‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்

Spread the love

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

வணக்கம்.
இத்துடன் ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம் பற்றிய ஓர் அறிவிப்பை இணைத்துள்ளேன்.தயவு செய்து இதைத் தங்கள் இணைய இதழில் ‘அறிவிப்புகள்’ பகுதியில் வெளியிட்டு எங்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
‘தளம்’இதழ் சார்பாகவும், ஆசிரியர் பாரவி சார்பாகவும்,
தங்கள்,
எஸ்.எம்.ஏ.ராம்.

 

 தளம்’-மின் பதிப்புத் துவக்கம் பற்றிய அறிவிப்பு

‘தளம்’-கலை இலக்கியக் காலாண்டிதழ் சென்ற ஜனவரி,2013- இலிருந்து வெளிவருவது குறித்து வாசக நண்பர்கள் அறிந்திருப்பார்கள். முதல் இதழ் சி.சு.செல்லப்பா  நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாகவும், இரண்டாம் இதழ் உலக நாடக தினத்தை ஒட்டி நாடகச் சிறப்பிதழாகவும் வெளிவந்து வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ஆரோக்கியமான எதிர்வினைகளும், உற்சாகமூட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ‘தளம்’ கிடைக்காத வெளிநாட்டு வாசகர்களும் இதழை வாசிக்க ஏதுவாக, தளம் தன் மின்-பதிப்பைத் (Web-magazine) தொடங்கி இருக்கிறது. தளம் முதல் இதழைக் கீழ்க்கண்ட வலைத்தள முகவரியில் படிக்கலாம். ஓர் இதழ் வெளி வந்து சில காலம் பொருத்து அதன் உள்ளடக்கம் வலையேற்றம் செய்யப்படும். Web-magazine-இன் வடிவம், கட்டமைப்பு போன்றவற்றில் உள்ள குறை நிறைகள், இன்னும் அதை மேம்படுத்துவதற்கான யோசனைகள் நண்பர்களிடமிருந்து வரவேற்கப் படுகின்றன.
வலைத்தள முகவரி:www.thalamithazh.com

அன்புடன்,

பாரவி,

(ஆசிரியர், தளம்)

Series Navigationமருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்புமழையின் பாடல்.