ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி

ஹுஸைன் இப்னு லாபிர்

 

ஐயா வணக்கம்
தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன்.

பாரதத்தில் உதித்ததனால்

பா ரதம்போல் கவி பொழியும்

பெயர் தனிலே ஜெயம் தாங்கிய

ஜெய பாரத பெருந்தகையே

 

அகிலத்துக்கும் அண்டத்துக்கும்

அணுவுக்கும் கருவுக்கும்

கிரகங்கள் விண்ணுளவி

கவி தொடுத்து விழங்க வைத்தாய்

 

சாளரத்து வழி தனிலே

திண்ணையிலே விழி வைத்து

ஈழத்து மாணவன் நான்

பெருந்தகையை அறிந்து கொண்டேன்

 

அடுக்கௌக்காய் உரை பொழிந்து

படம் வரைந்து விளக்கி வைத்த

ஆசானை வாழ்த்தவென

பேனாவை நானெடுத்தேன்

 

பெரியோரைப் பாரரிவார்

சிறியோனை யாரரிவார்

இருந்தாலும் உணர்வோடு

கடன் தீர்க்க விளைகின்றேன்

 

அணுவோடு உறவாடும்

பெருமனது உமக்கைய்யா

வாழ்த்துரைக்க வழிதேடும்

மனதோடு நானிங்கு

தினம் வாழ்த்தி உரைத்திடனும்

மனம் போற்றி புகழ்ந்திடனும்

பார் பார்த்து மகிழ்ந்திடனும்

உன் சேவை தொடர்ந்திடனும்

 

பெரு மனதில் சிறு இடத்தை

வாழ்த்துரையை வைப்பதற்கு

ஆசானை வேண்டி நின்றேன்

ஆதவனாய்ப் பார்க்கின்றேன்.

 

ஹுஸைன் இப்னு லாபிர்

மள்வானை

ஸ்ரீ லங்கா

Series Navigationஎன்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”