தண்ணீரின் தாகம் !

Spread the love
தென்றல் சசிகலா

இன்று முதல்

இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..
யாசித்தும் கிடைக்காத
பொருளாகி விட்டது
தண்ணீரும்.
யாசிக்கிறோம்
தண்ணீரை..
உடம்பு நாற்றத்தை
கழுவ அல்ல
உயிர் அதனை
உடம்பில் இருத்த.

இன்று முதல்

இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..
வேண்டாம் வேண்டாம்
பழங்கால ஞாபகங்களாய்
எங்கோ ஓடும் நதிகள் கூட
ஓடும் லாரியில் ஓடக்கூடும்..
நாளைய வரலாற்றில்
வறண்ட பூமியின்
எண்ணிக்கையை விட
நா வறண்டு செத்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக
இருக்கலாம்.
வள்ளல்கள் வாழ்ந்த
பூமி இதாம்..
வாரி வழங்க வேண்டாம்
வழிக்காமல் இருங்கள்
இயற்கை அன்னையின் மடியை.
——————————————–
Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்