திண்ணையின் இலக்கியத் தடம் – 27

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

ஜனவரி 1, 2004 இதழ்:

முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் “கேதாரியின் தாயார்”- பாவண்ணன்- அந்தணர் குல வழக்கப்படி ஒரு விதவைக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தச் செய்யும் பாரம்பரியத்தை எதிர்க்கும் கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401011&edition_id=20040101&format=html )

ஜனவரி 8,2004 இதழ்: எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்துக்குப் போகிறேன்- ஆஸ்ரா நொமானி- முகம்மது நபி ஆண்களோடு பெண்கள் சேர்ந்து தொழலாம் என்ற உரிமையைப் பெண்களுக்கு ஏழாம் நூற்றாண்டிலேயே வழங்கி இருந்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204010810&edition_id=20040108&format=html )

வாசக அனுபவம்- வல்லிக்கண்ணனின் வாழ்க்கைச் சுவடுகள்- பி.கே.சிவகுமார்

இத்தனைக்கும் மேலே
இன்னொன்று! நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி
சிலைகள் செய்யாதீர்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=604010812&edition_id=20040108&format=html )

அவதூறுகள் தொடாத இடம்- ஜெயமோகன்- காலச்சுவடு சிற்றிதழ்களிலேயே 4000 பிரதிக்கு மேல் விற்று லாபகரமான வியாபாரம் செய்யும் நிறுவனம். பாட நூல்களைத் தொடவே கூசுகிறது என்றார் சுந்தரராமசாமி. இன்று அவரது புத்தகங்கள் கல்லூரிகளில் பாட நூல் ஆனது எவ்வாறு? இதன் பின்னணி என்ன?

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401084&edition_id=20040108&format=html )

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக்-Honere De Balzac- 1799-1850- நாகரத்தினம் கிருஷ்ணா- தொண்ணுத்திரண்டு புதினங்கள்., அவற்றுள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் என பிரஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி பல்ஸாக்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401088&edition_id=20040108&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்- 93- திரும்பிச் செல்ல முடியாத இடம் – கேசவ தேவின் “நான்?” – பாவண்ணன்- காம வேகத்தில் காதலி பெற்ற தந்தை இருவரையுமே ஏமாற்றி விட்ட ஒரு இளைஞன் மிகவும் கால தாமதமாகப் பின்னாளில் வருந்துகிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401083&edition_id=20040108&format=html)

ஜனவரி 15 இதழ்: கிருஷ்ணா, கிருஷ்ணா- இந்தத் தலைப்பில் ஆன இந்திரா பார்த்தஸாரதியின் நாவல் பற்றிய விமர்சனம். நாரதன் சொல்கிறான் நாவலில் ” என் அம்மா நாலாவது வர்ணத்தைச் சேர்ந்தவள். பிரளயத்துக்குப் பின் பிரம்மாவின் மூச்சிலிருந்து வந்ததால் பிரம்மா என் அப்பன் ஆகிவிட முடியுமா? என் அப்பன் யார் என்பது என் அம்மாவுக்குத் தான் தெரியும். அவள் பணிவிடை செய்து வந்த ஆசிரமத்தின் ஏதாவது ஒரு ரிஷியாக இருக்கக் கூடும். ”
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401152&edition_id=20040115&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-94- ‘தன்னலத்தின் வேஷங்கள்’- கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம்’- பாவண்ணன்-ராமு-லாஜூ என்னும் பரம ஏழையான தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கின்றன. அவர்களில் ஒருவன் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரம் என்கிறார் ஒரு சாமியார். பல அரசியல் கட்சிகளும் அவர்களை வாழ்த்த ஒரு கட்சி ஒரு லட்சம் ரூபாய் (நேரு காலத்தில்) சந்தா வசூலித்து அவர்களை வாழ்த்த ஒரு குழுவை அனுப்புகிறது. குழுவின் விமான செலவு போக சில துணிமணிகளும் பொம்மைகளுமே மிஞ்சுகின்றன. அவர்கள் வாழ்த்துரை வாசித்து குடிசையின் உள்ளே உள்ள குழந்தைகளைப் பார்க்கப் போகிறார்கள். குழந்தைகள் குளிர் தாங்க முடியாமல் இறந்து சவங்களே எஞ்சியிருக்கின்றன. தாய் அழுது புலம்பியபடி இருக்கிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=604011511&edition_id=20040115&format=html)

ஜனவரி 22 2004 இதழ்: விருமாண்டி, தேவர் மகன்- சாதி அரசியல்- யமுனா ராஜேந்திரன்- தலித் மக்களின் வாழ்முறையோ அவர்களது பிரசன்னமோ தமிழ் சினிமாவில் ஆக்கபூர்வமாகத் தமிழ் சினிமாவில் சித்தரிக்கப் பட்டதே இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401228&edition_id=20040122&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-95- வெறுப்பும் அன்பும்- சாந்தனின் முளைகள்- பாவண்ணன்- தம்மை அடிக்கடி அடிக்கும் ஆசிரியரின் காலடி மண்ணை எடுத்துச் செய்வினை வைக்க வேண்டும் என்று மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் காலடி மண்ணை எடுக்கும் முன்பே அவர் சாலை விபத்தில் படுகாயம் அடைகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401225&edition_id=20040122&format=html )

ஜனவரி 29,2004 இதழ்: ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்-காஞ்சனா தாமோதரன்- வாசிப்பு அனுபவம் என்பது புத்தகமும் வாசகரும் சேர்ந்து தீர்மானிப்பது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401294&edition_id=20040129&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-96- பொறாமை என்னும் நெருப்பு- ந.சிதம்பர சுப்ரமணியத்தின் ‘சசாங்கனின் ஆவி’- பாவண்ணன்- சசாங்கன் என்னும் தனது நண்பன் தன்னை ஒரு கணிக்கைக்கு எதிரே சதுரங்கத்தில் தோற்கடித்தற்காகவும் அவள் அந்த நண்பன் மீது காட்டும் காதலுக்காகவும் அவனைக் கொன்று விடுகிறான் மன்னன். சசாங்கனின் எலும்புகளிலிருந்து செய்த காய்களை வைத்துக் கட்டாயப் படுத்தி சோகத்தில் இருக்கும் கணிகையைத் தன்னுடன் சதுரங்கம் ஆட வைக்கிறான். அவள் சசாங்கனின் ஆவி தன்னுள் புகுந்தது போல ஆடி மன்னனை வெற்றி கொண்டு காய்களை அவன் முகத்தில் எறிகிறாள். அதிர்ச்சியில் மன்னன் ரத்தம் கக்கிச் சாகிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401291&edition_id=20040129&format=html)

பிப்ரவரி 5, 2004 இதழ்:

பெரிய புராணம் காட்டும் பெண்கள்- கலாநிதி சந்திரலேகா வாமதேவா-

பெரிய புராணத்தில் தரத்தின் அடிப்படையில் நான்கு விதமான பெண்கள் உண்டு:

நாயன்மார் நிலையில் உள்ள பெண்கள்- காரைக்கால் அம்மையார், மங்கையற்கரசியார்,
கோயில் தொண்டில் ஈடுபட்ட பெண்கள்- திலகவதியார்
நாயன்மாரான கணவருக்குத் தொண்டில் உதவிய பெண்கள்- திருவெண்காட்டு நங்கை – சிறுத்தொண்டரின் மனைவி, இயற்பகை நாயனாரின் மனைவி
அறியாது செய்த தவறால் தம் கணவரான நாயனாராலோ வேறு நாயனாராலோ தண்டிக்கப்பட்டவர்- கலிக்கம்ப நாயனாரின் மனைவி, கழற்சிங்க நாயனாரின் மனைவி

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402056&edition_id=20040205&format=html )

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன்- குளோது சிமோன்- Claude Simon- நாகரத்தினம் கிருஷ்ணா-

இதோ விரிந்து வளரும் மரம்
பட்டப் பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்
மரத்தடியில் ஒரு கழுகு
ரத்தம் செத்த சோனிக் கழுகு
ஒளியின் அழைப்பு

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402051&edition_id=20040205&format=html)

திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சனைகள்: யமுனா ராஜேந்திரன்- பாலுறவைத் திரைப்படங்களில் சித்தரிப்பது அந்தந்த சமூகங்கள் சார்ந்து மாறுபடுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402057&edition_id=20040205&format=html)

எனக்குப் பிடித்த கதைகள்-97- ஓங்கி ஒலிக்கும் குற்ற உணர்ச்சியின் குரல் – எட்கர் ஆலன்போவின் இதயக்குரல்- பாவண்ணன்- ஒரு பெரியவரைக் கொன்று அறைக்குள்ளேயே புதைத்த இளைஞன், புதைத்த இடத்தின் மீதே நாற்காலி போட்டு அமர்ந்து போலீஸாரிடம் பொய சொல்லிக் கொண்டிருக்கிறான். அப்போது உள்ளேயிருந்து அவரது இதயத்துடிப்பு கேட்பது போல அவனுக்குத் தோன்றி அவனது காதுகளுக்குள் பெரிய அளவில் ஒலித்து அவன் தாள முடியாமல் அவர்களிடம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402052&edition_id=20040205&format=html)

பிப்ரவரி 12, 2004 இதழ்: தேசபக்தியின் தேவை- சின்னக் கருப்பன்- உலகம் இன்னும் கிராமமாக ஆகவில்லை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204021212&edition_id=20040212&format=html )

னக்குப் பிடித்த கதைகள்-98- அமைதியடைந்த கடல் – சோமுவின் உதயகுமாரி- பாவண்ணன்- புத்த பிட்சுணியான உதயகுமாரி ஒரு இசைக் கலைஞனால் கவரப்பட்டு அவன் மீது காதல் வயப் படுகிறாள். ஆசிரமத்தின் கலை நிகழ்ச்சியில் அவன் புத்தர் வேடமிட்டு வரும்போது புத்தரின் பொன்மொழிகள் உபதேசங்கள் அவன் மூலம் அவள் மனதில் பதிகின்றன. சலனம் நீங்கித் துறவு வாழ்க்கையைத் தொடருகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402123&edition_id=20040212&format=html )

பிப்ரவரி 19 2004 இதழ்:ஆறுகள், கழிவு ஓடைகள், ஜெயமோகனின் புது நாவல் : ஏழாம் உலகம்- சு.வேணுகோபால்- பாரதி, புதுமைப்பித்தன் என இன்று நாம் பேசுகிற தளத்தில் நாளை ஜெயமோகனுக்கு இடம் உண்டு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402191&edition_id=20040219&format=html )
நிழல்களின் உரையாடல்- (Mothers and Shadows)- மார்த்தா த்ராபா- தமிழில் அமரந்தா- மாலதி- பெண்ணுணர்வுகளின் மிகத் துல்லியமான மூலைகளை விளக்கு வைத்து விரிக்கிறது இப்பதிவு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402199&edition_id=20040219&format=html )

பிப்ரவரி 26 இதழ்:
உயிராசையும் தடுமாற்றமும்- ஐல்ஸ் ஐக்கிங்கரின் “ரகசியக் கடிதம்”- பாவண்ணன்- ராணுவத் தலைமையகத்துக்கும் எல்லைப்புறத்தில் போரிடும் பிரிவுக்கும் இடையே ஒரு போரை உடனடியாகத் துவங்கும் முடிவெடுப்பதில் கருத்து இடைவெளி. எல்லைப்புறப் படைப்பிரிவின் பொறுப்பதிகாரி ஒரு தூதுவன் மூலம் தலைமையத்திடம் கருத்துக் கேட்கிறார். அவன் மீது தலைமைக்கு சந்தேகம் வரவே “இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் ஆளைக் கொன்று விடவும்” என்று ஒரு கடிதம் முத்திரையிட்டு வருகிறது. தூதாகச் சென்ற ராணுவ வீரன் அதைப் படித்து விடுகிறான். வண்டி ஓட்டும் ஆளை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிக்கவும் எண்ணுகிறான். வழியிலேயே எதிரிகளால் சுடப் பட்டுக் காயம் அடைகிறான். கடிதமும் குண்டு வீச்சில் அழிந்து விட அவன் உயிர் தப்புகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402261&edition_id=20040226&format=html )
பிப்ரவரி 26 இதழ்:
உயிராசையும் தடுமாற்றமும்- ஐல்ஸ் ஐக்கிங்கரின் “ரகசியக் கடிதம்”- பாவண்ணன்- ராணுவத் தலைமையகத்துக்கும் எல்லைப்புறத்தில் போரிடும் பிரிவுக்கும் இடையே ஒரு போரை உடனடியாகத் துவங்கும் முடிவெடுப்பதில் கருத்து இடைவெளி. எல்லைப்புறப் படைப்பிரிவின் பொறுப்பதிகாரி ஒரு தூதுவன் மூலம் தலைமையத்திடம் கருத்துக் கேட்கிறார். அவன் மீது தலைமைக்கு சந்தேகம் வரவே “இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் ஆளைக் கொன்று விடவும்” என்று ஒரு கடிதம் முத்திரையிட்டு வருகிறது. தூதாகச் சென்ற ராணுவ வீரன் அதைப் படித்து விடுகிறான். வண்டி ஓட்டும் ஆளை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிக்கவும் எண்ணுகிறான். வழியிலேயே எதிரிகளால் சுடப் பட்டுக் காயம் அடைகிறான். கடிதமும் குண்டு வீச்சில் அழிந்து விட அவன் உயிர் தப்புகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402264&edition_id=20040226&format=html )
பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- கிறிஸ்தோஃப் தர்கோஸ் (Christophe Tarkos)
உண்மையில் இவர் கவிதைகளில் கரு இல்லை. அலங்காரமில்லை. நோக்கமில்லை. ஆனால் கற்பனையான பொருட்கள் பற்றி விவாதிக்கின்றது. நிதர்சமான உண்மை மீது அக்கறை கொள்கின்றது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60402267&edition_id=20040226&format=html)

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *