author

சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்

This entry is part 8 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  எனக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று…நிலாநிழல் !  இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய்  வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன்.   கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் […]

அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese

This entry is part 14 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

Who moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம். கதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள் சொல்கிறது இந்த புத்தகம். இதனை எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன் கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர். நான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. […]

சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்

This entry is part 27 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

சுஜாதாவின் மத்யமர் – எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர். முன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்: ” இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் ” என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளது. சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம் தர்ட்டி […]

பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்

This entry is part 22 of 37 in the series 22 ஜூலை 2012

என் செல்ல செல்வங்கள் – பதிவர் துளசி கோபால் அவர்களின் புத்தகம். எழுதுவதற்கு விஷயங்கள் எத்தனை  எத்தனை   உள்ளன ! தான் வளர்த்த செல்ல பிராணிகள் குறித்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று நினைத்த அந்த  எண்ணத்துக்கு முதல் வணக்கம் ! சிறு வயதில் வளர்த்த மணி வாத்து நீரில் மூழ்கி இறந்ததில் துவங்குகிறது பயணம். கிட்ட தட்ட 19  வளர்ப்பு பிராணிகள். நாய்கள், புறாக்கள், பூனைகள் என.. ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு புத்தகத்தில் முதல் […]

சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்

This entry is part 22 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் சுஜாதா வைக்கும் சஸ்பென்ஸ் செமையாக இருக்கும் ! உயிர்மை பதிப்பு நூலாக பல ஆண்டுகளுக்கு பிறகு இதனை இப்போது மீண்டும் வாசித்தேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் முதலில் வாசித்த போது கிடைத்த அதே உணர்வுகள் ..! வாத்தியார் வாத்தியார் தான் ! 2005-ல் எழுதிய முன்னுரையில் சுஜாதா இப்படி சொல்கிறார்: […]

இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்

This entry is part 33 of 42 in the series 25 மார்ச் 2012

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது. இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை” கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்: “சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு […]

வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்

This entry is part 14 of 36 in the series 18 மார்ச் 2012

வனவாசம் – வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் ! துவக்கத்தில் கண்ணதாசனுக்கு […]

சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்

This entry is part 2 of 40 in the series 12 பிப்ரவரி 2012

விரும்பி சொன்ன பொய்கள் – என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல். கதை ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய […]

சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்

This entry is part 10 of 31 in the series 5 பிப்ரவரி 2012

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன் கதை விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே ” என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்” என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. […]

சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”

This entry is part 19 of 42 in the series 29 ஜனவரி 2012

“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அத்தகைய ஓர் கதை. ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் ” பெரியப்பா”. அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த […]