தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !

 


Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

ஓரக் கண்ணால் பாதி மூடிய

உறக்க நிலையில்

உணரா மனத்தில் எண்ணித்

தாராளமாய் என்னுடன் பழகிக் கொள்ள நீ

பேரார்வம் காட்டு கிறாயா ?

அந்தச் சந்தர்ப்ப வேளையில்

நானுனக்கு என்னை த்

தானம் செய்ய வரும் போது,

பழுதாய்ப் போன  எதுவும் என்னிடம்

அளிக்க எஞ்சி இருக்க வில்லை !

பழையன வற்றை எல்லாம்

களைந்தேன் என்றுனக்கு நானுறுதி

அளிக்கிறேன் !

 

வசந்தம் தன்னை வழங்கிடும்

தன்னுணர்வு உந்து சக்தி மூலமாய்

தன்னை யே இழந்து,

அலை மேல் என்றும் அலை

அனுப்பிப் புதியாய்   !

மாதவிக் கொடி படர்கிறது

மறுபடி, மறுபடி வளைந்த வண்ணம் !

மீண்டும், மீண்டும் புதிய பூக்களை

கானகத் தேவனின்

கைக்கூடை விளிம்பு வரை

நிரப்பிடும் !

அது எனக்கு ஒவ்வொரு நிமிடத்தின்

புது வெகுமதி !

 

உன் மேலி ருக்கும் என் காதல்

இசைத் தொனியில்  என்னை மீட்டித்

திசை திருப்பும்

நித்தியப் புத்துணர்வில்  !

எல்லா இயக்கங் களிலும், எனது

எல்லாச் சிந்தனை யிலும்,

இவ்வினிய மெய்த்துவம் மணி அடிக்குது !

என் வறுமைக்கு

எந்த ஆதாரமும்  இல்லை, உனக்கு நான்

கொடுப்ப தற்கு !

எடுத்துக் கொள் நீ விரும்பி யதை

எல்லாம் !

ஆயினும் ஆசைக்கோர் எல்லை

இல்லை யென அறிவாய் நீ  !

என் நாட் பொழுதின் எல்லாக் கணமும்

நிரம்பி  வழிகிறது

நித்தியச் செல்வக் குவியல் !

 

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 75   தாகூர்  தன் 65 வயதில் [பிப்ரவரி  21,  1927] சாந்திநிகேதனத்தில் எழுதியது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  April 2, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவிண்மீனை தேடிய வானம்வெல்லோல வேங்கம்மா