சூத்திரம்

சு. இராமகோபால்

விட்டது கிடைப்பதில்லை
கிடைப்பது போவதில்லை
தொட்டது எடுப்பதில்லை
எடுப்பது கலப்பதில்லை
சுட்டது சுவைப்பதில்லை
சுவைப்பது வைப்பதில்லை
நட்டது முளைப்பதில்லை
முளைப்பது விளைவதில்லை
கட்டது நிற்பதில்லை
நிற்பது கற்பதில்லை
ஒட்டது பிடிப்பதில்லை
பிடிப்பது முடிவதில்லை
கொட்டது குவிவதில்லை
குவிவது மிகுவதில்லை
பட்டது தொடுவதில்லை
தொடுவது நகர்வதில்லை
எட்டது புரிவதில்லை
புரிவது தெரிவதில்லை
கெட்டது ஒன்றுமில்லை
ஒன்றுவது என்றுமில்லை
சட்டத்தை மதிப்பதில்லை
மதிப்பது விடுவதில்லை
மகா ராஜாவாக
வாழ்ந்து வருகிறோம்

Series Navigation‘குடி’ மொழிதலையெழுத்து