பைத் திருடி விட்டான் இந்தக் கோவலன் என்கிறான் பொல்லாத பொற்கொல்லன்.
    இந்த பொற்கள்ளன் பேச்சைக்கேட்டு கோவலனை கொலை செய்கிறான் பாண்டியன்.வண்ணான் பேச்சைக் கேட்டது தொழிலை அவமதிப்பு என்றால் பொற்கொல்லன் எனும் கள்ளன் பேச்சை கேட்டதால் இங்கும் தொழிலை அவமதித்து விட்டார்களா?

    மந்தரை என்னும் கூனி பேச்சை கேட்டதால்…..ஊடல் ஊனமுற்றவர்களை கேலி செய்கிறார்கள் என்று பொருளா?
    அய்யா! புனை பெயரில் அவர்களே! தயவு செய்து லொடக்கு பாண்டி ரேஞ்சுக்கு போய்விடாதீர்கள்.உங்களிடமிருந்து அறிவார்ந்த செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.பாண்டியாட்டம் அல்ல.

  19. Avatar க்ருஷ்ணகுமார்

    \ திண்ணையின் தனிக்காட்டு ராஜா
    தறிகெட்டு எழுதுவார்
    நெறிகெடுதல் எனும் நிலையும் தாண்டி. \

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்,

    தாங்கள் ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களது மேற்கண்ட முத்தான வாசகங்களை……தங்கள் செயல்பாடுகளை கட்டுடைக்கும் வாசகங்களை……. அவதானிக்குங்கால்…… தங்களது செயல்பாடுகள் சரியென்பதற்கு உசிதமான ஆதாரங்களை அடுக்காது………..

    உங்களை….. பேராசிரியரே பெருந்தகையே என ஸ்துதி பாடும்………… தாங்கள் முதலில் சகலகலாவல்லி என விளித்து…..பின் முகத்திறை கிழித்து விஸ்வாமித்ரர் என ப்ரதி ஸ்திதி செய்து………

    ஆனால் பரஸ்பர ஸ்துதி ……..ப்ரதி ஸ்துதி…….. இதையெல்லாம் செய்கையில் அன்பர் ஷாலி அவர்களை……..

    ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களை தாங்கள் இடித்துறைக்கும் வாசகங்களான

    \ பெற்றோர் வைத்த தமிழ்ப் பெயர் சொல்ல வெட்கப்படும் புனைபெயராரே, \

    என்பதில் தொக்கி நிற்கும் நக்கலுடன் அணுகாதது……. அன்பர் ஷாலி அவர்களை அவர் முகத்திறையை கிழித்து அவர் யார் என தாங்கள் வினவாதது……… அவரும் தாங்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விருதுகள் கொடுத்து மகிழ்ந்து வருகிறீர்கள் என்பதனை சுட்டுகிறது…………. மற்றும் தங்கள் கருத்துச் சமநிலையின்மையை வெளிப்படுத்துகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    தங்கள் பெயரைத் தாங்கள் இதுகாறும் *ஜெயபாரதன்* என்ற சம்ஸ்க்ருத பெயராகவே எழுதி வருகிறீர்கள்.. அன்பர் ஷாலி அவர்களும் அன்பர் அவர்களது பெயரை *ஷாலி* என்றே எழுதி வருகிறார்கள். ஆயினும் மற்றவர்களுக்கு தமிழ்த்தூய்மை பற்றி ப்ரசங்கம் செய்வதற்கு லஜ்ஜையேதுமில்லை அன்பர்களான உங்களுக்கு. சீசே கி மெஹல் மே ரஹ்னே வாலே பத்தர் நஹீன் ஃபேங்க்தே – கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் கல்லெறியக்கூடாது – என்ற உர்தூ பழமொழி தான் நினைவுக்கு வருகிறது

    • திரு. கிருஷ்ணகுமார்

      ///கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் கல்லெறியக் கூடாது – என்ற உர்தூ பழமொழி தான் நினைவுக்கு வருகிறது ///

      புனை பெயரில் ஒளிந்து கொண்டும் தர்க்கத்தில் காயம் உண்டாக்கப் பிறர் மீது கல்லெறிக் கூடாது. இது கபட சன்னியாசிகள் செய்யும் கள்ளத்தனம்.

      தெய்வாம்சம் கொண்ட இராமன் நேராக நின்று போரிடாது ஏன் மறைந்து நின்று வாலியைக் கொன்றான் ? அதிலிருந்து அவன் மானிடனாய் நடந்து கொண்டது தெரிய வில்லையா ?
      சி. ஜெயபாரதன்.

  20. Avatar க்ருஷ்ணகுமார்

    \ புனைபெயராரே,

    இது பாட்டி ஜாடையாய்ச் சொல்வது போல் இருக்கிறது !

    இதற்கு ஆதாரங்கள் தேவை. \

    இதற்கு ஆதாரங்கள் தேவை என ஸ்ரீ புனைப்பெயரில் அவர்களைக் கேட்கும் எனதன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள்

    தான் புனைந்த அலக்கியம் சொல்லும் கதை *மெய்* என்றும் *வால்மீகி ராமாயணம்* என்பது *பொய்க்கதை* என்பதனை

    அவர் பாட்டி கதையாக முன்வைக்கிறாரா என்பதை இந்த தள வாசகருக்கு விளக்க வேண்டும்.

    சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட *வால்மீகி ராமாயணம்* பொய்க்கதை என விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் விளம்புவதற்கு முன்

    ஸ்ரீமான் ஜெயபாரதன் வால்மீகி ராமயணம் என்ற காவ்யத்தில் ஒரு ச்லோகத்தையாவது வாசித்திருக்கிறாரா

    இதே தளத்தில் தமக்கு சம்ஸ்க்ருதம் அறவே தெரியாது என அன்பர் அவர்கள் கருத்துப்பகிர்ந்துள்ளார்.

    அதை விடுவோம் …… பல மொழிபெயர்ப்பு நூற்களை பட்டியலிட்டுள்ளாரே……… அவற்றை வாசித்து வால்மீகி ராமாயணத்தைப் பற்றி ஒரு பறவைப் பார்வையாவது பெற்றுள்ளாரா……..இந்த நூலை *பொய்* என பறை சாற்ற ………. என்றால்……

    இது வரை…… தான் பொய் என சொல்ல விழையும் மூல நூல் ராமாயணத்திலிருந்து ஒரு ச்லோகம்…… ஒரு பதம்……கூட அன்பர் ஜெயபாரதன் அவர்கள் பகிரவில்லை………தானே ஆதாரமாக எடுத்துக்கொண்டவை என்ற நூற்களிலிருந்து ………. சுக்குக்கு கூட …..ஒரு ஒரு வரி அல்லது அரை வரி கூட……. இது வரை ஒரு மேற்கோள் கூட காட்ட இயலவில்லை………..

    இப்படி இருக்க இங்கு பாட்டி கதை பேசுவது ஸ்ரீமான் ஜெயபாரதனா அல்லது ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களா என்பதை வாசிக்கும் வாசகர்கள் அவதானிக்கலாம்.

    \ தறிகெட்டு எழுதுவார்
    நெறிகெடுதல் எனும் நிலையும் தாண்டி. \

    என்ற ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களது வாசகங்களை தாங்கள் தங்கள் தொடர்ந்த செயல்பாடுகளால் வார்த்தைக்கு வார்த்தை மெய் என்று நிரூபணம் செய்து வருகிறீர்கள் என்றால் மிகையாகாது அன்பரே.

    நீங்கள்

    வால்மீகி ராமாயணம் பொய்க்கதை என்று சொல்லுமுன் அந்த நூலை ஒருமுறை ஒரு ச்லோகமாவது ஒரு பதமாவது வாசித்ததுண்டா என்பதனை இந்த தள வாசகருக்கு சொல்லவும். ஒரு நூலில் ஒரு சொல்லைக் கூட வாசிக்காது அந்த நூலைப் பற்றி கருத்துத் தெரிவிப்பது எந்த அளவுக்கு *நெறி* சார்ந்தது என்பதனை இங்கு வாசிக்கும் வாசகர்கள் அவதானிக்கட்டும்.

    மூல நூலை வாசிக்கவில்லை என்பது மட்டுமில்லை…..உங்கள் செயல்பாடுகள்………மொழிபெயர்ப்பு நூற்களை கூட தாங்கள் வாசித்தறிந்ததில்லை………என்பதனையே சுட்டுகிறது என்றால் மிகையாகாது…………

    தாங்கள் என்னை வசவிட முனைந்தால் வசவில் தங்கள் பாண்டித்யத்தினை பறைசாற்றும் படிக்கு தாங்கள் வசவிடலாம். அது உங்கள் இஷ்டம். நான் ஸ்ரீமான் ஜெயபாரதன் என்ற வ்யக்தியை வசவும் இட மாட்டேன். அந்த வ்யக்தியை அவரது போற்றும் செயல்பாடுகளுக்காக போற்றவும் தயங்க மாட்டேன். அதே சமயம் எதிர்மறையாக விமர்சிக்கத் தக்க செயல்பாடுகளுக்காக விமர்சிக்கவும் தயங்க மாட்டேன்.

    இங்கு விவாதத்தில் உள்ளது ஸ்ரீமான் ஜெயபாரதன் என்ற நான் ஒட்டு மொத்தமாக இன்னமும் மதிக்கும் வ்யக்தி அல்ல. மாறாக அவரது *நெறி* சாரா………..*தறிகெட்ட* …….. மிகக் குறிப்பாக கேழ்விகளுக்கு உள்ளாக்கப்படும் செயல்பாடுகள்…….. என்பதனை மனதிலிருத்தவும்.

  21. Avatar paandiyan

    //அன்று வந்ததும் இதே நிலா.இன்று வந்ததும் அதே நிலா…” என்று கவிஞர் பாடியதுபோல் அன்று வந்த வானரமும் இன்றுள்ள வானரக் குரங்கும் எல்லாம் ஒரே சாதிதான்.//

    (இசை) சரணம் – 3

    பெண் நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா

    ஆண் நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா

    இருவர் பார்த்துப் பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது வெள்ளை நிலா ஆ…ஆ…

  22. Avatar paandiyan

    //திரு பாண்டியனாரே,

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
    //

    ஜெயபாரதன் உங்கள் திமிரை வேறு எங்கும் காமிக்கவும். என்னிடம் வேண்டாம். நான் நல்ல மாடுதான். நீங்கள் ஒரு அசிங்க பண்ணி

  23. Avatar paandiyan

    //குற்றாலத்துக்குத்தான் போகவேண்டுமென நினைத்தேன். ஆனால் சீசனில்லை என்றார்கள். எனவே திருக்குறுங்குடி போய்விட்டுவந்தேன்//

    அப்படியா . டீ வீ இல் ஸீஸன் ஓகோ என்று வருகின்றது

  24. Avatar paandiyan

    விசுவாமித்திரர் வாயால் ரிஷி பட்டம் வாங்க அணுக வேண்டிய முகவரி இருக்கின்றதா? ஒன்று இரண்டு வாங்கலாம் என்று யோசனை.

  25. Avatar க்ருஷ்ணகுமார்

    \ நீங்கள் எழுதும் மணிப்பிரவாளத்தில் சங்கடம் தான் இருக்கிறதே தவிர இன்பமில்லை \

    ரெவரெண்டு ஜோ

    சம்ஸ்க்ருதம், உர்தூ மற்றும் பஞ்சாபி பாஷைகளில் உங்களுக்குப் பரிச்சயமாவது இருந்தால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என உங்களுக்குப் புரியும்.

    நான் எழுதுவது மணிப்ரவாளம் என்றால் உங்களுக்கு மணிப்ரவாளம் என்றால் என்ன என்பது தெரியாது என்று மட்டிலும் சித்தமாகும். நான் எழுதுவது கலப்பு மொழிநடை எண்ணிறந்த முறை சொல்லியுள்ளேன்.

    சம்ஸ்க்ருதம் பற்றியோ மணிப்ரவாளம் என்பது பற்றியோ உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதனை ஸ்ரீ புராணம் பற்றி நான் சொல்லியபோதே தெரிந்து கொண்டு விட்டேன். இது சம்பந்தமாக் வெட்டி விவாதங்கள் காலவிரயம்.

    \ திண்ணையில் மணிப்பிரவாளம் அவசியமே இல்லை. தமிழ்.ஹிந்து காமின் எழுதிக்கொள்ளுங்கள். அது இந்துப்பண்டிதர்கள் நிறைந்த சபை.\

    எப்போதிலிருந்து நீங்கள் இந்த தளத்தின் நிர்வாகத்தை வகிக்க ஆரம்பித்துள்ளீர்கள்!!!!!!!

    உங்களுடையதாகிய தமிழைக்கொல்லும் ஆங்க்லம் கலந்த தமிழை உங்கள் தனிநபர் ப்ளாக்குகளில் எழுதிக்கொள்ளுங்கள் என்று நானும் சொல்லலாம்.

    தூய்மையான தமிழின் மீது எனக்கு பற்றுண்டு. தூய தமிழ் நடையை தங்கள் செயல்பாடாகக்கொண்ட அன்பர்களின் பால் மதிப்பும் உண்டு.

    அதே சமயம் தமிழின் பெயரால் நாடகமாடுவோர் யார் என்பதனையும் அறிவேன்.

    தான் தமிழில் செய்யும் கலப்புகள் எல்லாம் சரி; தன்னுடைய பிழைகள் எல்லாம் சரி; என்று கதைப்பது வெட்டி விவாதமே.

    ஒரே சமயத்தில் இரண்டு அவதாரம் எடுத்து ஒன்றில் த்வேஷத்தையும் இன்னொன்றில் நிதானத்தையும் காட்டும் உங்கள் செயல்பாடுகள் வியப்பளிக்கின்றன. வினம்ரதை மற்றும் நிதானம் என்பது த்வேஷத்துடன் கலக்க முடியாது.

  26. Avatar க்ருஷ்ணகுமார்

    \ அவர் மூளையிலிருந்து கால்கள் வரை துவேசம் நிரம்பி பொங்கி வழிவதால்,எதையும் காதில் வாங்க மாட்டார்.” \

    அன்பர் ஷாலி, இந்த தளத்தில் என்னுடைய உத்தரங்களையும் உங்களுடைய உத்தரங்களையும் வாசிப்பவர்கள், வசவில் இறங்குபவர் யார்; த்வேஷ பூர்வமாகக் கருத்துப்பதிபவர் யார் என்பதனை நன் கு அறிவர்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களாக இருக்கட்டும் அல்லது நீங்களாக இருக்கட்டும் என்மீது வசவுகள் பொழிந்தாலும் என் பக்ஷத்திலிருந்து வசவுகள் என்பது அறவே இருக்காது. இது திண்ணம்.

    அறிவு பூர்வமான விவாதம் உங்களால் செய்ய முடியாது எனும் போது த்வேஷத்தில் இறங்குகிறீர்கள்.

    எனக்கு எந்த பாஷையும் விலக்கல்ல. ஆங்க்லம் உட்பட.

    என் பாஷா சைலியைப் பற்றி த்வேஷிப்பதிலும் எனக்கு பிணக்கு இல்லை.

  27. Avatar க்ருஷ்ணகுமார்

    \ தெய்வாம்சம் கொண்ட இராமன் நேராக நின்று போரிடாது ஏன் மறைந்து நின்று வாலியைக் கொன்றான் ? அதிலிருந்து அவன் மானிடனாய் நடந்து கொண்டது தெரிய வில்லையா ? \

    ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    வால்மீகி ராமாயணத்தை வாசித்து வருபவன் என்ற என் வாசிப்பனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன்.

    ராமபிரானின் சொற்கள் மற்றும் செயல்பாடுகள் — தன்னை மனிதனாக மட்டிலுமே காட்டிக்கொள்ளும் படிக்காகவே — வால்மீகி மகரிஷி ராமாயண காவ்யத்தை வடித்துள்ளார். ராமபிரான் மானிடனாய் தன்னை ராமாயணம் முழுதும் காட்டிக்கொண்டான் என்பதனை ராமபிரானை அவதாரமாக வணங்குவோரும் ஒப்புக்கொள்ளும் விஷயமே.

    ஆனால் எண்ணிறந்த மற்ற பாத்ரங்கள் மூலம் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டியுள்ளார் என்பதனைத் தாங்கள் ராஜிஜியின் சக்ரவர்த்தித் திருமகனை வாசித்தாலேயே புரிந்து கொள்ளலாம்.

  28. Avatar புனைப்பெயரில்

    நான் ஒரு தடவை சொன்னா, சிலருக்கு சேரவில்லை எனில், இன்னொரு தபா சொல்றது தப்பில்லை…:
    புனைப்பெயரில் says:
    December 15, 2013 at 5:41 am
    அந்தக் காலத்தில் ராமானுஜன் என்பவர் கணக்கு விஞ்ஞானியாக லண்டன் வரை சென்றார் – ஐயங்கார் என்பதால் அல்ல… அறிவாளி என்பதால். அப்புறம் திருச்சியில் இருந்து ஒருவர் லண்டனுக்கு டாக்டர் படிக்க சென்றார் – ஐயர் என்பதால் அல்ல , அறிவாளி என்பதால். ஆனால் இன்று, பிளாப் முடித்து லண்டனில் வேலை பார்க்கும் பல இந்தியர்களும் சரி, அமெரிக்க கனடாவில் வேலை பார்க்கும் பலரும் சரி அறிவால் அல்ல… பிறந்த ஜாதியால் இட ஒதுக்கீட்டால் , டப்பா அடித்து இல்லை துட்டுக் கொடுத்து டாக்டராக, கணணி வல்லூனராக, விஞ்ஞானிகளாக ( என்று சொல்லிக் கொண்டு ) தரமற்ற நிலையில் இருக்கிறார்கள். பிரயின் டிரையின் -அது தாங்க மூளையே இல்லாதவர்கள்- அதிகமாப் போச்சு… அதனால் தான் இந்த மாதிரி ஆட்கள் தகுதியற்று எழுதி பேசி கொண்டு. கோட்டாக்களின் கோட்டையில் ஆந்தைகளின் கொட்டம் அதிகமாக இருக்கத் தான் செய்யும். கலி காலம் இது….

    • புனை பெயராரே,

      சீச்சீ ! இந்தப் பழம் புளிக்கும் என்னும் கதை இது. சீதாயணத்துக்கும், புலம் பெயர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் ? இதை இருமுறை எழுதுவது உமது அறிவீனத்தைக் காட்டுகிறது !!!

      திரை கடஓடியும் திரவியம் தேடு என்ற விதியில் கோடிக் கணக்கான தமிழர் உலகெங்கும் போய் வேலை செய்கிறார். தமிழர் புலம் பெயர்வதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழர் கலை, நாகரீகம் உலகெல்லாம் பரவவும் புலம் பெயர வேண்டும்.

      குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் உம்மைப் போன்ற ஊழியர் இடத்தை அடைத்துக் கொண்டு உள்ளது உமக்கே தெரிய வில்லை.

      குதிரை கீழே தள்ளி குழியும் பறித்ததாம்.

      சி. ஜெயபாரதன்

  29. Avatar க்ருஷ்ணகுமார்

    \ உங்களையும் இங்கெழுதும் பிற இந்துத்வாவினரைத் தவிர வேறெந்த இந்துவும் ‘சீதாயணத்தை’ இந்துமதக்காழ்ப்புணர்வு என்று சொல்லவில்லை என்பது என் நினைவு. \

    நான் வெட்டிப்பேச்சு பேசுவதில்லை. இந்த விஷயத்தை நான் நிர்த்தாரணம் செய்யும் போது மேற்கொண்டு பேசலாம்.

    \ இந்துதவா கொளகைகளை ஆதரிக்காத இந்துக்கள், சுவிசேச ஊழியர்கள் முகமூடிகள். இந்துமதத்தை விமர்சன்ம் செய்யும் மற்ற இந்துக்கள் இந்துமதத்துரோஹிகள், இதையே மீண்டும்மீண்டும் திண்ணைப்பின்னூட்டங்களில் காட்டி வருகிறீர்கள். \

    சலிப்படைய வைக்கிறது உங்கள் வாதங்கள்.

    நான் மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது போல் ஹிந்துத்வக் கொள்கைகள் எவை என்பதில் கூட எனக்கு சரியான அறிமுகம் கிடையாது. சரி தவறு. இவ்வளவே எனது அளவுகோல்கள்.

    சாயிபாபா தூஷணை புனித ரெவரெண்டு தெரசாள் அர்ச்சனை – பகுத்தறிவு என்ற அலகீட்டை க்றைஸ்தவ பித்தலாட்ட முறைமைகளில் மறைக்க விழைவது – Cherry picking – முறைப்படி இங்கிருந்து ஒன்று அங்கிருந்து ஒன்று என்று கந்தறகோளமாக மஞ்சள் பத்ரிகைகளிலிருந்து வெட்டி ஒட்டல் வேலை செய்து — காழ்ப்பை வெளிப்படுத்த ஹிந்துக் கடவுள்களை இழிவு படுத்த முனைவது – இதற்கெல்லாம் வசதியாக — தளம் தளமாக — மேலும் ஒரே தளத்தில் பல பெயரில் ஒரே சமயத்தில் செயல்படுவது – இவற்றை முகமூடி சுவிசேஷ சேவை என்றில்லாது வேறு எப்படி அவதானிப்பதாம்.

    \ சகிப்புத்தன்மை என்பதே ஒரு இந்துவுக்கு ஊட்டப்பட்ட உரம். \

    முகமூடி சுவிசேஷ சேவைகளையும் சகித்து சுவிசேஷிகளுடன் கூட கண்யத்துடன் உரையாடும் செயல்பாடுகளால் ஹிந்துக்கள் தங்கள் சகிப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

    \ நீங்கள் இந்துக்களுக்குப் பொதுவாக இங்கு எழுதமுடியாது. \

    யாரும் யாருக்காகவும் இங்கு எழுதவில்லை. அவரவர் தங்கள் கருத்துக்களை எழுதுகின்றனர். அவ்வளவே.

    \ இந்துக்கள் ஜயபாரதனின், சீதாயாணத்தை இரசிப்பார்கள் இலக்கியமாக.\

    உங்களுடைய கந்தறகோளமே இதற்குப் பதில். நீங்கள் இந்துக்களுக்குப் பொதுவாக இங்கு எழுதமுடியாது.

    ஒரு ஹிந்துமதக்காழ்ப்பு அலக்கியத்தை இலக்கியம் என்று சொல்லி ஹிந்துக்கள் அதை ரசிப்பார்கள் என்று சொல்வதற்கான சுவிசேஷ வாக்கு தத்தம் புரிகிறது.

    விதிவிலக்காக விதண்டாவாதம் செய்வதிலிருந்து வெளியே வாருங்கள்.

    நீங்கள் வாசிப்பனுபவம் உள்ளவர் என அறிவேன். அதை உங்கள் விவித அவதாரங்களில் போற்றியும் உள்ளேன். விதண்டாவாதங்களால் யாருக்கும் பயன் இல்லை. வாசிப்பனுபவத்தை முறையான வாதங்களால் பகிரப் பழகுங்கள்.

  30. Avatar க்ருஷ்ணகுமார்

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

    53 உத்தரங்களில் ஓரிரு உத்தரங்கள் தவிர்த்து எத்தனை உத்தரங்கள் உங்களது படைப்பைப் பற்றி பேசியுள்ளன.

    உத்தரங்கள் படைப்பு பற்றிப் பேசாது தடம் புரள்கையில், படைப்பு பற்றிப் பேச நீங்கள் என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்?

    உங்கள் உத்தரங்கள் எவ்வளவு படைப்பிலிருந்து விலகி வெட்டி விவாதம் சார்ந்தவையாக உள்ளன?

    உங்கள் கதை *மெய்* என்பதற்கு எதை ஆதாரமாகக் கொண்டீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *