அ. « you don’t value a thing unless you have it » அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில் கவிஞன் வாழ்கிறான். « நூலுக்காக கவிதைகள் அல்ல , கவிதைகளுக்காக நூல் ». கவிதைக்கு மட்டுமல்ல கலை, இலக்கிய ஆக்கங்களுக்கும் இம்முத்திரை பொருந்தும். « The Laguna » என்றொரு ஆங்கில நாவல். ஆசிரியர் Barbara Kingsolver . ஆழ்நீரில் மூழ்கும் விளையாட்டில் […]
மொழிவது சுகம் மே 10 – 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது. மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான […]
அண்மை நாட்களில்…. பொதுவாக மார்ச் மாதம் முதல் மே இறுதிவரை வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளில் ஜமாபந்தி நாட்கள் நினைவுக்கு வந்துவிடும். அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக வேலைபார்த்தார்கள். ஜமாபந்தி நாட்களில் நாங்கள் அவர்களுக்கு உதவேண்டும். விழி பிதுங்கிவிடும். சிட்டா, அடங்கலை கூட்டிக் கூட்டிக் கண்கள் பூத்துவிடும், போதாதென்று ஜமாபாபந்தி நாட்களில் திண்டிவனம் தாலுக்கா ஆபிஸில் பழியாய் கிடக்கவேண்டும். அதனால் கிடைத்த ஆர்வம் […]
அ. திறனாய்வு பரிசில் பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது. உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம். பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020 வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு‘ எனும் […]
அ. கேள்வியும் பதிலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் நண்பர் நான்சில்நாடனும், இறுதியில் இரண்டு நாட்கள் காலசுசுவடு பதிப்பாளர்நண்பர் கண்ணனும் அவர் துணைவியாரும் எங்கள் இல்ல விருந்தினர்களாக வந்திருந்தனர். நாஞ்சிலாருடன் நிறைய உரையாடினேன். அதிகார அரசியல், எழுத்து அரசியல், கட்சி அரசியல் என இடைச்செருகல்களாகச் சிலவற்றை அவ்வப்போது விவாதித்தபோதும், அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி வற்றாத து என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி […]
பின்னூட்டங்கள்