சொல்லவேண்டிய சில…..

 

 

லதா ராமகிருஷ்ணன்

ஒருவர் உண்மையாகவே ஒரு படைப்பாளியை – முக்கியமாக அந்நியமொழிப் படைப்பாளியை (நேரடியாக ஸ்பானிய ஜப்பானிய லித்துவேனிய இத்தியாதி மொழிகளி லிருந்தோ அல்லது ஆங்கிலம் மூலமாகவோ) படித்திருக்கிறாரா அல்லது வெறுமே NAME DROPPING(மற்றவர்களிடம் தம்மைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதற்காக ஒரு படைப்பாளி யைப் பற்றி மேம்போக்காகப் பேசுதல்) செய்கிறாரா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

 

வெகு சுலபம்:

 

  1. NAME-DROPPING செய்பவர்கள் உலகத்தரமான ஒரு படைப் பாளியைப் பற்றி இன்னொருவர் பேசியதற்குப் பிறகே அவரைத் தானும் படித்ததாகக் காட்டிக்கொள்வார் கள். அவர்களாக யாரையும் அறிமுகம் செய்யமாட்டார்கள்.

 

  1. தாம் படித்திருப்பதாகச் சொல்லும் படைப்பாளியி னுடையதாக பரவலாகப் புழங்கும் வாசகங்களையே மேற்கோள் காட்டுவார்கள்.

 

  1. சம்பந்தப்பட்ட படைப்பாளியின் புத்தகத்தைக் கையி லேந்தி ‘போஸ்’ கொடுப்பார்களே தவிர அவருடைய எழுத்தைப் பற்றி ஆழமாக எதையும் கூறமாட்டார்கள் (கூறத் தெரியாது). அயல்மொழி படைப்பாளிகள் விஷ யத்தில்தான் இப்படி என்றில்லை. பாரதியார், திருவள்ளு வர் போன்றவர்களின் விஷயத்திலும் இப்படித்தான்.

 

 

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு. முடிந்தவரைக் கற்போம். மற்றவர்களின் அறிவை மதிப்போம். போலி யாக மெத்தப்படித்த அறிவாளியாகக் காட்டிக்கொள்வது மெய் அசட்டுத்தனத்தைக் காட்டிலும் அபாயகரமானது.

 

 

***   ***

நிர்பயா கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான நிகழ்வு ஆறாத்துயரம். நேற்றோ, இன்றோ நாளையோ ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவருக்கு நீதி கிடைக்கவில்லையா னால் அது குறித்துக் கண்டனம் எழுப்பலாமே தவிர, நிர்பயா மேல்சாதியினப் பெண் என்றும்(இது உண்மை யல்ல) அதனால்தான் அவருக்கு நீதி கிடைத்தது என்றும் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய்’ திரும்பத்திரும்ப நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையைப் புறந்தள்ளிப் பேசுவது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

ஆபாசமாக எழுதுகிறார் என்று ஓர் எழுத்தாளரைக் கட்டங்கட்டி ‘ஆள்காட்டிக்’ கொடுப்பதாய் அந்த எழுத்தா ளரின் ஒரு புதினத்தில் இடம்பெறும் பகுதிகளை ‘out of context’இல் நிலைத்தகவலில் பகிர்வதும், அப்படிப் பகிர் வதன் மூலம் ஆபாசமெனக் கட்டங்கட்டிய அதே பகுதிகளைத் தன் நிலைத்தகவலில் தந்து அதைப் பலரும் படிக்கச் செய்வதும் என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சாதி பார்த்து கட்டங்கட்டி அடிப்பது என்னவிதமான சமூகப்பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

***  ***

 

 

2006இல் வெளியான படம் THE PURSUIT OF HAPPYNESS. அதில் அற்புதமாக நடித்திருப்பார் வில் ஸ்மித். 2022 சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டு ஆஸ்கார் விருது வாங்கும் முன் விழாவில் நகைச்சுவை என்ற பெயரில் (stand-up comedy) வில் ஸ்மித்தின் புற்றுநோய் வந்த மனைவியின் தோற்றத்தை(மொட்டை யடித்துக் கொண் டிருக்கிறார்) கேலி செய்து ஏதோ கூற நேரே மேடைக்கு சென்று அந்த மனிதரை அடித்துவிட்டார் வில் ஸ்மித்.

 

பின்னர் விருது வாங்கியதற்கான தன் ஏற்புரையில் தன் நடத்தை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவருடைய ஏற்புரை அத்தனை ஆழமானது; ஆத்மார்த்தமானது.

 

ஆனால், எல்லோரும் வில் ஸ்மித் வன்முறையைப் பிரயோகித்துவிட்டார் என்று குற்றஞ் சாட்டத்தொடங்கி விட்டார்கள்.

 

நல்ல வேளை, இருவரும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்த வர்கள் என்பதால் நிறவெறி என்பதாய் இந்த நிகழ்வு பகுக்கப்படும் அபாயம் நேரவில்லை.

 

வார்த்தைகளின் வன்முறையையையும் வன்முறைச் செயல்களில் ஒன்றாக ஏன் கணக்கிலெடுத்துக்கொள்ளக் கூடாது?

 

Series Navigationஎமிலி டிக்கின்சன் கவிதைகள் – 31‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்