சோளக்கொல்லை பொம்மை

Spread the love

க.வெள்ளிங்கிரி.

கவிழ்ந்த பானைத் தலையில்

கண் காது வைத்து வரைந்த முகம்!

நிறம் இழந்த சட்டை அணிந்து

நிமிர்ந்து நின்றான் நித்திரையற்று!

பொம்மை வடிவில் பூமியைக் காத்தவன்

போன இடம் தெரியவில்லை!

அவன் இருந்த இடமெல்லாம்

திருஷ்டி பொம்மைகள்

திரண்டு நிற்குது வீடுகளில்!

Series Navigationமோதிடும் விரல்கள்புத்தாண்டு பிறந்தது !