தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த

அன்புடையீர்
தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தவேண்டுமென்கிற முனைப்பில் சில எளிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மேற்குலகிற்கும் பிரெஞ்சு சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிறுகதையைத் தேர்வு செய்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட திட்டம். இதுவரை பாவண்ணன், பிரபஞ்சன் சிறுகதைகள் வந்துள்ளன. விரைவில். கி.ரா சிறுகதையொன்று வெளிவரவிருக்கிறது. நமது மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனையும் மறக்கவியலாது. அவருடைய சிறுகதையொன்றும் விரைவில் இடம்பெறும். அன்னாரின் பாரீஸ¤க்குப்போ நாவல் குறித்து நண்பர் வி.எஸ் நாயக்கரின் ஆழமான விமர்சனம் அண்மையில் வெளிவந்து பல பிரெஞ்சு நண்பர்களின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. கி.ராவின் சிறுகதைக்குப்பிறகு வண்ணதாசன் அல்லது வண்ண நிலவன் கதை இடம்பெறும்.
பிரெஞ்சு தெரிந்த நண்பர்கள் பார்வையிடலாம்.  உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்குமென நம்புகிறேன்.
அன்புடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…