சுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்

.

இந்திய அரசியல் வரலாற்றில், சுப்ரமணிய சுவாமியைபோல், மனோ தைரியமும்,முறை
தவறிய, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலையும், சட்டத்தின்
உதவியூடன், குற்றவாளிக்கூண்டில், ஏற்றி, உயர்நீதி மன்றம் முதல்-உச்ச
நீதிமன்றம்வரை சென்று போராடும்,

ஒரே அரசியல்வாதியாக , இவர்தான் தெரிகின்றார்.

அவரது அரசியல் கொள்கைகள் கோமளித்தனமாக இருக்கலாம்.அவர்,அரசியலுக்கு
ஆற்றிய பங்கு, குறைவாக இருக்கலாம்.
அவர் தொகுதிக்கு செயத பணிகள் நிறைவேறாமல் இருக்கலாம்.இதைவிட , இன்றைய
தேவை, நமது வரிப்பணத்தை ஏப்பம்விடாமல் பார்த்துக் கொள்ள நமக்கு ஒரு
துணைவேண்டும்.

அவரது, பார்வையிலிருந்து கருணாநிதி முதல் – ஜெயலலிதா வரை,
இன்றைக்கு ராசா முதல் – சிதம்பரம் வரை பிடியில் சிக்கி உள்ளனர்.

இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தின் சட்ட பரிந்துரைக்கூட, சுவாமியின்
வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன், பரிந்துரையில், குற்றம்
சாட்டப்பட்ட, அரசியல் தலைவர்களையோ, மந்திரிகளையோ 90 நாட்களுக்குள் ,
வாதிட தகுந்த அனுமதி ,அரசு வழங்கிட வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது,
சுவாமிக்கு, கொடுக்கப்பட்ட, நல்ல தீர்ப்புதான்,

என ஒவ்வொரு குடிமகனும் நினைக்கின்றான்.
பொதுவாக, நாம் இன்றுவரை, பார்த்த அரசியல்வாதிகளோ,மந்திரிகளோ,கொள்ளை
அடிப்பார்கள், பிறகு, கோர்டுக்கும் போவார்கள், பலர் ,நிரபராதியாய் தப்பி
விடுவார்கள், நமது வரிப்பணம் கோவிந்தா ஆகிவிடும். சிலர், மாட்டுவார்கள்,
ஏதோ, குறைந்த அளவில், தண்டனை அனுபவித்துவிட்டு, அடுத்த தேர்தலில்,
மாகாத்மா வாக வெளியே வந்து, மீண்டும், கொள்ளை படலம் தொடரும்.
ஆனால், இன்று, நாம் எதிர்ப்பார்ப்பது, கொள்ளைப்போன, நமது, வரிப்பணம்,
மீண்டும், நமது, அரசாங்க காஜானவை நிரப்பவேண்டும். தவறு செய்த
அரசியல்வாதிகளை, சட்டம், கடுமையாக , தண்டிக்கவேண்டும்.

ஆனால், இதையெல்லாம், பார்த்துக்கொண்டு, அறிவுஜீவிகளும், இன்னமும், கதை,
கவிதைதான் எழுதிக்கொண்டுள்ளனர்.
நாம், என்று சீனாவைப்போல் முன்னேற போகின்றோம், ஜாப்பானைப்போல்,
விஞ்ஞானத்தை செயல்படுத்தப்போகின்றோம்.

வாழ்க பாரதம் !!!!!!!

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 25ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9