சுண்டல்

Spread the love


தேவையான பொருட்கள்
1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் (ருசிக்கேற்ப)
2 தேக்கரண்டி கடுகு
6 கறிவேப்பிலை இலைகள்
3 காய்ந்த மிளகாய் உடைக்கப்பட்டது (விதைகளை எடுத்துவிடவும்)
1/4 தேக்கரண்டி பெருங்காயம்
2 கோப்பை காபூலி சென்னா, அல்லது வெள்ளைகொண்டைக்கடலை, ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தது.
(கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகப்படுத்தலாம்)
1/4 கோப்பை துருவிய தேங்காய் தூள்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை துண்டுகள் இரண்டு
செய்முறை
எண்ணெயை ஒரு வாணலியில் நடுத்தரமான சூட்டில் சூடாக்கி, அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை , மிளகாய், பெருங்காயம்சேர்த்து வதக்கவும். 45 வினாடிகள்
இத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கவும். மூன்று நிமிடங்கள் இத்துடன் உப்பு சேர்த்து கலக்கி ஆற வைக்கவும்
இத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து கூடவே எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம்

Series Navigationநரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)4. தெய்யோப் பத்து