தியானம்

Spread the love

 

நா. வெங்கடேசன்

 
ஞாபகத்திற்கு வந்த
நல்ல கவிதையை
மறந்துவிட்டேன் சட்டென்று
ஏதோர் சிந்தனையில்.
மீட்டெடுக்க முயல்கின்றேன்
மனக்குகையுட் புகுந்து.
குகை ஆழ 
வளர்கின்றதே தவிர
தெரியவில்லை
உணர்வின் தடம்.
ஆழ்வேனென்னுள்
அக்கவிதை கிடைக்கும் வரை.
தவறவிட்ட நாணயத்தைத்
துவைக்கும் மெஷினிலிருந்து
எடுத்துவிடலாம் போலும்.
கவிதையை தவறவிட்டு
பின் இதயக் குகையிலிருந்து
மீட்டெடுப்பது
மிகக்கடினம் போலும்.
தவறவிட்ட மூச்சு, பேச்சு, காலம், 
கணங்கள், வாசனைகள்,
வாதனைகள்,
நினைவுகள்,
கனவுகள்,
தாபங்கள், 
போலத்தான்
தவறவிட்ட
கவிதையும்.
எடுத்தாலுமெடுப்பேன்
அனந்தகோடி ஜென்மங்கள்,
மீள்வேன்
அக்கவிதையுடன்
தவறாமல்
Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்நாய்க்குட்டி