தன் இயக்கங்களின் வரவேற்பு

Spread the love

இயற்றப்படும்

இந்த
பிரபஞ்ச நிகழ்வில்
நீங்களும்
ஒரு இயக்கம்  .

இப்பொழுதே
இதுவரையிலும்
இல்லாத
தன் விடுதலை உணர்வை
தேடுவதை போல
இதில் இருந்து
விலகி ஓட
ஆயுத்தமாகுகிறிர்கள்.

இதுவும் கூட
அந்த இயக்கத்தின்
சார்பானது
என
அறியாமலே
அறியாமையில்
மிதங்குகிறிர்கள்.

தற்சமயம்
உங்களின்
அனுமதி இல்லாமல்
இதில் எதுவுமே
திணிக்கப்படவில்லை.

இதன் பொருளும்
உணர்வும்
இன்னுமும்
முக்கியமாக்கவில்லை

உங்கள்
எண்ணங்களின் மீது
வீற்றிருக்கும்
அமைவு
உங்களை
பரிசோதிக்க
காத்திருக்கிறது .

அதன்
கேள்விகளும்
பதில்களும்
நிறைவு தன்மை
அற்றவையாக
உங்களுக்கு
தோற்றமளிக்கிறது .

நீங்களாகவே
அனுமதித்த
ஒப்புமை
இதோ

உடைக்கப்பட்ட
மன சிதறல்கள்
ஒடுக்கப்படுவதால்
அதன் தடயத்தின்
இயல்பை மீறுவது
உங்கள் அகத்தில்
ஏற்றப்படுகிறது .

மொத்தத்தில்
இயக்கத்தின் தேடல்
நீங்களாக
இருப்பது
வரவேற்பிற்கு
உரியது .
– வளத்தூர் தி .ராஜேஷ் .
Series Navigationவினாடி இன்பம்சாபங்களைச் சுமப்பவன்