ஞானத்தின் ஸ்தூல வடிவம்

Spread the love

 

போதி மரம்

மட்டுமல்ல

பசுமை எங்கும் நிறைந்த

வனம் அது

 

இரையுண்ட

வேட்டை விலங்கு

மீத்திய

மானின் உடல்

 

ஒரு நாளுக்குள்

உயிர்ப்பை வண்ணமாய்க்

காட்டிய

பட்டாம்பூச்சிகள்

உதிரல்களாய்

 

தாவுவதும் நிலைப்பதும்

ஓன்றே

என்னும் குரங்குகள்

இயக்கமும்

 

காட்டாறு

தீட்டிய கூழாங்கற்களின்

மௌனமும்

 

மனிதனின் கலை

ஒரே ஒரு இடத்தில்

 

தலையில்லாமல்

தியானிக்கும் புத்த வடிவம்

 

அகம் அழிந்த நிலையின்

மிக அண்மையான

சித்தரிப்பாய்

 

சத்யானந்தன்

Series Navigationஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடுபசியாக இருக்குமோ…