சொல்லின் ஆட்சி

 

 

சத்யானந்தன்

 

ஒரு உறைவிடத்தில்

அமைவதோ

அதை நீங்குவதோ

சொற்களே

தீர்மானிக்கும்

 

அதிகார முத்திரையுள்ள

சொற்கள்

பெரிய வளாகங்களை

எழுப்பி விடுகின்றன

 

அவற்றுக்கு அன்னியமான

விளிம்பு நிலையினனுக்கு

கூரை என்னும்

கொடுப்பினை இல்லை

 

சொல்லாடல்கள் சூழ

சுவர்கள் எழும்பியதென்றே

குகைகளை

அடைந்தான்

சித்தார்த்தன்

 

ஒரு துடைப்பக் குச்சி

சணல் துண்டு

உடுப்புக்களாய் இருந்த

துணிகளின் துணுக்குகள்

காகம் அறியும்

மனித வசிப்பில் எதைக்

கவ்வி எடுத்தால்

கூடு அமையுமென்று

Series Navigation‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?