ஞாநீ

Spread the love

 

 

மீட்பரின் பாதங்களைக்

கழுவிக் கொண்டிருக்கிறேன்

மெசியா தான் இவர் என்று

நம்பிக் கொண்டிருக்கிறேன்

அவருக்கு பயந்து

ஓய்வு நாளில்

ஒன்றும் செய்வதில்லை

நியாத்தீர்ப்பில் மீண்டும்

சந்திக்க வேண்டியிருக்கும்

அவரை

இந்த விதை அழியப் போகிறது

என்று முன்பே அவர் சொன்னது

எங்களால்

புரிந்து கொள்ள முடியவில்லை

உங்களிடையே பிரிவினையை

ஏற்படுத்த வந்ததாக

அவர் கூறியது

மலையில் பட்டு எதிரொலித்தது

கடவுளைக் காண வேண்டுமா

எனக் கூறி என்னை

கடலில் அமிழ்த்திய

போது தான்

எனக்கு ஞானம் பிறந்தது

வார்த்தைகளற்ற மௌனத்தில் தான்

நாங்கள் நிறையக்

கற்றுக் கொண்டோம்

அவரை சிலுவையில்

அறைந்த போது

வெளிப்படுத்திக் கொள்ளாமல்

வேடிக்கைப் பார்த்தோம்

சீடர்களில் என்னை

மட்டும் மீண்டும்

உலகுக்கு அனுப்பிய

மனுஷகுமாரனை மன்றாடிக்

கேட்டுக் கொள்கிறேன்

இயேசுவின் கருத்துக்களையே

தஙகளுக்கு ஏதுவாக

மாற்றி வைத்திருக்கும்

மனிதர்களிடம் எப்படி

நீங்கள் வரப்போவதை

புரிய வைப்பேன்.

 

Series Navigationமுக்கோணக் கிளிகள் [5]ஆமென்