சுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்

Spread the love
அன்பார்ந்த நண்பர்க்கு,
வணக்கம். மகாகவி பாரதியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. இது எனக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாள். எனக்கு மட்டுமல்ல. என் போன்று உலகெங்கும் பரவியுள்ள சகல பாரதி அபிமானிகளுக்கும்  சிறந்த நாள். குறிப்பாக இவ்வாண்டு மிகவும் சிறப்பான நாளாய் எனக்குத் தோன்றுகிறது. அம்ஷன் குமார் அவர்களும், நானும் இணைந்து பாரதி பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, 1999-ஆம் ஆண்டு வெளியிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆயினும் எனது விநியோக வழிகள் குறைவான காரணத்தால் பார்த்தவர்கள் எண்ணிக்கையும் குறைவே. இக்குறையை நிவர்த்தி செய்ய, படத் தயாரிப்பாளன் என்ற முறையில் இன்று பாரதி ஆவணப்படத்தை YouTube சாதனத்தில் வெளியிடுகிறேன். ”சுப்பிரமணிய பாரதி” தமிழில் 1999-இலும், ஆங்கிலத்தில் 2000-இலும்  வெளியாயின. இரண்டும் இன்று முதல்  பொது மக்கள் பார்வையில் இருக்கும்.
YouTube மற்றும் கணினி மென்பொருள் உதவியை எனக்கு  வழங்கும் எனது நெருங்கிய நண்பர்கள் நியூ ஜெர்சி சோமசுந்தரம், மற்றும் துக்காராம் அவர்களுக்கு நன்றி.
அம்ஷன் குமார் அவர்கள் இந்த டாக்குமெண்டரிகளை இயக்க நேர்ந்ததை, பெரும்பேறாய்க் கருதுகிறேன். அம்ஷன் குமாரின் பாரதி அபிமானமும், வேலையைத் தவமாய்க் கருதும் மனப்பாங்கும் இப்படங்களின் தரத்திற்கு மூல காரணங்கள். பாரதியை நேரில் சந்தித்துப் பழகிய இரு முதியவர்களை அம்ஷன்குமார் தேடிக்கண்டு பிடித்து, அவர்களது அனுபவங்களை இப்படங்களில் ஆவணப்படுத்தியுள்ளார். பாரதி அன்பர்க்கு இது விலை மதிப்பற்ற பரிசு. பாரதி கூறு நல்லுலகம் இப்பணிக்கு இவரை என்றும் வாழ்த்தும்.
இப்படங்களை YouTube-இல் அல்லது எனது blog-இல் காணலாம். Links-
தமிழ்:  வெளியான ஆண்டு 1999
ஆங்கிலம்: வெளியான ஆண்டு 2000
அன்புடன்,
ஆனந்த் முருகானந்தம்
நியூ ஜெர்சி
டிசம்பர் 11, 2018
Series Navigationபாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி