ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு

ஜே.பிரோஸ்கான்

மழலைகளின் சிரிப்புக்குப்
பின்னால் மறைந்து போன மழை.

அந்தப் பொழுது மழை மேகங்களால்
இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக
இரவாய் படர்தலாகுது.
மழையின் அறிவிப்பை
தவளைகள் பிரகடனம் செய்ய
மழையைத் தேடி
ஈசல் மற்றும் பட்சிகளின்
பயணம் ஆரம்பமாகுது.
பின்
பயிர்கள் சிரிக்க ஆயத்தமாக
குழந்தைகளும் துள்ளிக் குதிக்க
ஆவலாகுது.
எல்லா எதிர்பார்ப்புக்களையும்
சரி செய்த படி..
பெய்யத் தொடங்கியது மழைஇ
ஆராவாரமாய் மேலெழும்பும்
குழந்தைகளின் சிரிப்போடு.

 

சாயங்காலம் – தோப்பு – தென்றல்.

மொழியற்றுப் போன கனவொன்று
பிரதிபலிக்கிறது.
நிசப்த இரவுதனில்
விடியலை பின் கழற்றி
தன் இருப்பிலிருந்து வெளியேற்றுகிறது அது.
சாயங்கால மழைத்தூறலில்
யாரும் கண்டறியாதே
கவிதையொன்றை வியப்போடு பார்த்தபடி
கால்கள் நகர்கிறது.
அமைதிமிக்க ஒரு தோப்பைஇ
அதனைச் சுற்றியுள்ள தென்றலை
சுவாசிப்பதற்கென.

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !நீங்காத நினைவுகள் – 21