ஜெயகாந்தன்

 

ஜோஸப்

யாருக்காக அழுதான்?

 

சிட்டியை

சமூகம் எங்கெல்லாம் துரத்தியது?

 

கங்கா மணமாகாமல்

கோகிலா மணவாழ்வில்

எந்த அகழிகளைத்

தாண்டவில்லை?

 

சாரங்கனின் கலையும்

ஹென்றியின் தேடலும்

எந்த முகமூடிகளை

நிராகரித்தன?

 

இவர்கள்

நம் நெஞ்சில்

இன்றும் வாழ

உயிராய் ஜெகேயின்

புனைவு வெளி

 

“என்னைக் கொல்வதும் – கொன்று

கோவிலில் வைப்பதும்

கொள்கை உமக்கென்றால்- உம்முடன்

கூடியிருப்பதுண்டோ?”

அவர் கேள்வி

விழிப்புக்கு விதை

 

தமிழில் இலக்கியம்

இலக்கியத்தில் ஜெயகாந்தன்

இணை பிரியாதவர்

என்றும் அழியாதவர்

 

Series Navigationமருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு