தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !

This entry is part 18 of 24 in the series 24 நவம்பர் 2013

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

தெற்கி லிருந்து இன்று அடிக்கும்

தென்றலுக்கு

காட்டு மரங்கள் எல்லாம்

தலை ஆட்டும் !

நாட்டியம் ஆடிக் கொண்டு வரும்

வானத்து மோகினிச்

சீரிசையாய்க்

காற் சலங்கை ஒலிப்பாள்

இதயப் பிரிவு

ஏக்கத்  துடிப் போடு !

 

மாதவிக் கொடியிலே

மௌன ப் பேராவல் எழுந்திடும்

மனத் துயரோடு

புதிய இலைகளின்

சல சலப்புக் குரலோடு  !

பறந்து போகும்

பட்டாம் பூச்சியின்  இறக்கைகள்

எல்லா  இடமும் செல்லும்

பணிமுறை முடங்கி

நாட் பொழுதை வரவேற்றுக்

கொண்டாட  !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 227   1938  மார்ச் 12 இல்  தாகூர்  77 வயதினராய்  இருந்த போது  எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  November  18 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஜாக்கி சான் 17. குருவின் இளவல்கரிக்கட்டை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *