சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்

This entry is part 4 of 32 in the series 13 ஜனவரி 2013

அன்புடையீர்,

வணக்கம்.. சென்னை நநதனத்தில் நடந்து கொண்டிருக்கிற 2013ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கடை எண்: 488 மற்றும் 489 ’கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடைகளில் என்னுடைய 4 புத்தகங்கள் வெளியாகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் இயன்றால் சென்று வாங்கிப் படித்து தங்களுடைய மேலான கருத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன். இதில் பெரும்பாலான கதைகள் நம் திண்ணையில் வெளியானது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்களின் விவரம் வருமாறு:

(1) விடியலின் வேர்கள் – பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்

(2) கனலில் பூத்த கவிதைகள்! – சிறுகதைத் தொகுப்பு

(3) கனவு தேசம் – சிறுகதைத் தொகுப்பு

(4) நம்பிக்கை ஒளி! – 2 குறுநாவல்கள்

நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

Series Navigation‘எனது பர்மா குறிப்புகள்’ ‍பற்றிய ஒரு வாசகனின் சில‌ குறிப்புகள்மெய்ப்பொருள்

22 Comments

  1. Avatar punaipeyaril

    உங்கள் எழுத்துக்களில் சமூகத்தின் அவலம் சாடி அக்கறையுடன் எழுதுவதால் ஒரு விண்ணப்பம்: “கோனார் மாளிகையில்..” -அந்த ஜாதி அடையாளம் தேவையா என்று கேளுங்கள். மாற்றச் சொல்லுங்கள். நமது பக்கத்தில் இருப்பதை மாற்றாமல் தூரத்திலிருப்பதை மாற்றமுடியாது என்று எவனோ முன்பு சொன்னான். அவர்கள் மறுத்தால், கிழக்கு பதிப்பகத்திற்கு உங்கள் படைப்பை அனுப்புங்கள். நிச்சயம் போடுவார்கள்…

  2. Avatar மலர்மன்னன்

    பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் காலஞ்சென்ற பழனியப்பச் செட்டியாரும் அவருடைய சகோதரரும் இணைந்து தொடங்கியது. அது முதலில் திருச்சியில் நிறுவப்பட்டது. சகோதரர்கள் இருவரும் தன வணிகர், நாட்டுக் கோட்டை செட்டியார், நகரத்தார் என்றெல்லாம் குறிப்பிடப்படும் செட்டி நாட்டுக்காரர்கள். நகரத்தார் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள்.
    பழனியப்பா பிரதர்ஸ் முதன் முதலில் புத்தகப் பிரசுரம் தொடங்கியபோது பள்ளி இறுதி வகுப்பிற்கான தமிழ்ப் பாட நூலுக்கு உரை எழுதி வெளியிடலாயினர். அய்யம் பெருமாள் கோனார் என்ற தழிழ் ஆசிரியர் எழுதிக் கொடுத்த உரை நூலை அவர்கள் வெளியிட்டனர். கோனார் உரை நூல் என்று ஆசிரியர் பெயரால் வெளியான அது அமோக வரவேற்பைப் பெற்றது. ஆண்டு தோறும் கோனார் உரை நூலை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட ஆரம்பித்துப் பெருத்த லாபம் அடைந்தது. அந்த நன்றிக்கு அடையாளமாகவே பழனியப்பச் செட்டியார் சென்னை யில் தமது பதிப்பகத்திற்கான கட்டிடம் அமைத்தபோது அதற்கு கோனார் மாளிகை எனப் பெயரிட்டார். பெரும் புலவர் அய்யம் பெருமாள் கோனார் தமது பெயரோடு கோனார் என்ற பின்னொட்டையும் சேர்த்தே பயன்படுத்தி வந்தார். இது அக்கால வழக்கம். எல்லாச் சாதியினரும் தமது சாதியை அடையாளம் காட்டத் தமது பெயருடன் தம் சாதியைச் சேர்த்தே தெரிவித்து வந்தனர். இது மிகவும் இயல்பானதாக இருந்ததே யன்றி சாதி வெறியாக அல்ல. எவரும் சாதிப் பெயரைத் தம் பெயருடன் சேர்த்துக் கொள்வதைத் தவறாகக் கருதியதுமில்லை. ஒருவர் தமது சாதிப் பெயரைத் தமது பெயருடன் வைத்திருக்கையில் அதைப் பிறர் வெட்டி விடுவது முறையல்ல, நாகரிகமும் அல்ல. ஒருவர் தமது சாதிப் பெயரைத் தமது பெயரின் பின்னொட்டாக வைத்திருப்பின் அதை வெட்டிப் போட மற்றவர்களுக்கு உரிமையோ அதிகாரமோ இல்லை என்பதோடு அதனால் சமுதாயத்தில் சாதி உணர்வு மறைந்து போவது சாத்தியமும் இல்லை. ஒருவர் தமது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைக் குறிப்பிடாததாலேயே அவர் சாதி மறுப்பாளர் ஆகிவிட்டதாகக் கருதுவதற்கும் இல்லை. வன்னிய சாதி உணர்வை இன்று அப்பட்டமாக வெளியிடும் ராமதாஸ் தமது சாதிப் பெயரைத் தம் பெயருடன் சேர்த்துக்கொண்டா இருக்கிறார்? அய்யம் பெருமாள் கோனார் இடையர் சாதியைச் சேர்ந்தவர். தாம் எழுதிய தமிழ்ப் பாட உரை நூலுக்கு அவர் கோனார் உரை நூல் என்றே பெயர் சூட்டினார். அதே பெயரில் பழனியப்பா பிரதர்ஸும் வெளியிட, கோனார் உரை நூல் என்பது பிரபலமடைந்து அனைவரும் அவ்வாறே சாதிப் பிரக்ஞை ஏதுமின்றி குறிப்பிடலாயினர். பழனியப்பா பிரதர்ஸும் தனது கட்டிடத்தின் பெயரை அதன் நினைவாகக் கோனார் மாளிகை என்று சூட்டிக் கொண்டது. இதில் சாதி உணர்வு வெளிப்பாடு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. பழனியப்பச் செட்டியார் ஓர் இடையர் சாதிப்பெயரை ஏன் தமது கட்டிடத்துக்கு வைக்க வேண்டும்? சென்னையில் அவருக்குப் பல கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் எதற்கும் அவரது சாதிப் பெயர் இல்லை. மேலும் பழனியப்பச் செட்டியார் காமராஜருக்கு மிகவும் வேண்டியவர். பல்வேறு சாதியினரிடமும் வித்தியாசமின்றி நெருங்கிப் பழகியவர், பழனியப்பச் செட்டியார். அவரையும் அவர் மகன் ஸ்ரீ செல்லப்பனையும் நன்கு அறிந்தவன் நான். அவர்களுக்குச் சாதி உணர்வே இல்லை. இக்கால வழக்கப்படி செல்லப்பன் தனது சாதிப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக் கொள்ளவில்லை. அதேபோல் அவர் தந்தை தமது கால வழக்கப்படித் தமது சாதிப் பெயரைத் தம் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொண்டார். அவ்வளவு ஏன், ஏ.கே. செட்டியாரை நாம் அனைவரும் அறிவோம். அவர் என்ன சாதி அபிமானம் உள்ளவரா? அவர் தமது பெயருக்குப் பின்னால் செட்டியார் என வைத்துக் கொண்டு, அதுவே அவரது பெயராகவே ஆகிவிடவில்லையா? அதை உச்சரிக்கையில் நமக்கு சாதி உணர்வின் பிரக்ஞை வருகிறதா?
    -மலர்மன்னன்

    • அன்பின் திரு மலர்மன்னன் ஐயா,

      தங்களுடைய மிக விளக்கமான தகவலுக்கு மனமார்ந்த நன்றி. ஆங்கில வழி கல்வி படித்த மாணவர்களுக்கு ஒரு காலத்தில் கோனார் தமிழ் உரை என்பது இன்னொரு தமிழாசிரியை போல..

      சாதி பற்றிய தங்களுடைய அழகான விளக்கம் ஏற்புடையதாக உள்ளது. சாதியை வைத்து அரசியல் பண்ணும் சூழல் அந்தக்காலத்தில் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். புனைப்பெயரில் ஐயா ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். ந்னி நன்றி ஐயா.

      அன்புடன்
      பவள சங்கரி

  3. Avatar punaipeyaril

    வாஸ்தவம் தான். ஆனால் நியாயப்படுத்த நினைத்தால் சத்தியமூர்த்தி, தேவதாசி முறைகள் தொடரட்டும் என்பது கூட சரியாகத் தான் தெரியும். கோனார் மட்டுமல்ல, தேவர், வன்னியர், சத்திரியர், பிள்ளை, நாடார், செட்டியார், முதலியார், உடையார், மூப்பனார்,முத்திரையர், கவுண்டர், வேளாளர், ஐயர், ஐயங்கார், நாயக்கர், ரெட்டியார், என்று எல்லாத்தையும் நியாயப்படுத்தலாம். ஆனால், ஒரு காலகட்டத்தில் அந்த குறியீடு மனத்தாங்கல் பாகுபாட்டை தருகிறது, இன கலப்பு, ஒழிப்பு தேவை என்றான போது, அந்த அடையாளங்கள் விலக்கப்பட வேண்டும் என்று பலர் போராடினார்கள்.. போராடுகிறார்கள். எங்கோ ஒருவர் மட்டும் “கிருஷ்ண பறையனார்” என்று மனதைரியமாக எழுதுகிறார். மற்றபடி, சக்கிலியர், அருந்ததியர், பள்ளர் , பறையர் என்று எழுத மனம் ஒப்பவில்லை. பிறாமனாள் கஃபே, தேவர் மெஸ், கோனார் மெஸ், நாயுடு மெஸ் என்றெல்லாம் இருக்கும் போது, “பள்ளர் அசைவ உணவகம்”. “பறையர் ஃபாஸ்ட் பீஸா” என்று திறந்தால் ஓடுமா..? அதனால் தானே சாதிய அடையாளம் வேண்டாம் என்று லிங்கி செட்டி தெரு கூட லிங்கி தெருவானது.. தெருவே மாறும் போது ஒரு கட்டிடம் மட்டும் “கோனார்” மாளிகை யாவது ஏன்..? பிறரை… விடுங்கள்.. ஏதோ சமூக அவலங்களை என் எழுத்து துடைக்க என்று ஃபாக்டரி புரடக்‌ஷன் மாதிரி எழுதித் தள்ளும், பேசித் தள்ளும், மேடை முழங்கும் கூட்டம் மாற்றத்திற்கு வித்திடலாமே..? இழப்பு அதிகம் என்று தெரிந்தும், நான் பள்ளி சான்றிதழில் பயன் கிடைக்கும் என்று தெரிந்தும் சாதி பெயர் போடவில்லை… மாற்றம் யாரோ ஒருவன் தரும் தரிசனம் அல்ல… நாம் ஆரம்பிக்கும் தர்ம நிலை… அண்ணா ஏன் தேர்தலில் அவசர அவசராக “அண்ணாத்துரை முதலியார்” என்று காஞ்சிபுரத்தில் ஃபோஸ்டர் அடித்தார், அதற்கு முதலியார் ச்ங்கங்கள் ஏன் எதிர்ப்பு காண்பித்தன என்று கொஞ்சம் சொல்லுங்கள்.. “ஜாதிகள் உண்டய்யா பெரிசு.. அதைப் பற்றிக் கொண்டு தொங்குதலே சிறிசு..” – என்று அடுத்த நிலையில் உள்ளவன் தான் நானும்.. :)

  4. Avatar மலர்மன்னன்

    லிங்கிச் செட்டித் தெரு என்று இஷ்டம்போல் பெயர் மாற்றம் செய்தது சரியல்லதான். லிங்கிச் செட்டி, தம்புச் செட்டி என்பவர்கள் எல்லாம் கும்பெனி காலத்தில் பெரும் வணிகர்களக இருந்தவர்கள். அவர்கள் தமக்கென வைத்துக் கொண்ட பெயரை சம்பந்தமில்லாதவர்களுக்கு மாற்ற உரிமை இல்லைதான். மேலும் கோணார் மாளிகை என்பது கோனார் உரை நூல் நினைவாக வைத்த பெயர். லிங்கி என்று தெருவின் பெயரையே மாற்றியதற்கும் இதற்கும் ஒப்பீடு சரியில்லை. குயவர் தெரு என்று சைதாப்பேட்டையில் இருந்ததை வெறும் தெரு என்று மாற்றிய புத்திசாலிகள் நெஞ்சுகுள் மட்டும் சாதியை பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1957-ல் காஞ்சியில் அண்ணா தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்காக வேலை செய்தேன். அண்ணாத்துரை முதலியார் என்று வாக்காளர் பட்டியலில் இருந்ததேயன்றி அவராக அப்பெயரைப் பயன்படுத்தவில்லை. மாதத்தில் ஓரிரு நாட்கள் அவர் ஊரில் இருந்தாலே ஆச்சரியம். அவர் இல்லாத பொழுது வீட்டில் இருந்த தொத்தாவோ பாங்காரம்மாவோ அப்பாவியாக அவர் கால வழக்கப்படி சாதிப் பெயர் சேர்த்துக் கொடுத்து விட்டார்கள். இந்த விவரமே அண்ணா தேர்தலில் போட்டியிட மனுச் செய்துகொள்ள முற்பட்டபோதுதான் அண்ணாவுக்குத் தெரியும். பெயரிலிருந்து சாதிப் பெயரை எடுக்க மனுக் கொடுத்தபோது அதற்குக் கால அவகாசம் இல்லை, பிறகு வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம், இப்பொழுது மனுவில் சாதிப் பெயரையும் சேர்த்துப் போட்டால்தான் வாக்காளர் பட்டியிலில் உள்ள பெயரின் படி மனுவில் இருந்தால்தான் செல்லுபடியாகும் என்று சொல்லிவிட்டார்கள். சிவசாமிதான் அண்ணாவை அசிங்கப்படுத்த வேண்டுமென்றே அண்ணாத்துரை முதலியார் என்று சுவரொட்டி அடித்துக்கு குழப்பம் விளைவித்தார். சிவசாமி அண்ணாவின் சகோதரியை வைத்துக் கொண்டிருந்தவர். இதுதான் உண்மை.
    -மலர்மன்னன்

  5. புனை பெயரார் ஹைதர் அலி காலத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார். ஆயிரம் பெரியார் பிறந்தாலும்,தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஜாதிகள் ஒழியவே ஒழியா ! 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பித்திலேயே பெரியாரின் பகுத்தறிவுக் கட்சிகள் பச்சைக்கொடி காட்டி ஜாதீயவாரி ஒதுக்கீடு “ரேஷன் கார்டு” புனை பெயரார் உட்பட எல்லாத் தமிழருக்கும் அரிசி, பருப்பு, அடுப்பு எரிவாயு, பெட்ரோல், மின்சாரம், உபகாசரச் சம்பளம், கல்லூரி இடம், அரசியல் பதவி, உத்தியோகம் வாங்க அரசாங்கம் தரப் போகிறது.
    ஓலைச் சுவடியில் உறங்கிக் கரை பிடித்த, கரையான் தின்ற ஜாதிகள் எல்லாம் இப்போது கல்வெட்டுகளில் எழுதப்பட்டுத் தெருத் தெருவாய் காட்சி அளிக்கப் போகின்றன.

    சி. ஜெயபாரதன்.

    • அன்பின் திரு ஜெயபாரதன் ஐயா,

      சத்தியமான வார்த்தைகள். குழந்தைகளை ப்ள்ளியில் சேர்க்க வேண்டுமானாலும் சாதிப்பெயர் கொடுக்கவேண்டும், நான் இந்தியன் என்று போட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதைவிட வேடிக்கையான விசயம், எங்கள் சாதி மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களே அதுதான்… அரசாங்கத்தில் அறிவிக்கும் சலுகைகளை அனுபவிக்க இப்படி ஒரு தந்திரம். இதுபோல சாதிப் பிரச்சனையால் நிறைய வேடிக்கை அனுபவங்கள் கிடைக்கிறதே…

      அன்புடன்
      பவள சங்கரி

      • Avatar punaipeyaril

        ஜெயபாரதன் சொன்னது சத்திய வார்த்தையல்ல… ஒரு அர்த்தமுள்ள ஆசை. மேலும், மதம், இனம், நாடு ( நேஷனல் ) என்ற பாகுபாட்டு தகவல் சேகரிப்பு உலகெங்கும் உண்டு. அதனால் தான் அமெரிக்கா கனடாவில் கூட ஆப்ரோ அமெரிக்கன், ஏசியன் அமெரிக்கன் என்ற தகவல் கேட்கப்படும். அந்த இடத்தில் “அமெரிக்கன்” என்று போடுவது விலக்கப்படும் தகவல் எண்ட்ரியே. மத்தபடி நான் எனது சந்ததிக்கு பள்ளியில் சாதி என்ற இடத்தில் தகவல் தராத போது, பிரச்சனை வந்து, வேண்டுமானால் “கலப்பு” என்று போடுகிறேன் என்று போட்டுள்ளேன். வீட்டில் கணக்கெடுப்பு வந்த போது அந்த தகவல் கிடையாது என்று சொல்லி விட்டேன். ஆனால், சாதிகள் அமுக்கப்படக் கூடாது என்று ஏற்ற நிலைக்கு பல சட்டங்கள் உள்ளன, அது பயன்படுத்தப்பட வேண்டும் எனில் அந்த தகவல் தேவையே.. அந்தப் பயன்கள் தேவையில்லை எனில் தவிர்க்கலாம். அது சரி , மதுரை மடாதிபதி தகுதிக்காக பொய் சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய நிலை குருமகா சன்னிதானத்திற்கே ஏற்பட்டது. காஞ்சி மட்டில் ஒரு சக்கிலியன் மடாதிபதியாக முடியாது… சிவகாசி நாடார் உறவின் முறையில் வேறு சாதியென்ன தூத்துக்குடி நாடாரே தலைவர் ஆக முடியாது… இலங்கைத் தெலுங்குப் பெண்ணை திருமணம் செய்தாலும் நாடார் சங்கத்திற்கு ஒருவர் தலைவர் ஆகலாம்… ஆனால், அவரின் மனைவி…? பின்னிக் கிடக்கும் பிரச்சனை இது.. இதை ஆந்தரபாலஸிஸ்ட், அரசியல் எக்ஸ்பர்ட்.. துணையின்றி சரி செய்ய முடியாது… வேலைகிடைத்து பேங்க் பாலன்ஸ் கூடுவதால் வரும் சிந்தனை காற்றில் மண்கொண்டு கயிறு கட்டி பூமியை இழுக்கிறேன் என்று சொல்வது போல்… நான் ஜாதிய ரீதியான துன்புறத்தளுக்கு எதிரி.. அதே சமயம் காடுவெட்டி குருவின் சில பேச்சுக்களில் அர்த்தமுள்ளது என்று நினைப்பவன். திருமாவளவன் சொல்வது போல் கட்டப்பஞ்சாயத்தாலும், மிரட்டுவதாலும் வரும் பயம், எதிரணியை மேலும் உக்கிரமடையச் செய்யும்… பாகிஸ்தானியர் தலைவெட்டுவதால் நாம் பயப்படாமல் கிளர்ந்தெழுவது போல்….

    • Avatar punaipeyaril

      தூக்கக் கலக்கத்தில் எழுதுவது தவறல்ல…

  6. Avatar மலர்மன்னன்

    1957 தேர்தலில் அண்ணாவை அமோகமாக வெற்றி பெற வாக்குகளை அவருக்கு அள்ளிக் கொடுத்தவர்கள் பிராமணர்கள். உபயம் ஈவேரா அவர்கள். அதேபோல் 1962-ல் அண்ணாவுக்கு அதிக அளவில் வாக்களித்தவர்கள் பிராமணார்களே.
    -மலர்மன்னன்

  7. Avatar punaipeyaril

    ஓலைச் சுவடியில் உறங்கிக் கரை பிடித்த, கரையான் தின்ற ஜாதிகள் எல்லாம் இப்போது கல்வெட்டுகளில் எழுதப்பட்டுத் தெருத் தெருவாய் காட்சி அளிக்கப் போகின்றன–> என் ஆசையும் அப்படி நடக்க வேண்டும் என்பது தான். அடுத்த முறை இந்தியா வரும் போது சொல்லுங்கள். செல்லரித்து கிடக்கும் ஜாதிய தாக்கம் இருக்கும் நிலை காண்பிக்கிறேன். மந்திரி பதவி, போலீஸ் பதவி ஏற்றம் என ஜாதிய முன்னுரிமை நடப்பதை பாருங்கள். அவ்வளவு ஏன் பல்கலை துணைவேந்தருக்கே ஜாதி தான். எம் எல் ஏ டிக்கெட் ஜாதிய அடிப்படையில் தான். இந்நிலையை தகர்க்கும் ஒரே அரசியல்வாதி தமிழகத்தில் ஜெயலலிதா தான்.ஆனால் அவர் சுற்றியும் தேவர் ஜாதியின் ஆதிக்கம்…

  8. Avatar மலர்மன்னன்

    அண்ணாவுக்கு சாதி உணர்வோ, சுய சாதி அபிமானமோ எந்தவொரு சாதியின் மீதும் துவேஷமோ அறவே இருந்ததில்லை என்பதை நேரில் அறிவேன். சாதி என்ற கோணத்தில் அவரை விமர்சிக்க இயலாது. அரசியல் ரீதியாக நன்கு விமர்சிக்கலாம். எடுத்துக் காட்டாக சென்னை மாநகராட்சிக்கு தி மு க மேயர்தான் வர வேண்டும் என்று 1959-ல் கருணாநிதியும் இன்னும் சிலரும் வற்புறுத்தியபோது அதற்குப் பணிந்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றோம் என்று அந்தத் தகாத செயலை அவர் நியாயப் படுத்தியதை விமர்சிக்கலாம். நான் விமர்சித்து எழுதிய கட்டுரையை அண்ணா பாராட்டி நீ எழுதியது நியாயம்தான் என்று என்னிடமே கூறியதும் உண்டு! இப்படி இன்னும் பல அரசியல் சறுக்கல்களைக் கூற முடியும். கருணாநிதிதான் சாதி உணர்வைக் கட்டிக் காத்து, தாம் முதலமைச்சர் பதவி வகித்த போதெல்லாம் ராஜமாணீக்கம் என்ற தம் சாதிக்காரரைத் தமது சாதியினர் கோரிக்கைகளை கவனிப்பதற்கென்றே நியமிப்பார்! அவருக்கு ஐ ஏ எஸ் தகுதியையும் அனுபவ அடிப்படையில் வாங்க்கிக் கொடுத்தார்!
    -மலர்மன்னன்

  9. Avatar punaipeyaril

    நான் அண்ணாவை சாதிய உணர்வாளர் என்று சொல்லவில்லை. அண்ணாத்துரை முதலியார் என்ற போஸ்டருக்கு ஏன் முதலியார் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது…?

  10. Avatar பொன்.முத்துக்குமார்

    தனிப்பட்ட பெயரை மாற்றுவதா அப்படியே கொண்டிருப்பதா என்று சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் மாற்றார் கருத்து கூறலாம், அவ்வளவுதான்.

    அதேபோல இந்த கட்டடம் தனிப்பட்ட ஒருவரின் சொத்து. அதன் பெயர் எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அதன் உரிமையாளரே. சட்டத்துக்குட்பட்டிருக்கும் வரையில் அதை மாற்றவேண்டும் என்று புறப்பட்டு வர எவருக்கும் உரிமை இல்லை.

  11. Avatar ஜெயஸ்ரீ ஷங்கர்

    என் அன்பின் திருமதி.பவள சங்கரி அவர்களுக்கு,

    வணக்கங்கள்.

    ஆச்சரியப் படாதீர்கள்.

    தங்களின் கட்டுரைகள், கவிதைகள், பின்னூட்டங்கள், கதைகள் என்று பல விதமான எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பை கிடைக்கப் பெற்றேன்.

    நல்ல சிந்தனையாளர், எழுத்தில் வல்லமை பொருந்தியவர், நேரத்தை எழுத்தோடு கட்டிப் போட்டவர்…கற்றுத் தேர்ந்தவர். இதுவெல்லாம் வெறும்

    புகழுரை மட்டும் அல்ல. ஒரு சாதாரண பெண் , குடும்பத் தலைவி, இரு குழந்தைகளின் தாய், ஒரு அக்க, ஒரு தங்கை, ஒரு மகள்…என்பதைக் கடந்து

    ஒரு சுய சிந்தனை மிக்க பெண் என்று காட்டி நீங்களே உங்களுக்கு உள்ளொளி ஏற்றிக் கொண்டு இருக்கிறீர். அதிலிருந்து இன்னும் பலருக்கு வழி

    காட்டியாகவும், ஒளி எற்றுபவராகவும் இருப்பது உணர்ந்து மகிழ்ச்சி. அதன் சான்று தான் தங்களின் நான்கு புத்தக வெளியீடு. அதில் எனக்கும் ஒரு

    சிறு பங்கு கொடுத்து பெரிய இடத்தைத் தந்திருக்கிறீர்கள். அது உங்கள் அன்பின் விசாலத்தைக் காண்பிக்கிறது. ஒரு நல்ல நட்பும், தோழமையும்

    கிடைத்த உணர்வு என்னுள் என்றும் உண்டு. உங்கள் சிந்தனைக்கு என்னுள் ஒரு தனி இடம் உண்டு.

    நீங்கள் இன்னும் பல சிகரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

    என்றும் நட்போடு,

    ஜெயஸ்ரீ ஷங்கர்

  12. Avatar மலர்மன்னன்

    //நான் அண்ணாவை சாதிய உணர்வாளர் என்று சொல்லவில்லை. அண்ணாத்துரை முதலியார் என்ற போஸ்டருக்கு ஏன் முதலியார் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது…?-punaipeyaril//
    ஏனென்றால் அண்ணாவை முதலியார் என அவர்கள் ஏற்கவில்லை. முதலியாரில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் எந்தப் பிரிவிலும் அவர் இல்லை என்றார்கள். அண்ணாவும் தம்மை 1935-ல் ஓர் இளைஞராக செங்குந்த முதலியார் இளைஞர் மாநாட்டில் பேசியபின் தம்மை எந்தச் சாதியுடனும் அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. அண்ணாவை பங்காரம்மாவின் புதல்வனாகவே முதலியார்கள் பார்த்தார்கள். பங்காரம்மா பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டாகிவிட்டது. அண்ணா தன் பெயரோடு முதலியார் என்ற சாதிப் பெயரைப் போட்டு சுவரொட்டி எதுவும் அடிக்கவில்லை. அண்ணாத்துரை என்று முதலியார்கள் பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை, அண்ணாத்துரை அய்யாங்கார்தான் உண்டு என்றார்கள்.
    -மலர்மன்னன்

  13. Avatar punaipeyaril

    அருமை மம… உங்கள் தகவல்கள் வருங்காலத்தில் சரித்திர வகுப்பின் ஆய்விற்கு பயன்படும் ரகம்.. நன்றி…

  14. Avatar மலர்மன்னன்

    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே முதலியார்கள் அண்ணா முதலைமைச்சர் ஆனதும் ஈ.வே.ரா., பி. டி. ராஜன் வழியில் பிளேட்டைத் திருப்பிப்போட்டுவிட்டார்கள்!
    நாம் பதவிக்கு வந்த பிறகுதான் நம்மில் யார் என்ன ஜாதி என்று நமக்கே தெரிய வருகிறது என்று அண்ணா சொன்னர்!

    தி.மு. க.வில் நாராண சாமி முதலியார் ( நெடுங்செழியன்), ராமையா முதலியார் (க. அன்பழகன்) போன்ற ஒரு சிலரைத் தவிர யார் என்ன ஜாதி என்பதே தெரியாமல்தான் இருந்து வந்தது!
    சிதம்பரம் பொன் சொக்க லிங்கம் ஒரு வன்னியராய் இருப்பார் என்றுதான் அண்ணா வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் பிள்ளை என்று தெரிய வந்த போது, அட பாவி, நீ வன்னியன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்! ரொம்பப் பேருக்கு அப்படித்தான் அண்ணா நினைப்பு, அது நல்லதுக்குத்தான் என்றார், பொன். சொ. அவரை 1957 தேர்தலில் சிதம்பரம் சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளார் வாகீசம் பிள்ளைக்குப் போட்டியாக அண்ணா நிறுத்தியபோது! 1957-ல் தோற்றுப்போன பொன் சொக்கலிங்கம் 1967-ல் வெற்றி பெற்றார். 1957-ல் வேட்பாளர் தேர்வின்போது தி.மு. க. வில் எல்லாம் வேடிக்கை விளையாட்டாகவே நடந்தன. அதுதான் தி. மு. க.வுக்கு முதல் அனுபவம். எவரும் சாதி, நிதி வசதி பார்த்து நிறுத்தப்படவில்லை. முக்கால்வாசி வேட்பாளர்களும் வெறும் டீயும் பன்னும் தின்றே காலத்தை ஓட்டும் நபர்கள். சாதிப் பிரக்ஞையே இல்லாதவ்ர்கள். காமராஜர் ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதியைப் பார்த்தும் ஆளின் பண வசதியைப் பார்த்தும் நிறுத்துகிறாரே, நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா என்று விளையாட்டாகக் கேட்டார் அண்ணா! பிறகு, யார் கண்டது, நம்ம வத்தல் தொத்தல் என் வி நடராசன்கூடத் தப்பித் தவறி ஜயித்தாலும் ஜயித்துவிடலாம் என்று சிரித்தார். அதை தினத் தந்தியில் படத்தோடு பெரிய செய்தியாகப் போட்டாலும் போடுவார்கள் என்று கூடவே ஒரு ஊசியையும் சொருகினார்! என் வி நடராசன் தி மு க பொதுக் குழு செயற் குழு உள்கட்சி விவகாரங்களை தினத் தந்திக்குக் கசியவிட்டுப் பயன் பெற்று வந்தார்! இவ்வளவுக்கும் அவர் அன்று தி முக வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர்!
    -மலர்மன்னன்

  15. Avatar punaipeyaril

    காமராஜர் ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதியைப் பார்த்தும் ஆளின் பண வசதியைப் பார்த்தும் நிறுத்துகிறாரே,—> நன்றி… காமராஜர் யோக்கியராக இருந்திருக்கலாம்… ஆனால் ஆழ்நிலை தவறுகள் பல செய்தவர்.. சாமான்யன் மிகச் சிலரே காங் அவர் கீழ் வர முடிந்தது… காமாராஜ் ஒரு மோசமான அரசியல் கட்சியமைப்பு நடத்தும் முறையை வைத்திருந்தார்.அதனால் தான் இன்றும் தமிழக காங்கிரஸ் பருத்த தொந்திகலும் லிப்ஸ்டிக் குகளின் கூட்டமாய் இருக்கிறது… காங்கிரஸை தமிழகத்தில் உருப்படாமல் ஆக்கியது காமராஜரே… ஒரு சத்துணவு திட்டத்திற்கு பதிலாக அவரின் அத்துனை தவறையும் மறக்கச் சொல்கிறார்கள்…

  16. Avatar லெட்சுமணன்

    *//ஒரு சத்துணவு திட்டத்திற்கு பதிலாக அவரின் அத்துனை தவறையும் மறக்கச் சொல்கிறார்கள்… //**

    You gave us Meal at school

    You gave us IIT Madras

    You gave us 13 Dams for Agriculture

    You gave us NLC, BHEL, RCF and many more industries

    You developed us in all fronts

    You are a school dropout, but Harrow educated Nehru asked all state’s CMs to learn state administration from you.

    You defined the destiny of Congress

    You gave re-birth to Nehru’s family in politics

    Above all you gave us an opportunity to proudly say, that we had a CM who died with 10 Rupees in his pocket and gave everything else to his people.

    And his Name is K. Kamaraj.

    We Salute You…

  17. Avatar punaipeyaril

    அவர் பையில் 10 ரூபாய் இருந்ததா இல்லை 325 ரூபாய் இருந்ததா என்பது கேள்வியில்லை. அவரின் நேர்மையின் மேல் யாருக்கும் சந்தேகம் கிடையாது. அவர் மூன்று டாம் கட்டியிருக்கலாம்… ஆனால், மேடாவது பள்ளமாவது என்று பீர்மேடு பகுதிகளை கேரளாவிற்கு தாரை வார்த்தவர். வைகை அணை வந்ததன் காரணம் காமராஜரின் அருமையான முடிவே… எனது கேள்வி அவரின் முட்டாள்தனத்தை பற்றியது, அதை நீங்கள் You gave re-birth to Nehru’s family in politics என்று பாராட்டுகிறீர்கள்… மொரார்ஜி தேசாயும், ஜெ.பியும் அவருக்கு ஏன் எட்டிக்காய்…? You gave us NLC, BHEL, RCF and many more industries – இல்லை ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு தொழில்நிலை நாட்டில் வரும். அப்போது ஆர் வி கிண்டி இன் எஸ்டேட் முதல் பலவற்றிற்கும் காரணாமாக இருந்தார். காமராஜர் காங்கிரஸை நடத்திய விதம் பற்றித் தான் என் கேள்வி… கேள்வி கேட்பதால் காமராஜரை வெறுப்பதாக அர்த்தமில்லை.. பணமும் ஜாதியும் வைத்தே அவர் தேர்தலைச் சந்தித்தார்… சென்னை ராஜதானி இந்தியாவின் முக்கிய பகுதி… அங்கு ஐ ஐ டி வந்தே தீரும் … ஆனால் அதற்காக சென்னையில் இருந்த ஒரு அற்புதமான காட்டை கட்டிடமாக்கிய புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது… மான் துள்ளி விளையாண்ட இடம்… நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன்… ஐ ஐ டியை வேறு பகுதியில் வைத்திருக்கலாம்…அந்த இடத்தில் உயிர் காலேஜ் என்று அந்த காலத்தில் சொல்லப்பட்ட ஜூ இருந்தது… மக்கள் வருகைக்காக ஜூ இடம்பெர்யர்ந்து வண்டலூர் போனது… விளைநிலங்கள் கொண்ட அடையாறு பகுதியை அவர் காக்க என்ன செய்தார்..? அதிகாரிகளை வேலை வாங்கவும் மரியாதை கொடுக்கவும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.. ஒரு மந்திரி பூவராகவன் கலெக்டர் ஒருவரை அவமானப்படுத்தினார் என்று மதுரை சர்க்யூட் ஹவுசில் சூப்பர் பரேட் நடத்தி அந்த மந்திரியை அவர் கிழ் கிழி என்று கிழித்த சூப்பர் மனிதர் தான்… ஆனால் அவர் ஏற்படுத்திய டேமேஜ் பற்றி பேசியே ஆக வேண்டும்… திண்டுக்கல் ரோட்டில் கக்கனை நடுவழியில் இறக்கிய நல் விஷயமும் உண்டு… ஆனால் அவரின் இமாலயத்தவறுகள் அலசப்பட வேண்டும்…

  18. Avatar லெட்சுமணன்

    எனக்கு தங்கள் அளவிற்கு காமராசர் கால அரசியல் தெரியாது. எனக்கு வந்த தகவலை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. (இந்த காமராசர் பற்றிய மெயில் பலருக்கும் ஃபார்வார்டு செய்யப்பட்ட ஒரு மெயில் என்றே நினைக்கிறேன். பலரும் முன்பே படித்திருப்பார்கள். அதை எடிட் செய்ய வேண்டாம் என்று அப்படியே போட்டேன்) சத்துணவு திட்டம் மட்டுமே அவர் கொண்டு வந்தார் என்பதை மட்டுமே நான் மறுக்க நினைத்தேன். விசயம் தெரிந்தவர்கள் மேலும் விளக்கலாம்.

    இந்திரா காந்தியை முன் மொழிந்ததற்காக காமராசர் மிகவும் வருந்தியதாக குல்தீப் நய்யார் குறிப்பிட்டிருக்கிறார். நிறை குறைகள் அலசப்படலாம் என்பதே என் கருத்தும்.

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *