ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா

This entry is part 22 of 39 in the series 4 டிசம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல்

ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது குறித்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது.பீர்முகமது அப்பாவின் பாடல்களைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சகோதரர்கள் சாகிர் அலி,பஷீர்,சாஜித் அகமது, ஹாமீம்முஸ்தபா முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட நண்பர்களும் எதிர்தரப்பில் சகோதரர் கெளஸ்முகமது,அஸ்லம்,ஷறபு உள்ளிட்ட நண்பர்களும் விவாதம் புரிகின்றனர். இதில் எனது சார்பாக எனக்குத் தென்பட்ட சில கருதுகோள்களை முன்வைக்கிறேன்.

1) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா என்பதை யாராவது மறுக்கமுடியுமா..(அவூது பில்லாஹி எனத்துவங்கி பிறகுமத்திக்க யா அறுஹமற் றாகிமீன் எனமுடியும் 225 பாடல்களின் 2206 வரிகள்- இது உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை மொழிபெயர்ப்பாகும்.)

2)இஸ்லாத்தின் அடிப்படைகளான அவ்வல் கலிமா ஷஹாதத்,99 இறைத்திருநாமங்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா,இஸ்முல் அக்ளம் பிஸ்மியின் தத்துவார்த்தவிளக்கம், தன்ஸுலாத் பிரபஞ்ச உருவாக்கம்,உயிரின்தோற்றம்,நபிமுகமது(ஸல்)வின்மாண்பு,ஆதம்நபி,நூஹூநபி,மூசாநபி,இபுராகீம்நபி,யூனூஸ்நபி,யூசுப்நபி,என நபிமார்களின் வரலாறு(பாடல்கள் 215 முதல் 225 முடிய) ஹதீஸ்மொழிகள்,என பல்வேறுவகைப்பட்ட இஸ்லாமிய மரபுகளை தமிழில் அற்புதமாக ஞானப்புகழ்ச்சியில் எடுத்துரைத்தது பீர்முகமது அப்பா என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா..

3)பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.இதனை ஓரளவாவது கற்றுணராமல் இந்த 48000 வரிகளில் இரண்டுவரிகளை மட்டும் எடுத்து வைத்து பீர்முகமது அப்பாவை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்..

4) எதிர்தரப்பு சகோதரர்கள் நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்,நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் என வரும் வரிகள் ஞானப்புகழ்ச்சியின் 118வது பாடலில் இடம்பெறுவதாகும். இதன் ஆழ்ந்த பொருளுணர வேண்டுமானால் ஆறாறுக்கப்பால் எனத்துவங்கும் காப்புப் பாடலிலிருந்து வாசித்து ஒவ்வொரு சொல்லாடல்களுக்கும் மெய்ப் பொருளுணர்ந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.எனவே விமர்சிக்கும் சகோதரர்கள் ஆறாறுக்கப்பால்,ஐபேரும் காணாமல்,முத்தோடு பவளம் பச்சை என வரும் தமிழ்சொற்றொடர்களின் வழியாக 117 பாடல்களுக்கும் பொருளுணர்ந்து 118 வது பாடலுக்கு வரும்போதுதான் அவ்வரிகளின் பொருள் விளங்கும்.வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு மனநிலைகளில் வாசித்துப்பாருங்கள்.இதுதான் வாசிப்பின் அரசியல்(politics of reading)அப்படியும் அவ்வரிகளின் பொருள் விளங்காமலோஅல்லது இஸ்லாமிய இறையியலுக்கு மாறுபட்டதாகவோ அவ்வரிகள் இருப்பதாக மீண்டும் நினைத்தால் சொல்லுங்கள். அதன் சூட்சுமப் பொருளை நீங்கள் விளக்கம் பெறலாம்.ஆனால் அதற்குமுன், முந்தைய 117 பாடல்களின் விளக்கங்களை ,அவற்றை நீங்கள் புரிந்து கொண்டவிதத்தை நீங்கள் சொல்லியாக வேண்டும்.

5)ஒற்றை வாசிப்பு முறைக்கு எதிரான பன்மைவாசிப்பை(multiplicity of meaning) உருவாக்கினால்தான்பீர்முகமதுஅப்பாபயன்படுத்தியிருக்கும் சக்தி,சிவன்,அங்கரன்,பஞ்சாட்சரம்,முகமாறு என அனைத்து யோக,பரிபாஷை சொற்களையும்,குறியீட்டு மொழிபற்றியும் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும்.இம்முறையியலை கையாண்டு பாருங்கள். பிடிபடவில்லையெனில் இதனையும் உரைமரபின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்வது மிக எளிதானது.

6) பீர்முகமது அப்பாவின் சில பாடல்களது பொருளை நெருங்க வேண்டுமானால் பழந்தமிழ் சங்க இலக்கியம், 2-ம் நூறாண்டில் துவங்கும் வள்ளுவம் போன்ற சமண பெளத்த இலக்கியம்,7ம் நூற்றாண்டிற்கு பிறகான சைவ, வைணவ இலக்கியங்கள் வழியாக பல்சமயச் சூழல்தன்மையோடு பயணம் செய்ய வேண்டும்.

அரபு சொல்வரலாறு( அலிப், பே, லாம், ஹே, சீன், நூன், போன்றவை)அரபுமொழிச்சொற்கள்(தவக்கல்,தறஜாத்து,லவ்ஹு,ஷபாஅத்,அக்ல்,யகீன்,போன்றவை)அரபு மொழிக் கட்டமைப்பு(அவ்வல் அஹதாக நின்றமரம்/கொத்தாயிரங்கனியே ஹூ/துலங்கு ஷஹாதத்து,அத்தஹியாத்தும் மிக்கோர் புகழ்நபி சலவாத்தும் போன்றவை) தமிழோடு இணைத்து வாசித்து புரிந்திருக்க வேண்டும்.

இந்தியதத்துவமரபின் அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,வேத மறுப்புத் தத்துவங்களான சாங்கியம்,சாருவாகம்,உலகாயதம்,ஆசீவகம்,சித்தர்மரபு வாசித்திருக்கவேண்டும்.இஸ்லாமிய சட்டவியல் ஷரீஅத்,ஆன்மீகவியல் தரீகத்,ஹகீகத்,மஹரிபத்,வஹ்த்துதுல் உஜூத்,வஹ்த்துல்ஷுஹுத்,உலூஹிய்யத்,ருபூபிய்யத் இவற்றின் துணையின்றி பீர்முகமது அப்பாவின் சில பாடல்களை எப்படி பொருள் கொள்வீர்கள்… இவை அல்லாத மிக எளிமையான தமிழிலும் மனிதகுலம் முழுமைக்கும் பிரார்த்தனைபுரிகிற

பீர் முகமது அப்பாவின் இறை நேயம் வழி வெளிப்படுகிற மானுட நேயம் என்பது கொடுமுடி. இது குறித்து பிறிதொருதடவை பேசலாம்.

7) நாம் தொழுகை என்று தமிழில் குறிப்பிடுவதை சமணமரபின் திருவள்ளுவர் தெய்வம்தொழாஅள் என்பதாகவே பயன்படுத்தினார்.சைவமரபில் இது அடி தொழுதலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமணர்களும், சைவர்களும் பயன்படுத்தியதால் முஸ்லிம்கள் தொழுகை என்ற சொல்லை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா என்ன..

8) பீர்முகமதுஅப்பா தனது பாடலில் தேவர்குலசிகாமணியே என்றொரு சொற்றொடரை பயன்படுத்துகிறார்.எனவே கள்ளர், மறவர் இனமான தேவர்சாதியின் தலைவராக மட்டும் அல்லாஹ்வை பீர்முகமது அப்பா கூறிவிட்டார் என்று கூறுவது சரியாகுமா..எனவே ஒரு பாடல்பிரதியை பொருள்கொள்ளும் போது சூழல்சார்ந்த அர்த்தம்(contextual meaning)பல்பொருள்சார்ந்த அர்த்தம்(multiple meaning) என்பவையும் முக்கியமானவை. கவனத்தில் கொள்வீர்களா..

9)இன்னும் நியாயமான முறையில் உரையாடலைத் தொடர்ந்தால் குரானிய மொழியாடல்களை பொருள் கொள்ளுதல் உட்பட இன்னும் நிறைய விஷயங்களையும்பேசலாம்.பீர்முகமது அப்பாவின் பாடல்களுக்கு வகாபிகளின் சித்தரிப்பு மட்டுமல்ல ,

இந்துத்துவவாதிகளும்,மேற்கத்திய அறிவுஜீவிகளும் குரானிய மொழியாடல்களை எதிர்மறையாகவும், ஆபத்தானதாகவும் சித்தரிக்கும் முறையியலுக்கு எதிராக எப்படிப்பட்ட வாசிப்பை நாம் நிகழ்த்தவேண்டும் என்பதையும் கூட பேசலாம்.இதற்கு ஒற்றை அதிகாரத்தை வலியுறுத்தும் வகாபிய வாசிப்புமுறை உதவாது

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை

84 Comments

  1. குர்ஆன் யாருடைய விளக்கவுரையும் இல்லாமல் புரிந்து கொள்ளும் வகையிலேயே இறைவன் கொடுத்துள்ளான். பல இந்து மத அன்பர்கள் கூட குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை யாருடைய உதவியும் இல்லாமல் புரிந்து கொள்கிறார்கள்.

    இங்கு எப்பொழுதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பீர்அப்பா அவர்களின் மொழி பெயர்ப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? பல வசனங்களுக்கு அறிவியல் ரீதியாக இன்று புது விளக்கங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே தற்கால மக்களுக்கு புரியும் வகையிலேயே மொழி பெயர்ப்பு இருக்க வெண்டும். பீர் அப்பாவின் தமிழ் மொழி பெயர்ப்பை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழரிஞர் தேவைப்படுவார். சாமான்யனுக்கு மொழி பெயர்ப்பு விளங்க வேண்டுமே!

    // ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா..//

    தலைப்பே இணை வைத்தலை கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண மனிதராகிய பீர்அப்பா என்பவர் எழுதிய ஒரு சில கவிதைகளை எல்லாம் வல்ல இறைவனின் குர்ஆனோடு ஒப்பிடும் மடமையை என்னவென்பது?

  2. Avatar தங்கமணி

    ரசூலுக்கும் சுவனப்பிரியனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருமே குரானை விதந்தோத முயல்கிறார்கள். ஒருவருக்கு குரானிய மொழியாடல்களை அப்படியே பொருள்கொண்டால், அது ஒரு நாகரிக ச்முதாயத்தின் வேதமாக இருக்க முடியாது என்ற புரிதல் இருக்கிறது. சுவனப்பிரியனுக்கோ, அறிவியல் உண்மைகள் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டு அதன் இறை ஆதாரத்தை நிரூபித்து, அதன் எல்லா குரூர வசனங்களையும் மக்கள் ஏற்றுகொள்ளவைக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது.
    இரண்டுமே உதவாதவை. என்னதான் மறு வாசிப்பு, மறு மொழிபெயர்ப்பு, சூபி விளக்கம் அளித்தாலும், முகம்மது நபி உருவாக்கிய குரானை இறை புத்தகம் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரையில் அதனை பின்பற்றுபவர்களின் குருட்டுத்தனத்தை நீக்கமுடியாது.

  3. அவூது பில்லாஹி, மத்திக்க யா அறுஹமற் றாகிமீன் , அஸ்மாவுல் ஹுஸ்னா, இஸ்முல் அக்ளம் பிஸ்மி, தன்ஸுலாத், ஆதம்நபி, நூஹூநபி, மூசாநபி, இபுராகீம்நபி, யூனூஸ்நபி, யூசுப்நபி, ஹதீஸ், politics of reading, multiplicity of meaning, சக்தி, சிவன், அங்கரன், பஞ்சாட்சரம், அலிப், பே, லாம், ஹே, சீன், நூன், தவக்கல், தறஜாத்து, லவ்ஹு, ஷபாஅத், அக்ல்,யகீன், அவ்வல் அஹதா ஹூ, துலங்கு ஷஹாதத்து, அத்தஹியாத்தும் சலவாத்தும், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், வேத மறுப்பு, சாங்கியம், சாருவாகம், உலகாயதம்,ஆசீவகம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஹரிபத், வஹ்த்துதுல் உஜூத், வஹ்த்துல்ஷுஹுத், உலூஹிய்யத், ருபூபிய்யத். போதாக்குறைக்கு இதனைத் தமிழோடு இணைத்து வேறு வாசித்து புரிந்திருக்க வேண்டுமாம். எச். ஜி. ரசூல் என்ன சொல்ல நினைக்கிறாரோ? ஆயுள் தண்டனைக் கைதிகள், அடையாள வில்லையைத் தேய்த்து மெருகுபடுத்துவதுபோல் உலகத்தோடு ஒட்டாமல் துண்டாடிக்கிடக்கும் கோட்பாடுகளை மொழியோடு ஒட்டாத வார்த்தைகளால் தேய்த்து மெருகுபடுத்துகிறாரோ? வாசியறிந்தவனே இஸ்லாம் வாசியறியாதவன் காஃபிராகும். ஓயாத இஸ்லாம்வாசி உயர்மதிதனக்குள் நின்று… பாயாத கொம்பிரண்டும் பணிவுடன் இணக்கமானால் ஆசானுமவனேயாகும் அல்லாவுமவனேயாகும் என்று அத்வைதத்தைப் புகழ்ந்துரைத்த பீர்முகம்மது அப்பாவை பார்ப்பனீய மனோபாவமுள்ள ஒரு நல்ல தமிழ்ப் புலவர் என்பதற்கு மேலாக ஒரு நல்ல மனிதராகவும் கொள்ளலாம். இஸ்லாமிற்கும் இணை வைத்தலுக்கிமிடையிலான ஒரு விவாதப் புள்ளியாக அவரை மாற்ற நினைப்பது எப்படி சரியாகுமோ தெரியவில்லை. பிரச்சினை, பீர்முகம்மது அப்பா சித்தர் மரபைச் சார்ந்தவரா, நாயன்மார்களில் ஒருவரா என்பதுதான்.

  4. Avatar லறீனா அப்துல் ஹக்

    சகோ. தங்கமணி அவர்களுக்கு,

    //முகம்மது நபி உருவாக்கிய குரானை இறை புத்தகம் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரையில்// என்ற உங்கள் கூற்று தவறானது. முஹம்மது நபி எழுத வாசிக்கத் தெரியாதவராக இருந்தார் என்ற வரலாற்று உண்மை உங்களுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. மத வெறுப்புணர்வுக்கு அப்பால், காய்தல் உவத்தல் இன்றி சக சமுதாயத்தவரின் சமயம் குறித்தும் தேடித் தெரிதல் வீண் கசப்புணர்வுகளை அகற்ற உதவலாம்.

    குறிப்பு: “வெறி” இருப்பது மேற்படி இருவரின் கருத்துக்களிலா உங்கள் எழுத்துக்களிலா என்பதை இம்மூன்றையும் ஒருங்கே படிப்பவர்களாலும் புரிந்துகொள்ள முடியும் என்பதை மறவாதீர்கள், சகோதரரே.

  5. Avatar தங்கமணி

    சகோதரி,
    முகம்மது நபி உருவாக்கியது குரான் என்பது முஸ்லீம் அல்லாதவர்களின் கருத்து. அல்லாஹ் என்ற கடவுள் அனுப்பியது என்பது முஸ்லீம்களின் கருத்து. அவ்வளவுதான். குரானை முகம்மது நபிதான் உருவாக்கினார் என்றுதான் நான் கருதுகிறேன். குரானை இறைவன் அனுப்பினார் என்று நான் கருதினால் நான் முஸ்லீமாகத்தானே இருப்பேன்?

    மேலும் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் கவிதை பாடுவது ஒன்றும் அற்புதமான செயலல்ல. தமிழகத்திலேயே ஐந்து வயது குமர குருபரர் அதுவரை ஊமையாக இருந்து பிறகு வரகவியாக பாடியது வரலாறு. அதுவும் முகம்மது கதீஜா பிராட்டியின் தலைமை வியாபாரியாக இருந்தவர். பல நாடுகளுக்கு கதீஜா பிராட்டி சார்பாக சென்று வியாபாரம் செய்தவர். அவருக்கு பொது அறிவு கிடையாது, எழுதப்படிக்கத்தெரியாது என்பது நம்பிக்கை கொண்ட இஸ்லாமியரின் கருத்து மட்டுமே.

    உங்கள் நம்பிக்கைகள் உங்களுடன் இருப்பதில் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் அதனை எல்லோரும் ஒத்துகொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் எனக்கு வெறுப்புணர்வு இருக்கிறது என்று நீங்கள் கூறுவதுதான் ஆபத்தானது.

    புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்

  6. தங்கமணியே, இஸ்லாமிய சார்புக் கருத்தாளர்கள் சகோதரரே என்று விளிப்பதும் தாங்கள் குரூரவசனம் குருட்டுத்தனம் வெறித்தனம் என்றெல்லாம் எழுதி விட்டு இதைப் புரிந்து கொள்ள மறுப்பது ஆபத்தானது என்று குறிப்பிடுவது சமூக மறுமலர்ச்சியையும் மனித நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவுமென்று கருதுகிறீர்களா? உங்களால் இதை புரிந்து கொள்ள இயலாதென்பது என்னுடைய நம்பிக்கை.

  7. Avatar தங்கமணி

    இஸ்லாமிய சார்பு கருத்தாளராக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எல்லா மனிதர்களையும் சகோதரர்கள் என்று விளிப்பதில் என்ன தவறு இருக்கிறது?

    நான் குரூர வசனம், குருட்டுத்தனம் என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகள் செய்யும் அழிவு வேலைகளுக்கு அவர்கள் குரானின் குரூர வசனங்களை ஆதாரமாக சொல்வதாலேயே. அவை அப்படிப்பட்ட குரூர வசனங்கள் இல்லை என்று கருதினால், நீங்கள் பேச வேண்டியது என்னிடம் அல்ல. அவர்களிடம்தான்.

    நீங்களோ நானோ கண்களை மூடிக்கொண்டுவிட்டால், அந்த நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதாக ஆகிவிடாது.

    அவை நடக்கின்றன என்று நான் சொல்வதாலேயே நான் சமுக மறுமலர்ச்சியையும், மனித நல்லிணக்கத்தையும் தடுக்கிறேன் என்றா சொல்லமுடியும்?

  8. தங்கமணி!

    //நான் குரூர வசனம், குருட்டுத்தனம் என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகள் செய்யும் அழிவு வேலைகளுக்கு அவர்கள் குரானின் குரூர வசனங்களை ஆதாரமாக சொல்வதாலேயே. அவை அப்படிப்பட்ட குரூர வசனங்கள் இல்லை என்று கருதினால், நீங்கள் பேச வேண்டியது என்னிடம் அல்ல. அவர்களிடம்தான்.//

    மாலேகான் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, எ;னறு இந்தியாவில் முன்பு குண்ட வெடிப்பு நடந்தவுடன் உடனே முஸ்லிம்களை எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்தீர்க்ள். உளவுத் துறையே ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற புனைப் பெயரில் போலி ஈமெயில்களையும் உலவ விட்டது. முடிவில் இதனை செய்தது யார்?

    ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான ஆபிஸரின் முயற்ச்சியால் இந்துத்துவ வாதிகள் வரிசையாக கைதானார்கள். மும்பை துப்பாக்கி சூட்டை காரணமாக்கி அந்த நேர்மையான அதிகாரியையும் கொன்று விட்டனர் படுபாவிகள். இங்கு இந்துத்வ வாதிகள் என்றால் வெளி உலகில் மொசாததும், சிஐஏவும் அந்த காரியத்தை செய்கின்றன. ஒரு முறை ஈராக்கிய ராணுவ உடையில் சியா முஸ்லிம்களை இரண்டு பேர் கண்மூடித்தனமாக கொன்றனர். அவர்களை கிராம மக்கள் பிடித்து விட்டனர். முடிவில் அந்த உடைக்குள் இருந்தது நேட்டோ படையினர்.

    சியாக்களையும் சன்னிகளையும் மோத விட்டு ‘பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்று மேலும் ஒப்பந்தை நீடிக்கவே இத்தகைய கொலைகள்.

    ஒரு சில முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்பாவிகளை கொல்வதும் நடக்கிறது. இதை ஒட்டு மொத்த சமூகமும் கண்டிக்கிறது. பாபரி மசூதி இடிப்புக்கு முனனால் இந்தியாவில் முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டதில்லை. எனவெ இதற்கெல்லாம் மூல காரணம் அத்வானியே!

    சில முஸலிம்கள் அப்பாவிகளை கொன்று விட்டு குர்ஆன் வசனங்களை காட்டுவதாக எங்கு படித்தீர்கள்? அந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் போர்க் களங்களிலே சொல்லப்பட்டவை என்று முன்பே விளக்கியிருக்கிறேன். இதை விட குரூரமான வசனங்களை மகாபாரதத்தில் இருந்தும், பைபிளிலிருந்தும் என்னால் எடுத்துக் காட்ட முடியும்.

    ஒரு சில இந்துக்கள் குண்டு வைத்ததால் மொத்த இந்துக்களையும் யாரும் குறை சொல்வதில்லை. அவர்களின் வேதங்கள்தான் காரணம் என்றும் சொல்வதில்லை. ஏனெனில் இந்த காரியத்தை செய்தவர் வேதம் படித்த பிரக்யாசிங்,அசிமானந்தா, புரோகித் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

  9. Avatar காவ்யா

    தங்கமணி நன்றாக வலை விரிக்கிறார். அதில் இசுலாமியர் சிலர் விழுகிறார்கள்.

    நான் இசுலாமியன் அன்று. எனக்கு இக்கட்டுரையில் சொல்லப்படும் மொழிபெயர்ப்பாளரைப்பற்றி யாதொன்றும் தெரியாது. நிற்க. தங்கமணியின் கூற்றுக்களுக்கே வருவோம்.

    தங்கமணி,

    இக்கட்டுரைக்கும் இன்றைய மத அரசியலுக்கும் தொடர்பில்லை. இசுலாமியரின் புனித நூல் உருவாக்கப்பட்ட போது நீங்கள் சொல்லும் ஜிஹாதிகள் கிடையா. எனவே இக்க்கட்டுரைப்பொருள் இசுலாமியரின் புனித நூலைப்பற்றியும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப்பற்றியும் மட்டுமே.
    அதன்படி,
    இந்நூல் எழதப்படவில்லை. வாங்கப்பட்டது இறைவனிடமிருந்து. வாங்கியவர் மறைத்தூதர் எனவழைக்கப்படும் முஹம்மது நபி. வாங்கி அவர் இசுலாமியருக்குக் கொடுத்தார். ஆக, அவரின் படிப்பு, பொது அறிவு, மற்ற உலகஞானம் – இவற்றுக்கெல்லாம் இங்கு வேலையுமில்லை; ஆராய்ச்சியும் இல்லை.
    அவரிடம் கொடுக்கப்பட்டதா? ஏன் கொடுக்கப்பட்டது? எவரால்? என்ற கேள்விகளுக்கானப் பதில்களை நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பாவிட்டால் போங்கள்.
    நீங்கள் நம்புகிறீர்கள் பகவத் கீதையை பகவானே அருளினார் குருச்சேத்திர போர்க்களத்தில். ஆழ்வார்கள் மனிதர்கள் அல்ல; திருமாலில் திருஅவதாரங்கள். இல்லையா? அதைப்போலவே இதுவும். அப்படியே விட்டுவிடுங்கள்.
    அப்படி நீங்கள் ஆராயத்துணிந்தால், அதை நீங்கள் ஒரு இந்து, அல்லது கிருத்துவர், அல்லது இசுலாமியர் என்ற இட்த்தில் நின்றுகொண்டு செய்ய முடியாது. அதில் காழ்ப்புணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமிருக்கும். உங்கள் மதத்தை உயர்வாக வைத்து பிறமதங்களை எப்படி இகழலாம் என்றே நோக்குவீர்கள். மதவாராய்ச்சிகள் பலகலைக்கழகங்களிலும் நடக்கின்றன. அவை நாகரிமானவை. உங்களால் முடியாது. நீங்கள் இந்துத்வா எழுத்தாளர்.

    ஆதிகாலத்தில் நாம் நிற்கிறோம். எனவே இக்காலத்திற்கு வரவேண்டாம். அப்படி வருவது நீங்கள் ஒரு உள்ளோக்கத்தோடு பின்னூட்டமிட்டு இசுலாமியரையும் இசுலாத்தை பொதுவரங்கில் இழிவுபடுத்தவே என்பதாகிறது.
    மதங்களையும் மத நூலகளின் மொழிபெயர்ப்புக்களையும் நாம் ஒரு கருத்தை அல்லது நான் என் கருத்தை இங்கு வைக்கலாம். அக்கருத்து இக்கட்டுரைக்கும் சாலப்பொருந்தும்.

    மறுமடலில்.

  10. தங்கமே என் மணியே, சுவனப்பிரியனுக்கு வெறி பிடித்திருப்பதாக தாங்கள் திருவாய் மலர்ந்தருளியதையே நான் சுட்டிக்காட்டினேன். தாங்களோ நான் இங்கே பேசவேண்டிய தேவையில்லை. அதையெல்லாம் அவர்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் என்று முற்று முடிவாகச் சொல்லி விட்டீர்கள். திருவாய்க்கு மறுவாய் இல்லை. எல்லா சமூக விரோதச் செயல்பாடுகளையும் கடந்து இங்கே மறுமலர்ச்சியும் மனித நல்லிணக்கவும் போற்றப்படவே செய்யும். இது பண்‘படுத்த’ப்பட்ட பூமி. நல்லவை மட்டுமே வளரும்.

  11. அருமையான விளக்கம் காவ்யா! ஒரு இஸ்லாமியர் கொடுக்கும் விளக்கத்தை விட மிகச் சிறப்பாக விளக்கமளித்துள்ளீரகள். வாழ்த்துக்கள்.

  12. எச். ஜி. ரசூலே,

    எல்லாவற்றிற்கும் மேலாக ஏதோவொரு சக்தியிருக்கிறது என்பது ஏகத்துவமும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக பல சக்திகள் இருக்கின்றன என்பது அநேகத்துவமும் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இதில், ஏகத்துவத்திற்குப் பதிலீடு அநேகத்துவம் என்ற பல்கலைக்கழக தேனீர் விடுதி விவாதங்களை அப்படியே சாப்டுட்டு (படிப்பதையெல்லாமா மனிதன் நம்பி விடுவான்?) தவறாகப் புரிதலுடன் யதார்த்த வாழ்வியலின் எல்லா அம்சங்களில் இதனை சோதனை செய்து பார்ப்பதை முறையியலாகக் கொண்ட இடத்திலிருந்துதான் இஸ்லாத்திற்குள் அநேகத்துவத்தை சோதனை செய்து பார்க்கும் முயற்சி நடந்தேறுகிறது.

    அதிகாரக் குவியலைப் பன்முகப்படுத்துவதென்பது சமூக நன்மை சார்ந்த விஷயம். ஒடுக்கப்பட்ட மக்களைப் பன்முகப்படுத்துவதென்பது இதற்கெதிரான விஷயம். இந்தி யர்கள் ஒன்றுபட்டு விடக்கூடாதென்று வெள்ளைக்காரன் விரும்பியதுபோல், தொழிலா ளர்கள் ஒற்றுமையை வெறுக்கும் முதலாளிபோல்.

    இந்தத் தவறானப் புரிதலிலிருந்துதான் சூஃபியிஸம் அநேகத்துவத்தை ஆதரிப்பதுபோன்ற தோற்றமும் உருவாகியிருக்கிறது. பீர் அப்பா போன்றவர்கள் உண்மையில் அநேகத்துவ நம்பிக்கையாளர்களில்லை. தான் இயற்றிய கவிதைத் தொகுப்பை பன்னாட்டு நிதி நல்கையுடன் நிகழ்ந்தேறும் நாட்டார் ஆய்வுகளுக்கான தரவுகளாகவோ குர்ஆனுக்கெதிராகவோ களம் இறக்குவார்களென்று அவர் நினைத்திருந்தால், பாவம், இந்த விளையாட்டிற்கே வந்திருக்கமாட்டார்.

  13. 1.குர்ஆனின் மொழிபெயர்ப்பே குர்ஆனுக்கு ஒப்பாகாது எனும் போது ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பதில் விவாதிக்க என்ன இருக்கின்றது?

    2.ஹெ.ஜி.ரசூலின் கருத்துகள் அவரது பார்வை அதைப் பற்றி விவாதிக்லாம் அதை விடுத்து இஸ்லாம் என்றாலே சிலர் வெகுண்டெழுவதும். சிலர் விளக்கம் கூறுவதுமான போக்கு எந்த புரிதலுக்கும் வழி வகுக்க போவதில்லை.

  14. Avatar தங்கமணி

    காவ்யா,

    //அவரிடம் கொடுக்கப்பட்டதா? ஏன் கொடுக்கப்பட்டது? எவரால்? என்ற கேள்விகளுக்கானப் பதில்களை நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பாவிட்டால் போங்கள்//

    அதனை நம்பாததால்தான் நான் முஸ்லீமாக இல்லை.

    நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். அது ஒரு நம்பிக்கை மட்டுமெ.

    அதனால்தான் சகோதரிக்கு விளக்கம் அளித்தேன்.

    /இசுலாமியரின் புனித நூல் உருவாக்கப்பட்ட போது நீங்கள் சொல்லும் ஜிஹாதிகள் கிடையா. /

    இது உங்களது அரைகுறை புரிதல். இஸ்லாமிய வரலாறு தெரியாமல் இஸ்லாமை பற்றி கருத்து கூறுவது ஆபத்தானது.

    // அதைப்போலவே இதுவும். அப்படியே விட்டுவிடுங்கள்.//

    நிச்சயமாக நான் அதனைத்தான் செய்கிறேன். ஒரு முஸ்லீமிடம் சென்று, கிருஷ்ணர்தான் பரம்பொருள். இது கூட தெரியாதா? வரலாற்றில் எல்லோரும் ஒத்துகொண்டார்களே. இதனை ஒத்துகொள்ளவில்லை என்றால் உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றா நான் எழுதினேன்?

    //மதவாராய்ச்சிகள் பலகலைக்கழகங்களிலும் நடக்கின்றன. அவை நாகரிமானவை. உங்களால் முடியாது. நீங்கள் இந்துத்வா எழுத்தாளர்.//

    அதெப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட். அதனால் உங்களால் இப்படித்தான் உளற முடியும் என்றா நான் எழுதுகிறேன். முத்திரை குத்துவதை விட்டுவிட்டு யார் சொல்கிறார்கள் என்பதை விட்டுவிட்டு என்ன சொன்னார்கள் என்பதை பாருங்கள்.


    அன்பு சகோதரர் குலச்சல் யூசூப்,

    உண்மைதான். இன்றைய ஜிகாதிகளை நல்வழிப்படுத்தியபின்னரே இஸ்லாமை பற்றி மற்றவர்களிடம் உயர்வாக பேசமுடியும்.

    அதுவரையில் என்னைப் போன்ற ஏராளமானவர்கள் நீங்கள் சொல்வதை எதுவும் நம்பப்போவதில்லை. ஒரு நாகரிகத்துக்காக நீங்கள் பேசுவதை கேட்டு புன்னகைத்து ஒதுங்கி போகலாம். அதனை பார்த்து நாம் மற்றவர்களை திருப்தி அடைய செய்துவிட்டோம் என்றும் நீங்கள் நினைத்துகொள்ளலாம்.

    • /அதனை நம்பாததால்தான் நான் முஸ்லீமாக இல்லை.?//

      நம்புவர்கள் நம்பட்டும் என்றுதான் சொல்கிறேன்.இக்கட்டுரையில் மையக்கருத்தென்ன? குரானின் தமிழ்மொழிபெயர்ப்பும் அதனைச்செய்த ஒருவரையும் பற்றியும்தானே? பின்னே, முஹம்மது நபியைப்பற்றி நீங்கள் பேசும் நோக்கமென்ன ? .

      /இசுலாமியரின் புனித நூல் உருவாக்கப்பட்ட போது நீங்கள் சொல்லும் ஜிஹாதிகள் கிடையா. /இது உங்களது அரைகுறை புரிதல். இஸ்லாமிய வரலாறு தெரியாமல் இஸ்லாமை பற்றி கருத்து கூறுவது ஆபத்தானது//.

      தங்கமணி என்ற பெயரில் எழுதுபவரே, உங்களுக்கு அரைகுறைப்புரிதல் மட்டுமில்லாமல், தனக்கு வசதியான ஆபத்தான புரிதலே இருக்கிறது.

      முஹம்மது நபி என்று குரானை வாங்கினாரோ அன்றிலிருந்துதான் இசுலாமிய வரலாறு தொடங்குகிறது. நாம் வரலாறு தொடங்கிய பின் நடந்த களத்தில் இந்த வாத அரங்கில் இல்லை. ‘வாங்குதல்’ நிகழ்ச்சி நடந்த களத்தில் மட்டுமே நிற்கிறோம். அம்மலைமீது நிற்கிறோம். வாங்குதல் நிகழ்ச்சியைப்பார்க்கிறோம். அங்கிருந்து நேராக தமிழ்நாட்டில் தற்காலத்துக்கு வருகிறோம். இங்கொருவர் குரானைத் தமிழில் மொழிபெயர்க்க அந்த தமிழ்மொழிபெயர்ப்பைப்பற்றி சிலர் சிலாகிக்கிறார்கள். அவற்றைப்படிக்கிறோம்.. இங்கு எப்படி இசுலாமிய வரலாறு வந்தேகுகிறது? சொல்லுங்கள் அம்மொழி பெயர்ப்பைப்பற்றி உங்களால் ஏதேனும் சொல்லவியலுமென்றால் சொல்லுங்கள்; அதுதான் இந்த வாதத்திற்கு புதுப்பார்வைகளை நல்கும். மற்றெல்லாம் குறும்புத்தனமான உள்ளோக்கமுடைய நச்சுச் சொற்களே.

      // அதைப்போலவே இதுவும். அப்படியே விட்டுவிடுங்கள்.//நிச்சயமாக நான் அதனைத்தான் செய்கிறேன். ஒரு முஸ்லீமிடம் சென்று, கிருஷ்ணர்தான் பரம்பொருள். இது கூட தெரியாதா? வரலாற்றில் எல்லோரும் ஒத்துகொண்டார்களே. இதனை ஒத்துகொள்ளவில்லை என்றால் உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றா நான் எழுதினேன்? மதவாராய்ச்சிகள் பலகலைக்கழகங்களிலும் நடக்கின்றன. அவை நாகரிமானவை. உங்களால் முடியாது. நீங்கள் இந்துத்வா எழுத்தாளர்.//அதெப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட். அதனால் உங்களால் இப்படித்தான் உளற முடியும் என்றா நான் எழுதுகிறேன். முத்திரை குத்துவதை விட்டுவிட்டு யார் சொல்கிறார்கள் என்பதை விட்டுவிட்டு என்ன சொன்னார்கள் என்பதை பாருங்கள். /////

      தங்கமணி

      இந்து மதம் தன்னை எவருக்கும் குத்தகைக்கு விடவில்லை. இந்து மதத்தைப்பற்றி விமர்சனம் செய்தவனெல்லாம் பெரியாரிஸ்டு என்றால், பலர் இப்படி ஆகிவிடுவார்கள். இராஜாஜியே முதல் துரோகியாவார் இந்துமதத்திற்கு. அவர் சொன்னார்: ஆண்டாள் என்று ஒரு ஆழ்வாரே கிடையாது. ஆண்டாள் என்ற பெண் பாவனையில் பெரியாழ்வார் செய்த டுபாக்கூர் வேலை.

      நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் -[ இசுலாமியர் எழுதவில்லை. கிருத்துவர் எழுதவில்லை.) பன்னெடுங்காலமாக பல இந்துக்கள் எழுதியவை. அவர்களெல்லாம் பெரியாரிஸ்டுகள்தானே ? ஏனென்றால் ஒரு இராமாயணத்தில் இராவணைன் தங்கையாக சீதை படைக்கப்படுகிறாள். உங்களுக்குப் பிடித்த கருத்துக்களையே மற்ற இந்துக்கள் கொள்ளவேண்டும்; இல்லையென்றால் பெரியாரிஸ்டுகள் என்ற நிலையை நீங்கள் தமிழ் ஹிந்து காமில் எழுதும்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது என் அபிப்ராயம்.
      .

      மதங்களைப்பற்றிய பட்டப்படிப்புகள், அவை பற்றிய ஆராய்ச்சிகள் உலகத்தில் பல பலகலைக்கழகங்களின் நடக்கின்றன. சென்னைப்பல்கலைக்கழகம் – வைணவத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களையும். கிருத்துவமதத்தில் இளங்கலைப்பட்டப்படிப்பையும் வைத்திருக்கிறது. அண்ணாமலை சைவ நெறியில் பட்டயப்படிப்பு வழங்குகிறது.

      அனைத்துமதங்களையும் சேர்த்து ஆராயும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உண்டு. இப்படிப்பட்ட படிப்புகளின் நோக்கம் “இந்த மதமே உயர்ந்தது; அந்த மதம் தாழ்ந்தது” என்பதை நிரூபிக்கவன்று. மாறாக, மனிதனின் பரிமாணவளர்ச்சியில் மதங்கள் எப்படித் தோன்றின? அவைகளின் அவசியம்? ஒரு மதம் ஏன் அந்தவிடத்திலேயே அம்மக்களிடையே தோன்றியது? தோற்றுவித்தவர்கள் என்ன நோக்கத்துடன் செய்தார்கள்? அன்னோக்கங்கள் நிறைவேறினவனா? அம்மதங்களின் இன்றைய நிலை? நல்லதும் கெட்டதும். எதிர்காலம்? அவை சொல்லும் இறைத்தத்துவங்கள்; மதங்களுக்குள்ளே என்ன வேறுபாடுகள் அத்ததுவங்களுக்குள்? என்றெல்லாம் தேடுவது; ஆராயவது; அவற்றை உலகோருக்குச் சொல்வது – இவைதான் இப்படிப்புக்கள்.

      பிறமதங்களின் இருப்பையே சகிக்கமுடியாதவன் அவற்றைப்பற்றி எங்ஙனம் தெரிந்து கொள்ள விழைவான்?

      முத்திரை குத்தாமல் நீங்கள் எழுதியவைகளை மட்டுமே பார்த்தால் எனக்குத் தெரிவது: நீங்கள் கட்டுரைக்குப் சற்றும்பொருந்தா கருத்துக்களை வைக்கிறீர்கள். அவற்றின் உள்ளோக்கம் என்னவென்றால், இசுலாத்தை எப்படியாவது ஒரு பொதுவரங்கில் இழிவுபடுத்த எதையாவது ஒன்றைச் சாக்காகப் பிடித்துத்தொங்கிக்கொண்டு எழுத முயற்சிக்கிறீர்கள் எனவஞ்சுகிறேன்.

      • Avatar தங்கமணி

        அன்பு சகோதரி காவ்யா,
        என்ன மலை மீது நிற்கிறோம். அங்கே நிற்கிறோம் இங்கே நிற்கிறோம் என்று எழுதுகிறீர்கள். எதாவது பொருளோடுதான் பேசுகிறீர்களா?

        அல்குரான் ஒரே ஒரு நாளில் இறக்கப்பட்டது அல்ல என்று கூட தெரியாமல் ஏதேதோ பேசுகிறீர்களே. வஹி வர ஆரம்பித்ததிலிருந்து தனது இறுதி நாள் வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. அந்த காலம் முழுவதும் முகம்மது நபி சாதாரண மத பிரச்சாரகரிலிருந்து அரேபியாவின் மன்னராக ஆகும் வரைக்கும் நடக்கிறது. எபப்டி நடக்கிறது எந்த போரின் போது என்ன வசனம் சொன்னார் என்பதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது பின்னால் எத்தனை ஜிகாதிகள் இருந்தார்கள், யார் யாரை கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்பதெல்லாம் இஸ்லாமிய வரலாறுதான். முதலில் இஸ்லாமிய வரலாற்றை எதாவது உங்கள் நண்பர் இஸ்லாமியர் கொடுதாலும் வாங்கி படித்து விட்டு வந்து எழுதுங்கள். உங்களுக்கு நான் இஸ்லாமிய வரலாறு பாடம் எடுக்க முடியாது.

        சரி இஸ்லாமை பற்றி பேசும் இடத்தில் எதற்கு இந்து புராணங்களை பற்றி பேசுகிறீர்கள்? எந்த இடத்தில் எந்த கட்டுரையில் எந்த கருத்து சொன்னாலும் ராமாய்னம், பெரியார் என்று இழுக்க வைக்கும் உங்களது உளவியல் காரணம் என்ன?
        எனக்கு இந்து மதத்தின் மீது எந்த ஒரு fixationஉம் கிடையாது. இருந்தால், “இந்து மதத்தை எப்படியாவது ஒரு பொதுவரங்கில் இழிவுபடுத்த எதையாவது ஒன்றைச் சாக்காகப் பிடித்துத்தொங்கிக்கொண்டு எழுத முயற்சிக்கிறீர்கள் எனவஞ்சுகிறேன்.” என்று நானும் எழுதியிருப்பேன். :-))

  15. Avatar தங்கமணி

    அன்புள்ள சுவனப்பிரியன்,
    நான் உங்களுக்கு சொல்ல ஏதுமில்லை. ஏனெனில் நீங்கள் இஸ்லாமிய செய்தி பத்திரிக்கைகளையும் பெரியாரிஸ்ட் பத்திரிக்கைகளையும் மட்டுமே படிக்கிறீர்கள். மற்ற செய்திகளையும் படியுங்கள்.

    சுன்னி பிரிவு தாலிபான் ஆப்கானிஸ்தானத்தை ஆண்டபோது அங்கிருந்த ஹசாராக்கள் என்னும் ஷியா பிரிவினரை ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவரை கொன்றது செய்தி. நேற்று கூட ஷியா பிரிவினரின்மசூதியில் தற்கொலை படையாக சென்று நூற்றுக்கணக்கானவரை கொன்றதும் செய்தி. இதெல்லாம் அமெரிக்கர் தற்கொலைப்படையாக சென்று ஷியாக்களை கொல்ல தற்கொலை செய்துகொள்கிறார் என்று கூட நீங்கள் எழுதலாம்.

    தாய்லாந்தில் பௌத்தர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அதற்கு அத்வானி காரணமா?

    பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அதற்கு யார் காரணம்?

    இந்தோனேஷியாவில் இந்துக்களை ஆயிரக்கணக்கில் முஸ்லீம் பயங்கரவாதிகள் கொன்றார்கள். கொன்றவன் நான் அல்லாஹ்வுக்காக கொன்றேன். அல்லாஹூ அக்பர் என்று கோர்ட்டில் குரான் வசனங்களை கூறுகிறான். இதற்கு யார் காரணம்? அத்வானியா?

    மலேசியாவில் இந்துக்களை கட்டாயமாக முஸ்லீமாக மதம் மாற்றுகிறார்கள். தவறாக அடையாள அட்டை என்னை முஸ்லீமாக சொல்கிறது என்று கேட்டால் கூட சிறை வைக்கப்படுகிறார்கள். இதற்கும் அத்வானி காரணமா?

    பாகீஸ்தானில் வாரந்தோறும் ஷியா பிரிவினர் மசூதிகளில் தற்கொலை படையாக ஜிகாதி இளைஞர்கள் சென்று குண்டாக வெடித்துகொள்கிறார்கள். இதுவும் அமெரிக்க படையா?

    நைஜீரியாவில் தினந்தோறும் கிறிஸ்துவர்களை கொல்கிறார்கள். குரான் உலகம் தட்டை என்றுதான் சொல்கிறது. அதன் படி சொல்லித்தராத மேற்கத்திய படிப்பை கொண்டுவராதே என்று போகோ ஹராம் (மேற்கத்திய படிப்பு ஹராம்) என்ற் அமைப்பு தினந்தோறும் நைஜீரிய கிறிஸ்துவர்களை கொத்துகொத்தாக கொல்கிறது. அதற்கும் அத்வானிதான் காரணமா? இவை அனைத்துமே குரான் வசனங்களை மேற்கோள் காட்டித்தான் செய்யப்படுகின்றன.

    எழுதிக்கொண்டே போகலாம்.

    ஒரு சில பெரியாரிஸ்டுகள் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் மற்றவ்ர்களை கொல்வதற்கு ஒரே காரணம் அத்வானிதான் என்று எழுதுவார்கள். நம்பி ஏமாறாதீர்கள்.

  16. தங்கமணி, நான் எதையுமே உங்களிடம் சொல்லவுமில்லை. அதை நம்ப வைப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவுமில்லை. மற்றவர்கள் எதை வாசிக்க வேண்டும் எதை வாசிக்கக்கூடாதென்றெல்லாம் நீங்கள் தர்மோபதேசம் செய்வதுபோல் யாரும் உங்களுக்கு உபதேசிக்கவுமில்லை. நாகரிகம் பேண வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் உங்கள் சொந்த விஷயங்கள். உங்களுக்குள் நீங்கள் எந்த மீறுதலையும் மேற்கொள்ளலாம். உங்களுக்குள் மட்டும். மற்றவர்களுக்குப் பதில் எழுதும்போது சற்று நயத் துடன் எழுதலாமே என்றுதான் சொன்னேன். உங்களை நல்வழிப் படுத்துவது என் நோக்கமுமில்லை. இந்தியாவில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கானக் காரணம் என்ன கேள்விக்கு மற்ற நாடுகளில் நடக்கவில்லையா என்று கேட்கும் உங்களது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மீண்டும், அரை குறை, உளறல் என்றெல்லாம் அர்த்தமுள்ள வார்த்தைகளை அடுக்குகிறீர்கள். இஸ்லாமிய வரலாற்றைச் சரியாகப் படிக்கச் சொல்கிற நீங்களும் படியுங்கள். படிக்கச் சொல்வது நல்ல விஷயம்தான். நம் முன்னோர்களைப்போல், படிக்காதே என்று சொல்வதுதான் தீங்கை விளைவிக்கும். மற்றவர்கள் அணி வித்த கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு, மனக்கதவுகளை அகலத் திறந்து வைத்து விட்டுப் படியுங்கள். மற்றவர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு அதிகமாக ஒன்றும் படிக்கத் தேவையில்லைதான். இருந்தாலும் படியுங்கள்.

  17. அன்புள்ள தங்கமணி!

    //சுன்னி பிரிவு தாலிபான் ஆப்கானிஸ்தானத்தை ஆண்டபோது அங்கிருந்த ஹசாராக்கள் என்னும் ஷியா பிரிவினரை ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவரை கொன்றது செய்தி. நேற்று கூட ஷியா பிரிவினரின்மசூதியில் தற்கொலை படையாக சென்று நூற்றுக்கணக்கானவரை கொன்றதும் செய்தி. இதெல்லாம் அமெரிக்கர் தற்கொலைப்படையாக சென்று ஷியாக்களை கொல்ல தற்கொலை செய்துகொள்கிறார் என்று கூட நீங்கள் எழுதலாம்.//

    இஸ்லாத்துக்கு அதாரிட்டி தாலிபான்கள் அல்ல என்று நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். இஸ்லாத்தை உரிய முறையில் அவர்கள் விளங்காதது பெரும் குறை.

    அடுத்து தற்கொலை குண்டு தாரியாக அமெரிக்கர்கள் வருவதில்லை. சில முல்லாக்களை டாலருக்கு விலை பேசிக் கொள்வார்கள். அதன்பின் சில இளைஞர்களை அமர்த்தி ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுக்கப்படும். மூளை சலவை செய்யப்பட்ட அந்த இளைஞன் தற்கொலை குண்டுதாரியாக மாறுகிறான. அமெரிக்கர்களின் ராணுவ தளம் நிரந்தரமாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நிலை கொள்வதற்கு இது அவசியம். இதை நானாக சொல்லவில்லை. பாகிஸ்தானிய ஆப்கானிய நண்பர்களின் வாக்கு மூலங்கள் இவை. அமெரிக்க பொருளாதாரம் படபாதாளத்துக்கு செல்வதால் அமெரிக்கர்கள் இங்கு நிலைகொண்டு சம்பளத்தை அந்நாடுகளிடமிருந்து பெறுவது அவசியமாகிறது.

    //தாய்லாந்தில் பௌத்தர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அதற்கு அத்வானி காரணமா?//

    இந்தியாவில் ஒரு சில இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை கையிலெடுத்ததற்கு பாபரி மசூதி தகர்க்கப்பட்டது காரணமா இல்லையா? அதற்குமுன் முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கையிலெடுத்திருக்கிறார்களா?

    அடுத்து பர்மாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்களை பல நாடுகளக்கும் அகதிகளாக விரட்டி அடித்தது யார்? நமது பக்கத்தில் இலங்கையில் பிரபாகரன் கும்பலால் தொழுத கொண்டிருநத முஸ்லிம்களை கோழைத்தனமாக கொன்றது யார்? இன்று வரை அகதிகளாக இலங்கையில் முஸ்லிம்கள் இருப்பதற்கு யார் காரணம்?

    கோத்ரா ரயில் விபத்தை தான் தேர்தலில் ஹிந்துக்களின் ஓட்டை அள்ள வேண்டும் என்ற சுயநலத்தால் முஸ்லிம்களின் மீது பழியை போட்டு கொன்று குவித்தது யார்?

    //பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அதற்கு யார் காரணம்?//

    எந்த கிறித்தவரையும் அங்கு கொல்லவில்லை. தனி நாடு கேட்டு போராடி வரும் முஸ்லிம்களை ராணுவம் கொல்கிறது. அதற்கு பதிலடியாக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள. அடுத்து தற்போதய எந்த ஒரு பிரசாரமும் இல்லாமல் வெகு வேகமாக பிலிப்பைனில் இஸ்லாம் பரவி வருகிறது. பிரபல சினிமா நடிகையின் சமீபத்திய பேட்டியை இன்று பதிவாக இட்டுள்ளேன். பாருஙகள்.

    http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_07.html

    //ஒரு சில பெரியாரிஸ்டுகள் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் மற்றவ்ர்களை கொல்வதற்கு ஒரே காரணம் அத்வானிதான் என்று எழுதுவார்கள். நம்பி ஏமாறாதீர்கள்.//

    பெரியாரிஸ்டுகள் ஏன் அபாண்டமாக பழி சுமத்த வேண்டும்? இருவருமே இந்துக்கள்தானே! மோடியும் அத்வானியும் செய்த அட்டூழியங்களுக்கு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். மோடி ஆட்சியை விட்டு இறங்கட்டும். அதன்பிறகு பாருங்கள் எவ்வளவு உண்மை வெளி வருகிறது என்று.

    பாகிஸ்தானிய தீவிரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்ட இர்ஸத் ஜஹானின் என்கவுண்டர் போலீசாரால் நடத்தப்பட்ட நாடகம் எனறு தற்போது தீர்ப்பு வெளியாகியிருப்பதை பார்த்தீர்களா? பொறுங்கள் இன்னும் இருக்கிறது.

  18. Avatar தங்கமணி

    அன்பு சகோதரர் குளச்சல், மு யூசூப்

    ஒன்றும் ஆழ படிக்காமல் இருந்தபோது காவ்யா அவர்களை போலத்தான் எழுதி வந்தேன். பல புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் படித்துவிட்டுத்தான் இப்போது சொல்லுகிறேன்.

    மற்ற நாடுகளை குறிப்பிட்டதன் காரணம், இது ஒரு பொதுவான விஷயம் என்பதை குறிக்கவே. இந்தியாவில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு காரணத்தை நீங்கள் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிக்கலாமா?

  19. தங்கமணி!

    // குரான் உலகம் தட்டை என்றுதான் சொல்கிறது. அதன் படி சொல்லித்தராத மேற்கத்திய படிப்பை கொண்டுவராதே//

    இது என்ன புது கதை. பூமி தட்டையாக இருப்பதாக குர்ஆனில் எங்கு பார்த்தீர்கள்?

    50:7 – and the earth we had spread it out and set thereon firm mountains.
    பூமியை நீட்டினோம் -குரஆன் 50:7
    ‘இதன் பின்னர் பூமியை விரித்தான்’ -குர்ஆன் 79:30

    மேற்கண்ட வசனத்தை பார்த்து விட்டு நீங்கள் பூமி தட்டையாக உள்ளதாக குர்ஆன் சொல்வதாக விளங்கியிருக்கிறீர்கள். இதன் விளக்கத்தை இனி பார்ப்போம்.

    ‘பூமியை விரித்தான்’ என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் ‘தஹாஹா’ என்ற சொல் ‘தஹ்வு’ என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு ‘விரித்தல்’ என்ற ரீதியில் பொருள் கொள்ள வெண்டும். அரபு இலக்கணத்தின் படி இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.

    பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்’
    -விஞ்ஞானி ஹப்பிள்.

    இதைத்தான் இறைவனும் ‘பூமியை விரித்தான்’ அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!

    ‘பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ‘ என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!

    இந்த வசனம் அறிவியலை உண்மைபடுத்துகிறதா? அல்லது பொய்ப்படுத்துகிறதா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

    //எபப்டி நடக்கிறது எந்த போரின் போது என்ன வசனம் சொன்னார் என்பதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது பின்னால் எத்தனை ஜிகாதிகள் இருந்தார்கள், யார் யாரை கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்பதெல்லாம் இஸ்லாமிய வரலாறுதான்.//

    பல தெய்வங்களை விட்டு ஒரு தெய்வத்தை வணங்குங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக முகமது நபியையும் அவரது தோழர்களையும் மெக்காவிலிருந்து அடித்து விரட்டினார்கள். மதினாவில் சென்று வாழ முற்படும் போது அங்கும் படை திரட்டி கொல்ல வந்தார்கள். தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தற்காப்பு யுத்தம் நடத்தினர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போரிடுவது வன்முறையா?

  20. Avatar தங்கமணி

    அன்பு சகோதரர் சுவனப்பிரியன்.

    //இதைத்தான் இறைவனும் ‘பூமியை விரித்தான்’ அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
    //
    இல்லை. ஹப்பிள் சொல்வது பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போவதை பற்றி. நீங்கள் சொல்வது பூமியை பற்றி. ஜெயினுலாபுதீன் பூமிதான் முதலில் ஆண்டவனால் படைக்கப்பட்டது. பிறகுதான் வானம் படைக்கப்பட்டது என்று சொல்கிறாரே. பிரபஞ்சம் உருவாகி 10 பில்லிய்ன வருடங்களுக்கு பின்னர்தான் உலகம் உருவாகிறது என்று அறிவியல் சொல்கிறது. இதனை ஒத்துகொள்வீர்களா? அல்லது இதனையும் பிரபஞ்சம் பூமியை இரண்டையும் போட்டு குழப்புவதுபோல குழப்பி பதில் சொல்வீர்களா?

    //மேற்கண்ட வசனத்தை பார்த்து விட்டு நீங்கள் பூமி தட்டையாக உள்ளதாக குர்ஆன் சொல்வதாக விளங்கியிருக்கிறீர்கள். இதன் விளக்கத்தை இனி பார்ப்போம்.//

    பூமி தட்டை அது உருண்டையாக இல்லை என்று குரான் சொல்கிறது என்று நான் சொல்ல்வே இல்லை. போகோ ஹராம் என்ற அமைப்பு இப்படி சொல்கிறது என்றுதான் நான் சொன்னேன். படியுங்கள்.

    நான் சொன்னது இதுதான்.

    //நைஜீரியாவில் தினந்தோறும் கிறிஸ்துவர்களை கொல்கிறார்கள். குரான் உலகம் தட்டை என்றுதான் சொல்கிறது. அதன் படி சொல்லித்தராத மேற்கத்திய படிப்பை கொண்டுவராதே என்று போகோ ஹராம் (மேற்கத்திய படிப்பு ஹராம்) என்ற் அமைப்பு தினந்தோறும் நைஜீரிய கிறிஸ்துவர்களை கொத்துகொத்தாக கொல்கிறது. அதற்கும் அத்வானிதான் காரணமா? இவை அனைத்துமே குரான் வசனங்களை மேற்கோள் காட்டித்தான் செய்யப்படுகின்றன.
    //

    என்னிடம் விளக்க தேவையில்லை.
    எனக்கு தேவையில்லை. நீங்கள் பூமி உருண்டை இல்லை. அது உருளை, அது முக்கோண்ம் என்று வேண்டுமானாலும்வைத்துகொள்லுங்கள் எனக்கு கவலைஇல்லை. இந்த போகோஹராம் அமைப்பின் மனித்ரகளிடம் போய் சொல்லுங்கள். அவர்கள் உங்களை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை, மேற்கத்திய படிப்பை படிக்கும் கிறிஸ்துவர்களை அதற்காக கொல்லவேண்டாம் என்றாவது சொல்லுங்கள்.

  21. (இந்தியாவில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு காரணத்தை நீங்கள் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிக்கலாமா?) ஓ, ஆரம்பியுங்களேன்! இருக்கவே இருக்கிறது, உங்களிடம் மற்றவர்களைக் கொச்சைப்படுத்துவதற் கான சொற்கள். மனிதர்களை இழிவுபடுத்துவதற்கு நீங்கள் சார்ந்துள்ள சிந்தனைகள் பல்வேறு வகைமாதிரிகளைக் கற்றுத் தந்திருக்கும் அல்லவா? அங்கிருந்தே தொடங்குங்கள், உங்கள் உன் மதமா என் மதமா ஆய்வை. இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் தேவையில்லை; சொல்லப்போனால் அறிவுகூட தேவையில்லை; வெறித்தனம் ஒன்றே போதும் அல்லவா? விரும்பினால், ஆரியர் வந்தேறிய காலத்திலிருந்தும் ஆரம்பியுங்கள். மதத்தைக் கடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் போய்ச் சேருகிற இடம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் என்பதை நான் புரிந்து கொண்டிருப்பதால் என்னை அதில் இணைத்துக்கொள்ள வேண்டாம். மனதளவிலும் நான் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழுகிறேன் அய்யா!

  22. Avatar காவ்யா

    தங்கமணி!
    இக்கட்டுரையின் தலைப்பே ஒரு கேள்விதான். மொழிபெயர்ப்பாளர் குரானை மொழிபெயர்ப்பதை மட்டும் செய்யாமல் தனக்குத்தெரிந்த இந்து ஞான மரபையும் சேர்த்துவிடுவதால் பிரச்சினையாகிறது என்று இக்கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. எனவே இங்கு இந்து மதமும் இருக்கிறது.
    உங்கள் நோக்கம் இக்கட்டுரையின் மையக்கருத்திலிருந்து விலகி, இசுலாமியர்களோடு கட்டுரைக்கொவ்வா வாதம் புரிவதே. அஃதில் உள்ளோக்கம் இருக்கிறது என்பதே என்னச்சம். வாதம் புரிபவன் யார் என்பதைப்பொறுத்தே உள்ளோக்கமுண்டா இல்லையா என்பது பெறப்படும். உங்களுடன் இசுலாமியர் வாதம் செய்து உங்களுக்குத் தக்க பதில்களை அவர்கள் தந்து பின்னூட்டங்கள் வேறுதிசையில் இழுத்துக்கொண்டு போவதைப்பற்றி எனக்கு யாதொன்றுமில்லை. எனவே தொடருங்கள்.
    மொழிபெயர்ப்பைப்பற்றி உங்களால் ஒன்றும் சொல்லவியலவில்லை.
    கட்டுரை திண்ணையில் போடப்பட்டிருக்கிறது. திண்ணை இசுலாமியருக்கு மட்டுமான கிளப் அன்று. எனவே எவரும் எக்கட்டுரையின் கருத்துக்களைப்பற்றிப் பேசலாம்.
    அதன்படி –
    என் பொதுக்கருத்து யாதெனில், மறை நூல்கள் மொழிபெயர்த்தல் என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை போன்றது. அம்மொழிபெயர்ப்பிலூடே வியாக்யாணங்கள் தேவையில்லை. வியாக்யாணங்கள் தனியே எழுதப்படலாமே தவிர மொழிபெயர்ப்பில் கூடாது.
    விவிலியம் மொழிபெயர்ப்பு அப்படியே. எனவே அஃது அவர்களின் புனித நூல். எப்படி எப்படி எழுதப்பட்டதோ அப்படி அப்படியே அது தமிழில் தரப்பட்டிருக்கிறது. செய்தவர் ஒரு பழுத்த தமிழ்ப்புலவர். ஆனால் அவரின் நோக்கம் தன் புலமையை உலகோருக்குப் பறைசாற்றவதன்று. அதுகொண்டு அவர் பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. தனித்தமிழே உயர்வு எனச்சொல்லிக்கொண்டு தமிழறிஞர்களுக்குமட்டுமே உகந்த மொழிபெயர்ப்பையும் செய்யவில்லை. மொழி அவருக்கு ஒரு பொருட்டேயில்லை. விவிலியத்தை மாறாமல் அப்படியே தமிழருக்குத்தருவதும், அத்தமிழர் அனைத்துத்தமிழராகவும் இருக்கவேண்டுமெனொபதுமே அவர்தம் நோக்கங்களாகும். அவற்றில் அவர் மாபெரும் வெற்றி பெற்றார். ஒவ்வொரு தமிழ்க்கிருத்துவரும் ஒரே மொழிபெயர்ப்பைத்தான் தேவாலாயங்களிலும், இல்லங்களிலும் வாசிக்கின்றனர் இணைகின்றனர்.
    இந்துக்கள் இதைச் செய்யவில்லை. அவசியமுமில்லை. தமிழ் இந்துக்களின் மத நூல்கள் தமிழிலேயே யாக்கப்பட்டிருப்பதாலே. வைதீக இந்து மதவாதிகள் தம் நூல்களை (வேதங்கள் போன்று) மொழிபெயர்க்கவில்லையென்று நான் சொல்லமாட்டேன். மாறாக, செய்ய விரும்பவில்லையென்றுதான் சொல்வேன். காரணம், வடமொழியில்தான் அவை வாசிக்க அல்லது ஓதப்படவேண்டும்; இல்லையென்றால், பலனில்லை. அம்மொழிக்கு தேவகிருபையுண்டு. அம்மொழியில் வாசிக்கப்படும் மந்திரங்களுக்கே தேவசக்தி. இப்படியிருக்கும்போது, மொழிபெயர்ப்பென்ற பேச்சுக்கே இடமில்லை.
    இப்போது குரானுக்கு வருவோம். இன்னூல் வேதம் எனப்பட்டு இசுலாமியரின் ஒரே புனித நூலாக இருக்கின்றபடியாலே, மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பை மட்டுமே செய்யவேண்டும். மேலும், இசுலாம் அனைவருக்கும் தான் பொது என்ற கொள்கையுடையபடியால், மொழிபெயர்ப்பாளர் தன் சங்கத்தமிழ் நுண்மான் நுழைபுலத்தைத் தூக்கியெறிந்து விட வேண்டும். எனக்கு இந்துஞான மரபைத் தெரியும்; சித்தர்களைப் பற்றித்தெரியும் என்ற செருக்கெல்லாம் இங்கு செல்லாது.

    வந்தாய், மொழிபெயர்த்தாய்; போ. நன்றாக இருப்பின் நன்றிகள் தானே உமக்கு நல்கும் என்பதே இங்கு.

    தமிழ்க்குரானைப் பயன்படுத்திக் கதாகாலட்சேபங்களில் இசுலாமியரிடையே உரையாற்றும் போது என்னவென்னாம் தமக்குத் தெரிந்ததோ, அதாவது கட்டுரையாளர் சொன்னவற்றை (க்தி,சிவன்,அங்கரன்,பஞ்சாட்சரம்,முகமாறு என அனைத்து யோக) எப்படியெல்லாம் சொல்லி, குரானின் கூறப்பட்டவகளை பாமர இசுலாமியர்க்குத் தெளிவுபடுத்த முடியுமோ அப்படிச் செய்யலாம்.
    இவ்வாறு என் கருத்துக்களுக்கொவ்வா விடயங்கள் இக்கட்டுரையில் விதந்தோதப்படுகின்றன.
    வைதீய இந்து மதவாதிகளில் ஒரு சாராரின் பெயர் வைணவ சம்பிரதாயிகள். இவர்கள் வேதங்களை மொழிபெயர்க்கமுடியா; அதே வேளையில் பாமரத்தமிழனுக்கு அவை கிடையாவா? என்ற கேள்விக்கு அவர்களே விடையையும் சொல்லி விட்டார்கள்.

    அதன்படி –

    வேதங்களைபடைத்த இறைவன், அவை தமிழருக்கும் போய்ச்சேரவேண்டுமெனத் திருவுள்ளம் கொண்டான். அச்செயலைச்செய்ய பன்னிரு ஆழ்வார்களாகத் திருஅவதாரம் தமிழகத்தில் வெவ்வேறிடங்களில் செய்து பாசுரங்களை எழுதினான். (இதை நம்மாழ்வாரும் சொல்வார்: நான் எழுதவில்லை; என்னுள் கிடந்து இறைவனே பாடுகிறான்) ஆக, நாலாயிரத்திவ்ய பிரபந்தம் படித்தாலே போதும். திருவாய்மொழியில் நான்கு வேதங்களின் கருத்துக்கள் விரவிக்கிடக்கின்றன. திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் ஆரங்கங்கள். எனவே நாலாயிரத்தை ‘திராவிட வேதம்’ அல்லது ‘தமிழ் வேதம்’ என்றனர்.

    நைஸ்…வெரி நைஸ் !! இல்லையா?
    எனவே குரானை அப்படியே மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். குரானின் கருத்துக்களுக்கு வியாக்யானங்கள் சொல்ல விழைவோர் தனியாக நூல்கள் வரைந்து கொள்க. It is appropriate to leave Kuran as it was given to you when you translate it into Tamil.

  23. திரு தங்கமணி!

    //இல்லை. ஹப்பிள் சொல்வது பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போவதை பற்றி. நீங்கள் சொல்வது பூமியை பற்றி.//

    ஐயா… பிரபஞ்சத்துக்கள்தானே பூமியும் அடங்குகிறது. பிரபஞ்சம் விரிவடைந்தால் அதோடு சேர்ந்து பூமியும் தானே விரிவடையும். நீங்கள்தானே குழப்புகிறீர்கள்?

    //ஜெயினுலாபுதீன் பூமிதான் முதலில் ஆண்டவனால் படைக்கப்பட்டது. பிறகுதான் வானம் படைக்கப்பட்டது என்று சொல்கிறாரே. பிரபஞ்சம் உருவாகி 10 பில்லிய்ன வருடங்களுக்கு பின்னர்தான் உலகம் உருவாகிறது//

    ‘வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’
    -குர்ஆன்21:30

    குர்ஆன் வசனம் இவ்வாறு இருக்க ஜெய்னுல்லாபுதீன் இதற்கு மாற்றமாக எப்படி கருத்து சொல்லியிருப்பார். எந்த இடத்தில் சொன்னார் என்ற விபரத்தைத் தாருங்கள். போகிற போக்கில் ஏதாவது அடிதது விட்டு போக வேண்டாம்.

    //இந்த போகோஹராம் அமைப்பின் மனித்ரகளிடம் போய் சொல்லுங்கள்.//

    இந்த அமைப்பைப் பற்றி என்னை விட நீங்களே அதிகம் தெரிந்தவர் என்பதால் இந்த செய்தியை அவர்களுக்கு நீங்களே கொண்டு செல்லுங்கள்.

    //இந்தியாவில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு காரணத்தை நீங்கள் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிக்கலாமா?//

    அதற்கு முன்னால் பவுத்த கோவில்களையும் சமண மடங்களையும் இந்துத்வாவுக்கள் கொண்டு வர எத்தனை கொள்ளைகள் நடந்தது. என்னென்ன கொலைகள் நடந்தது. சூழ்ச்சிகள் எவ்வாறெல்லாம் செய்யப்பட்டன என்பதையும் பார்த்து விட்டால் வரலாறை முழுவதும் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்படும். எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றிய வரலாறையும் அங்கு அவசியம் சேர்க்கவும்.

  24. சகோ காவ்யா!

    //இக்கட்டுரையின் தலைப்பே ஒரு கேள்விதான். மொழிபெயர்ப்பாளர் குரானை மொழிபெயர்ப்பதை மட்டும் செய்யாமல் தனக்குத்தெரிந்த இந்து ஞான மரபையும் சேர்த்துவிடுவதால் பிரச்சினையாகிறது என்று இக்கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. எனவே இங்கு இந்து மதமும் இருக்கிறது.//

    //எனவே குரானை அப்படியே மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். குரானின் கருத்துக்களுக்கு வியாக்யானங்கள் சொல்ல விழைவோர் தனியாக நூல்கள் வரைந்து கொள்க. It is appropriate to leave Kuran as it was given to you when you translate it into Tamil.//

    இதைத்தான் நான் இங்கு நானும் சுட்டிக் காட்டினேன். நேரிடையான மொழி பெயர்ப்பை விடுத்து பீர்அப்பா அவர்களுக்கு தெரிந்த இந்து மத வியாக்யானங்களையும் மொழி பெயர்ப்பில் சேர்த்தால் குழப்பமே மிஞ்சும். இப்படி ஒரு குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத்தான் மொழி பெயர்ப்புகளில் மூல மொழியான அரபியையும் சேர்த்தே வெளியிடுகின்றனர். இதிலும் யாரேனும் இடைச்செருகல் செய்தால் முகமது நபி காலத்தில் தொகுக்கப்பட்டு ஜனாதிபதி உஸ்மான் காலத்தில் புத்தகமாக வெளியிடப்பட்ட கையெழுத்து பிரதி இன்றும் துருக்கியிலும் ரஸ்யாவிலும் உள்ளது. அதை வைத்து இடைச் செருகலை கண்டு பிடித்து விடலாம்.

    மூல மொழியிலும் மூல கருத்திலும் கை வைத்ததாலேயே இந்து மத வேதங்களும் கிறித்தவ மத வேதங்களும் பல முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

    பின்னூட்டங்களில் மிகச் சிறந்த கருத்துக்களை வழங்கி வரும் உங்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

  25. தோழர் காவ்யா,

    பீர்அப்பாவினுடைய கவிதைத் தொகுப்பு குர்ஆனின் மொழி பெயர்ப்பல்ல. இங்கே அது முக்கியமான விஷயமுமல்ல என்றாலும் விவாதத்தின் போக்கு இந்தத் திசையை நோக்கி மட்டுமே சென்று விடக்கூடாதென்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

  26. எச். ஜி. ரசூல்

    இந்துத்துவாவாதிகளுக்கும் ‘மேற்கத்திய அறிவுஜீவி’களுக்குமெதி ரான புனர் வாசிப்பு எனும் நவீன ஆயுதத்தைக் கண்டு பிடித்த சமூக விஞ்ஞானியான தாங்கள், விவாதங்களின் உற்பத்தி விற்பனை மற்றும் பயனாளியெனும் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (திசைக்கும் அறிவுக்கும் தொடர்பிருக்கிற தென்று தாங்கள் நம்புவதை மூடநம்பிக்கையென்று சொல்ல மாட்டேன். இது, நீண்டகால நம்பிக்கையில் பழகிப்போய் விட்ட அடிமை மனோபாவம் மட்டும்தான்.) காவ்யாவும் நூருல்அமீனும் சொல்வதுபோல், வெற்றுத்தூண்டிலுடன் சிலர் காத்திருக்கிறார்கள். புழுவாக வந்து விழுந்துத் தொலைக்கிறார்கள்.

    வலைத்தளத்தின் பின்னூட்டங்கள் உள்ளூர உங்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டலாம். பீர்முகம்மது அப்பாவை குர்ஆனின் மொழிபெயர்ப்பாளராகச் சித்திரித்து அது விவாதிக்கப்படுவதைப் பற்றியோ ஞானப்புகழ்ச்சி குர்ஆனின் மொழிபெயர்ப்பாக விவாதிக் கப்படுவதைப் பற்றியோ தாங்கள் கவலைப்படவே மாட்டீர்கள் என்பதுவும் தெரியும். தங்களுக்குத் தேவை, இணைய தளமாக இருந்தால் பின்னூட்டம்; பத்திரிகையாக இருந்தால் விமர்சனங் கள்.

  27. எச். ஜி. ரசூல்

    இந்துத்துவாவாதிகளுக்கும் ‘மேற்கத்திய அறிவுஜீவி’களுக்குமெதி ரான புனர் வாசிப்பு எனும் நவீன ஆயுதத்தைக் கண்டு பிடித்த சமூக விஞ்ஞானியான தாங்கள், விவாதங்களின் உற்பத்தி விற்பனை மற்றும் பயனாளியெனும் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (திசைக்கும் அறிவுக்கும் தொடர்பிருக்கிற தென்று தாங்கள் நம்புவதை மூடநம்பிக்கையென்று சொல்ல மாட்டேன். இது, நீண்டகால நம்பிக்கையில் பழகிப்போய் விட்ட அடிமை மனோபாவம் மட்டும்தான்.) காவ்யாவும் நூருல்அமீனும் சொல்வதுபோல், வெற்றுத்தூண்டிலுடன் சிலர் காத்திருக்கிறார்கள். புழுவாக வந்து விழுந்துத் தொலைக்கிறார்கள்.

    வலைத்தளத்தின் பின்னூட்டங்கள் உள்ளூர உங்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டலாம். பீர்முகம்மது அப்பாவை குர்ஆனின் மொழிபெயர்ப்பாளராகச் சித்திரித்து அது விவாதிக்கப்படுவதைப் பற்றியோ ஞானப்புகழ்ச்சி குர்ஆனின் மொழிபெயர்ப்பாக விவாதிக் கப்படுவதைப் பற்றியோ தாங்கள் கவலைப்படவே மாட்டீர்கள் என்பதுவும் தெரியும். தங்களுக்குத் தேவை, இணைய தளமாக இருந்தால் பின்னூட்டம்; பத்திரிகையாக இருந்தால் விமர்சனங்கள்.

  28. Avatar தங்கமணி

    காவ்யா,
    செய்திகளுக்கு நன்றி.
    சுவனப்பிரியன்,
    ஆக நீங்கள் குண்டாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் சொன்னால், பிரபஞ்சம் விரிவடைகிறது என்று நான் சொன்னதாக அர்த்தமா?

    http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/muthalil_padaikapatathu_vanama_boomiya/
    ஜெயினுலாபுதீன் கூறுவதை மேலே படியுங்கள். குரான் ஒளியில் கூறுகிறார்.

    //இந்த அமைப்பைப் பற்றி என்னை விட நீங்களே அதிகம் தெரிந்தவர் என்பதால் இந்த செய்தியை அவர்களுக்கு நீங்களே கொண்டு செல்லுங்கள்.//

    அதுதான் நமது பத்திரிக்கைகளில் லட்சணம்.

    என் மீது உங்களுக்கு கோபம் இருக்கிறது என்று தெரிகிறது. அதற்கென்று இபப்டியா?
    நீங்கள் போய் சொன்னாலே கேட்க மாட்டார்கள். அங்கே இருக்கும் கிறிஸ்துவர்கள் சொன்னாலெ கேட்கமாட்டார்கள்.போட்டுத்தள்லுகிறார்கள். என்னை போகச்சொல்லுகிறீர்களே?

    அதாவது போகட்டும். உங்கள் ஜெயினுலாபுதீனிடமாவது பிரபஞ்சம் தோன்றி பல பில்லியன் வருடங்களுக்குப் பிறகுதான் பூமி வந்தது என்பதையாவது ஒத்துகொள்ளச்சொல்லுங்கள். பிறகு நைஜீரியா போகலாம்.

  29. Avatar darvesh

    குரானையும், நபிமுகமதுவின் செயல்களையும்,இஸ்லாத்தையும் அறிவுபூர்வமானதாகவும்,சமாதானத்திற்கானதாகவும் விதந்துரைக்கும் குளச்சல் மு.முகமதுயூசுப், சுவனப் பிரியன்,காவ்யா உள்ளிட்ட அறிஞர்களுக்கு என் தாழ்மையான சில சந்தேகங்கள்..

    ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்களில்(பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா..) மறுப்புகள் இல்லாமல் இல்லையென்றாலும் அவரது கருத்துக்களின் சாரத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.இது தொடர்பான ஐயப்பாடுகளை உங்கள் முன் வைக்கிறேன்.

    1) முஸ்லிமாக இருக்கவேண்டுமானால் கலிமா என்னும் மூலமந்திரத்தை ஏற்று ஈமான்(நம்பிக்கை) கொள்பவர்களாக இருக்க வேண்டும்.கலிமா என்னச் சொல்கிறது லா இலாஹ இல்லல்லாஹு,முகம்மதுர் ரசூலில்லாஹி.. இதன் பொருள் கடவுள் இல்லை. அல்லாஹ்வைத் தவிர- முகமது அவனின் தூதர்
    அல்லாஹ்மட்டுமே உண்மை வேறுகடவுள்கள் பொய் என்னும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன சைவர்கள் கும்பிடும் சிவன் பொய்,வைணவர்கள் வனங்கும் கிருஷ்ணன் பொய்,நாடார்கள் வணங்கும் பத்ரகாளியம்மன் பொய்,தலித்துகள் வணங்கும் கருப்பண்ணசாமி பொய், பழங்குடிகள் வணங்கும் அசுரன் பொய் கிறிஸ்துவர்கள் வணங்கும் யேசுகிறிஸ்து பொய் அல்லாஹ் மட்டுமே மெய் என்பதாக அல்லவா சொல்கிறது.இந்த ஈமானே பிற சமய நம்பிக்கைகள்மீது வணக்கவழிபாடுகள் மீது மாபெரும் யுத்தத்தை செய்கிறதல்லவா.. இதை எப்படி இந்திய தமிழக பல்சமயச் சூழலில் வாழும் மக்கள் அனுமதிக்க முடியும்.அரபுமொழியில் சொல்லிக் கொண்டிருப்பதால் ஏதோ முஸ்லிம்களின் இந்த கலிமா பற்றி இந்துக்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ சரியாக எதுவும் தெரியவில்லை.எவ்வளவு ஆபத்தான கலிமா இது.பெரியாரும் அம்பேத்கரும் இதற்கு எப்படி வக்கலாத்து வாங்கினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    ஏழாம் நூற்றாண்டில் நபிமுகமது என்ன செய்தார்.. லாத் உஜ்ஜா,மனாத் பெண்தெய்வங்கள் உள்ளிட்ட 360 க்கும் மேற்பட்ட சிலைகளை மக்கமா நகரின் கபாவில் அடித்து நொறுக்கி உடைத்தெறிந்தாரே.. தலிபான்கள் புத்த சிலைகளை உடைத்தெறியும் போது இந்த நபிவழியைத்தானே பின்பற்றினார்கள்..நபிவழி இதுதான் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனைத்துக் கோவில்களின் சிலைகளையும் உடைக்கும் ஜிகாதிகளாய் மாறினால் என்ன ஆகும்…
    இந்த மனோபாவம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் கலிமாவின் மூலம் உருவாகியிருப்பது எவ்வளவு பெரிய அபாயகரமான நிலை..என்வேதானே அடிப்படைவாதமும் தீவிரவாதமும் முஸ்லிம்களால் மேலெழும்புகிறது..

    இந்தச் சூழலில்தான் சூபிகளின் கவிதை மொழிக்கான முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இறைவனை அனைத்து சமயத்திற்குமான இறைவனாக சமயவடிவாய் சற்குருவாய் தரிசிக்க சொல்வது எவ்வளவு மாட்சிமைதாங்கிய விசயம்.இதைத்தானே குணங்குடியாரும் பீரப்பாவும் தமிழ்சூபிகளும் செய்தனர்.

    எனவேதான் நமது சமூக வாழ்விலிருந்து மதம் விலக்கப்படாத சூழ்நிலையில் எனது கேள்வி
    நீங்கள் யார் பக்கம்… அடிப்படைவாத இஸ்லாத்தின் பக்கமா.. அல்லது.. சூபிகளின் ஜனநாயக இஸ்லாத்தின் பக்கமா..
    அல்லது இப்படிக் கேட்கிறேன்
    உங்களுக்கு எந்த அல்லாஹ் வேண்டும்.. அரபு குறைஷி மேலாண்மையையும்,ஆணாதிக்கத்தையும்,பிறசமய காழ்ப்புணர்வையும் பேசும் அரபு அல்லாஹ்வா.. அல்லது சமய சமரசம் பேசும் தமிழ் அல்லாஹ்வா..
    அன்புடன்
    தர்வேஷ்

  30. தங்கமணி!

    //ஜெயினுலாபுதீன் பூமிதான் முதலில் ஆண்டவனால் படைக்கப்பட்டது. பிறகுதான் வானம் படைக்கப்பட்டது என்று சொல்கிறாரே.//

    பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கிசையப் பார்க்கும் போது பேரண்டத்தில் இன்று காணப்படும் நட்சத்திரங்கள் யாவும் ஆதியிலேயே தோன்றியவை இல்லை. பெரு வெடிப்பு நிகழ்ந்து பேரண்டம் விரிவடையத் தொடங்கியதும் அங்கு பெரும் குழப்பமான நிலை காணப்பட்டதாக அறிவியல் அறிஞர் சேப்லி கூறுகிறார். ஆரம்பத்தில் சராசரி பொருளடர்த்தி மிக அதிகமாக இருந்ததாகவும் நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் பற்பல காலக்சிகள் தனிததனி தொகுதிகளாக பிரிந்து இராமல் ஒன்றுக்குள் ஒன்று திணிக்கப்பட்டும் ஒன்றன் மீது ஒன்றாக குவிக்கப்பட்டும் இருந்தன.இதனால் ஒன்றோடொன்று மோதல்களும் வெடித்தல்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
    -A Brief History Of Time. Page 53,54
    சுருங்கக் கூறுவதாக இருந்தால் பேரண்டம் ஆரம்ப கட்டங்களில் இப்போது இருப்பது போன்ற ஒழுங்குடன் இல்லாமல் ஒழுங்கற்ற குழப்பமான நிலையிலேயே இருந்ததாக அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றனர்.

    இதன் பிறகு தான் இறைவன் கோள்களை தனித்தனியாகப் பிரிக்கிறான். பிரித்தவுடன் மனிதர்கள் வாழ்வதற்காக பூமியை படைக்கிறான். அதன்பிறகு வானத்தைப் படைக்கிறான். இதற்கு முன்னால் இவை இரண்டும் கேலக்சிக்குள் ஒன்றாக இருந்தன. பிரித்தவுடன் பூமியையும் வானத்தையும் படைத்ததைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் 41: 9,10,11 வசனங்கள் கூறுகின்றன. பேரண்டப் படைப்பையும் அதன் பிறகு பூமி வானத்தின் படைப்பையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொண்டதால் நீங்களும் குழம்பி ஜெய்னுல்லாபுதீனிடமும் குறை காண்கிறீர்கள்.

    //அதாவது போகட்டும். உங்கள் ஜெயினுலாபுதீனிடமாவது பிரபஞ்சம் தோன்றி பல பில்லியன் வருடங்களுக்குப் பிறகுதான் பூமி வந்தது என்பதையாவது ஒத்துகொள்ளச்சொல்லுங்கள்.//

    அவர் சரியாகத்தான் குர்ஆனை அணுகுகிறார். நிங்கள் தான் உங்கள் எண்ணத்தை அறிவியலுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். இனி உங்கள் எண்ணத்திலும் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன். :-)

    மற்றபடி…..பவுத்தம், சமணம், கழுவிலேற்றல் பற்றி கேட்டிருந்தேன். :-( ஒரு பதிலையும் காணோமே!

  31. Avatar தங்கமணி

    // ஒழுங்குடன் இல்லாமல் ஒழுங்கற்ற குழப்பமான நிலையிலேயே இருந்ததாக அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றனர்.//
    இல்லை. அது சூப்பர் ஒழுங்குடன் இருந்ததாக சொல்கிறார்கள்.

    //அவர் சரியாகத்தான் குர்ஆனை அணுகுகிறார். நிங்கள் தான் உங்கள் எண்ணத்தை அறிவியலுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். //

    அவர் சரியாகத்தான் குரானை அணுகுகிறார். அறிவியலை அல்ல.
    சரி நான் உங்கள் விருப்பப்படி என் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்யபோகிறீர்கள்?

  32. Avatar தங்கமணி

    ஒரு நல்ல ஐடியா. காவ்யா சொல்வது சுவனப்பிரியனுக்கு சந்தோஷமாக இருக்கிறது. சுவனப்பிரியன் சொல்வது காவ்யாவுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
    ஆகவே சுவனப்பிரியன் சொல்வதை காவ்யா என்னை போன்ற மடையர்களுக்கு விளக்கலாமே?
    /பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கிசையப் பார்க்கும் போது பேரண்டத்தில் இன்று காணப்படும் நட்சத்திரங்கள் யாவும் ஆதியிலேயே தோன்றியவை இல்லை. பெரு வெடிப்பு நிகழ்ந்து பேரண்டம் விரிவடையத் தொடங்கியதும் அங்கு பெரும் குழப்பமான நிலை காணப்பட்டதாக அறிவியல் அறிஞர் சேப்லி கூறுகிறார். ஆரம்பத்தில் சராசரி பொருளடர்த்தி மிக அதிகமாக இருந்ததாகவும் நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருந்ததாகவும் கூறுகிறார்./
    அப்போது அந்த நட்சத்திரங்கள் வானத்தில் இருந்தனவா? அல்லதே வேறொரு இடத்தில் இருந்தனவா? அப்போது இருந்தது வானமே இல்லையா?

    ஒன்னுமே புரியலை! காவ்யாதான் விளக்க வேண்டும்.

    1)எப்படி பூமி விரிவடைவது பிரபஞ்சம் விரிவடைவதற்கு சமம்?
    2) பூமி முதலில் பிறகுதான் வானம் என்பது எப்படி வானம் முதலில் பிறகுதான் பூமி என்பதற்கு சமம்?
    3) இந்த சுவனப்பிரியன் சொல்லும் “இறைவன்” கோள்களை வானமில்லாமல் எங்கே படைத்தான்?

  33. காவ்யா, உங்களைத் தேடி யாரோ வருவதுபோலிருக்கிறது. (இப்படித்தான் சிக்கலில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பித்துக்கொள்ளுங்கள்.)

  34. Avatar தங்கமணி

    குளச்சல் மு யூசூப்..

    :-)) ஹா ஹா ஹா!

    அபாரமான நகைச்சுவை!

  35. அன்புள்ள சகோதரர் ஹெச் .ஜி . ரசூல்

    உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே சந்தோஷம்தான் உங்களைப் போன்று இன்னும் பலர் நமது தக்கலை அபீமுஅ வை சார்ந்த சகோதரர்கள் இது போன்ற விவாதங்களில் நல்ல முறையில் பங்கெடுத்துக் கொள்வது மிக்க பயனுள்ளதாக இருக்கும் என உளமார நம்புகிறேன். உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் முறையாக பதில் தந்துள்ளேன். படிப்பவர்களின் வசதிக்காக உங்கள் கேள்விகளையும் பதிவு செய்து பதில் அமைந்துள்ளதால் இந்த மின்னஞ்சல் சற்று விரிவாக இருக்கிறது எனவே சிரமம் பாராமல் முழுவதுமாக படித்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    1 ) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா என்பதை யாராவது மறுக்கமுடியுமா..(அவூது பில்லாஹி எனத்துவங்கி பிறகுமத்திக்க யா அறுஹமற் றாகிமீன் எனமுடியும் 225 பாடல்களின் 2206 வரிகள்- இது உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை மொழிபெயர்ப்பாகும்.) ———

    நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையென்றே வைத்துக் கொள்வோம் ! இதில் நமக்கென்ன பிரச்சினை ? …. இங்கே நமக்கு யார் முதலில் தமிழிலில் மொழி பெயர்த்தார்கள் என்பது விவாதமில்லையே !…. சூபிக்களின் கோட்பாடுகளை தனது பாட்டுக்களின் வாயிலாக சிறந்த புலமைத்திறனை மிக நன்றாக வெளிப்படுத்திய ஒரு சூபி தமிழ்ப் புலவர் பீரப்பா என்பதே எனது நிலைப்பாடு………. ஆனால் இல்லை ! இல்லை ! பீரப்பா என்பவர் அவ்லியாதான் என்று நமது தக்கலை அபீமுஅ மக்கள் உள்பட சுன்னத்துல் ஜமாத்தை பின் பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நமது முஸ்லிம் சகோதரர்களும் நம்பி வணக்க வழிபாடுகளை செய்து வருகிறார்கள். பீரப்பா போன்றவர்களை அவ்லியாக்கள், அல்லது இறைநேசர்கள் என்றெல்லாம் நாமாகத்தானே ! சொல்லிக் கொள்கிறோம் !… இங்கேதான் நமது பிரச்சினையே ! இவர்கள் அவ்லியாக்கள் அல்லது இறை நேசர்கள் என யார் முடிவு செய்தார்கள் ?. இறைநேசர்கள் யார் என்பதையோ அல்லது ஒருவரை நல்லவரென்றோ உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?…….திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

    “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.” (10:62-63)

    யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. என் அன்பு சகோதரரே ! இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவே, ஒருவரை நல்லவர் , கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். நிச்சயமாக மனிதனால் தீர்மானிக்க முடியாது. யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர்நல்லவர் என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர் ‘இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களும் இவ்வாறு இறைவனால் நபிகளாருக்கு அறிவிப்புச் செய்யப்பட்டவர்களே. இதுதான் நபி (ஸல்) அவர்கள் வழியே நாம் அறிந்த செய்தி மற்றவர்களைப் பற்றி நமக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது ஆக நாமாகவே மனிதர்களை ஒரு குத்து மதிப்பாகவோ, மரியாதையின் காரணமாகவோ,அல்லது இறைவனைப் புகழ்ந்து பாட்டுக்கள் எழுதியதனாலோ, வேறு எந்த ஒரு காரணங்களுக்காகவோ இறை நேசர்கள் என சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது, தீர்மானிக்கவும் முடியாது. இதுவே உண்மையான இஸ்லாத்தின் நிலைப்பாடு… இஸ்லாம் நமக்கு கற்று தரும் இந்த விளக்கத்தை எப்படி? யார் ? மீறினார்கள் ? எந்த அடிப்படையில், எந்த தைரியத்தில் பலரையும் அவ்லியாவாக ஆக்கினார்கள் ? இதற்கான விடை இன்று வரை நமக்கு தெரிந்தபாடில்லை ஆனால் அறியாமையிலேயே அவ்லியாக்கள் என சொல்லப்படுகிறவர்களுக்கு ஆண்டுவிழா, திதி திவசம் போன்ற மாற்று மதத்தவர்களால் செய்யப்படும் சடங்குகளையெல்லாம் இஸ்லாமிய சாயம் பூசி , இஸ்லாத்தின் பெயரால் நாம் கொண்ட்டாடும் கொண்டாட்டங்கள் மட்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது யதார்த்தம்தானே ! . எனது கருத்துக்களை முறையான சரியான இஸ்லாத்தின் அடிப்படையில் இங்கே பதிவு செய்திருக்கிறேன் மறுப்பு இருந்தால் ???!!!!!! அல்லது அவ்லியா என்று ஒரு மனிதரை தீர்மானிக்க முடியும் என்று வாதிக்க முன் வருபவர்கள் (நீங்களோ அல்லது மற்ற சகோதரர்களோ ) தங்களது சொந்த கருத்துக்களை முன் வைக்காமல்முறையான குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ் ஆதாரங்களுடன் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் உங்கள் கருத்துக்கள் உண்மை என நிரூபிக்கப்படுமானால் இன்ஷா அல்லாஹ் மிகுந்த சகோதரத்துவத்துடனும் நாம் எல்லோருமே ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையிலேயே ஒற்றுமையுடனும் செயல்படலாமே !….

    2)இஸ்லாத்தின் அடிப்படைகளான அவ்வல் கலிமா ஷஹாதத்,99 இறைத்திருநாமங்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா,இஸ்முல் அக்ளம் பிஸ்மியின் தத்துவார்த்தவிளக்கம், தன்ஸுலாத் பிரபஞ்ச உருவாக்கம்,உயிரின்தோற்றம்,நபிமுகமது(ஸல்)வின்மாண்பு,ஆதம்நபி,நூஹூநபி,மூசாநபி,இபுராகீம்நபி,யூனூஸ்நபி,யூசுப்நபி,என நபிமார்களின் வரலாறு(பாடல்கள் 215 முதல் 225 முடிய) ஹதீஸ்மொழிகள்,என பல்வேறுவகைப்பட்ட இஸ்லாமிய மரபுகளை தமிழில் அற்புதமாக ஞானப்புகழ்ச்சியில் எடுத்துரைத்தது பீர்முகமது அப்பா என்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா.. —

    இவ்விஷயத்தில் சந்தேகம் இருக்கிறதா? இல்லையா ? என்பதும் நமது விவாதமே இல்லை… ஆனால் இங்கே மிக முக்கியமாக ஒன்றை நாம் கவனித்தாக வேண்டும் அதாவது இது போன்ற விளக்கங்களை மிக அழகாக ,தெளிவாக, நல்ல முறையில் , எளிதில் புரியும்படி ஒருவர் எழுதிவிட்டால் அவரை மனிதர்களாகிய நாம் அவ்லியா (?!) நிலைக்கு உயர்த்தி அவருக்கு என்னவெல்லாம் நன்மையை நாடி செயல்களை செய்து கொள்ளலாம் என இன்றும் சுன்னத்துல் ஜமாஅத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லக் கூடிய நமது மக்கள் செய்து வருகிறார்கள் என்பதையும் நாம் சற்று சீரியசாகவே பார்ப்போம்….. இதுபோன்றவர்களை அவ்லியா ஆக்கிக்கொள்ளலாம் , அவர்களுக்கு தர்ஹா கட்டிக்கொள்ளாலாம், அங்கே வணக்க வழிபாடுகளையெல்லாம் செய்து கொள்ளலாம், , மாற்று மதத்தவர்கள் மாதிரி பூசாரி ( மோதினார் – இஸ்லாமிய பூசாரி ?! ) என்று ஒருவரை பணிக்கு அங்கே அடக்கப்பட்டிருக்கும் அவ்லியாவுக்கு (?!) பணிவிடை செய்து கொள்ளாலாம், விடிய விடிய சமாதியின் முன்னால் பய பக்தியுடன் அமர்ந்து பொருள் தெரிந்தோ (?!) தெரியாமலோ (?!) பாட்டு (?!) பாடிக் கொள்ளலாம், பாட்டு படிக்க தெரியாதவர்கள் இசையில் லயித்தவர்கள் மாதிரி பாட்டை கேட்டுக் கொண்டிருப்பதிலே நன்மையுண்டு என நம்பி கலந்து கொள்ளலாம், வருடத்திற்கொரு முறை கொடியேற்றத்துடன் (?!) ஆண்டுப்பெருவிழா(?!) எடுத்து கொண்டாடலாம், பூப்பந்தல் அலங்காரத்துக்கென்றே மக்களிடம் தனியாக பண வசூல் வேட்டை நடத்தி தர்ஹா சன்னதியையும் அவரது கபரையும் பூக்களால் அலங்காரம் ( கோயில்களில் பூ அலங்காரம் செய்வது போல ) செய்து கொள்ளலாம் , விழா நிகழ்ச்சி நிரல் நோட்டீஸ் மற்றும் போஸ்டர் அடித்து அருள்(?!)பெற வாரீர் (?!) என இன்டர் நேஷனல் லெவலுக்கு விளம்பரம் செய்து செய்து மக்களை அழைக்கலாம் , மாற்று மதத்தவர்களின் சம்பிரதாயங்களான திதி, திவசம் போன்றவைகளை இங்கே நாம் 3ம் சியாரத்து ,10ம் சியாரத்து , 40ம் சியாரத்து அவ்லியாக்களுக்கு (?!) என சடங்குகளை விமரிசையாக நடத்தலாம், பூ பழம், பத்தி , சாம்பிராணி, குத்து விளக்கு, போன்றவைகள் சகிதமாக சமாதியின் முன்னால் வைத்து பக்தர்களுக்கு அவ்லியாவின் அருள் இறங்கிய காணிக்கையாக கொடுக்கலாம் , , பழக்குலைகள் கொடுத்து, பச்சைத்துணி (?!) கட்டி பால்குடம் (?!) எடுத்து நேர்ச்சை செய்து கொள்ளலாம், உண்டியல் வைத்து பண வசூல் வேட்டை நடத்தலாம், ஒப்பந்த அடிப்படையில் நன்மை வேண்டி , அவரின் அருள் வேண்டி , அவ்லியாவுக்கென நேர்ந்து கிடா, கோழி வெட்டி பலி கொடுக்கலாம், அவ்லியாவின் தர்ஹாக்களில் மொட்டை போடலாம் , கோயில்களில் நடக்கும் தினப் பூஜை, வாரப்பூஜை போன்று தினமும் மற்றும் வாரக் கிழமைகளில் பாத்திஹா மற்றும் யாசீன் ஓதிக் கொள்ளலாம், பிரசாதம் மாதிரி நேர்ச்சை வாங்கிக்கொள்ளலாம், கோயில் தீர்த்தம் மாதிரி கபரின் பக்கத்தில் வைத்து எடுத்த அருள் இறங்கிய தீர்த்தம் குடித்துக் கொள்ளலாம், வீட்டிற்கும் எடுத்து சென்று குடும்ப சகிதம் அருள் பெற்றுக் கொள்ளலாம், கை கால் , கண் மூக்கு , செவி என இந்த உறுப்புகளுக்கு ( மற்ற உறுப்புகளுக்கு உத்தரவாதம் இல்லையோ ) நோய்வாய் பட்டால் அதை அங்கேயே தர்ஹா வாசலில் கிடைக்கும் வெள்ளியினால் செய்யப்பட்ட ரெடிமேடு உடல் உறுப்புகளை வாங்கி அவ்லியாவிடம் நோய் தீர வேண்டி , நம்பிக்கை கொண்டு அவரின் சன்னதியில் இருக்கும் உண்டியலில் போட்டு நோயை தீர்த்துக் கொள்ளலாம் , இப்படியாக இந்த அவ்லியா(?!) சமாச்சாரங்களின் , கலாச்சார , அனாச்சார சீரழிவு பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறதே …. இதெல்லாம் இஸ்லாத்தில் உள்ளதா ? நபி வழியா ? யார் இதை இஸ்லாத்தில் புகுத்தினார்கள் ?, எதற்காக புகுத்தினார்கள் ? ஏன் புகுத்தினார்கள் ? அறிவுக்கேற்ற மார்கமான நன்மை தீமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்ட நமது தூய இஸ்லாத்தில் இப்படிப்பட்ட மாற்று மதக் கலாச்சார சடங்குகளையெல்லாம் முஸ்லிமாகிய நாமும் தவறாமல் பின்பற்றி வருகிறோமே !…. எந்த அடிப்படைகளில் ? என்ன ஆதாரங்களில் இவற்றை நன்மையை நாடி செய்து வருகிறோம் என்பதை நாம் என்றைக்காவது சிந்தித்தோமா ? ஞானப்புகழ்ச்சியை பாடவில்லையென்றால் அல்லாஹ் ஏன் பாடி நன்மையை சேர்க்கவில்லை என நம்மிடம் கோபப்படுவானா ? இல்லை பீப்ரபாதான் கோபப்பட்டு அல்லாஹ்விடம் சொல்லி தண்டனை வாங்கி தருவாரா ? அல்லது ஷிர்கான வரிகள், இஸ்லாமிய விரோத கருத்துக்கள் அடங்கிய இந்த பாட்டை பாடியதற்காக அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா ? யோசிக்க வேண்டும் … அருமை சகோதரர்களே !… நன்மைக்கு உத்தரவாதம் இல்லாத இந்தமாதிரியான செயல்களை விடுத்து குர்ஆனையும் ஹதீஸ்களையும் முறையாக கற்றுக் கொள்ள முற்பட்டோமா ? இன்று நம்மில் எத்தனை பேர் கற்று கொண்டுள்ளோம் இவற்றை தெரிந்து கொண்டு அதன்படி நமது செயல்களை அமைத்துக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டானா என யோசித்திருக்கிறோமா ? மறுமையில் நமக்கு வெற்றி கிடைக்குமா ? இல்லையா ? அல்லாஹ்விடத்தில்என்ன பதில் சொல்லப் போகிறோம் ? கொஞ்சம் சீரியசாகவே சிந்தித்து செயல்பட ஏன் நம் மனம் மறுக்கிறது ?… இந்த அவல நிலைக்கு நாம் ஏன் தள்ளப்பட்டோம் ? இதற்கான விடை மிகத் தெளிவானது சகோதரர்களே !… குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்கள் கை விட்டதினால் , அல்லது முறையாக தெரிந்து கொள்ளாததால், அல்லது பாரம்பரியத்தின் மூட நம்பிக்கைகளில் இது பற்றியெல்லாம் பாராமுகமாக இருந்துவிட்டதினால் இந்த நிலை நம்மிடம் ஏற்பட்டுவிட்டது …. இம்மையிலும் மறுமையிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் இனியாவது நாம் நிச்சயம் சிந்திக்க வேண்டும் சகோதரர்களே !….. இன்ஷா அல்லாஹ், சிந்திப்பவர்களுக்கே அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறான் என்பது அவனுடைய வாக்கும் , விருப்பமும் …… நான் எழுதியிருக்கும் கருத்துக்களை மறுப்பவர்கள் முறையான ஆதாரங்களுடன் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்…. மேற்கொண்டு விவாதம் தேவைப்பட்டால் இன்னும் நல்ல விதத்தில் கூடுதல் விஷயங்களுடன் நன்மையை நாடி விவாதிக்கலாம்

    3)பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.இதனை ஓரளவாவது கற்றுணராமல் இந்த 48000 வரிகளில் இரண்டுவரிகளை மட்டும் எடுத்து வைத்து பீர்முகமது அப்பாவை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்.. –

    புலமை வாய்ந்த சிறந்த சூபி கவிஞர்களின் கற்பனையான பொய்யான கவிதைப்பாட்டுக்களின் எண்ணிக்கைகளை வைத்து ஒருவரை அவ்லியா(?!) ரேஞ்சுக்கு மக்கள் கொண்டு செல்வதும் அதை வைத்துக் கொண்டு அவரை ஆராதிப்பதும் என்பது இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட இஸ்லாமிய அகீதா அடிப்படைகளுக்கு விரோதமான செயல் என்பதில் நிச்சயமாக சந்தேகமில்லை. மேலும் இந்த ஞானப்பாட்டை ஓரளவாவது கற்றுணர வேண்டும் என்று கருத்து சொல்வது மிகவும் , வேதனையான விஷமக் கருத்து காரணம் இந்த ஞானப்பாட்டை கற்றாலும் கற்காவிட்டாலும் ஒரு முஸ்லிமுக்கு எவ்வித பிரச்சினையும் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக இல்லை ஆனால் ஒரு முஸ்லிமாகிறவன் குர்ஆன் மற்றும்நபி வழிமுறைகளை உரிய முறையில் கற்றுக் கொள்ளாதவன், அறிந்து கொள்ளாதவன், அறிந்து கொள்ள சிறிதும் முயற்ச்சி செய்யாதவன் , மார்கத்தை நல்ல முறையில் கற்றுணராதவன் அதன்படி நடப்பதிலிருந்தும் , நேர்வழியிலிருந்தும் தவறி விடுவதால் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக மிகவும் கைசேதப்படுவான் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. இனி 48000 வரிகளில் இரண்டு வரிகளை மட்டும் எடுத்து வைத்து பீர்முகமது அப்பாவை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்.. என சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் கேட்பது பகுத்தறிவாதத்திற்கோ , முற்போக்கு சிந்தனைக்கோ, அல்லது குறைந்த பட்சம் மிக சாதாரண எண்ணங்களிலோ புலப்பாடாமல் போனதில் எனக்கு உண்மையிலேயே ஆச்சரியந்தான் , ஆனாலும் நாமெல்லாம் சராசரி மனிதர்களல்லவா ! சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது யதார்த்தம்தான் .. சரி இனி விஷயத்திற்கு வருவோம்… முதலில் சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இரண்டு வரிகள் மட்டுமல்ல , இன்னும் நிறைய வரிகளும் , வார்த்தைகளும் இந்த ஞானப்பாட்டிலே இருக்கிறது .. கூடுதல் விபரங்களுக்கு இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/part-1.htmlhttp://haiderghouse.blogspot.com/2011/09/part-2.html சொடுக்கி தெரிந்து கொள்வது நல்லது, மேலும் தரீகத் முறைகளையும் , பரமா நபியை படைத்தில்லையாகில் படைப்பொன்றுமில்லை, என்கிற இஸ்லாம் கூறாத வழி முறைகளையும் , இஸ்லாமியவிரோத கருத்துக்களையும் தனது பாடல்களிலே பாடியிருக்கிறார் , ஆக இப்படியெல்லாம் பல வரிகளும் வார்த்தைகளும் இஸ்லாத்திற்கு

    விரோதாமாகவே பீரப்பாவின் பாடல்களில் காணப்படுகிறது … சரி இனி இங்கே ஒரு வாதத்திற்காகவே ( மட்டுமே ) இரண்டே வரிகள்தான் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்…. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது கூடவா தமிழில் கவிதைகளும், கதைகளும் , எழுதி பிரபலமான முற்போக்கு எழுத்தாளராகிய நம் சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் அவர்களின் சிந்தனையில் சிக்காமல் சிதறிப்போய்விட்டது ? உண்மையிலேயே வருத்தமான ஆச்சரியமான செய்திதான் ……. இன்னொன்றையும் நாம் இங்கே உணர்ந்து கொள்ளலாம் சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் அவர்களின் வாதத்திலிருந்தே அவர் ஒரு உண்மையை அழகாக தெளிவாக்கியிருக்கிறார் அதாவது இந்த இரண்டு வரிகள்தான் தவறானது என்றால் அதை விட்டு விட்டு மீதமுள்ள அத்தனை பாடல்களையும் நல்லதாகவே எடுத்துக் கொள்ளக் கூடாதா ? என ஆதங்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது அந்த இரண்டு வரிகளும் தவறுதான் என ஒத்துக் கொள்வதாகவே எனக்கு படுகிறது . சகோதரர் , கவிஞ ர்ஹெச் .ஜி . ரசூலின் வாதத்தை இன்னும் கொஞ்சம் கூட யதார்த்தமாகவே அணுகுவோமே !…. 48000 லிட்டர் தண்ணீரில் இரண்டு லிட்டர் மிக கொடிய விஷத்தை கலக்கிய செய்தி தெரிந்தால் நம்மில் யாராவது தைரியமுடன் குடிக்க முற்படுவோமா ? நிச்சயமாக முடியாது … அன்பு சகோதரர்களே !… இப்போது புரிந்திருக்குமென எண்ணுகிறேன் ஆதலால் இதற்கு மேல் இனி எந்த ஒரு விளக்கமும் தேவையில்லையென்றும் கருதுகிறேன்…

    4) எதிர்தரப்பு சகோதரர்கள் நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்,நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் என வரும் வரிகள் ஞானப்புகழ்ச்சியின் 118வது பாடலில் இடம்பெறுவதாகும். இதன் ஆழ்ந்த பொருளுணர வேண்டுமானால் ஆறாறுக்கப்பால் எனத்துவங்கும் காப்புப் பாடலிலிருந்து வாசித்து ஒவ்வொரு சொல்லாடல்களுக்கும் மெய்ப் பொருளுணர்ந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.எனவே விமர்சிக்கும் சகோதரர்கள் ஆறாறுக்கப்பால்,ஐபேரும் காணாமல்,முத்தோடு பவளம் பச்சை என வரும் தமிழ்சொற்றொடர்களின் வழியாக 117 பாடல்களுக்கும் பொருளுணர்ந்து 118 வது பாடலுக்கு வரும்போதுதான் அவ்வரிகளின் பொருள் விளங்கும்.வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு மனநிலைகளில் வாசித்துப்பாருங்கள்.இதுதான் வாசிப்பின் அரசியல்(politics of reading)அப்படியும் அவ்வரிகளின் பொருள் விளங்காமலோஅல்லது இஸ்லாமிய இறையியலுக்கு மாறுபட்டதாகவோ அவ்வரிகள் இருப்பதாக மீண்டும் நினைத்தால் சொல்லுங்கள். அதன் சூட்சுமப் பொருளை குரானிய கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே நீங்கள் விளக்கம் பெறலாம்.ஆனால் அதற்குமுன், முந்தைய 117 பாடல்களின் விளக்கங்களை ,அவற்றை நீங்கள் புரிந்து கொண்டவிதத்தை நீங்கள் சொல்லியாக வேண்டும். –

    1400 வருடங்களுக்கு முன்னால் அல்லாஹ் 23 வருடங்களாக இறக்கிய இஸ்லாத்தின் அடிப்படையான அருள்மறை குர்ஆனுக்கே விளக்கவுரை மிகத்தெளிவாக நம்மிடையே இருக்கிறது ஆனால் உண்மையிலேயே பரிதாபப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது மக்கள் புனிதமாக (?!) படிக்கும் ஞானப்புகழ்ச்சிக்கு இதுவரையிலும் விளக்கவுரை கிடையாது … ஆச்சரியம்தான் ஆனால் உண்மைதானே !…. ஏன் இந்த நிலைமை ?!… சகோதரர்களே !…. ஞானப்புகழ்ச்சிக்கு விளக்கவுரை இருந்தால் இந்த மாதிரியான சந்தேகங்களை அதில் பார்த்தாவது நாம் விளங்கிக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்….ஒரு சிறிய உதாரணத்தைக் கொண்டு சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் அவர்களின் எடுத்து வைத்த வாதம் சரியானது இல்லை என நம்மால் எளிதில் புரிந்து கொள்ளலாம் …. நன்கு கற்றறிந்த ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரிடம் போய் குர்ஆனில் 118 வது வசனம் எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, அதனுடைய அர்த்தமும் , விளக்கமும் எனக்கு கிடைக்கவில்லை அப்படி கிடைத்தால் எனது சந்தேகம் நீங்கி விடும் ஆகையால் நீங்கள் உதவ முடியுமா ? என்று ஒருவர் கேட்டால் உடனே எந்த மறுப்பும் இல்லாமல் சந்தோஷத்துடனே அவர் கற்றறிந்ததை நமக்கு விளக்கமளிப்பார், அதை விடுத்து இல்லை ! இல்லை !, நீங்கள் முதலில் போய் 1 லிருந்து 117 வது வசனம் வரையுள்ள அர்த்தமும் விளக்கமும் ( இருந்தாலும் , இல்லாவிட்டாலும், உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்) முழுமையாக படித்து விட்டு பின்னர் அதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்கிற விதத்தையும் வந்துசொன்னால் மட்டுமே 118 வது வசனத்திற்கு என்ன விளக்கம் என நான் சொல்வேன் என்று அவர் சொன்னால் அதை நீங்கள் ஏற்பதாக இருந்தால் நான் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை…. ஆக மொத்தத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான விஷம கருத்துக்கள் அடங்கிய இந்த இரண்டு வரிகளுக்கு இன்று வரை பதிலும் அர்த்தங்களும் யாருக்கும் தெரிந்தபாடில்லை, இதுவரை விவாதத்தில் கலந்து கொண்டவர்களும் மற்றும் நீங்கள் உள்பட யாரும் விளக்கமும் தந்தபாடில்லை என்பதே மீண்டும் மீண்டும் பலமாக நிரூபணமாகி கொண்டேயிருக்கிறது…..

    5)ஒற்றை வாசிப்பு முறைக்கு எதிரான பன்மைவாசிப்பை(multiplicity of meaning) உருவாக்கினால்தான்பீர்முகமதுஅப்பாபயன்படுத்தியிருக்கும் சக்தி,சிவன்,அங்கரன்,பஞ்சாட்சரம்,முகமாறு என அனைத்து யோக,பரிபாஷை சொற்களையும்,குறியீட்டு மொழிபற்றியும் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும்.இம்முறையியலை கையாண்டு பாருங்கள். பிடிபடவில்லையெனில் இதனையும் உரைமரபின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்வது மிக எளிதானது.———

    நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இதை ஏன் ? இத்தனை வருட காலமாக இன்னும்உருவாக்கின பாடில்லை?!…… ஏன் யாரும் இன்னும் ஒரு புரிதலை ஏற்படுத்தவில்லை ?!… இப்படிப்பட்ட முறையியலை பயன்படுத்தி ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு விரிவுரை, விளக்கவுரை எழுதப்பட்டிருந்தால் நான் உள்பட எல்லோருமே அர்த்தங்களை படித்து புரிந்து கொண்டிருக்கலாமே !.. பின்னர் அதில் சந்தேகமோ, மறுப்போ இருந்தால் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் செய்யலாமே !… நீங்கள் சொன்னது போல உரைமரபின் துணை கொண்டு ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்குமேயானால் அதை எங்களுக்கும் தருவீர்கள் என அன்புடன் எதிர்பார்க்கிறேன்

    6) பீர்முகமது அப்பாவின் சில பாடல்களது பொருளை நெருங்க வேண்டுமானால் பழந்தமிழ் சங்க இலக்கியம், 2-ம் நூறாண்டில் துவங்கும் வள்ளுவம் போன்ற சமண பெளத்த இலக்கியம்,7ம் நூற்றாண்டிற்கு பிறகான சைவ, வைணவ இலக்கியங்கள் வழியாக பல்சமயச் சூழல்தன்மையோடு பயணம் செய்ய வேண்டும். —

    நீங்களே அழகாக சொல்கிறீர்கள்…. நாங்களும் இதைத்தான் சொல்கிறோம் , பீரப்பா என்ற தமிழ்ப் புலவரின் பாடல்களில் மாற்று மதத்தவர்களின் கொள்கை கோட்பாடுகள் காணப்படுகிறது அது இஸ்லாத்திற்கு விரோதமானது…. இது பற்றிய பல்சமய சூழல்தன்மை கொண்ட விளக்கங்கள் உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள் நாம் அதை படித்து விட்டு இனியொரு சமயத்தில் விவாதித்துக் கொள்ளலாம்.

    அரபு சொல்வரலாறு( அலிப், பே, லாம், ஹே, சீன், நூன், போன்றவை)அரபுமொழிச்சொற்கள்(தவக்கல்,தறஜாத்து,லவ்ஹு,ஷபாஅத்,அக்ல்,யகீன்,போன்றவை)அரபு மொழிக் கட்டமைப்பு(அவ்வல் அஹதாக நின்றமரம்/கொத்தாயிரங்கனியே ஹூ/துலங்கு ஷஹாதத்து,அத்தஹியாத்தும் மிக்கோர் புகழ்நபி சலவாத்தும் போன்றவை) தமிழோடு இணைத்து வாசித்து புரிந்திருக்க வேண்டும். —

    நமது விவாதம் இது வல்ல

    இந்தியதத்துவமரபின் அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,வேத மறுப்புத் தத்துவங்களான சாங்கியம்,சாருவாகம்,உலகாயதம்,ஆசீவகம்,சித்தர்மரபு வாசித்திருக்கவேண்டும்.இஸ்லாமிய சட்டவியல் ஷரீஅத்,ஆன்மீகவியல் தரீகத்,ஹகீகத்,மஹரிபத்,வஹ்த்துதுல் உஜூத்,வஹ்த்துல்ஷுஹுத்,உலூஹிய்யத்,ருபூபிய்யத் இவற்றின் துணையின்றி பீர்முகமது அப்பாவின் சில பாடல்களை எப்படி பொருள் கொள்வீர்கள்… ————-

    வெவ்வேறு தத்துவங்களும் (?!) வேத மறுப்பும் (?!) அடங்கிய விஷயங்கள் பல இருப்பதால் பீரப்பாவின் ஞானப்புகழ்ச்சிக்கு பொருள் கொள்வது மிகவும் கஷ்டமான காரியமே என இங்கேயும் நீங்கள் மிக தெளிவாக சொல்லி விட்டீர்கள்.. அதனால்தான் இதுவரையிலும் யாரும் விளக்கவுரை எழுத முன்வரவில்லையோ ?! என்ன விந்தை பார்த்தீர்களா !…. நம்மைப் படைத்த அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்னால் நமக்கு அருளிய இறை வேதத்திற்கே எல்லா விபரங்களும் நமக்கு கிடைக்கிறது ஆனால் பீரப்பாவின் பாட்டுக்கு மட்டும் அர்த்தமும் கிடைக்கவில்லை, விளக்கவுரையும் இல்லை ….. அவருக்கு சரியான வரலாறும் இல்லை…… அன்பு சகோதரரே !… இது எப்படிப்பட்ட நிலைமை என கொஞ்சமாவது நம்மால் யோசித்து உணர முடிகிறதா ? இப்படி பொருள் தெரிந்து கொள்ள முடியாத பீரப்பாவின் ஞானப்பாட்டை விடிய விடிய அவரின் சமாதியின் முன்னால் உட்கார்ந்து பாடத்தான் வேண்டுமா ? எதற்காக பாட வேண்டும் ? ஏன் பாட வேண்டும் ? பீரப்பாவின் ஞானப்பாட்டுக்கள் ஒன்றும் குர்ஆன் இல்லையே (அஸ்தஃபிருல்லாஹ்) அர்த்தம் தெரியாமல் நாம் எப்படி பாடினாலும் நன்மைதான் கிடைக்கும் என முடிவு செய்வதற்கு…. இது பற்றி பீரப்பாவே என்னுடைய பாட்டை பாடினால் நன்மை கிடைக்கும் என எங்குமே சொல்லவேயில்லையே !.. ஏன் அவர் பெயரை சொல்லி இந்த பாட்டு மேளத்தை நடத்த வேண்டும்.. நான் மேளம் என்று சொன்னதற்கு காரணம் இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/5590.html சொடுக்குங்கள் விபரம் அறியலாம்

    இவை அல்லாத மிக எளிமையான தமிழிலும் மனிதகுலம் முழுமைக்கும் பிரார்த்தனைபுரிகிற

    பீர் முகமது அப்பாவின் இறை நேயம் வழி வெளிப்படுகிற மானுட நேயம் என்பது கொடுமுடி. இது குறித்து பிறிதொருதடவை பேசலாம். —-

    இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைத்தால், தேவைப்பட்டால் பேசலாம்

    7) நாம் தொழுகை என்று தமிழில் குறிப்பிடுவதை சமணமரபின் திருவள்ளுவர் தெய்வம்தொழாஅள் என்பதாகவே பயன்படுத்தினார்.சைவமரபில் இது அடி தொழுதலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமணர்களும், சைவர்களும் பயன்படுத்தியதால் முஸ்லிம்கள் நாம் தொழுகை என்ற சொல்லை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா என்ன..

    நீங்கள் உதாரணமாக எழுதியிருக்கும் வார்த்தைகள் போலுள்ளதை இஸ்லாமிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை ஆனால் நாம் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளும் அது சார்ந்த வரிகளும் மாற்று மத தத்துவங்கள், கலாச்சாரங்கள் அடங்கியதாக காணப்படுகிறது இதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் நமக்கும் தெரியப்படுத்தினால் புரிந்து கொள்ள வசதியாக இருக்குமென்றுதான் கேட்டிருந்தோம் . இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/part-2.html சொடுக்கி நீங்களே படித்துக் கொள்ளலாம் , ஆக எது சந்தேகமாக எங்களால் எடுத்து காட்டப்பட்டிருக்கிறதோ அதற்குரிய அர்த்தங்களும், உரிய விளக்கங்களும் நமக்கு கிடைத்தால் , அது நமது மார்கத்திற்கு விரோதமில்லாமல் இருக்குமானால் ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வது நல்லது …

    8) பீர்முகமதுஅப்பா தனது பாடலில் தேவர்குலசிகாமணியே என்றொரு சொற்றொடரை பயன்படுத்துகிறார்.எனவே கள்ளர், மறவர் இனமான தேவர்சாதியின் தலைவராக மட்டும் அல்லாஹ்வை பீர்முகமது அப்பா கூறிவிட்டார் என்று கூறுவது சரியாகுமா..எனவே ஒரு பாடல்பிரதியை பொருள்கொள்ளும் போது சூழல்சார்ந்த அர்த்தம்(contextual meaning)பல்பொருள்சார்ந்த அர்த்தம்(multiple meaning) என்பவையும் முக்கியமானவை. கவனத்தில் கொள்வீர்களா..

    எத்தனை அர்த்தங்கள் இருந்தாலும், மாற்று மதங்களை மிகத் தெளிவாக குறிக்கும் அல்லது அவர்களின் வணக்க வழிபாடுகளை மட்டுமே குறிக்கும் குறிப்பிட்ட வார்த்தைகளை கொண்டு நம் இறைவன் அல்லாஹ்வை பீரப்பாவோ அல்லது மற்றவர்களோ புகழவோ அல்லது பாட்டு பாடவோ செய்வதை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை நீங்கள் உணரவேண்டும் காரணம் அல்லாஹ்வைப் புகழ வேண்டுமானால் அவனுடைய அழகிய திருநாமங்களைக் ( அஸ்மாவுல் ஹுஸ்னா) கொண்டு புகழ வேண்டும் என்பது இஸ்லாம் நமக்கு காட்டித் தரும் வழிமுறை.. ஆதாரம்:- அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)

    அதை விடுத்து புலவர்கள் தத்தமது கற்பனை திறன்களுக்கும் , புலமைத்திறன் மற்றும் மொழித்திறன்களுக்கும் ஏற்ப பலவிதமான தமிழ் சொல்லாடல்களை கையாண்டு மனங்கவரும் கவிதைகளையும், செய்யுள்களையும் அல்லது இலக்கியங்களையுமாக இயற்றியவைகளுக்கு நாம் பல ராகங்கள் கொடுத்து புனிதம் என்ற பெயரிலும் அல்லாஹ்விடத்தில் நன்மையே கிடைக்கும் என்கிற எண்ணத்தில் இறந்து போனவர்களின் சமாதிகளின் முன்னால் பயபக்தியுடன் பவ்யமுடன் அமர்ந்து விடிய விடிய பாடிக்கொள்வது என்பது நமது மார்கத்தில் இல்லாத வழிகேடான மாற்று மதத்தவர்களின்செயல்பாடு.,

    9)இன்னும் நியாயமான முறையில் உரையாடலைத் தொடர்ந்தால் குரானிய மொழியாடல்களை பொருள் கொள்ளுதல் உட்பட இன்னும் நிறைய விஷயங்களையும்பேசலாம்.பீர்முகமது அப்பாவின் பாடல்களுக்கு வகாபிகளின் சித்தரிப்பு மட்டுமல்ல ,

    நியாயமான முறையிலேயே என்னுடைய கருத்துக்களை இங்கே எடுத்து வைத்துள்ளேன், எனவே முதலில் இது பற்றிய மறுப்புகள் இருந்தால் குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ் ஆதாரங்களுடன் தெரிவியுங்கள் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம் நல்ல முறையில் கூடுதல் விபரங்களுடன் விவாதிக்கலாம்

    இந்துத்துவவாதிகளும்,மேற்கத்திய அறிவுஜீவிகளும் குரானிய மொழியாடல்களை எதிர்மறையாகவும், ஆபத்தானதாகவும் சித்தரிக்கும் முறையியலுக்கு எதிராக எப்படிப்பட்ட வாசிப்பை நாம் நிகழ்த்தவேண்டும் என்பதையும் கூட பேசலாம்.

    உங்கள் ஆதங்கம் உண்மையானது !… நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் முதலில் நம்மவர்களே தங்களின் செயல்களுக்கு இப்படிப்பட்ட செயல்களை செய்கிறார்களே !… நாம் இன்னும் தர்ஹா வழிபாட்டில் ஊறிப் போய் இருக்கிறோம், நமது மார்க்க விஷயங்களை, குர் ஆன் , மற்றும் ஹதீஸ்களை சரிவர கற்றுக் கொள்வதில்லை , அதற்கான ஆர்வமும் நம்மிடையே மிகவும் குறைந்து காணப்படுகிறது ஆனால் ஞானப்புகழ்ச்சியையும், மவ்லீதையும் , இன்ன பிற பித்அத்துக்களையும் இஸ்லாத்தின் பெயரில் நடத்தி வருகிறோம் . மாற்று மதத்தவர் ஒருவர் நமது இஸ்லாத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை ஐந்தே சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/blog-post_7945.html சொடுக்கி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அனவே முதலில் நாம் சரியாக வேண்டும் அபோதுதான் முறையாக மற்றவர்களுக்கு நமது மார்கத்தை எத்தி வைக்க முடியும் , அதற்குரிய ஏற்பாட்டை நாம் நமது ஜமாத்துக்களில் முறையாக செய்வோமானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு வெகு தீவிரமாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை

    இதற்கு ஒற்றை அதிகாரத்தை வலியுறுத்தும் வகாபிய வாசிப்புமுறை உதவாது

    அருமை சகோதரரே !…. நீங்கள் குறிப்பிடும் வஹாபிய வாசிப்பு முறை என்ன? என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது , சூபிசம் , வஹாபிசம் அல்லது ஸலபிசம் இது பற்றியெல்லாம் இன்று வரை எனக்கு சரியாக தெரியாது. மேலும் நான் எந்த இசத்திலும் சூபிசம் உள்பட இதுவரையிலும் ஆர்வப்பட்டதில்லை . எந்த ஒரு இயக்கங்களிலும் நான் இல்லை. உண்மை என்னவெனில் எனது பெற்றோர்கள் எதை இஸ்லாம் என்று கடை பிடித்தார்களோ அதையே நானும் தவறாமல் கடைபிடித்தேன் இன்னும் சொல்லப் போனால் ஏன்? எதற்கு? என்று எந்த கேள்வியுமில்லாமல் பின்பற்றினேன் . ஒரு வயதுவரை அத்தனை மக்களின் (முஸ்லிம்கள் உள்பட) நிலைமையும் கிட்டதட்ட இதுதான் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. நமது ரசூல் (ஸ

  36. தொடர்ச்சி….

    நமது ரசூல் (ஸல்) எந்த ஒரு இசத்தையும் நமக்கு காட்டி தரவில்லை மேலும் அங்கீகரிக்கவும் இல்லை … ஆனால் நமது மக்கள்தான் ( நீங்கள் உள்பட) ஆதங்கப்பட்டு வஹாபிசம் அல்லது ஸலபிசம் போன்ற இசங்களை கடைபிடிப்பதாக எண்ணிக் கொண்டு என் நிலை போன்ற சகோதரர்களை வஹாபிகள் என வீணாக பழி சுமத்துகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன் அதனால்தான் வஹாபி வாசிப்பு முறை உதவாது என்று என்னிடம் குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என எனக்கு தோன்றுகிறது இதுவும் ஒரு மோசமான அநியாயமான குற்றச்சாட்டு. எனது நிலை குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உள்ள கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் அது சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்கிறேன் இல்லையேல் அதற்குரிய பதில்களை முறையான ஆதாரங்களுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கிறேன். எனக்கு தெரியாவிட்டால் உரியவர்களிடம் கேட்டு விளக்கம் பெற்று ஆதாரங்கள் சரி பார்க்கப்பட்டு தெரிவிக்கிறேன். இதுதான் நான் இன்று வரை செயல்பட்டுவரும் விதம். இதில் தவறுகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு தன்னையும் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதே நிதர்சனம்.

    நமது சிந்தனைக்கு சில : ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாம் ஒரு சில கருத்து வேறுபாடுகளுக்காக ஏன் பிரி(க்க)ய வேண்டும் ? ஏன் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ள வேண்டும்? அல்லது ஊர் சட்ட நடவடிக்கை என்ற பெயரில் ஏன் ஊர் விலக்கம் செய்ய வேண்டும்?. ஒற்றுமையாக இருந்து கருத்து வேறுபாடுகளை களைவதற்குரிய வழிகளை நம்மால் கண்டறிந்து செயல்பட முடியாதா ? ஊர் விலக்கம் என்ற இவர்களது இந்த செயலால் ஒற்றுமையா ஏற்படும் ? நாம் சிந்திக்க வேண்டும். எந்த ஒரு சமுதாயத்திலும் கருத்து வேறுபாடுகள் , என்பது தவிர்க்க முடியாதது ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் மார்க்கத்தை முறையாக செயல்படுத்தாத நிலைகளை சுட்டிக் காட்டியோ அல்லது மார்க்கத்தில் பெயரால் அறியாமல் செய்யப்பட்டுவரும் தீமைகளை களையக்கூடியதாகவோ அல்லது நன்மையை கருதியோ இருக்குமானால் சமுதாய நலன் கருதி சொல்லப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள், தேவைப்படும் சட்ட மாற்றங்கள் , சீர்திருத்தங்கள் முதலியவைகள் நல்ல நோக்கங்களுடன் புரிந்து கொள்ளப்பட்டு இஸ்லாமிய மார்க்க விரோத செயல்களை தவிர்த்து அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் கட்டி தந்த வழி முறைகளை பின்பற்றுகிற முறையில் சரியான ஜமாஅத் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது என்பதில் நாம் நன்மையையே காணமுடியும்.

    ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு முஸ்லிமும் தங்களது பொறுப்பினை உணர்ந்து சமூகக் கடமைகளில் தோள் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பணிக்கின்றது இஸ்லாம் . இதனை மிகவும் பிரபலமானதொரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது :
    “எங்கெல்லாம் ஒரு மனிதன் தீமையைக் காணுகின்றானோ (அதனை தடுக்கும் பொருட்டு அல்லது அதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு) அதனைத் தனது கரத்தால் அல்லது வலிமை கொண்டு தடுக்க வேண்டும், அல்லது அவனது நாவால் (அன்புடன் அறிவுரை கூறுவதன் மூலமோ, அதிகார தோரணையில் அதட்டுதல் மூலமோ) அதனைத் தடுக்க வேண்டும், இவை யாவற்றிலும் ஒருவனுக்கு இயலாது எனின், அவன் தனது மனதாலாவது அதனைத் தீமை என்று ஒப்புக் கொண்டு அதனை வெறுக்க வேண்டும்.”
    ஆக, ஒரு முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் இஸ்லாம் என்ற பெயரிலும் பாரம்பரியம் என்ற போர்வையிலும் விமரிசையாக நடத்தப்பட்டுவரும் அநாச்சாரங்களுக்கு எதிராக, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் ஏற்படும் தீமைகளுக்கு எதிராக இஸ்லாத்தினை அவன் பிரயோகிக்க முன் வர வேண்டும் என்றே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. எந்த ஒரு முஸ்லிமும் வெறும் தொழுகை வணக்க வழிபாடுகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு சமூகத்தில் நிலவும் தீமைகளைக் கண்டு கொள்ளாதிருந்து விட முடியாது. எனவே இஸ்லாத்தை வெறும் வணக்க வழிபாடுகளுடன் சுருக்கிக் கொள்ளாது, பரந்த அளவில்நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். தீமைகள் களைப்பட்ட ஒரு ஜமாத்தை உருவாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். இஸ்லாம் வெறுத்தொதுக்கிய அனைத்து அம்சங்களையும் அல்லாஹ்வுக்காக என ஏதோ ஒருவழிமுறையில் தடுத்து, வெறுத்து ஒதுக்கி இஸ்லாம் ஏவிய விஷயங்களை, அக்கட்டளைகளை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

    ஆனால் இன்றைய நிலையோ அப்படியில்லையே ! ஒரு ஜமாத்தில் நடக்கும் மார்க்க விரோத ( தர்ஹா )கலாச்சார அனாச்சார சீரழிவு செயல்பாடுகளை நாம் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி இவைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல வழிகளிலும் எத்தி வைக்க முற்பட்டால் கருத்து சொன்னவர்களை பாரம்பரியத்திற்கெதிராகவும்(?!), சமுதாய நடைமுறைகளுக்கெதிரான(?!) செயலில் ஈடுபட்டதாகவும் அவர்களாகவே தன்னிச்சையாக ( அதாவது காலக்கெடுவுடன் விளககம் கேட்டு, அவர்கள் போட்ட காலக்கெடுவை அவர்களே ?! மதிக்காமல் முடிவு செய்து சம்மந்தப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் ஜமாத் உறுப்பினர் உரிமைகளை தற்காலிகமாக இழக்கிறார் எனஅறிவிப்பு செய்வது பின்னர் 3 வருடத்திற்குள் மன்னிப்பு கேட்டால் ( இஸ்லாமிய மார்க்க விரோத செயல்களை செய்யாதீர்கள் , இஸ்லாமை முறையாக தெரிந்து கொண்டு செயல்களை நன்மையின் பக்கம் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் ) அப்படியானால் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் இல்லையெனில் நிரந்தரமாக ஊர் விலக்கம் செய்வார்கள்.

    அருமை சகோதரரே !….. இதுதான் இஸ்லாத்திற்கும் அதை பின்பற்றுகிற மக்களுக்கும் உகந்த செயலா ? சிந்திக்க வேண்டும் ! ஒற்றுமை பற்றி பேசும் நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரர்களே நாம் எதில் ஒற்றுமையை காண வேண்டும் ? இஸ்லாத்திற்கு உகந்த செயல்களிலா அல்லது இஸ்லாத்திற்கு எதிரான செயல்களிலா ? இல்லை வெறுமனே நம் சமுதாய ஒற்றுமை என்கிற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஒரு செயல்களையும் கண்டும் காணாமல் இருந்து ஒற்றுமையாக இருக்க வேண்டுமா ? குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும் . இதற்கு மாற்றமாக யார் நடந்தாலும் அதை அவர்களுக்கு உணர்த்தி கொடுக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமும் கடமையே . குர் ஆன், சுன்னாஹ் வழிகளில் இல்லாமல் நம் சமுதாயம் செயல்பட்டால் முன்னேற்றம் எப்படி வரும் ? இஸ்லாமிய சிந்தனை முன்னேற்றம் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே அடைவது என்பது மறுமையில் நஷ்டத்தையே சம்பாதிக்க நேர்ந்துவிடும் என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் சிந்தித்து பார்த்து முடிவு செய்து கொள்வது நல்லது என்பதே எனது கருத்து.

    இன்ஷா அல்லாஹ் இனியும் நாம் நல்ல முறையில் கூடுதல் விஷயங்களுடன் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு நமது விவாதங்களை இறை அச்சத்துடன் தொடரலாம் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்கிற நம்பிக்கைகளுடனும் , மிக்க அன்புடனும் , சலாத்துடனும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சர்வ வல்லமை படைத்த இறைவன் அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என்றென்றும் நேர்வழியை காட்டட்டும். நம் எல்லோருடைய நற்காரியங்களையும், நற்செயல்களையும், நற்கருத்துக்களையும், நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும் எனவும் துஆ செய்து கொள்வோம்…. ஆமீன் … ஆமீன்….. யாரப்பில் ஆலமீன். கீழ்காணும் துஆக்களுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்

    59:10………….“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” ……………………

    3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”…………………………

    வஸ்ஸலாம்

    சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் …………

    தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்

    Blog: http://haiderghouse.blogspot.com/

    * குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் …………..

    * படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே நாம் வணங்குவோம் !

    * குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம் !

    * அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !

  37. தக்கலை கவுஸ் முகம்மது!

    அருமையான விளக்கங்கள். இவ்வளவு பொறுமையாக ஹெச்.ஜி.ரசூலுக்கு பதில் கொடுத்தது அறிந்து மகிழ்ச்சி. நாம் கொடுக்கும் பதில் அவரை நேர்வழிப்படுத்துகிறதோ இல்லையோ படிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு நல்ல தெளிவினை கொடுக்கும்.

    //வலைத்தளத்தின் பின்னூட்டங்கள் உள்ளூர உங்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டலாம். பீர்முகம்மது அப்பாவை குர்ஆனின் மொழிபெயர்ப்பாளராகச் சித்திரித்து அது விவாதிக்கப்படுவதைப் பற்றியோ ஞானப்புகழ்ச்சி குர்ஆனின் மொழிபெயர்ப்பாக விவாதிக் கப்படுவதைப் பற்றியோ தாங்கள் கவலைப்படவே மாட்டீர்கள் என்பதுவும் தெரியும். தங்களுக்குத் தேவை, இணைய தளமாக இருந்தால் பின்னூட்டம்; பத்திரிகையாக இருந்தால் விமர்சனங் கள்.//

    இதுதான் ஹெச்.ஜி.ரசூலைப் பற்றிய என்னுடைய எண்ணமும்.

  38. தர்வேஸ்!

    //மு.முகமதுயூசுப், சுவனப் பிரியன்,காவ்யா உள்ளிட்ட அறிஞர்களுக்கு என் தாழ்மையான சில சந்தேகங்கள்..//

    //லா இலாஹ இல்லல்லாஹு,முகம்மதுர் ரசூலில்லாஹி.. இதன் பொருள் கடவுள் இல்லை. அல்லாஹ்வைத் தவிர- முகமது அவனின் தூதர்
    அல்லாஹ்மட்டுமே உண்மை வேறுகடவுள்கள் பொய் என்னும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன சைவர்கள் கும்பிடும் சிவன் பொய்,வைணவர்கள் வனங்கும் கிருஷ்ணன் பொய்,நாடார்கள் வணங்கும் பத்ரகாளியம்மன் பொய்,தலித்துகள் வணங்கும் கருப்பண்ணசாமி பொய், பழங்குடிகள் வணங்கும் அசுரன் பொய் கிறிஸ்துவர்கள் வணங்கும் யேசுகிறிஸ்து பொய் அல்லாஹ் மட்டுமே மெய் என்பதாக அல்லவா சொல்கிறது.//

    உண்மையைத்தானே சொல்கிறது. நமது தமிழ் பண்பாடு ‘:ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்லவா’. அடுத்து இந்து மத வேதங்கள் அனைத்தும் ஓரிறைக் கொள்கையையே பறை சாற்றுகிறது. நீங்கள் குறிப்பிடும் கடவுள்கள் அல்லாது இன்னும் ஆயிரக்கணக்கில் இந்தியாவில் கற்பனைக் கடவுள்கள் உண்டு. நீங்கள் வணங்கும் பிள்ளையார், அல்லது முருகன் போன்ற உருவங்கள் கடவுள் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஏதும் வேத அறிவிப்புகள் உண்டா? ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் இதற்கொ மற்ற கடவுள்களுக்கோ ஆதாரம் காட்ட முடியுமா? இல்லை என்றால் உங்களின் வேதங்கள் பொய் சொல்கிறது என்று பொதுவில் அறிவித்து விடுங்கள்.

    அதே போல் ‘நான் தான் இறைவன்’ என்று ஏசு எங்காவது ஒரு இடத்தில் பைபிளில் கூறியுள்ளாரா? எல்லாம் பின்னால் வந்தவர்களின் புனைவுகளே!
    //இந்த ஈமானே பிற சமய நம்பிக்கைகள்மீது வணக்கவழிபாடுகள் மீது மாபெரும் யுத்தத்தை செய்கிறதல்லவா.. இதை எப்படி இந்திய தமிழக பல்சமயச் சூழலில் வாழும் மக்கள் அனுமதிக்க முடியும்.அரபுமொழியில் சொல்லிக் கொண்டிருப்பதால் ஏதோ முஸ்லிம்களின் இந்த கலிமா பற்றி இந்துக்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ சரியாக எதுவும் தெரியவில்லை.எவ்வளவு ஆபத்தான கலிமா இது.பெரியாரும் அம்பேத்கரும் இதற்கு எப்படி வக்கலாத்து வாங்கினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//

    இந்திய மற்றும் தமிழக மக்களோடு இன்று வரை முஸ்லிம்கள் சகோதர பாசத்தோடுதானே பழகி வருகிறார்கள். எங்காவது ஒரு இடத்தில் இரு தரப்பிலுமே தவறு செய்பவர்கள் இருக்கலாம். அதை களைவதுதான் அறிவுடையோர் செய்ய வேண்டிய வேலை.

    மேலும் மத சண்டைகளை விட சாதி சண்டைகள்தான் தமிழகத்தில் அதிகம் நடக்கிறது. மனிதனை மலம் தின்ன வைத்து அழகு பார்த்தவர்களும் நாம் தான். இதனால் சாதியை ஒழிக்க நீங்கள் களத்தில் இறங்கினீர்களா?

    //ஏழாம் நூற்றாண்டில் நபிமுகமது என்ன செய்தார்.. லாத் உஜ்ஜா,மனாத் பெண்தெய்வங்கள் உள்ளிட்ட 360 க்கும் மேற்பட்ட சிலைகளை மக்கமா நகரின் கபாவில் அடித்து நொறுக்கி உடைத்தெறிந்தாரே..//

    அந்த ஆலயம் ஏக இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன்முதல் நிர்மாணிக்கப்பட்டது. நபி ஆப்ரஹாம் தனது மகனோடு சேர்ந்து அதை மறு நிர்மாணம் செய்ததாக வரலாறு. அதன் பிறகு பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சிலை வணங்கிகள் வசம் காஃபா செல்கிறது. அதனை முகமது நபியும் அவரது தோழர்களும் மீட்டு முதலில் எவ்வாறு வணக்கம் நடை பெற்றதோ அந்த நிலைக்கு காஃபாவை மாற்றுகின்றனர். இடையில் வந்த சிலை வணக்கம் இடையிலேயே சென்று விட்டது.

    //தலிபான்கள் புத்த சிலைகளை உடைத்தெறியும் போது இந்த நபிவழியைத்தானே பின்பற்றினார்கள்.//

    புத்தர் சிலைகளை பாதுகாக்க பண உதவி தருவதாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் தாலிபான்களிடம் கேட்டது. தாலிபான்கள் ‘தங்கள் நாட்டில் போரினால் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள். அவர்களுக்கு ஏதும் உதவுங்கள்’ என்று அவர்களிடம் கேட்டனர். அதற்கு வெளிநாட்டவர் மறுத்தனர். எனவே கோபம் கொண்ட தாலிபான்கள் பாமியான் சிலைகளை வெடி வைத்து தகர்த்தனர்.

    நீங்களே சொல்லுங்கள். ஒன்றும் பேசாத கற்சிலைகளின் புனர்வாழ்வு முக்கியமா? அல்லது குழந்தைகளின் உயிர் முக்கியமா?

  39. தர்வேஸ்!

    //நபிவழி இதுதான் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனைத்துக் கோவில்களின் சிலைகளையும் உடைக்கும் ஜிகாதிகளாய் மாறினால் என்ன ஆகும்…
    இந்த மனோபாவம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் கலிமாவின் மூலம் உருவாகியிருப்பது எவ்வளவு பெரிய அபாயகரமான நிலை..என்வேதானே அடிப்படைவாதமும் தீவிரவாதமும் முஸ்லிம்களால் மேலெழும்புகிறது..//

    1400 வருடங்களாக இஸ்லாம் தமிழகத்தில் உள்ளது. என்றாவது ஒரு நாளாவது எந்த முஸ்லிமாவது கோவிலை இடித்து பள்ளி கட்டியதாக வரலாறை காண்பிக்க முடியுமா?

    ஆனால் நம் கண் எதிரிலேயே சில ஆண்டுகளுக்கு முன் ‘ராமர் இங்கு தான் பிறந்தார்’ என்ற ஒரு பொய்யை சொல்லி பழமை வாய்ந்த மசூதியை நேரம் குறித்து இடித்தார்களே! அவர்களைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்க வேண்டும்.

    //இந்தச் சூழலில்தான் சூபிகளின் கவிதை மொழிக்கான முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இறைவனை அனைத்து சமயத்திற்குமான இறைவனாக சமயவடிவாய் சற்குருவாய் தரிசிக்க சொல்வது எவ்வளவு மாட்சிமைதாங்கிய விசயம்.இதைத்தானே குணங்குடியாரும் பீரப்பாவும் தமிழ்சூபிகளும் செய்தனர்.//

    இதற்கு விளக்கமாக தக்களை முகமது கவுஸ் விரிவாக இந்த பதிவிலேயே பதிலளித்திருக்கிறார். பார்த்துக் கொள்ளுங்கள்.

    //நீங்கள் யார் பக்கம்… அடிப்படைவாத இஸ்லாத்தின் பக்கமா.. அல்லது.. சூபிகளின் ஜனநாயக இஸ்லாத்தின் பக்கமா..
    அல்லது இப்படிக் கேட்கிறேன்
    உங்களுக்கு எந்த அல்லாஹ் வேண்டும்.. அரபு குறைஷி மேலாண்மையையும்,ஆணாதிக்கத்தையும்,பிறசமய காழ்ப்புணர்வையும் பேசும் அரபு அல்லாஹ்வா.. அல்லது சமய சமரசம் பேசும் தமிழ் அல்லாஹ்வா..//

    அரபு அல்லாஹ், தமிழ் அல்லாஹ் என்றெல்லாம் மொழிக்கு ஒரு அல்லாஹ் கிடையாது அன்பரே! அகில உலகுக்கும் ஒரு அல்லாஹ்தான். அதாவது ஒரு இறைவன்தான். நான் அந்த ஏக இறைவனின் பக்கம்.

    ‘மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.’

    ‘அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைத்திருப்பதை மறந்து விட்டான். ‘எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?’ என்று கேட்கிறான்.

    ‘முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்’ என்று கூறுவீராக!
    -குர்ஆன் 36:77,78,79

  40. Avatar akbar uae

    janab rasool katurai arumai ithai padithu wahabi mathakaararkal( tntj) thirunthalaam

    • Avatar தக்கலை கவுஸ் முகம்மது

      Akbar Uae
      /// janab rasool katurai arumai ithai padithu wahabi mathakaararkal( tntj) thirunthalaam ///
      வஹாபி (?!) மதக்காரர்கள் (?!) என்று சொல்லும் அன்பு இஸ்லாமிய (?!) சகோதரரே !… உங்கள் இஸ்லாமிய அறிவு எந்த நிலையில் உள்ளது என நீங்களே அருமையாக பறை சாற்றி விட்டிருக்கிறீர்களே !….

      • Avatar தக்கலை கவுஸ் முகம்மது

        akbar Uae

        உங்கள் ஆதங்கம் உண்மையானது !… நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் முதலில் நம்மவர்களே தங்களின் செயல்களுக்கு இப்படிப்பட்ட செயல்களை செய்கிறார்களே !… நாம் இன்னும் தர்ஹா வழிபாட்டில் ஊறிப் போய் இருக்கிறோம், நமது மார்க்க விஷயங்களை, குர் ஆன் , மற்றும் ஹதீஸ்களை சரிவர கற்றுக் கொள்வதில்லை , அதற்கான ஆர்வமும் நம்மிடையே மிகவும் குறைந்து காணப்படுகிறது ஆனால் ஞானப்புகழ்ச்சியையும், மவ்லீதையும் , இன்ன பிற பித்அத்துக்களையும் இஸ்லாத்தின் பெயரில் நடத்தி வருகிறோம் . மாற்று மதத்தவர் ஒருவர் நமது இஸ்லாத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை ஐந்தே சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/blog-post_7945.html சொடுக்கி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அனவே முதலில் நாம் சரியாக வேண்டும் அபோதுதான் முறையாக மற்றவர்களுக்கு நமது மார்கத்தை எத்தி வைக்க முடியும் , அதற்குரிய ஏற்பாட்டை நாம் நமது ஜமாத்துக்களில் முறையாக செய்வோமானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு வெகு தீவிரமாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை

  41. Avatar akbar uae

    இந்துத்துவவாதிகளும்,மேற்கத்திய அறிவுஜீவிகளும் குரானிய மொழியாடல்களை எதிர்மறையாகவும், ஆபத்தானதாகவும் சித்தரிக்கும் முறையியலுக்கு எதிராக எப்படிப்பட்ட வாசிப்பை நாம் நிகழ்த்தவேண்டும் என்பதையும் கூட பேசலாம்.இதற்கு ஒற்றை அதிகாரத்தை வலியுறுத்தும் வகாபிய வாசிப்புமுறை உதவாது

  42. Avatar akbar uae

    இந்துத்துவவாதிகளும்,மேற்கத்திய அறிவுஜீவிகளும் குரானிய மொழியாடல்களை எதிர்மறையாகவும், ஆபத்தானதாகவும் சித்தரிக்கும் முறையியலுக்கு எதிராக எப்படிப்பட்ட வாசிப்பை நாம் நிகழ்த்தவேண்டும் என்பதையும் கூட பேசலாம்.இதற்கு ஒற்றை அதிகாரத்தை வலியுறுத்தும் வகாபிய வாசிப்புமுறை உதவாது mr rasool super

    • Avatar தக்கலை கவுஸ் முகம்மது

      உங்கள் ஆதங்கம் உண்மையானது !… நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் முதலில் நம்மவர்களே தங்களின் செயல்களுக்கு இப்படிப்பட்ட செயல்களை செய்கிறார்களே !… நாம் இன்னும் தர்ஹா வழிபாட்டில் ஊறிப் போய் இருக்கிறோம், நமது மார்க்க விஷயங்களை, குர் ஆன் , மற்றும் ஹதீஸ்களை சரிவர கற்றுக் கொள்வதில்லை , அதற்கான ஆர்வமும் நம்மிடையே மிகவும் குறைந்து காணப்படுகிறது ஆனால் ஞானப்புகழ்ச்சியையும், மவ்லீதையும் , இன்ன பிற பித்அத்துக்களையும் இஸ்லாத்தின் பெயரில் நடத்தி வருகிறோம் . மாற்று மதத்தவர் ஒருவர் நமது இஸ்லாத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை ஐந்தே சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/blog-post_7945.html சொடுக்கி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அனவே முதலில் நாம் சரியாக வேண்டும் அபோதுதான் முறையாக மற்றவர்களுக்கு நமது மார்கத்தை எத்தி வைக்க முடியும் , அதற்குரிய ஏற்பாட்டை நாம் நமது ஜமாத்துக்களில் முறையாக செய்வோமானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு வெகு தீவிரமாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை… எனவே தர்ஹா வழிபாடு , மாற்று மதக் கலாச்சாரங்களை இஸ்லாத்தில் புகுத்து போன்றவைகளை கலைவதற்குரிய ஏற்பாட்டை நீங்களும் செய்யுங்கள்

  43. Avatar தங்கமணி

    அன்புள்ள சுவனப்பிரியன்

    //உண்மையைத்தானே சொல்கிறது. நமது தமிழ் பண்பாடு ‘:ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்லவா’. அடுத்து இந்து மத வேதங்கள் அனைத்தும் ஓரிறைக் கொள்கையையே பறை சாற்றுகிறது. நீங்கள் குறிப்பிடும் கடவுள்கள் அல்லாது இன்னும் ஆயிரக்கணக்கில் இந்தியாவில் கற்பனைக் கடவுள்கள் உண்டு. நீங்கள் வணங்கும் பிள்ளையார், அல்லது முருகன் போன்ற உருவங்கள் கடவுள் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஏதும் வேத அறிவிப்புகள் உண்டா? ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் இதற்கொ மற்ற கடவுள்களுக்கோ ஆதாரம் காட்ட முடியுமா? இல்லை என்றால் உங்களின் வேதங்கள் பொய் சொல்கிறது என்று பொதுவில் அறிவித்து விடுங்கள்.
    அதே போல் ‘நான் தான் இறைவன்’ என்று ஏசு எங்காவது ஒரு இடத்தில் பைபிளில் கூறியுள்ளாரா? எல்லாம் பின்னால் வந்தவர்களின் புனைவுகளே!//

    இந்து மதம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். பிறகு பேசலாம்,
    விஷ்ணுமயம் ஜகத்து என்பது வேத வாக்கியம்.
    வேதம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பது பிரம்மம் என்று உரைக்கிறது. ஆகவே கல் பூண்டு, கற்சிலை, சுவனப்பிரியன் எல்லாவற்றிலும் இருப்பது சிவமே. சுவனப்பிரியன் தன்னை உணரும்போது தன்னுள்ளே இருக்கும் இறைவனை அறிவார்.
    ஆகவே முருகன், பிள்ளையார் அனைத்தும் தெய்வமே. யார் எதனை வணங்கினாலும் என்னையே வணங்குகிறார்கள் என்று கிருஷ்ணர் உரைக்கிறார்.
    அல்லா கிருஷ்ணர் பிரம்மம் என்ற பெயர்கள் தாண்டி இருப்பது இறைவன். அவற்றை வழிப்பறி கொள்ளைகாரராக இருந்த ஒரு நபர் மட்டுமே உண்மையை சொன்னார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது உங்கள் நம்பிக்கை மட்டுமே.

    இந்துமதத்தை விமர்சிக்கும் முன்னால் இந்து மதத்தை அறிந்துகொள்ள்ங்கள்

  44. Avatar தங்கமணி

    //அந்த ஆலயம் ஏக இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன்முதல் நிர்மாணிக்கப்பட்டது. நபி ஆப்ரஹாம் தனது மகனோடு சேர்ந்து அதை மறு நிர்மாணம் செய்ததாக வரலாறு. அதன் பிறகு பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சிலை வணங்கிகள் வசம் காஃபா செல்கிறது. அதனை முகமது நபியும் அவரது தோழர்களும் மீட்டு முதலில் எவ்வாறு வணக்கம் நடை பெற்றதோ அந்த நிலைக்கு காஃபாவை மாற்றுகின்றனர். இடையில் வந்த சிலை வணக்கம் இடையிலேயே சென்று விட்டது.//
    என்று நீங்கள் சொல்கிறீர்களே தவிர, முகம்மது நபியை பினப்ற்றுபவர்கள் சொல்கிறார்களே தவிர அது உண்மை அல்ல.

    மேலும் மனாத் உஜ்ஜா போன்ற தெய்வங்களை மட்டுமே அரபியர்கள் வணங்கியும் வரவில்லை. அரபியா முழுவதும் வெவ்வேறு அரபியர்கள் வெவ்வேறு அரபிய தெய்வங்களை வணங்கிவந்தார்கள். அவற்றின் கோவில்களை இடித்ததும் அவற்றை வணங்கிவந்த மக்களை கட்டாயமாக மதம் மாற்றியதும் இஸ்லாமிய வரலாறுதான்.

  45. Avatar தங்கமணி

    அன்புள்ள சுவனப்பிரியன்
    //1400 வருடங்களாக இஸ்லாம் தமிழகத்தில் உள்ளது. என்றாவது ஒரு நாளாவது எந்த முஸ்லிமாவது கோவிலை இடித்து பள்ளி கட்டியதாக வரலாறை காண்பிக்க முடியுமா?//

    தாராளமாக ஏராளமான மசூதிகளை காட்டலாம். காட்டினால் அந்த மசூதிகளை மீண்டும் கோவிலகளாக ஆக்கிதந்துவிடுவீர்களா?

    அதுமட்டுமல்ல, முஸ்லீம்களே வரலாற்றாசிர்யர்களே ஆவணப்படுத்தியிருக்கும் மசூதிகளே இந்த கோவிலை இடித்துத்தான் கட்டப்பட்டன என்ற சான்றும் தருகிறார்கள்.

    நான் தருகிறேன்.
    உதாரணத்துக்கு ஒன்று.
    திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசல் முன்பு அங்கிருந்த சிவன் கோவிலை அங்கு ஆண்டுவந்த நவாபின் துணையுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பதை நத்தர்ஷா பள்ளிவாசல் வெளியிடும் விழா மலரே கூறுகிறது.
    என்னசெய்யப்போகிறீர்கள்?

  46. Avatar தங்கமணி

    // குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள். அவர்களுக்கு ஏதும் உதவுங்கள்’ என்று அவர்களிடம் கேட்டனர். அதற்கு வெளிநாட்டவர் மறுத்தனர். எனவே கோபம் கொண்ட தாலிபான்கள் பாமியான் சிலைகளை வெடி வைத்து தகர்த்தனர்.
    நீங்களே சொல்லுங்கள். ஒன்றும் பேசாத கற்சிலைகளின் புனர்வாழ்வு முக்கியமா? அல்லது குழந்தைகளின் உயிர் முக்கியமா?//
    நன்றாக இருக்கிறது ஞாயம்
    சரி இந்தியாவில் நிறைய ஏழைக்குழந்தைகள் பசியால் வருந்துகிறார்கள். ஆகவே செல்வம் நிறைந்த சவுதி அரேபியா உடனே பணம் கொடுக்க வேண்டும் என்று நாம் கோருவோம்.
    பணம் கொடுக்காவிட்டால் இந்தியாவில் அவர்கள் கட்டி வைத்திருக்கும் மசூதிகளை இடிப்போம். வருகிறீர்களா? இதனை நியயபப்டுத்துவீர்களா?

    கொடுமையடா சாமி

    • Avatar Rama

      Hats off to you, Mr தங்கமணி.
      Logic is not a strong point for Islamists and Islam. You should know this by now.
      Remember the fatwa by ? Egyptian/Iraqi Imam against Muslims ?couple of years back? These enlightened Muslims claimed that the world is round and not flat.The Imam was not happy. Obviously the Imam,well versed in Arabic language, should know the CORRECT interpretation of Koran.He knew what he was talking about. He knew his holy book well unlike our apologist friends here. All the excuses offered as explanations by our Muslim brothers won’t wash.

  47. தங்கமணி!

    //இந்து மதம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். பிறகு பேசலாம்,
    விஷ்ணுமயம் ஜகத்து என்பது வேத வாக்கியம்.
    வேதம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பது பிரம்மம் என்று உரைக்கிறது. ஆகவே கல் பூண்டு, கற்சிலை, சுவனப்பிரியன் எல்லாவற்றிலும் இருப்பது சிவமே. சுவனப்பிரியன் தன்னை உணரும்போது தன்னுள்ளே இருக்கும் இறைவனை அறிவார்.
    ஆகவே முருகன், பிள்ளையார் அனைத்தும் தெய்வமே. யார் எதனை வணங்கினாலும் என்னையே வணங்குகிறார்கள் என்று கிருஷ்ணர் உரைக்கிறார்.//

    ‘ஏகாம் எவாத்விதியாம்’
    ‘அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை’
    -சந்தோக்யா உபனிஷத் 6:2:1
    (The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
    (Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

    ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
    ‘நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்’
    ‘அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை’
    (The principal Upanishad by S. Radha krishnan page 745)
    (And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

    ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
    ‘நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி’
    ‘அவனைப் போன்று வேறு யாரும் இல்லை’
    (The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
    (And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

    ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
    ‘நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்’
    ‘அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை’
    (The principal Upanishad by S.Radhakrishnan page 737)
    (And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

    யஜீர் வேதா அதிகாரம் 32 :3
    ‘நா தஸ்யா பிரதிமா அஸ்தி’
    ‘அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை’

    யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
    ‘அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.’
    (The Yajurveda by Devi Chand M.A page 377)

    யஜீர்வேதா அதிகாரம் 40 :9
    ‘அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே’
    ‘இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.’ அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

    பகவத் கீதை அதிகாரம் 10 :3
    ‘நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி’

    ‘ மாருத்பிஹி ராக்னா ஆஹாஹி’
    ‘அக்னியின் ரகசியம் பாலைவன மக்களுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்டது’
    1 : 19 : 1-9 -ரிக் வேதம்

    ரிக் வேதம்

    ‘மா சிதான்யாத்வி சன்ஷதா’

    ‘பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது’

    ரிக் வேதம் 8 : 1: 1

    ‘யா எகா இத்தாமுஸ்துதி’

    ‘தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்’

    ரிக் வேதம் 6 : 45 : 16

    நீங்கள் கொடுக்கும் இந்து மத விளக்கத்துக்கும் நான் இந்து மத வேதங்களிலிருந்து தரும் ஆதாரங்களும் கொஞசமாவது ஒத்துப் போகிறதா. சற்று சிந்தியுங்கள்.

  48. தங்கமணி!
    //திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசல் முன்பு அங்கிருந்த சிவன் கோவிலை அங்கு ஆண்டுவந்த நவாபின் துணையுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பதை நத்தர்ஷா பள்ளிவாசல் வெளியிடும் விழா மலரே கூறுகிறது.//

    அந்த காலத்தில் அரசரகள் ஒரு நாட்டின் மீது படையெடுப்பதும் அங்கு தனது நினைவாக சில கட்டிடங்களை நிர்மாணிப்பதும் தொன்று தொட்டு வரும் வழக்கம். சேர சோழ பாண்டிய பல்லவ மௌரிய ஆட்சிகளில் இது சர்வசாதாரணமாக நடந்துள்ளது. இன்று உள்ள அநேக இந்து மத கோவில்கள் முன்பு சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் உரியனவாக இருந்தது.

    ‘வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!’
    -தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

    ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

    சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

    பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச்சரம்’ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
    -Page 275, பல்லவர் வரலாறு,

    இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
    -South Arcot District, Gazetter, Page 369.

    சமணர்கள் அனுபவித்த கொடுமை!

    ‘மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
    -அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
    1983, Page 28

    ‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.’
    ‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’
    -பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
    1925, Page 494.

    இன்றுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலும் முன்பு சமணக் கோவிலாக இருந்தது. மேலும் ஆதாரங்கள் கேட்டால் தருகிறேன்.

  49. தங்கமணி!

    //மேலும் மனாத் உஜ்ஜா போன்ற தெய்வங்களை மட்டுமே அரபியர்கள் வணங்கியும் வரவில்லை. அரபியா முழுவதும் வெவ்வேறு அரபியர்கள் வெவ்வேறு அரபிய தெய்வங்களை வணங்கிவந்தார்கள். அவற்றின் கோவில்களை இடித்ததும் அவற்றை வணங்கிவந்த மக்களை கட்டாயமாக மதம் மாற்றியதும் இஸ்லாமிய வரலாறுதான்.//

    கஃபா முன்பு ஏக இறைவனை வணங்கும் தலமாக இருந்ததற்கான ஆதாரத்தை சவுதியின் வரலாற்றின் துணை கொண்டு சொல்லியுள்ளேன். என் வாதம் தவறு என்றால் நீங்கள்தான் மறுப்பு ஆதாரத்தை தர வேண்டும்.

    மேலும் திருச்சி பள்ளியை ஒரு அரசன் ஆக்கிரமித்தான் என்றுதான் சொல்கிறீர்கள். பொது மக்கள் யாரும் பாபரி மசூதியை இடித்ததைப் பொன்று நாள் குறித்து மசூதியை தரை மட்டமாக்கவில்லை. பாபரி மசூதியைப் பற்றி மூச்சு விட மாட்டேன் என்கிறீர்களே! பாபரி மசூதியை இடித்தது சரி என்கிறீர்களா?

    கட்டாயமாக சமணர்களை இந்துக்களாக மாற்றியது யார் என்பதன் ஆதாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  50. தங்கமணி!
    //சரி இந்தியாவில் நிறைய ஏழைக்குழந்தைகள் பசியால் வருந்துகிறார்கள். ஆகவே செல்வம் நிறைந்த சவுதி அரேபியா உடனே பணம் கொடுக்க வேண்டும் என்று நாம் கோருவோம்.
    பணம் கொடுக்காவிட்டால் இந்தியாவில் அவர்கள் கட்டி வைத்திருக்கும் மசூதிகளை இடிப்போம். வருகிறீர்களா? இதனை நியயபப்டுத்துவீர்களா?//

    பவுத்த சிலைகளை இடிக்கும் போது அந்த சிலைகளை வணங்க ஆப்கானிஸ்தானத்தில் பவுத்தர்கள் யாரும் இலலை. அடுத்து சவுதி அரேபியா தன்னால் ஆன உதவிகள் அனைத்தையும் செய்தே வருகிறது. வேண்டுமானால மன்மோகன் சிங்கை இங்குள்ள குழந்தைகளுக்கு உதவ கோரிக்கை வைக்க சொல்லுங்கள். கண்டிப்பாக சவுதி அரசு இந்தியாவுக்கு உதவி செய்யும்.

    • Avatar தங்கமணி

      //பவுத்த சிலைகளை இடிக்கும் போது அந்த சிலைகளை வணங்க ஆப்கானிஸ்தானத்தில் பவுத்தர்கள் யாரும் இலலை. அடுத்து சவுதி அரேபியா தன்னால் ஆன உதவிகள் அனைத்தையும் செய்தே வருகிறது. வேண்டுமானால மன்மோகன் சிங்கை இங்குள்ள குழந்தைகளுக்கு உதவ கோரிக்கை வைக்க சொல்லுங்கள். கண்டிப்பாக சவுதி அரசு இந்தியாவுக்கு உதவி செய்யும்.//
      இந்திய அரசு தாலிபான் கெஞ்சியது போல கெஞ்சாது என்று நினைக்கிறேன்.
      ஆனால் ஏன் தாலிபான் வெள்ளைக்கார கிறிஸ்துவர்களை கெஞ்சினார்கள்? சவுதி அரேபிய சூப்பர் பணக்காரர்களிடம் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு கேட்ட்டிருக்கலாமே? ஏன் அவர்கள் கொடுக்கமாட்டார்கள் என்பது தாலிபானுக்கு தெரியுமா?

  51. Avatar தங்கமணி

    சுவனப்பிரியன்,
    உங்களது முல்லாக்கள் கடல் போன்ற வேதங்களிலிருந்து அன்கொன்றும் இங்கொன்றும் பிய்த்து அதில் முகமம்து நபியை பாராட்டியிருக்கிறது, அது ஒரே இறைவனைத்தான் சொல்லுகிறது. அது அல்லாஹ்தான் என்று எழுதுவதை அறிவேன்.
    நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து ஒரிஜினலை படித்து உணர முயற்சி செய்யுங்கள்

  52. Avatar தங்கமணி

    கஃபா முன்பு ஏக இறைவனை வணங்கும் தலமாக இருந்ததற்கான ஆதாரத்தை சவுதியின் வரலாற்றின் துணை கொண்டு சொல்லியுள்ளேன். //
    எங்கே சொல்லியுள்ளீர்கள்? ஆதாரத்தை முஸ்லீம்களது புத்தகங்களிலிருந்து காட்டாமல், அகழ்வாராய்ச்சி நிபுணர்களது ஆராய்ச்சி கட்டுரைகளிலிருந்து காட்டுங்கள்.
    சவுதியில் அகழ்வாராய்ச்சி நடக்கவே விடுவதில்லை. இந்த லட்சணத்தில் ஆதாரமாம்.

  53. Avatar தங்கமணி

    //மேலும் திருச்சி பள்ளியை ஒரு அரசன் ஆக்கிரமித்தான் என்றுதான் சொல்கிறீர்கள். பொது மக்கள் யாரும் பாபரி மசூதியை இடித்ததைப் பொன்று நாள் குறித்து மசூதியை தரை மட்டமாக்கவில்லை.//

    திருச்சி கோவ்லை அரசன் ஆக்கிரமிக்கவில்லை. நத்தர்ஷா என்ன சூஃபி ஞானி ஆக்கிரமித்தார். அதற்கு நவாப் ஆதரவளித்தார்.

    வேண்டுமானால் சொல்லுங்கள். நாமும் போய் அதனை இடிப்போம்

  54. Avatar தங்கமணி

    தேடிப்பார்த்ததில் எழில் என்பவர் ஏற்கெனவே உங்களுக்கு சமணர் சம்பந்தமாக பதில் அளித்திருக்கிறார்.
    அதனை நீங்கள் படித்ததுபோலவோ உங்கள் தவறை உணர்ந்தது போலவோ தெரியவில்லை.
    மீண்டும் மீண்டும் உங்களது standard copy pasteஐ செய்து வருகிறீர்கள்.

    http://ezhila.blogspot.com/2007/01/blog-post_26.html

    சகோதரர் சுவனப்பிரியன் மேற்கண்டவாறு தன் பதிவில் எழுதியிருக்கிறார்.இதனைப்பற்றி இந்த பதிவில் எழுதியிருக்கிறேன் என்பதால், இங்கு எழுத முனைகிறேன்.வாதிட்ட சமணர்கள் சகோதரர் சுவனப்பிரியன் போன்று விபரம் தெரியாதவர்கள் அல்லர். சமண புலமை பெற்ற ஆச்சாரியர்கள். எல்லா சமணர்களின் சார்பாகவும் வாதிட வந்தவர்கள். அந்த காலத்தில் வாதிடும்போது சிலவற்றை வாதின் முன் பந்தயம் வைப்பர். அதாவது வாதில் தோற்றால் வாதில் வென்றவரின் சீடராக ஆவது போன்ற விஷயங்களை முடிவு செய்துகொள்வார்கள். மேலும் இந்த வாதம் நடக்கும்போது, அரசன் சமணர்கள் பக்கமே இருந்தான். சமணர்களே ஆட்சிஅதிகாரத்திலும் இருந்தனர். தங்களது வாதின் மீதிருந்த பெரும் கர்வத்தால், அவர்கள் தாங்கள் தோற்கவே முடியாது என்று இருமாந்திருந்தனர். அதனால், அவர்கள் தாங்கள் தோற்றால், கழுவின்மீது ஏறுவோம் என்று பகிரங்கமாக கூறிக்கொண்டனர். தோற்றபின்னரும் அவர்களுக்கு திருஞான சம்பந்தர் திருநீறு எடுத்துக்கொண்டு இறைவழி வரவே அழைத்தார். அவர்களோ மறுத்து, தங்களது சபதத்தை நிறைவேற்ற கோரியே தாங்களே கழுவின் மீது ஏறினர். இன்றும்கூட பலர் யார் தடுத்தும் கேளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பலரும் வந்து செல்லும் மார்க்கெட்டுகள், ஊர்களில், ஷியா பிரிவினர் மசூதிகளில் தங்கள் மீது வெடிகுண்டுகளை பொருத்திக்கொண்டு வெடித்து உயிர் துறக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அய்யா செய்யாதீர்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்துக்கும் ஊருக்கும் நீங்கள் நல்லது செய்யலாம் என்றுதான் அறிவுரை கூறுகிறோம். அவர்கள் கேட்பதில்லையே. நீங்களும் யாரையும் கொல்ல வேண்டாம் என்று தான் கேட்கிறோம். அவர்கள் கேட்காததற்கு இன்றைய அரசாங்கமும் நாமும் என்ன செய்யமுடியும்?தலைமை தாங்கி வாதம் புரிந்த சமணத்தலைவர்கள் கழு ஏறினர். அந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுதல், இறப்புக்கு சமமாக கருதப்பட்ட படியால், அங்கிருந்த மீதமிருந்த எண்ணாயிரம் சமணர்கள் நாடு விட்டு வெளியேறி பாலக்காடு சென்றனர். அஷ்ட சஹஸ்ரம் என்னும் பிரிவினராக இன்னும் அவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தரால் சைவநெறி அடைந்த அவர்கள் இன்று சைவ பிராம்மணர்களாக இருக்கிறார்கள்.மேலும் இன்று சமணர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது தவறான கூற்று. சமணர்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நயினார் என்னும் பெயருடைய பல சமணர்களை இன்னமும் காஞ்சியில் பார்க்கலாம்.

  55. Avatar Kalai

    தர்காவில் ஏன் கும்பிடக் கூடாது என்று சிலர் இங்கே சொல்கிறார்கள். முஸ்லிம்கள் அவர்களுடைய கடவுளை ரெயில்வே ஸ்டேஷன், கடற்கரை, மைதானங்கள், சாலைகளில் கூடக் கும்பிடுவதை தொலைக் காட்சியில் காண்பிக்கிறார்களே?
    சுவனப் பிரியன் வேதம் கூட ஊர் இறைவனை ஒப்புக் கொள்கிறது என்று சொல்கிறார். ஏன் அவர் வேதம் சார்ந்த இந்து மதத்திற்கு இன்னும் மாறவில்லை?
    அல்லாவை கடவுள் இறைவன் போன்ற வார்த்தைகளால் குறிப்பிடலாமா? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா? அரபு மொழி அறியாத முஸ்லிம்கள் முஸ்லிம்களா இல்லையா? அவர்களின் சொந்த மொழியில் கடவுளைக் கும்பிட்டால் தப்பா?
    ஒரே கடவுள் என்பதற்கும, பல கடவுள்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம்? பல கடவுள்கள் இருப்பது தான் தர்க்க ரீதியாக சரியானது. ஒரே கடவுள் எப்படி இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்தை படித்து காத்து அழிக்க முடியும்?

  56. திரு கலை!

    //முஸ்லிம்கள் அவர்களுடைய கடவுளை ரெயில்வே ஸ்டேஷன், கடற்கரை, மைதானங்கள், சாலைகளில் கூடக் கும்பிடுவதை தொலைக் காட்சியில் காண்பிக்கிறார்களே?//

    தொழுகை நேரம் வந்து விட்டால் நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே தொழுது கொள்ளலாம். அந்த தொழுகை கூட ஏக இறைவனாம் இறைவனை நினைத்துதான். அந்த இறைவன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ வேண்டும் என்ற கட்டளையிட்டதால்தான்.

    ஆனால் தர்ஹாவில் சென்று வணங்குவது ஏக இறைவனை அல்ல. அங்கு அடங்கியிருக்கும் நபர் இறக்கவில்லை. இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அங்கு சென்று பிரார்த்திக்கின்றனர். இதைத்தான் இஸ்லாம் கடுமையாக தடுக்கிறது.

    //அல்லாவை கடவுள் இறைவன் போன்ற வார்த்தைகளால் குறிப்பிடலாமா? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா?//

    ‘அல்லாஹ்’ என்று அழையுங்கள் ‘ரஹ்மான்’ என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.

    -குர்ஆன் 17:110

    எனவே ஏக இறைவனை அல்லாஹ், இறைவன், கடவுள், ரப், தேவன் என்று எந்த பெயரிலும் அழைக்கலாம். ஆனால் அது ஏக இறைவனாக இருக்க வேண்டும்.

    //அரபு மொழி அறியாத முஸ்லிம்கள் முஸ்லிம்களா இல்லையா? அவர்களின் சொந்த மொழியில் கடவுளைக் கும்பிட்டால் தப்பா?//

    உலக ஒற்றுமைக்கு ஒரு மொழி அவசியப்படுகிறது. உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும கூட்டுத் தொழுகையில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்ள முடியும். நம் நாட்டில் கூட தேசிய கீதமாக ஜனகனமன வை வைத்திருக்கிறோம். இந்தியர்களுக்குள் ஒரு ஒற்றுமையை கொண்டு வருவதற்காக. வங்காள மொழியில் அந்த பாடல் இருப்பதால் தமிழும், உருதும் தரம் தாழ்ந்த மொழி என்று சொல்கிறோமா? அதே அளவு கோலை இங்கும் வைத்துக் கொள்ளுங்கள்.

    அடுத்து கூட்டுத் தொழுகை முடிந்து இறைவனிடம் பிராரத்தனை செய்தல் அவரவர் சொந்த மொழியிலே தான் இருக்கும். ஏனெனில் படைத்த இறைவனுக்கு உலகில் உள்ள மொழிகள் எல்லாம் தெரியும் என்பதால் தங்களது தாய் மொழியிலேயே பிரார்த்திக்க சொல்லி முகமது நபியின் கட்டளை இருக்கிறது.

    //ஒரே கடவுள் என்பதற்கும, பல கடவுள்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம்? பல கடவுள்கள் இருப்பது தான் தர்க்க ரீதியாக சரியானது. ஒரே கடவுள் எப்படி இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்தை படித்து காத்து அழிக்க முடியும்?//

    ‘மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்.’
    -குர்ஆன் 2:21

    மனிதனுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ந்து வரும் வானவர்கள் உள்ளனர். இறைவனின் கட்டளைப்படி அவனை காப்பாற்றுகின்றனர்.
    -குர்ஆன் 13:11

    இறைவனே உயிர்ப்பிக்கிறான்: மரணிக்கச் செய்கிறான்.
    -குர்ஆன் 3:156

    படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேளையையும் ஒருவன்தான் செய்ய முடியும். பலர் இருந்தால் அங்கு சண்டையில்தான் முடியும். இந்து மத கடவுள்களுக்குள் சண்டை பிரபல்யமாக சொல்லப்படுமே! அதே போல் சில காரியங்களை செய்ய இறைவன் சில மலக்குகளை (தேவர்களை) ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் இறை கட்டளைக்கு மாறாது தங்களின் வேலைகளை செய்து வருவர் என்று வேதம் கூறுகிறது.

  57. Avatar தங்கமணி

    படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேளையையும் ஒருவன்தான் செய்ய முடியும். பலர் இருந்தால் அங்கு சண்டையில்தான் முடியும்.
    ஏன் இவ்வளவு மலக்குகள் இருக்கிறார்கள்? இவர்களுக்குள் சண்டை வராதா?
    ஏற்கெனவே ஒரு மலக்கு சண்டை போட்டு போயாச்சு. இன்னும் பல மலக்குகள் சண்டை போட்டால், அந்த சண்டைகளை தீர்த்து வைக்கவே அல்லாஹ்வுக்கு நேரம் பத்தாதே?

  58. Avatar rama

    The excuses for causing the destruction of the Bamiya Buddha statues by our ” learned” Islamists here are pathetic and childish, to say the least. When are you guys going to wake up/grow up?
    Here is the true version, from the horse’s mouth, in this case, the minister from the Taliban government.
    Quote
    “”We are not against culture but we don’t believe in these things. They are against Islam,” the Taliban’s Foreign Minister Wakil Ahmed Muttawakil is reported to have said.

  59. Avatar செந்தில்குமார்

    சமணர் பற்றிய சரியான பதிலுக்கு நன்றி

    தங்கமணி, எழில் என்று எவ்வளவு பேர் சுவனபிரியனுக்கு எவ்வளவு வருடத்துக்கு முன்னால் சொல்லியிருந்தாலும் அவர் காபி பேஸ்ட் பண்ணுவதை நிறுத்தபோவதில்லை.
    இன்னும் சில வருடங்களுக்குபிறகு இன்னொருவர் மீண்டும் சுவனப்பிரியனுக்கும் இன்ன இதர பிரியர்களுக்கும் இதே பதிலை எழுதிகொண்டிருக்க வேண்டும்.
    அவர் அதே காபி பேஸ்ட் பண்னிகொண்டிருப்பார்.
    அவர் மட்டுமல்ல, ந்மது அறிவுஜீவிகளும் இதே வேளையை செய்துகொண்டே இருப்பார்கள்.

  60. Avatar Kalai

    கடவுளைப் பற்றிப் பேசும் போது கூட சண்டையின் நினைப்பை சுவனப் பிரியனால் தவிர்க்க முடியவில்லை. சுவனப் பிரியன் தான் ஒரு கடவுளை நம்புவதற்கு சொல்லும் காரணம் எனக்குப் பிடித்திருக்கிறது. பல கடவுள்கள் சண்டை போடாமல் இருந்தால் பல கடவுள்களை நம்புவதில் எந்தப் பிரசினையும் இல்லை என்கிறார். அவரவர் வேலையை அந்தந்த கடவுள் பார்த்துக் கொண்டால் ஏன் சண்டை வருகிறது?

    • Avatar தங்கமணி

      கலை,
      அருமையான பதில்.
      மலக்குகள் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் வேலை செய்யும் போது கடவுள்கள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் வேலை செய்யமுடியாது?

  61. Avatar தங்கமணி

    உண்மைதான் செந்தில்குமார்,
    இதனை படிப்பதோ அதனை புரிந்துகொள்வதோ சுவனப்பிரியனுக்கும் காவ்யாவுக்கும் முக்கியமல்ல. அவர்களுக்குத்தான் தெரியாத விஷயமே கிடையாதே. ஒருவருக்கு தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் குரானில் உள்ளது. மற்றொருவருக்கும் பெரியாரிடம் உள்ளது.
    இன்னொரு இடத்திலும் அவர்கள் எடுத்த வாந்தியையே மீண்டும் எடுப்பார்கள்.

    காவ்யா,
    சுவனப்பிரியன் சொல்லுவதை மொழிபெயர்த்து மடையன் என்னிடம் விளக்கலாமே? உங்கள் சப்போர்ட் இல்லாமல் சுவனப்பிரியன் வருத்தப்படுவார்.

  62. தங்கமணி!

    //கலை,
    அருமையான பதில்.
    மலக்குகள் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் வேலை செய்யும் போது கடவுள்கள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் வேலை செய்யமுடியாது?//

    மலக்குகள்(வானவர்கள்) இறைவனை முந்திப் பேச மாட்டார்கள். இறைவனின் கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
    -குர்ஆன் 21;27

    தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை வானவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிட்டதை செய்கின்றனர்.
    -குர்ஆன் 16:50

    இங்கு இறைவன் வானவர்கள் தனது கட்டளையை செயல்படுத்தபவர்கள் என்று கூறுகிறான். மனிதர்களைப் போல் சிந்தித்து செயல்படும் அறிவு வானவர்களுக்கு கிடையாது. இறைவன் எந்த கட்டளையை இடுகிறானோ அதை மறு பேச்சு பேசாது செயல்படுத்துபவர்களே வானவர்கள்.

    எனவே வானவர்களுக்குள் அதாவது தேவர்களுக்குள் சண்டை சச்சரவு வர வாய்ப்பே இல்லை. அனைத்து வானவர்களும் ஏக இறைவனின கட்டளைக்கு பணிபவர்கள. ஆனால் இறைவன் பலவாறாக இருந்தால் யார் யாருடைய பேச்சைக் கேட்பது? ஒரு மாநிலத்துக்கு இரண்ட அதிகார மையங்கள் இருந்தால் நிர்வாகம் சரியாக செயல்படுமா?

    கலை!

    //அவரவர் வேலையை அந்தந்த கடவுள் பார்த்துக் கொண்டால் ஏன் சண்டை வருகிறது?//

    அழிக்கும் தொழிலை செய்யும் கடவுள் ஒரு மனிதனை இன்று இறப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று நினைக்கிறான். காக்கும் தொழிலை செய்யும் கடவுள் அவனுக்கு இன்னும் 10 ஆண்டுகள் பூமியில் வாழட்டும் என்று பிரியப்பட்டால் யாருடைய கட்டளை இங்கு பினபற்றப்படும்? குழப்பம் வராதா? அடுத்து பல கடவுளுக்கு இந்து மத வேதங்களிலிருந்து ஆதாரத்தை கேட்டேன் இதுவரை தரவில்லையே!

  63. Avatar தங்கமணி

    /அடுத்து பல கடவுளுக்கு இந்து மத வேதங்களிலிருந்து ஆதாரத்தை கேட்டேன் இதுவரை தரவில்லையே!//
    ஆதாரம் கொடுத்தால் ஒப்புகொண்டுவிடுவீர்களா? அது பார்ப்பனர்கள் வேதத்தில் கை வைத்து மாற்றிவிட்டார்கள் என்றுதானே வழக்கமாக சொல்வீர்கள்?
    போய் நீங்களாக படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.

  64. Avatar தங்கமணி

    சுவனப்பிரியன்,

    இந்து மதத்தை குறை சொல்ல ஆரம்பிக்கும்போது அதே மாதிரி கணைகள் இஸ்லாத்தை பற்றியும் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

    ஆனால் குரானில் முகம்மது சொல்லும் அல்லாஹ் ஒரு கையாலாகாத ஆளாகத்தான் தெரிகிறார்.

    அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வாகக்கூட குரானில் தெரிவதில்லை. மனிதர்களிடம் உதவி கேட்கும், உதவியை பெறும் கடவுளாகத்தான் தெரிகிறார்.

    //47:7. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
    //

    அல்லாஹ்வுக்கு மனிதர்கள் உதவி செய்யமுடியுமா? அப்படியிருந்தும் எல்லா மனிதர்களும் உருப்படியாக அல்லாஹ்வுக்கு உதவி செய்வதாக தெரியவில்லை.

    மனிதர்களிடமே வேலை வாங்கமுடியாத அல்லாஹ்வால் எப்படி மலக்குகளை வேலை வாங்க முடியும்?

  65. தங்கமணி!

    //அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வாகக்கூட குரானில் தெரிவதில்லை. மனிதர்களிடம் உதவி கேட்கும், உதவியை பெறும் கடவுளாகத்தான் தெரிகிறார்.
    //47:7. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.//

    இறைவனுக்கு உதவி செய்தல் என்றால் என்ன? ஏழைகளுக்கு உதவி செய்தல்.

    2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

    2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

    குர்ஆனின் மேற்கண்ட வசனமே உங்கள் கேள்விக்கு அழகாக விடையளிக்கிறது. ஒருவன் முகத்தை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ தொழுது கொண்டு ஏழைகளையும் பந்துக்களையும் வெறுத்தானாகில் அவனுக்கு தொழுகையினால் ஒரு பலனும் இல்லை என்கிறான் இறைவன்.

    //ஆதாரம் கொடுத்தால் ஒப்புகொண்டுவிடுவீர்களா? அது பார்ப்பனர்கள் வேதத்தில் கை வைத்து மாற்றிவிட்டார்கள் என்றுதானே வழக்கமாக சொல்வீர்கள்?
    போய் நீங்களாக படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.//

    பார்த்தீர்களா? பதில் இல்லை என்பது உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. வேதத்தில் அப்படி ஒரு கருத்து இல்லை என்பதற்காகத்தானே இந்துவான உங்களிடம் கேட்கிறேன். ஒன்று ஆதாரத்தை தர வேண்டும். இல்லை என்றால் நம் முன்னோர்களின் கொள்கைபடி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திரு மூலர் மந்திரத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சரியா….

  66. Avatar தங்கமணி

    சகோதரர் சுவனப்பிரியன்
    //இறைவனுக்கு உதவி செய்தல் என்றால் என்ன? ஏழைகளுக்கு உதவி செய்தல்.//
    haha ha
    நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் எந்த இடத்தில் இவைதான் அல்லாஹ்வுக்கு நீங்கள் செய்யும் உதவி என்று இருக்கிறது? நீங்களாக அல்லாஹ்வின் வசனங்களுக்கு அதில் இல்லாததை எல்லாம் எழுதலாமா?
    பீர் அப்பா குரானில் இல்லாதத்தை எல்லாம் எழுதினார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.
    உங்களுக்கு ஒரு நாயம். பீர் அப்பாவுக்கு ஒரு நாயமா?

    எதற்கும் 47.7க்கு சற்று முன்னால் போய், அங்கிருக்கும் வசனங்களை எடுத்து, அல்லாஹ்வுக்கு உதவி என்று முகம்மது எதனை சொல்கிறார் என்பதை திண்ணை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    //வேதத்தில் அப்படி ஒரு கருத்து இல்லை என்பதற்காகத்தானே இந்துவான உங்களிடம் கேட்கிறேன்//
    சும்மா முல்லாக்கள் உங்களிடம் கொடுப்பதை காபி பேஸ்ட் பண்ணுவதை விட்டுவிட்டு போய் படியுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

  67. Avatar Kalai

    அன்புள்ள சுவனப்பிரியன்
    இறைவனுக்கு உதவி செய்வது ஏழைகளுக்கு உதவி செய்வது என்றால் இறைவனையும் ஏழையையும் ஒப்பு வைப்பதாக ஆகாதா? ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று சொன்னவர்கள் இந்த வசனத்திலிருந்து தான் தங்கள் கோஷங்களைப் பெற்றார்களா?
    இன்னொரு சந்தேகம். இறைவனின் புத்தகம் என்று குறிப்பிடும் குர்ஆனில் “கடவுள் அன்பானவர்” “கடவுள் ஞானமிக்கவன்” என்று படர்க்கையிலும், “நீ அருள் மிக்கவன்” என்று முன்னிலையிலும் சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, நான் கடவுள் என் கட்டளைகள் என்று எதுவுமே சொல்லப் படவில்லையே. இருந்தும் எப்படி இதைக் கடவுளின் வாசகங்கள் என்று சிலர் நம்புகிறார்கள்? பகவத் கீதையில் “நானே மரம் செடி கோடி” ” அதர்மம் உண்டாகும்போது தர்மத்தை நிலைநாட்ட நான் வருவேன்” என்று தன்மையில் கடவுளின் வாசகங்கள் சொல்லப் பட்டிருக்கிறதே.

  68. தங்கமணி!

    //நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் எந்த இடத்தில் இவைதான் அல்லாஹ்வுக்கு நீங்கள் செய்யும் உதவி என்று இருக்கிறது? நீங்களாக அல்லாஹ்வின் வசனங்களுக்கு அதில் இல்லாததை எல்லாம் எழுதலாமா?//

    சரி.. இன்னும் விளக்கமாகவே சொல்கிறேன். நோன்பு என்ற ஒரு செயல் இறைவனுக்காக கட்டாயமாக முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய ஒரு கடமை. அதனை உடல்நிலையினாலோ மற்ற காரணங்களினாலோ ஒருவர் விட்டு விடுகிறார். அதற்கு பரிகாரமாக இறைவன் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

    ‘நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது.’

    -குர்ஆன் 2:183,184

    இங்கு குறிப்பிட்ட நாட்களில் நோன்பை விட்டவருக்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கும்படி இறைவன் கட்டளையிடுகிறான். இதே போல் பல இடங்களில் தவறு இழைத்ததற்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்கும்படி இறைவன் கட்டளையிடுகிறான்.

    வேறொரு ஹதீதில் மறுமையில் பலரது முன்னிலையில் ஒரு மனிதனைப் பார்த்து இறைவன் ‘நான் பசியோடு உன் வீட்டிற்கு வந்த போது நீ எனக்கு உணவு தரவில்லையே’ என்று கேட்பானாம். அதற்கு அந்த மனிதன் ‘இறைவா! நீயோ உலகையே கட்டி ஆள்பவன். உனக்கு பசியா?’ என்று ஆச்சரியம் பொங்க அந்த மனிதன் கேட்பானாம். அதற்கு இறைவன் ‘இந்த நாளில் இந்த நேரத்தில் ஒரு ஏழை உன் வீட்டின் படியேறி உன்னிடம் உணவு கேட்கவில்லையா? நீ தர மறுத்தாயல்லவா?’ என்று கேட்பானாம். அப்பொழுதுதான் அந்த மனிதனுக்கு தான் செய்த தவறு ஞாபகத்தக்கு வரும். இது புகாரியில் வரக் கூடிய மிகப் பெரிய ஹதீது.

    இந்த குர்ஆன் வசனமும் ஹதீதும் ஏழைக்கு செய்யும் உதவிகளே இறைவனுக்கு செய்யும் உதவிகளாக காட்டப்படுகிறது. எனவேதான் மற்ற சமூகங்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களிடத்தில் ஈகை குணம் அதிகமாக இருக்கும. இஸ்லாம் ஈகையை கட்டாய கடமையாக்கியதும் ஏழைகளைக் கருத்தில் கொண்டே.

  69. திரு கலை!

    // அன்புள்ள சுவனப்பிரியன்
    இறைவனுக்கு உதவி செய்வது ஏழைகளுக்கு உதவி செய்வது என்றால் இறைவனையும் ஏழையையும் ஒப்பு வைப்பதாக ஆகாதா? ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று சொன்னவர்கள் இந்த வசனத்திலிருந்து தான் தங்கள் கோஷங்களைப் பெற்றார்களா?//

    யாரும் ஏழையை வணங்குவதில்லையே! மனிதன் தனக்கு மேல் உள்ள அந்தஸ்தில் உள்ளவர்களைத்தான் வணங்க முயற்ச்சிப்பான். ஒருவனிடம் கையேந்தம் நிலையில் உள்ள ஒருவனை யாரும் வணங்க முற்படமாட்டார்கள்.

    வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்குத்தான் என்பதில் இறைவனோ குர்ஆனோ முகமது நபியோ எந்த இடத்திலும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. இறைவன் பெயரை சொன்னால்தான் மனிதன் ஏழைகளுக்கு உதவுவதில் தயக்கம் காட்ட மாட்டான். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற வார்த்தை வந்தது குர்ஆனின் வசனங்களை வைத்தே வந்திருக்கும் என்பது எனது எண்ணம்.

    //இன்னொரு சந்தேகம். இறைவனின் புத்தகம் என்று குறிப்பிடும் குர்ஆனில் “கடவுள் அன்பானவர்” “கடவுள் ஞானமிக்கவன்” என்று படர்க்கையிலும், “நீ அருள் மிக்கவன்” என்று முன்னிலையிலும் சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, நான் கடவுள் என் கட்டளைகள் என்று எதுவுமே சொல்லப் படவில்லையே. இருந்தும் எப்படி இதைக் கடவுளின் வாசகங்கள் என்று சிலர் நம்புகிறார்கள்? பகவத் கீதையில் “நானே மரம் செடி கோடி” ” அதர்மம் உண்டாகும்போது தர்மத்தை நிலைநாட்ட நான் வருவேன்” என்று தன்மையில் கடவுளின் வாசகங்கள் சொல்லப் பட்டிருக்கிறதே.//

    வீட்டில் தந்தை தனது பேச்சை கேட்காத மகனைப் பார்த்து ‘உனக்கு திமிர் அதிகமாகி விட்டது’ என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே ‘இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நிம்மதி’ என்று திடீரென்று படர்க்கைக்கு மாறி விடுவார்.

    அதேபோல் ‘இது என் வீடு’ என்று கூற வேண்டிய இடத்தில் ‘இது நம்ம வீடு’ என்று கூறுகிறோம். மேலும் சொந்த மகனை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது ‘நம்ம பையன்’ என்று வழக்கத்தில் கூறி விடுகின்றோம். இதை யாரும் நேரிடையான பொருளில் புரிந்து கொள்வதில்லை. இது போல்தான் குர்ஆனில் பல இடங்களில் ‘நாம்’ நம்மை’ ‘நம்மிடம்’ என்பன போன்ற சொற்களை இறைவன் பயன்படுத்துகிறான்.

    ஆனால் இது போன்ற வித்தியாசங்களை எழுத்தில் பயன்படுத்த மாட்டோம். குர்ஆனைப் பொருத்த வரையில் அது எழுத்து வடிவில் ஒரு புத்தகமாக அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் சொல்வது போன்ற முறை பின்பற்றப்பட்டிருக்கும்.

    கீழே வரக் கூடிய சில வசனங்கள் இறைவன் தன்னை ‘நான்’ என்றே தன்மையில் கூறிக் கொளகிறான். இது போன்ற இன்னும் பல வசனங்களும் உண்டு.

    2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.

    2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

    2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.

    2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.

    2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

  70. Avatar தங்கமணி

    ஹெஹே…
    நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல், தேவையில்லாதவற்றை பேசாதீர்கள்.
    நான்கேட்டது இந்த வசனங்களில் இதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி என்று இருக்கிறதா?
    அல்லாஹ்வுக்கு மனிதர்கள் செய்யும் உதவி என்ற வரைமுறையோடு எந்த இடத்தில் குரான் சொல்லுகிறது?

    நான் குறிப்பிட்ட வசனத்துக்கு மேலே எந்த உதவியை அல்லாஹ் சார்பாக முகம்மது கேட்கிறார்?

  71. மற்றவர்கள் யார் பக்கமென்று எனக்குத் தெரியவில்லை தர்வேஷ். உன்னுடைய மதம் உனக்கு; அவர்களுடைய மதம் அவர்களுக்கு என்று சொன்னேனே தவிர எதையும் வியந்தோத வரவில்லை. குற்றங்களின் அடிப்படையில் தண்டனையளிப்பதுதான் நியாயம். மொத்தத் தண்டனையையும் விதித்து விட்டு சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்பதுபோல் தங்களது எழுத்து அமைந்திருக் கிறது. எனக்குக் கோபம் வந்து விடும் என்பதுபோல் தங்கமணி கோபம்கொண்டது, எனக்கு வேடிக்கையாகத் தென்பட்டது. அதற்காக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அல்லது பதில் சொன்னேன்.

    என்னைப் பொறுத்தவரைக்கும் அடையாளங்களுடன் பிறந்து விட்ட ஒரு மனிதன். அடையாளங்களை என்மீது திணித்தவர்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். சமூக வாழ்விலிருந்து மதம் விலக்கப்படாத சூழலிலிருந்து சொல்கிறேன்: நான் விரும்பாவிட்டாலும் என்னுடைய அடையாளம் உங்களுக்கு தேவைப்படுகிறது. சச்சரவுகளை உருவாக்கி வெட்டிக் கொல்வதற்கு! சமூக வாழ்விலிருந்து மதம் விலக்கப்படாத சூழலை நீங்கள் விரும்பினால், மனிதன் வேறு என்னதான் செய்வான்?

    குஜராத் இனப் படுகொலையிலும் இப்படியான அடையாளத் தேட்டம் நிகழ்ந்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். மேலும், இந்நிகழ்வுகளுக்குக் காரணம், அரசியல் என்பதை அறியாத தாங்கள் கலிமாவைக் காரணம் சொல்கிறீர்கள். மதம் அவர்களுக் கொரு காரணம். அல்லது கலிமா. காரணங்களில்லாமல் அரசியல் நடத்த இயலாதென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கானக் காரணம் கலிமாவா எரி பொருளா? தொகாடியாவின் அத்துமீறலுக்கானக் காரணம் கலிமாவா? குணங்குடியாரைக் கொண்டாடினால் இஸ்லாமியர் களில் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுமென்பதற்கு உதாரணங்கள் இருக்கின்றனவா? நான் பீரப்பாவை ஒரு தமிழ்ப்புலவர் என்றுதான் சொன்னேன். உடனே உங்களுக்கு தமிழ் அல்லா வேண்டுமா? கன்னட அல்லா வேண்டுமா? துளு அல்லா வேண்டுமா என்று என்னிடம் கேட்க வேண்டிய தேவை உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் என்ன அல்லா வியாபாரியா? அல்லது, ஒடுக்கப்பட்டவர்களைக் கூறுகளாக்கி விட்டால் வெட்டிக்கொல்லும் வேலை சுலபம் என்பதற்காகவா?

  72. தர்வேஷ்,

    (கலிமா என்ன சொல்கிறது: லா இலாஹ இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலில்லாஹி. இதன் பொருள்: கடவுள் இல்லை. அல்லாஹ்வைத் தவிர- முகம்மது அவனின் தூதர்.

    அல்லாஹ் மட்டுமே உண்மை எனும் இந்த வாக்கியத்தின் அர்த்தம்: சைவர்கள் கும்பிடும் சிவன் பொய், வைணவர்கள் வணங்கும் கிருஷ்ணன் பொய், நாடார்கள் வணங்கும் பத்ரகாளியம்மன் பொய், தலித்துகள் வணங்கும் கருப்பண்ணசாமி பொய், பழங்குடிகள் வணங்கும் அசுரன்? பொய், கிறிஸ்து வர்கள் வணங்கும் யேசுகிறிஸ்து பொய், அல்லாஹ் மட்டுமே மெய் என்பதாகச் சொல்கிறது. (பின்னூட்டக்காரன்: இந்த மொழிபெயர்ப்பில் எனக்கு சந்தேகமிருக்கிறது)

    இந்த ஈமானே பிற சமய நம்பிக்கைகள்மீது வணக்க வழிபாடுகள் மீது மாபெரும் யுத்தத்தை? செய்கிறதல்லவா? இதை எப்படி இந்திய தமிழக பல்சமயச் சூழலில் வாழும் மக்கள் அனுமதிக்க முடியும். அரபுமொழியில் சொல்லிக்கொண்டிருப்பதால் ஏதோ முஸ்லிம்களின் இந்த கலிமா பற்றி இந்துக்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ சரியாக? எதுவும் தெரியவில்லை. எவ்வளவு ஆபத்தான? கலிமா இது. பெரியாரும் அம்பேத்கரும் இதற்கு எப்படி வக்காலத்து வாங்கினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.)

    தர்வேஷ், உங்களை நான் உண்மையானவனென்று சொன்னால், அது என்ன அவ்வளவு பெரிய ஆபத்தை விளைவித்து விடப்போகிறது? பெரியாரும் அம்பேத்கரும் ஏன் அதை எதிர்க்க வேண்டும்? அது எப்படி, தங்கமணியையும், சுவனப்பிரியனையும் காவ்யாவையும் தக்கலை கௌஸ் முகம்மதையும் ராமாவையும் செந்தில்குமாரையும் கலையையும் நூருல் அமீனையும் இன்ன பிற பின்னூட்டக்காரர்களையும் போருக்கு அழைப்பதாகவோ பொய்யர் களென்று சொல்வதாகவோ அமையும்? ஒரு பிரச்சினையின்போது மற்றவர் களையும் கூட்டுப் பிடிப்பது நல்ல விஷயம்தான். அதற்காக இப்படியா?

    ஓரிரு நாட்களுக்குப் பிறகு, முதலில் கண்ணில்பட்டது, உங்களின் எழுத்துகள்தான். உடனே அதற்கொரு பின்னூட்டம் எழுதினேன். அப்புறம் தான் புரிந்தது, இதில் எழுதுகிற பெரும்பாலான நண்பர்கள், கணினியறிவு பெற்றிருந்தாலும் மனத்தால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வாழ்கிறவர் களென்ற விஷயம். மதக்கிரந்தங்களில் படர்க்கை, முன்னிலை என்று இலக்கண சுத்தம் பார்க்கும் பண்டித சிரோன்மணிகள் முதல் அறிவியலில் கரைகண்ட அறிஞர்கள் வரை இதில் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள். கிராமங்களில் ஒரு சொலவடையுண்டு. வேண்டாம். அது கொஞ்சம் அருவருப் பான சொலவடை. கணினியின் முன் யாராவது எதையாவது தின்று கொண்டி ருக்கக்கூடும். கொஞ்சம் நாகரிகமாகவே சொல்கிறேன். முதலில் அவரவர் மத்ததை (புள்ளி இடமாறி விட்டதோ?) கவனியுங்கள். நீங்கள் போராடுவ தற்கான பிரச்சினைகள் உங்களிடமே ஏராளமிருக்கின்றன. பீரப்பாவின் பாடல் களென்று எச். ஜி. ரசூல் துவங்கி வைத்த பிரச்சினையை இழுத்துக் கொண்டு போய் எங்கெல்லாமோ விட்டு விட்டீர்கள். கிடைத்த ஒரு கேப்பில் காவ்யா வும் எஸ்கேப். அறிவியல் அடிப்படையில் மதத்தை ஆய்வு செய்வதில் அஞ் ஞானியான நான் பீல்ட் அவுட்.

    இன்றொரு தகவல், தங்கமணிக்கு: சேலத்தில் ஒரு ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழையத் தடை என்பதாக ஒரு அறிவிப்புப் பலகையெழுதி தொங்கவிட்டிருக்கிறார்கள்.

    சுவனப்பிரியனுக்கு இன்றொரு தகவல்: உத்தரபிரதேசம், முராத் எனுமிடத் திலுள்ள ஒரு இமாம், கை பேசியில் தலாக் என்று மூன்று முறை அச்சாக்கம் செய்து குறுஞ்செய்தி அனுப்பினால் தலாக் ஏற்கப்பட வேண்டுமென்று அறிவித்திருக்கிறார்.

    அநியாயங்களை எதிர்த்துப் போரிடாதவர்களுடைய மறுஜன்மம் இழிவான தாக இருக்கும்.

    அநியாயங்களை எதிர்த்துப் போரிடாதவர்கள் நாளை மஹ்ஷர் பெருவெளி யில் கேள்வி கேட்கப்படுவார்கள்.

    மதப் பண்டிதர்களே, பின்னூட்டத்தில் நாங்கள் செய்துகொண்டிருப்பதுவும் அதுதானே என்று சொல்லி விடாதீர்கள்.

  73. Avatar தங்கமணி

    அன்புள்ள குளச்சல் யூசூப்,
    தலித்துகளை விடாத கோவில்கள் உண்டு. மசூதிக்குள் பெண்களை விடாத மசூதிகளும் உண்டு.
    தலித்துகளை கோவில்களுக்குள் விட வேண்டும் என்று நூறாண்டுகளாக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.அங்கொன்றும் இங்கொன்றும் கோவில்களை கட்டிகொண்ட சாதிகள் மற்ற சாதிகளுக்கு இடம் மறுக்கலாம். அதுவும் மறைந்துபோகும்.
    நீங்கள் மசூதிக்குள் பெண்களை விடலாம் என்ற போராட்டத்தை கையிலெடுங்கள்.
    இதோ இங்கேதான் சுவனப்பிரியன் இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் எழுத ஆரம்பித்தார்
    http://puthu.thinnai.com/?p=5617
    2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்

    இதற்கு பதில் கேட்டேன். சுவனப்பிரியன் சொல்லவில்லை.

    ஏன் பெண்கள் மசூதிக்கு வரக்கூடாது? இமாமாக ஆகக்கூடாது என்று கேட்டேன். அவர்களுக்கு அடிப்படி வேலை இருக்கிறது. சமையல் இருக்கிறது என்று காரணம் சொல்கிறார். நியாயப்படுத்துகிறார்.

    இதே போல ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை. அபத்தமான காரணங்களை வைத்து இஸ்லாமிய நிலைப்பாடுகளை ஆதரிக்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க என்று ஒரு பெரியாரிஸ்டு கூட்டமும் உண்டு.

    ஆனால் எந்த இந்துவாவது குறைந்தது இணையத்தில் தீண்டாமையையோ அல்லது கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காமல் இருப்பதையோ ஆதரித்து சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்களா?

    எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துவிட்டு நீங்கள் உச்சாணி கொம்பிலேறிகொண்டு அறிவுரை சொல்கிறீர்கள்.

    //குஜராத் இனப் படுகொலையிலும் இப்படியான அடையாளத் தேட்டம் நிகழ்ந்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். மேலும், இந்நிகழ்வுகளுக்குக் காரணம், //

    இருக்கலாம். ஆனால், அதே மாதிரியான ஒரு அடையாள தேட்டத்தால்தான் இந்தியாவில் மொகலாய மன்னர்களும் அவர்களுக்கு முந்தைய மன்னர்களும் காஃபிர்களை தேடித்தேடி கொன்றார்கள். டைரக்ட் ஆக்‌ஷ்ன் டே என்று ஜின்னா வங்காளத்தில் கொலைவெறி ஆட்டம் ஆடி பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் லுங்கியை அவிழ்த்து பார்த்து கொல்லப்பட்டார்கள். அந்த ரத்தத்தில் உருவான கிழக்கு வங்காளம் பங்களாதேஷாக உருவாக முனைந்தபோது, இந்துக்கள்தான் தூண்டிவிட்டார்கள் என்று கருதிய மேற்கு பாகிஸ்தான் ராணுவம், அதே முறையை பின்பற்றி கோடிக்கணக்கான இந்து பங்களாதேஷிகளை லுங்கியை அவிழ்த்து பார்த்து கொன்றது. அந்த கொலைகளை செய்தவர்கள் இதுவரை தண்டிக்கப்படவே இல்லை.

    வட இந்தியாவின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ரத்தத்தில் எழுதப்பட்டுள்ளது. தெற்கில் இருக்கும் நமக்கு அது புரியாது. குஜராத்தில் அதே கலவரத்தில் பல நூற்றுக்கணக்கான இந்துக்களும் முஸ்லீம்களால கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் இந்துக்களால் கொல்லப்பட்டது மட்டுமே நீங்கள் பேசுவீர்கள். பெரியாரிஸ்டுகள் பேசுவார்கள்.

    அநியாயம் என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமே நடக்கும் ஒன்றாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள். அதற்கு எல்லோரும் உங்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யவேண்டும் என்றும் நினைக்கிறீர்கள்.
    எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்துக்காக புத்தகம் புத்தகமாக எழுதும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் என்றாவது இந்தியாவிலேயே காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்ட இந்துக்களுக்காக ஒரு வரி எழுதியிருக்கிறார்களா? அல்லது இன்றும் பாகிஸ்தானிலிருந்து துரத்தப்படும் இந்துக்களுக்காக ஒரு வரி எழுதியிருக்கிறார்களா? அல்லது இன்றும் பங்களாதேஷில் கொல்லப்படும் இந்துக்களுக்காக ஒரு வரி எழுதியிருக்கிறார்களா?

    சிந்தியுங்கள்

  74. Avatar punai peyaril

    நன்றி.. தங்கமணி…

Leave a Reply to Kalai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *