சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்

This entry is part 10 of 31 in the series 5 பிப்ரவரி 2012

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன்

கதை

விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே ” என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்” என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. ஏ படிப்பிருந்தால் தான் அந்த வேலை கிடைக்கும் என்பதால் பொய் சர்டிபிகேட் தயாரித்து தந்தான் என்பது அவன் மனதை உறுத்தியவாறே இருக்கிறது.

அவனது பாஸான அசோக் எம். டி. க்கு மிக பிரியமானவன். அடுத்த டைரக்டர் ஆக போகிறவன் என்கிறார்கள். விக்ரம் அசோக் இருவரும் எம். டி. மகளுடன் நெருக்கமாக பழகுகிறார்கள். அசோக் டைரக்டர் ஆக அறிவிக்கும் முன் ஹார்ட் அட்டக் வந்து உடல்நிலை பாதிக்கப்பட, டைரக்டர் ஆகும் வாய்ப்பு விக்ரமுக்கு வருகிறது. ” ஆறு மாதம் observe-செய்து விட்டு அதன் பின் டைரக்டர் ஆக்குகிறேன்” என்கிறார் எம். டி

அந்த ஆறு மாதத்தில் பேய் மாதிரி உழைத்து நல்ல பேர் வாங்குகிறான். ஆனால் அவன் எதற்கு பயந்தானோ அது நடந்து விடுகிறது. அலுவலகத்தில் உள்ள ஒரு வயதானவர் இவன் டிகிரி பொய் என்பதை கண்டு பிடிக்கிறார். அவன் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர் எம்.டி இடம் சொல்வேன் என மறுபடி மறுபடி சொல்ல, ஒரு sudden provocation-ல் அவரை கொன்று விடுகிறான் விக்ரம். அதற்கு பிராயச்சித்தமாக அவர் மகளுக்கு அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறான்.

என்னடா கதை சம்பிராதயமாக முடிகிறதே, அதுவும் தப்பு செய்தவன் எந்த தண்டனையும் இன்றி தப்பிக்கிறானே என

நினைக்கும் போது கடைசி பக்கத்தில் சின்ன டுவிஸ்ட் வைத்து வழக்கம் போல ஒரு கேள்வி குறியுடன் முடிக்கிறார் சுஜாதா.

***
அலுவலக அரசியல் வைத்து இத்தனை சுவாரஸ்ய கதை நிச்சயம் நான் வாசித்ததில்லை. விக்ரம் அந்த கொலை செய்யும் வரை நாம் எம்.பி ஏ என்கிற பொய்க்காக மாட்ட கூடாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் அந்த கொலை செய்த பின் நம் கோபம் அவன் மேல் திரும்பி விடுகிறது.

கதையின் துவக்க அத்தியாயங்களை சுஜாதா ஏனோ சிறு வாக்கியங்களிலேயே எழுதி உள்ளார். சில வாக்கியங்களில் இரண்டே வார்த்தைகள். சில நேரம் ஒரே வார்த்தை. ஆனால் இது மிக சுவாரஸ்யமாக உள்ளது.

பொய் சொல்வதற்கு சில விதிகள் என்று சொல்லி விட்டு இப்படி சொல்கிறார் சுஜாதா:

சின்ன விஷயங்களுக்கு பொய் சொல்லாதே.
குறிக்கோள் மிக முக்கியமானதாக இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.
எவரும் எதிர் பாராத நேரத்தில் பொய் சொல்லு.
யோக்கியமாக பொய் சொல். அண்ட புளுகு புளுகாதே. நம்பும் படியாக இருத்தல் வேண்டும் உன் பொய்.

அதிசயமாய் கதையில் சில ஓட்டைகள். குறிப்பாய் விக்ரமுக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லி விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவன் தனியே கார் ஓட்டி (அதுவும் ஐந்து மணி நேரம் தள்ளி உள்ள ஊருக்கு) சென்றான் என்று சொல்வது நெருடல்.

இந்த நாவல் ஒரு மாத நாவலாக மணியன் புத்தகத்தில் வந்தது என்பது ஆச்சரியம் தரும் செய்தி. இத்தனை குவாலிட்டி ஆன நாவல் மாத நாவலாக வந்துள்ளதா!! வழக்கமாய் மாத நாவல் எழுதுவோர் இந்த நாவலில் பாதி குவாலிட்டிக்கு எழுதினாலே போதும் !

விறுவிறுப்பு, நகைச்சுவை, மெசேஜ் என எல்லாம் கலந்த இந்த சுஜாதா
ஸ்டெயில் கதையை அவசியம் வாசியுங்கள் !

நாவல் பெயர்: சிவந்த கைகள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

Series Navigationவளவ.துரையனின் நேர்காணல்ஜென் ஒரு புரிதல்- பகுதி 30

3 Comments

  1. Avatar bandhu

    இதற்கு அடுத்த பாகமாக வந்தது.. கலைந்த பொய்கள்..

  2. Avatar vathsala

    Very interesting novel. The word ‘cirrus mehangal’fascinated me for a long time.

  3. Avatar punai peyaril

    கதையின் கதாபாத்திர தன்மையை வாசகருக்கு எழுத்தாளர் கொடுக்கும் முறை என்று ஒன்று உள்ளது. உதாரணமாக கிறிஸ்டோபர் நோலன் பங்களில் வரும். அது போல எதிர்பாராத நேரத்தில் பொய் சொல்லு என்று கதையின் கதாபாத்திர குணம் கொண்டு, சுஜாதா கார் ஓட்டத் தெரியாது என்று சொல்லி பின் கார் ஓட்ட வைக்கும் நிகழ்வு இருக்கலாம். ஏனென்றால், ரீரீடிங் கொண்டே நாவல் அச்சுக்கு சென்றிருக்கும். எப்படியாயினும், ஜனரஞ்சக கதைகளை மேலோட்ட நிலையில் இருந்து மேன்மையான நிலைக்கு கொண்டு சென்ற… சுஜாதாவின் இழப்பு மனதின் ஒரு ஓரத்தில் இன்னும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *