தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது 10,000 ரூபாய் ரொக்கம், கேடயம், சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது தவிர, லெனின் விருது பெறுபவரின் படங்களில் சில, தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு லீனாவின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவிருக்கிறது. பின்னர் சென்னையில் லீனா இயக்கிய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் லீனாவும் பங்கேற்பார்.

லெனின் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும், படத்தொகுப்பாளர் லெனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டு லெனின் விருது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள புக் பைன்ட் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது. முக்கிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்விற்காக நண்பர்கள் இப்போதே தங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள்.

லீனா மணிமேகலையின் மின்னஞ்சலில் உங்கள் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்: leenamanimekalai@gmail.com

Series Navigationமெய்கண்டார்எளிய மனிதர்களின் தன் முனைப்பு – நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..